logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

PRAGATHA. S

சிறுகதை வரிசை எண் # 287


ஹாஸ்டல் எவ்வளவு எழுப்பியும் எழாமல்  நன்றாக இழுத்து போர்த்தி  தூங்கிக் கொண்டிருந்தாள் ஆதியா. நீண்ட நேரம் ஓடிய  பாடலின் சத்தமும் நின்று விட்டது. பாரதி, ஆதியாவை உலுக்கினாள். நீ என்ன பண்ணாலும் நா அசையவே மாட்டேன் என்பது போல் தூங்கினாள் ஆதியா. திவ்யா அவளின் மேல் ஏறி அமர்ந்தாள். அப்போதும் அசைவில்லை. ஆதியாவின் காதருகே சென்று "சந்தோஷ் எப்போ வந்த? "என்று கேட்டாள் நிலோபர். எங்க? எங்க? சந்தோஷ் எங்க? எப்போ வந்தான்? என்று தூக்க கலக்கத்தில் கத்தினாள்.மண்டையில் தட்டி அவளை ஸ்டடி ஹாலிற்கு இழுத்து வந்தனர். இவர்கள் வர, அந்த நேரம் ஹாஸ்டல் வார்டன் ரௌண்ட்ஸ் வர சரியாக இருந்தது. வார்டன் இவர்களை நன்றாக அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். டெய்லி இந்த ஆதி லூசு தான் லேட்டா எழுந்திரிச்சு நம்மளையும் திட்டு வாங்க விடுறா. எரும, எரும ஒரு நாள் கூட வார்டன் கிட்ட திட்டு வாங்காமல் இருக்கலாம் னு நினைச்ச விடுறீயா என்று ஆதியாவை வசை பாடினாள் நிலோபர். ச்சே, எப்போ பார் லேடா, லேடா னு பேசிட்டே இருப்பியா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோ நிலோபர், ஹெல்த் க்கு நல்லது என்று கூறியவள் விட்ட இடத்திலிருந்து தூக்கத்தை தொடர்ந்தாள்...... ஆதியா, நிலோபர்,பாரதி மற்றும் திவ்யா இவர்கள் நால்வரும் தோழிகள். ஆதியா, பாரதி இருவரும் ஒரே டிபார்ட்மெண்ட் . நிலோபர் இங்கிலிஷ் டிபார்ட்மெண்ட். திவ்யா ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட். நால்வரின்  வகுப்பும் ஒரே மாடியில் வரிசையாக இருக்கும். ஆதியா க்கு பிடிவாத குணம் அதிகம். ஆனால் புத்திசாலி. தான் நினைத்தை எப்படியாவது சாதித்து விடுவாள். நிலோபர் மிகவும் பக்குவமானவள். பொறுமைசாலி. பாரதி முன்கோபம் அதிகம். ஆனால் தனக்கு பிடித்தவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வாள். திவ்யா ,இவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று எனக்கே தெரியவில்லை. அதனால் விட்டுட்டேன்.... இவர்கள் எஸ். வி. நாடார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர். அங்கே ஹாஸ்டலில் தங்கியுள்ளனர். அந்த ஹாஸ்டலில் பல ரூல்ஸ் உள்ளது.போன், லேப்டாப் யூஸ் பண்ண கூடாது. அவுட்டிங் செல்ல அனுமதியில்லை. பெற்றோரை தவிர மற்றவர்களை சந்திக்க அனுமதி இல்லை.காலையில் ஸ்டடி க்கு கரெக்டாக வர வேண்டும். வெளியே கடைகளில் வாங்கி சாப்பிட அனுமதி இல்லை. வாரம் ஒரு நாள் துணி துவைத்துக் கொள்ளலாம்.பத்து மணிக்கு மேல் லைட் எரிந்தாள் பைன் கொடுக்க வேண்டும்.ஒவர் ஸ்டடி பண்ண வார்டனிடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும்.இந்த ரூல்ஸை கரெக்டாக பாலோ பண்ண வில்லை என்றால் பனிஷ்மெண்ட் தான். ஆனால் இந்த ஹாஸ்டலில்  இருப்பவர்களில்  நிலோபரை தவிர யாரும் இந்த ரூல்ஸை பாலோ செய்வது இல்லை. அவளையும் நம்ம ஆதியா சில சமயங்களில் திட்டு வாங்க விடுவாள். ஆதியா க்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் மேலைநாட்டவரின் தத்துவ நூலகள்,சைக்காலஜி, கனவுகள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை அதிகம் படிப்பாள். புத்தகம் படிக்க தொடங்கி விட்டாள் என்றால் உலகத்தையே மறந்து விடுவாள். அப்படி அந்த புத்தகத்தை படித்து முடிக்கா விட்டால் அவளுக்கு தூக்கமே வராது. ஒவர் ஸ்டடிக்கு அனுமதி வாங்கியாவது படித்து முடித்து விடுவாள். பாவம் இந்த மூன்று ஜீவன்களும் இவளுக்காக தூங்காமல் காத்திருப்பார்கள். ஹாஸ்டலில் ஆதியா செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. அதில் பாரதியும், திவ்யாவும் கூட்டு. ஞாயிற்றுக்கிழமை  கல்லூரி விடுமுறை என்பதால் அன்று தான் அனைவரும் துணி துவைப்பார்கள். ஆனால் அன்று ஆதியாவிற்கு சூர்ய உதயமே நண்பகல் 12 மணி தான். எழுப்பினாள் கண்டிப்பாக அசைய கூட மாட்டாள். ஆனால் துணி  துவைக்க மட்டும்  முதல் ஆளாக சென்று விடுவாள். நம்மில் பலருக்கு துணி துவைப்பது பிடிக்காது. ஆனால் இவர்கள் அப்படி இல்லை. ஹாஸ்டலில் பின்னால் ஒரு சிறிய தோட்டம் உள்ளது. அங்கு பத்து பதினைந்து தென்னை மரம், ஒரு நாவல் மரம், நெல்லி மரம், நான்கு கொய்யா மரம், இரண்டு மாமரம், பத்து வாழை மரம் உள்ளது. எழில் மிகுந்த இடம். அங்கு ஒரு கிணறு பூட்டப்பட்டு இருக்கும். அதன் அருகில் ஒரு தொட்டி நீள் வாக்கில் இருக்கும். அதை சுற்றி துணி துவைக்க ஏற்ற வகையில் சிமெண்ட் தரை போடப்பட்டிருக்கும். தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருக்கும். ஆதியா துணி துவைக்கிறாலோ இல்லையோ. மற்றவர்களை குளிக்க வைப்பாள். முதல் சிறிது நேரம் அவர்களுடன் கதை பேசி அவர்கள் கவனத்தை தன் பக்கம் திசை திருப்பிக் கொள்வாள். பின் தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் மீது ஊற்றி விடுவாள். இப்படி மாறி மாறி ஒருவரின் மீது ஒருவர் தண்ணீரை  ஊற்றி விளையாடுவர். வீட்டை பிரிந்து, தன் பெற்றோரை பிரிந்து உள்ளனர் என்பதையே சில நேரங்களில் மறந்து விடுவர். அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்களிடம் உள்ள பணத்தை மொத்தமாக போட்டு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி ஒருவருக்கொருவர் மாற்றி ஊட்டி விடுவர். இவர்கள் ஏதாவது ரகசியம் பேச வேண்டுமென்றால் அது டிரஸ்ஸிங் ரூம்மில் தான். அங்கு நாலு ஷேர் போட்டு இரவில் தூங்காமல் கூட பட்டிமன்றம் வைப்பார். ஆதியாவிற்கு கற்பனை திறன் அதிகம். மூவரையும் சுற்றி உட்கார வைத்து விட்டு பல கதைகளை பேசுவாள். சில நேரங்களில் சந்தோஷ் பற்றியும் பேசுவாள். கோயிலில் தான் அவனை முதல் முதலாக பார்த்தாள் ஆதியா. அவன் ஒன்றும் பேரழகன் கிடையாது. பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருப்பான். மிகவும் மரியாதையாக நடந்துக் கொள்வான்,பால் மனம் கொண்டவன் என்று அவனை பற்றி புகழுரை வசிப்பாள்... சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம். புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு. எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு. ஓஓஓஓ... என்று அந்த வரிகளை ரசித்து கொண்டே பாடுவாள். கேட்டாள் மோட்டிவேஷன் சாங் என்று கூறுவாள். அதை முடத்தவுடன் அவனுடைய ஸ்டேட்ஸ் வேறு, என்னுடைய ஸ்டேட்ஸ் வேறு. நமக்கு எல்லாம் லவ் செட் ஆகாது. அதுவும் இல்லாமா பெரிய லட்சியம் வேற இருக்கு. நமக்கு இருக்க பொழப்புக்கு நடுவில் இதையெல்லாம் எங்கிருந்து மேனேஜ் பண்ணுறது சோணைமுத்தா என்று தலையில் அடித்துக் கொள்வாள். இது இவளின் வழக்கம் தான். வாரம் ஒரு முறையாவது சந்தோஷ் பற்றி இந்த ஆர்டரில் பேசிவிடுவாள். அந்த ஹாஸ்டலிலே ஆதியா தான் கடைசியாக தூங்குவாள். ஏதாவது? ஒரு சத்தம் கேட்டாள் கூட உடனே எழுந்து விடுவாள்.கவனமாக இருப்பாள். கொஞ்சம் தைரியமும் தான். "திருடன் கையிலே சாவி" என்பது போல் வார்டன் ஆதியாவிடம் சில பொறுப்புகளை கொடுத்து இருந்தார். காலையில் ஸ்டடி கண்டிப்பாக அனைத்து மாணவர்களும் அட்டென் பண்ண வேண்டும். அதை கவனிப்பது இவள் பொறுப்பு தான். ஆனால் இவள் எழுவதே மிக பெரிய விஷயம். நிலோபர் இவளை ஸ்டடிக்கு வர வைக்க மூவரும் தனியாக திட்டம் தீட்டினார். ஆதியாக்கு சிக்கன் ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். உயிர் என்று கூட சொல்லலாம். ஆதி நீ மட்டும் ஒரு வாரம் ஒழுங்கா ஸ்டடிய அட்டென் பண்ணும்,வார்டன் உனக்கு கொடுத்த எல்லாப் பொறுப்பையும் சரியா செய்யனும்,அப்படி கரெக்டா செய்தால்  நா உனக்கு சிக்கன் ரைஸ் வாங்கி தரேன். ஆதியா வாய் எல்லாம் பல்லாக இருந்தது. முதல்  ஆளாக எழுந்து எல்லா வேலைகளையும் சரியாக செய்தாள் ஆதியா. ஒரு வாரம் இவ்வாறே சென்றது. ஆதியாவா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்துக் கொண்டாள். நிலோபர் சொன்னது போலவே சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தாள். மறு வாரம்" பழைய குருடி கதவை திறடி"  என்பது போல் தன் வேலையை காட்ட தொடங்கினாள். இவளை திருந்த முடியாது என்று  அவளை விட்டு விட்டனர். நால்வருக்கும் இட்லி என்றால் சுத்தமாக பிடிக்காது. இருவர் தட்டில் மூன்று இட்லி வாங்கி அதை நால்வரும் பகிர்ந்து கொள்வர் அதில் ஒரு இட்லியை சாப்பிட்டு விட்டு ஒரு இட்லியை சாம்பாருடன்  நன்றாக பிசைந்து குப்பையில் போட்டு விடுவர்கள்.. முழு இட்லியை அப்படியே போட்டால் மாட்டிக் கொள்வோம் என்று இந்த டிரீக். நாட்கள் இப்படியே நகர்ந்தது. செமஸ்டர் லீவு முடிந்து இவர்கள் மீண்டும் ஹாஸ்டலிற்கு வந்தனர். செமஸ்டர் லீவு முடிந்து வந்த ஒரு மாதம் மார்னிங் ஸ்டடி இருக்காது. ஆனால் காலை 6 மணிக்குள் குளித்து முடிக்க வேண்டும். 6 மணிக்கு மேல்  மோட்டாரில் தண்ணீர் வராது. நம்ம ஆதியா நான்கு மணக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு நைட் டிரஸை போட்டுக் கொண்டு மீண்டும் கட்டிலில் படுத்து தூக்கத்தை தொடர்வாள். குளித்த பிறகு ஏன் தூங்குகிறாள் என்று கேட்டாள் அதற்கு தனி விளக்கமே கொடுப்பார். குளிச்சுட்டு தூங்குனா தான் நல்லா தூக்கம் வரும் என்று தன்னையே புகழ்ந்து கொள்வாள் ஆதியா. நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியதோ அதே போல் ஆதியாவை திருத்த முடியாது என்று தங்களை மாற்றிக் கொண்டனர் அவளின் தோழிகள். அதை அவளே பெருமையாக சொல்லிக் கொள்வாள் நா எல்லாம் திருந்தி எங்க கவர்னர் ஜெனரலாவா ஆக போறேன். அய்யோ இது பைத்தியமா! ரொம்ப நல்ல பேசினாளே என்று தோழிகள் தலையில் அடித்து கொள்வார். பிரண்டஷிப் டேக்கு பல பிளான்களை டிரஸ்ஸிங் ரூம்மில் உட்கார்ந்து தீட்டினாள். அனைத்தும் தயாராக இருக்க இவள் நன்றாக தூங்கி விட்டாள். ஆனால் இவள் தோழிகள் விடுவதாக இல்லை கைகளை இரண்டு பேர், கால்களை இரண்டு பேர் பிடித்து ஆதியாவை  மொட்டை மாடிக்கு தூக்கி சென்றனர். பின் அங்கே கேக் வெட்டி கொண்டாடி விட்டு லேப்டாப்பில் பெங்களூர் டேஸ் படம் பார்த்து விட்டு அதிகாலை நான்கு மணிக்கு தான் தூங்கினார்கள். . எவ்வளவு சேட்டை செய்தாலும் படிப்பில் கெட்டிகாரர்கள். பழைய நினைவுகளை எல்லாம் ஒன்று விடாமல் சந்தோஷிடம் சொல்லி கொண்டிருந்தாள் நிலோபர். தற்போது ஆதியாக்கும், சந்தோஷ்க்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆச்சு. தற்போது ட்ரீட் தருவதற்காக தான் தோழிகளை ஹாஸ்டல் பக்கத்தில் உள்ள ஹோட்டலிற்கு வர சொன்னாள். ( இருவருக்கும் வீட்டில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது) சந்தோஷ் நிலோபர் சொல்வதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான்...

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.