logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அ.முத்துவிஜயன்

சிறுகதை வரிசை எண் # 27


எண்ணக்காப்பும் எளனியும்( சிறுகதை) அந்த பொன்னுச்சாமிஅய்யாக்கிட்ட அவரோட கொள்ளுப்பேரன் அதாவது மகவழி ப்பேத்தியோட மகன் முத்து வந்து “ தாத்தா எண்ணதேய்ச்சு எளனி குடுக்குறதுன்னா என்னா? “ நு கேட்டான். அவர் சொன்னாரு” அது ஒனக்கெதுக்குடா அதெல்லாம் ஒனக்குத் தெரிய வேணாம் அதெல்லாம் ஒனக்கானது இல்ல வேற எதுனாச்சும் நா” கேளு ன்னாரு. ”வெளிய அதைத்தான் பேசிக்கிட்டு இருக்காங்க மாமாவும் அம்மாயியும் அவங்ககிட்டக்கேட்டாலும் வெரட்டுறாங்க நீங்களும் பதில் சொல்ல மாட்டீன்றீங்க என்னமோ போங்க இதுக்குத்தான் பெரியவனா வளரனும்றது அதுவும் நடக்கமாட்டேன்றது ஒங்க வெத்தலை பாக்கு இடிக்கிற ஒரலைக்குடுங்க நான் இடிச்சித்தாறேன் வழக்கம்போல காம்பு மட்டும் நான் வாயில போட்டுக்கிறேன்” நு சொல்லிட்டு எடுத்து இடிக்கதொடங்கினான் அவன். அவனுக்கு அவர் ஒரு வழில பெரிய அய்யாவேணும். அவனோட அய்யாவும் இவரும் அண்ணன் தம்பிங்க இவனோட அம்மா இவரோட மகவழிப் பேத்தி. தினம் அய்யாவுக்கு வெத்தலபாக்கு இடிச்சிக் குடுப்பான் அவரும் இவன் கூடப்பேசிக்கிட்டு இருப்பாரு , இவன் பெரியமனுசன் மாதிரி பேசுறது அவருக்குப் புடிக்கும் அதுவும் போக அவருக்கு மகன்கள் கிடையாது ரெண்டும் பொண்ணுகதான் அதுனால கொஞ்சம் அதிகமா பாசம் இப்ப பொன்னுச்சாமிக்கி ஏதோ பொறிதட்டுன மாதிரி இருந்துச்சு. அவனக்கூப்புட்டு “ யார்ரா அதுமாதிரி பேசிக்கிட்டு இருந்தது’ன்னு கேட்டார் . அதுக்கு அவன் சொன்னான் சின்ன அம்மாயியும் கொமார் மாமாவும்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க” நு சொன்னான் அவருக்கு அடி வயிறு கலங்க ஆரம்பிச்சது. ஏன்னா கொஞ்சநாளா அவரோட சின்ன மகளும் பேரனும் சொத்த அவங்க பேருக்கு எழுதிவைக்கச்சொல்லி பாடாப்படுத்துறாங்க, இவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலயும் எல்லாமே இவர் சொந்தமாச்சம்பாரிச்ச சொத்துன்றதாலயும் அதுக்கு ஒத்துக்கல. ரெண்டு மகளுக்கும் சமமாத்தான் பிரிச்சிக்கொடுக்கனும் கொஞ்சம் ரெண்டு பேத்திகளுக்கும் கொடுக்கனும் றது அவரோட ஆசை. ஆனா அவரோட சின்னமக எல்லாத்தையும் தன்பேருக்கு வாங்கனும்னு ஆசைப்பட்டா அவரோட பெரிய மக வெளியூர்ல கட்டிக்குடுத்துருந்தாரு. அவளோட புருசன் திடீருன்னு மனநிலை பாதிக்கப்பட்டு எந்த வேலையும் செய்யாம இவர் மகளையும் பாடாப்படுத்திக்கிட்டு இருந்தாரு. வேற வருமானம் ஏதுமில்லாம அவ மூணு மகளுகளை வைச்சிக்கிட்டு ஒன்னுக்கு கலியாணம் முடிச்சி மத்த ரெண்ட எப்புடிகட்டிக்குடுக்குறதுன்னு முழி பிதுங்கி நின்னுக்கிட்டு இருந்தா. அவளோட மயனும் பெருசா வருமானமில்லாத வேலையில் இருந்தான். அதுனால அவளோட சொத்துப்பங்கு அவளுக்குபோய் சேரனும்றதுல உறுதியா இருந்தாரு. ஆனா சின்ன மக எல்லாச்சொத்தையும் அபகரிக்க திட்டம்போட்டா . .இம்புட்டுக்கும் அவளுக்கு ரெண்டும் மகன்கள்தான் ஒரு பொண்ணு ஏற்கனவே கலியாணம் பண்ணிக்குடுத்துட்டா.இம்புட்டுக்கும் அவளுக்கு ரெண்டும் மகன்கள்தான் ஒரு பொண்ணு ஏற்கனவே கலியாணம் பண்ணிக்குடுத்துட்டா இருந்தாலும் இவரப் பத்திரத்துல கைரேகை வைக்க வற்புறுத்திக்கிட்டு இருந்தா அதுக்கு இவர் ஒத்துக்காததால ஏதோ திட்டம் போடுறமாதிரி இவருக்குத் தோணிச்சி. கிராமங்கள்ல எண்ணதேய்ச்சி எளனி குடுக்குறதுன்னா வீட்டுல வயசானவங்க ரொம்ப முடியாம இழுத்துக்கிட்டுக்கெடந்தா அவங்களுக்கு நல்லா குளுர எண்ணதேய்ச்சுக்குளுப்பாட்டி இளனிய நெறையாக் குடிக்க வைச்சி பன்னிக்கறி குடுத்து சாப்பிடவைச்சா அன்னிக்கி ராத்திரி ஒடம்பு ஓவராக்குளுந்து போய் ஜன்னி வந்து போய்ச்சேந்துருவாங்க இப்படி ஒரு வழக்கம் கிராமங்கள்ல நடைமொறையில இருந்துச்சு. அது ரொம்ப முடியாதவங்களுக்குச் செய்யிறது. இத பகிரங்கமாச்செய்யிற அளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியமா இருந்துச்சு அந்தப்பழக்கம் இவங்க அதைப்பத்திப்பேசுறாங்கன்னவன்ன இவருக்குத் திக்குன்னு இருந்துச்சு. நம்மளுக்குத்தேன் ஏற்பாடு பண்ணுறாங்கன்னு தெரிஞ்சிபோச்சி. இவருக்கும் வயசு 80 ஆயிப்போச்சு. ஆனா நல்ல ஆரோக்கியம் ஆளு ஆறடிக்கு ஓங்குதாங்கா ஒசறமா இருப்பாரு. பாத்தவன்ன மரியாத குடுக்கத்தோணும். ரொம்ப நடக்கத்தான் முடியாது. ஆனா சாப்பாடு ஒன்னும் கொறவில்ல. இன்னிக்கும் அம்சவல்லி ஓட்டல் பிரியாணின்னா முழுசா சாப்புட்டு ஜீரணிக்கும் வயிறு, தலைக்கறி ஈரல்னு எதையும் சாப்பிட்டு செமிக்கிற ஒடம்பு. நடமாட்டம் இல்லையே தவிர வேற ஒன்னும் பிரச்சனை இல்ல. ஒன்னுக்கு ரெண்டுக்கு வெளியெபோய் போகமுடியாது அதுக்காக ஒரு சேரில் ஒக்காந்து போறமாதிரி ரெடி பண்ணிக் குடுத்துருந்தாங்க. இப்ப இவங்க திட்டம் என்னவாயிருக்கும்னு இவரால ஊகிக்க முடிஞ்சது. வம்படியா சொத்த அவங்கபேருக்கு உயில் எழுதி சுயநெனவோட இருக்குறப்ப அதுல இவர் கைரேகை பதிக்கவைக்கிறது இல்ல எண்ணதேய்ச்சு எளனி குடுத்து உசிறுபோறதுக்கு முன்னாடி ரேகைய பதிக்கிறதுதான் திட்டம்னு தெரிஞ்சி போச்சு. இப்ப என்ன பண்ணுறது பெரிய மகளுக்குத் தகவல் சொல்லனும் அவ வந்தா இத நிறுத்தலாம் ஆனா அவ வெளியூர்ல இருந்தா எப்புடித் தகவல் சொல்லுறது ஆர் மூலமா சொல்லுறதுன்னு கொழப்பம் ஆயிறுச்சு. எப்புடியும் நாளைக்கி இதச்செஞ்சி நம்மல க் காலி பண்ணி ருவாங்கன் னு தெரிஞ்வன்ன அவருக்கு கண்ணீர் முட்டிச்சி. இதே சின்ன மகளுக்குப் பெரியம்மை போட்டு ஒடம்பு பூராம் கொப்பளம்மாகி வாழை எலையில வெளக்கெண்ண தடவிப் படுக்கவைச் சிருந்தப்ப சாமிக்கிட்டக் காப்பாத்திக்குடு ஒனக்கு கெடாவெட்டிப் பொங்கல் வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டு ராப்பபகலா கண்ணு முழிச்சி வேப்பிலையில வீசிக்கிட்டு இருந்ததெல்லாம் நாவகம் வந்துச்சு. அதுல பொழைச்ச மக இப்பத் தன்னை கொல்லத் திட்டம் தீட்டுறதை நெனைச்சி அழுக அழுகையா வந்துச்சு. என்ன செய்ய எல்லாம் பணம் காசு சொத்து. ஏன் இந்த சோதனைன்னு கண்ணீர்விட்டு அழுதார் பொன்னுசாமி அப்ப பேரன் முத்து கேட்டான் ”ஏன்யா அழுகுறஎன்னாச்சு சொல்லுங்கய்யா? “ ந்னான் அப்ப அவருக்கு இவன் மூலமா அவனோட அம்மாகிட்டச் சொல்லி அவங்க அம்மாவான இவரோட பெரிய மகளை வரச் சொல்லலா முன்னு ஒரு யோசனை தோணிச்சி. ஒடனே அவர் முத்துவைக்கூப்புட்டு” டேய் நீ போய் ஒங்க அம்மாகிட்ட சொல்லி ஊரில இருக்குற ஒங்க அம்மாயிய ஒடனே வரச்சொல்லு முக்கியமான விசயமாம் போய் சொல்லுவியா ஒனக்கு எட்டணா தாறேன்னு” சொன்னார் அவனும் சரின்னு காசவாங்கிக்கிட்டு தன்னோட டவுசர் பையில போட்டுக்கிட்டு அவங்க வீட்டுக்குப்போனான். அவன் போன கொஞ்சநேரத்துல அவரோட சின்ன மக தட்டுல சோத்தப்போட்டு ஈரல் கொழம்போட வந்து “ சாப்புங்க அப்பா”ன்னு குடுத்தா. நெஞ்சில துக்கம் அடைக்க ”வேணாம்மா பசியில்ல” நு சொன்னார் அதுக்கு அவ ”காலாகாலத்துல திண்ணு தொலைச்சாத்தான மத்த வேலைகளைப் பாக்க முடியும்னு “கத்துனா இவர் வேணாமுன்னு பிடிவாதம் புடிச்சார். அதுக்குள்ள அவளோட மகன் உள்ள வந்து அவகிட்ட ஒரு பேப்பரைக்குடுக்க அதை வாங்கிப்பாத்துட்டு “ எங்குனக்குள்ள இவர் ரேகை போடனும் சொல்லு?” நு கேட்டா அவன் அதைப்பிரிச்சி எடத்தக்காமிக்க அதை இவர்கிட்டக் கொண்டாந்து “ இங்குனக்குள்ள ஒரு ரேகை வையிங்க” நு சொன்னா அதுக்கு இவர் என்ன எழுதியிருக்கன்னு தெரியாம எப்புடி ரேகை வைக்கிறது என்னா எழுதிருக்கன்னு யாராவது படிச்சிக்காமிங்க” நு சொல்ல அதுக்கு அவ என்ன எழுதியிருந்தா என்ன சொன்ன எடத்துல ரேகைவைச்சா எல்லாருக்கும் நல்லது ஒழுங்கா ரேகை வைக்கிறதுக்கு வழியப்பாருன்னு கத்துனா அவர் முடியாதுன்னு சொல்லவும் வம்படியா இழுத்து வைக்க அவளும் அவ மகனும் முயற்சி பண்ணுனாங்க ஆனா அவங்களால முடியல. இவர் முழு பலத்தையும் காட்டிகட்ட விரல மூடி வைச்சிக்கிட்டார். விரிக்கவே முடியல அவளுக்குக் கோவம் வந்துருச்சி அவர்கன்னத்துல பளார் பளார்னு அறைஞ்சா அவர் கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டுச்சே தவிர விரல விரிக்க முடியல. அப்ப அவ சொன்னா இத எப்புடி செய்யிறதுன்னு எனக்குத்துதெரியும்னு சொல்லிட்டு அடுப்படிக்குள்ள போய்ட்டு கொஞ்சநேரம் கழிச்சி செக்கச்செவேல்னு காய்ச்சின தோசைக்கரண்டியோட வந்தா, வந்து ”இப்ப ஒழுங்கா ரேகை வைக்கிறீயா இல்ல கையில சூடுவைக்கட்டுமான்னு” மிரட்டினா அப்பவும் அவர் அசைஞ்சு குடுக்கல. ஒடனே அவரோட இடது கைய இழுத்துவைச்சி காய்ச்சின சூடான கரண்டினால ஒரு இழுப்பு இழுத்தா. இப்ப அவர் அலறினார் ஆனாலும் கைவிரல விரிக்கல. அதுக்குள்ள இவர் அலறல் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுல இருந்த ஒருபெரியவர் உள்ளாற வந்து “ என்னா பெரியவர் கத்துனமாதிரி சத்தம் கேட்டதுன்னு கேக்க இவ சொன்னா “ பெருச்சாளி இவர் மேல தவ்விடுச்சு அதான் சத்தம் போட்டார்னு “ ஆனா வந்தவர் இவ பொய்சொல்றான்னு தெரிஞ்சது ஆனா அதுக்கு மேல எதுவும் கேக்க முடியல ஆனா “ ஏதோ கருகுன மாதிரி வாசம் வருதுன்னு” கேக்க இவ சொன்னா உள்ளாற ஆட்டுக்காது வாட்டுறோம் அதான் கருகுற வாசம்”ன்னா அவர் நம்பிக்கை இல்லாம வெளியே போனார்.அப்ப அவ சொன்னா இது வேலைக்காவாது நாம பேசுன மாதிரி நாளைக்கிக்காலையில எண்ணக்காப்பு செஞ்சிறவேண்டியதுதான்னு சொன்னா. அப்ப அவர் அழுதார் ”வேணாம்மா இன்னிக்கி நாள் நல்லால்ல நாளைக்கி நான் ரேகைவைக்கிறேன் என்னக்கொன்னுறாத எல்லாச்சொத்தையும் ஒனக்கே எழுதிக் குடுத்துருறேன்” நு அழுதார்அதைக்கேட்டுட்டு அவ சொன்னா உன் மாய்மாலம் எல்லாம் என் கிட்டப் பலிக்காது நாளைக்கி ஒனக்கு எண்ணக்காப்புதான் ஒன்ன நம்ப முடியாது நீ மகா நடிகனாச்சே இன்னிக்கி ராத்திரிதான் ஒனக்குக் கடைசி ராத்திரி நாளைக்கி உன் கதை முடியப் போகுது” கொடூரமா சிரிச்சா இதுக்கு நடுவில முத்து போய் அவங்க அம்மாகிட்ட அய்யா சொன்னதைச் சொன்னான். அதுக்கு இப்ப எப்புடிப் போய் அம்மா கிட்டச்சொல்லுறது இருட்டிருச்சே. காலையில பாத்துக்கலாம் நு சொல்லிட்டா. மறுநாள் காலையில முத்துவோட அம்மா அவன் கிட்டக்காசு குடுத்து “ நீயே போய் அம்மாயிக்கிட்ட வெவரத்தை சொல்லு வழக்கம் போல மாடக்கொளம் பாதையில நடந்துபோ.னு சொல்லி அனுப்புனா. அதுக்குள்ள இங்க பொன்னுச்சாமிக்கு எண்ணதேய்க்க ஏற்பாடு நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் எளனி வெட்டிக்கொண்டாந்து வைச்சிருந்தாங்க. கொள்ளைப்புரத்துல எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் பன்னிக்கறி வாங்கியாந்து வெந்துக்கிட்டு இருந்துச்சு. வெளக்கெண்ணயக் காய்ச்சி பொன்னுச்சாமிய சேரில ஒக்காரவைச்சி ஒடம்பு பூராம் தேய்ச்சிக்கிட்டு இருந்தாங்க அப்பவும் அவர் கை மூடுனமாதிரிதான் இருந்துச்சு விரிக்கல. அதைப்பாத்துட்டு மக சொன்னா கெழவனுக்குப் பிடிவாதம் பாரு இப்பவும் கைவெரலு மூடியே கெடக்கு. எல்லாம் ஜன்னி வார வரைதான் அப்புறம் என்னா செய்யும் பெருசுன்னு வில்லத்தனமா சிரிச்சா நல்லா எண்ணயதேய்ச்சு விட்டு குளுரவிட்டுட்டு பச்சத்தண்ணிய மேல ஊத்தி குளுப்பாட்டினாங்க. அப்பவே அவர் வாய் ஆட ஆரம்பிச்சது அப்புறமா தொவட்டி விட்டுட்டு எளனிய வெட்டி குடிக்கச்சொன்னாங்க. அவர் வாயத்தொறக்காம வம்பு பண்ணவும் சங்குல வைச்சி எளனிய ஊத்திவிட்டாங்க ஒன்னு ரெண்டுன்னு 5 எளனி ஊத்தியாச்சு. அவர் ஒடம்பு லேசாநடுங்கதொடங்குச்சு. அவரைத்தூக்கிபெஞ்சில படுக்கவைச்சி பக்கத்துல பேனைவைச்சி ஓடவிட்டாங்க. பொன்னுச்சாமிக்கு தாங்க முடியல. கண்ணுல கண்ணீர் ஊத்துச்சு. கொஞ்சநேரத்துல அவருக்குப் பசி எடுத்துச்சு. அப்ப பன்னிக்கறி வேக வைச்ச சூப்ப ஆறவைச்சிக் குளிறவைச்சி குடிக்ககுடுத்தாங்க. அப்ப அவருக்கு தன்னோட முடிவு தெரிய ஆரம்பிச்சது சுய நெனப்பு தப்ப ஆரம்பிச்சது. இதுக்கு நடுவில முத்து அங்க போய் சேர மத்தியாணமாயிருச்சு. அம்மாயிகிட்டபோய் வெவரத்தைச்சொன்னான் ஒடனே அவனோட அம்மாயி என்னா நு தெரியலயே காரணமில்லாம சொல்லி அனுப்பமாட்டாரே அப்பான்னு அழுது பொலம்ப ஆரம்பிச்சிட்டா. சரி ஒடனே கெளம்பலாம்னு யோசிச்சா மகன்காரன் வேலைக்கிப் போயிருந்தான் இனி 2 மணிக்கித்தான பஸ் மகாலுக்கு இருக்கு அங்க இருந்துதான ஊருக்குபோகனும்னு சொல்லிட்டு கதவைப்பூட்டிட்டு கெளம்பினா . இப்பக் கெளம்பினாலும் அங்கபோய் சேர சாயங்காலம் ஆயிடுமேன்னு சொல்லிக்கிட்டே கிளம்பினா பொன்னுச்சாமியோட சுய நெனைவு தப்பவும் சின்ன மககாரி இதுதான் சரியான சமையம் போய் உயில எடுத்துட்டு வா ரேகைய வைச்சிரலாம் நு சொன்னவன்ன மகன் காரன் உள்ளாற போய் உயில் பேப்பரை எடுத்துட்டு வந்தான் அப்பவும் அவர் கை மூடித்தான் இருந்தது கஸ்ட்டப்பட்டு அந்த க்கைய விரிக்க முயற்ச்சிபண்ணி விரிச்சா அவங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு இதுக்கு முன்னாடி ராத்திரி பொன்னுச்சாமி யோசனை பண்ணினார். எப்புடியும் நம்மல கொன்னுறப்போறாய்ங்க. அவங்களுக்கு வேண்டிய ரேகை நாம மயக்கமானதும் எடுத்துக்குவாங்க அதுக்கு என்ன பண்ணுறதுன்னு யோசனை பண்ணுனாரு அவருக்கு ஒரு யோசனை தோணிச்சி வலி அதிகமானாலும் வேற வழி இல்லன்னு முடிவு பண்ணி வெத்தல இடிக்கிற ஒரல எடுத்து தன்னோட பெருவிரலை உள்ளாறவைச்சி இடிக்கதொடங்கினார். வலி உயிர்போற மாதிரி இருந்தாலும் பொறுத்துக்கிட்டு கண்ணீர்வழிய விரல நச்சி செதச்சிட்டார். அத்தோட விரல இருக்கமா மூடிக்கிட்டு ராத்திரி பூராம் கண்ணீர் விட்டு அழுதுக்கிட்டு இருந்தார் சின்ன மக அவரோட நைஞ்சுபோன பெருவிரலப்பாத்ததும் கோவமாயிட்டா. இவன் நேத்துச் சொன்னப்ப வே உசாரா யிருந்திருக்கனும் இப்ப அம்புட்டும் கெட்டுப்போச்சே நு பொலம்புனாஅதுக்குள்ள பொன்னுச்சாமிக்கி ஜன்னி வந்து இழுத்துக்க ஆரம்பிச்சது. கொஞ்சநேரத்துல அவருடைய உசிறு பிரிஞ்சது. அப்ப சின்ன மக பெருங் கொரொலெடுத்து அழுகதொடங்குனா சொத்துபோச்சேன்னு வருத்தத்துல. அதே நேரத்துல பெரிய மக உள்ளாற வர அவளப் பாத்துட்டு அக்கா அப்பா நம்மல விட்டுட்டுப்போயிட்டாருக்கான்னு அழுக எல்லாருமா ஒப்பாரி வைச்சி அழுகத்தொடங்குனாங்க அப்ப வந்த பக்கத்து வீட்டுக்காராரு வந்து பாத்துட்டு பாவம் நேத்துக்கூட நல்லா இருந்தாரு. அவர்மேல பெருச்சாளி வந்து தவ்வுச்சு நு சொல்லிட்டுத் தச்சேலா கைப்பெருவிரலப்பாக்க அட பெருச்சாளி அவர் வெரலக்கடிச்சிருக்கு ஆரும் பாக்கலயான்னு சொன்னாரு கூடவந்த முத்து கீழ உருண்டு கெடந்த வெத்தல இடிக்கிற ஒரல்ல ரத்தம் காஞ்சிருந்ததப் பாத்துட்டு நேத்து வெத்தல இடிச்சிட்டு கழுவித்தான வைச்சோம் அப்புறம் யாரு அதுல இடிச்சதுன்னு யோசிக்க தொடங்கினான் எல்லாரோட சேந்து அவனும் அழுகத்தொடங்கினான். அய்யாவ நெனச்சி. பொன்னுச்சாமி மொகத்துல ஏதோ முடிச்சிட்ட அமைதியும் நிம்மதியும் தெரிஞ்சது. அ.முத்துவிஜயன்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in