செல்வி.அ.மு.தர்ணிகா ஸ்ரீ
சிறுகதை வரிசை எண்
# 322
தலைப்பு:விதைப் பந்து
பரந்து விரிந்த பொட்டல்காடு பார்க்கும் இடமெல்லாம் வெட்டப்பட்ட மரங்களின் துண்டுகள்.
அதில் ஒரு படர்ந்து விரிந்து காணப்பட்ட ( வெட்டப்பட்ட) மரத்தின் மலரும் நினைவுகளை கேட்டு ரசிப்போம் வாருங்கள்.
பத்து வருடங்களுக்கு முன்னால்....
பார்க்கும் இடம் எங்கும் பசுமை சாலைகளின் இரு ஓரங்களிலும் எங்களின் அணிவகுப்பு அது மட்டுமா
அன்று வாழ்ந்த மானிடர்கள் அழகா எங்களை பாதுகாத்து வந்தனர்.
தரிசாக இருந்த நிலங்களில் எல்லாம் ஆழக் குழி தோண்டி அதில் விதைகளை விதைத்து பக்குவமாய் நீர் தெளித்து வந்தனர்.
அதிலும் அந்த கிராமத்தின் தலைவர் மிகவும் இயற்கை ஆர்வலர்.
ஆகவே ஒவ்வொரு குழந்தைகளின் பிறந்த நாளுக்கும் ஒரு விதையை நட்டு அந்த விதை அழகாய் நேர்த்தியாய் மண்ணிலிருந்து முட்டி மோதி அழகிய துளிர் வருவதைப் பார்த்து மகிழ்ந்த நினைவுகள்.
சிறுவர்களும் சிறுமிகளும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
அவர்களும் ஆசையுடன் விதைகளை நட்டு காத்திருந்து அதிலும் ஒரு படிக்கு மேலே சென்று அந்த விலையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து மகிழ்ந்து பரவசப்பட்டனர்.
ஊரில் ஒவ்வொரு வீடுகளிலும் தோட்டங்களும் கிணறுகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகான இயற்கை சூழலை உருவாக்கும்.
அனைவரும் இயற்கையின் தென்றலை அனுபவித்து வந்தனர்.
இயற்கையில் கிடைக்கும் தென்னை இளநீரும் கிணற்றிலிருந்து கிடைக்கும் ஊற்று நீரும் குடித்து மகிழ்ந்தனர்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இது மட்டுமா ஒவ்வொருவரும் காய்கறி தோட்டமும் அழகே ரோஜா தோட்டமும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குமே.
ஓங்கி உயர்ந்த மரங்களில் காய்களும் பழங்களும் பூத்துக் குலுங்கின.
இதில் இயற்கையின் பசுமையான தென்றலும் கீதம் பாடும்
கீச்சு கீச்சு என கத்தும் கிளிகளும் கொஞ்சி மகிழும்.
மரத்திற்கு மரம் தாவும் குரங்குகளும் வரிசையில் சென்று அங்கும் இங்கும் குதித்து மகிழும்.
இதில் பறவைகளும் விலங்குகளும் தங்களுக்கான உணவுகளை உண்டு மகிழ்ந்து வாழ்ந்து வந்தன.
மாதம் மும்மாரி மழை பெய்தது.
வயல்களும் காடுகளும் பச்சை பசேல் என பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தன.
அங்கு இருந்த உழவர்களும் விவசாயம் செய்து முறையாக பராமரித்து அறுவடை செய்தும் விளைந்த நெற் கதிர்களை பக்குவமாக அரிசி ஆக்கி அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கி மகிழ்ந்தனர்.
ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பாக வாழ்ந்தனர்.
காலங்கள் மாறின இயற்கையை ரசிக்க மறந்த மக்கள் விவசாயத்தை மறந்தனர்.
அது மட்டுமின்றி நாகரீக வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.
இதனை பார்த்து மனம் பதறிய தாத்தா பாட்டிகளும் எவ்வளவோ அறிவுரை கூறினர்.
ஆனாலும் அதனை காது கொடுத்து கேளாத சுயநலவாதிகள் இயற்கையை அழித்தனர்.
இது மட்டுமா அலைபேசி மோகத்தால் புதிய தொழில் தொடங்கவும் நகர வாழ்க்கை வாழ்வதற்கும் ஆசைப்பட்டு அனைவரும் அழிவைத் தேடி சென்றனர்.
முதியோர்களும் ஆதரவின்றி தவித்தனர்.
நீண்டு உயர்ந்து வளர்ந்த மரங்களை நாளுக்கு நாள் அழித்து வந்தனர்.
நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடியது
குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு கிடைக்காமல் போனது.
மானிடா கொஞ்சம் யோசி எங்களின் தன்னலமற்ற சேவையை நினைத்து பார்.
செடி கொடியாக இருக்கும் பொழுது உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் வகையில் வாழ்ந்து வருகின்றோம்.
இனிக்கும் கனிகளும் தந்து மகிழ்கின்றோம்.
எங்களை வெட்டிய பிறகும் உங்களுக்கு விரகாக அடுப்பில் எரிந்து உணவு தயாரிப்பதற்கு பயன்படுகின்றோம்.
எங்களை அழிப்பது உங்களை நீங்களே அழித்துக் கொள்வது முறையா?
ஒரு மரத்தை வெட்டுவது கருவில் இருக்கும் குழந்தையை வெட்டுவததற்கு சமம் என்பதை உணர்ந்து திருந்துவாய் மானிடா.
இறைவா இந்த உலகத்தின் இயற்கையை பாதுகாத்தல் மானிடரின் கடமை என்பதை உணர வை.
திரும்பும் திசையெல்லாம் பூத்துக் குலுங்கும் எனது குழந்தைகளான ( செடிகளும் கொடிகளும் ) மீண்டும் உயிர் பெற அருள் செய்வாய்.
எங்களின் கண்ணீர் என்று தீருமோ அப்பொழுதுதான் மானிடர்களுக்கு தண்ணீரும் கிடைக்கும்.
மீண்டும் சுய நினைவிற்கு வந்த வெட்டப்பட்ட மரம் இந்த நிலையிலும் மனிதர்களுக்காக கண்ணீர் விட்டது.
மனிதா மனிதா உன் தவறை திருத்திக் கொள்.
வளரும் தலைமுறையினருக்கு வரண்டு போன நிலங்களை கொடுத்து அவர்களை தாகத்தோடு தத்தளிக்க செய்யாதே.,.. என வேண்டியது.
ஆம் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு குழந்தையை போன்றது என்பதை மனதில் வைத்து....
இன்று புதிய மரங்கள் வைக்கவிட்டாலும் இனிமேல் இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் பாதுகாக்க உறுதி கொள்ளுங்கள்.
அங்கு ஓடி வந்த சிறுவர்கள் விதைப் பந்துகளை மண் பரப்புகளில் தூவியத்தை பார்த்து மகிழ்ந்து வெட்டப்பட்ட மரம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்