logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

M. SHANKAR

சிறுகதை வரிசை எண் # 222


சிறு கதை By: M. SHANKAR, 430, 22nd Street, 5th Sector, KK Nagar,Chennai 600078. Mobile 9908765550 , Email: emyes_04@yahoo.co.in ******************************************** காலங்கள் மாறும் “ரேப் ஆச்சுங்களா?” ஐசியு விலிருந்து வெளிவந்த டாக்டரை பின்னாடியே ஓடி வந்த ரிபோர்ட்டர் கேட்டான். ஒரு நிமிடம் அதிர்ந்த டாக்டர் “ நீ யார்யா” “ நா..நா.. தமிழ்சுடர் ரிபோர்ட்டர்” ‘சிஸ்டர் இந்தாளை எப்பிடி உள்ளே விட்டீங்க ?” என்று பக்கத்திலிருந்த நர்சை பார்த்து கடுகடுத்தார். “ ஸாரி டாக்டர்..ஏய்யா..நீ ரிபோர்ட்டரா..அந்த பொண்ணோட அண்ணன்னு பொய் சொல்லி உள்ளேவந்துட்டு இப்படி கொஞ்சம்கூட கூசாம கேவலமா கேக்கரியே..வெளியே போயா..” என்று அவனை தள்ளிவிட்டு, “ டாக்டர் ஸாரி..” “ சரி அந்த பொண்ணோட வந்தவர என்னோட ரூமுக்கு அனுப்பு” என்று சொல்லிவிட்டு தன் அறையை அடைந்தார். சில நிமிடங்களில் அறைக்கதவை மெலிதாக தட்டி உள்ளே வந்தவரை பார்த்தார். அறுபது வயதிருக்கும்.. வழுக்கை தலை..சோகம் அப்பிய முகம் கண்ணாடியை ஒரு கையில் பிடித்திருந்து, மறு கையால் கண்ணில் பொங்கும் கண்ணீரை கர்ச்சீப்பால் ஒத்திக்கொண்டே “டாக்டர்.. எப்பிடி இருக்கா?” “ நீங்க?” “ நா, சிதம்பரம், அவ அப்பா..நித்யா என்னோட ஒன்லி டாட்டர்..சொல்லுங்க டாக்டர்.. அவ எப்பிடி இருக்கா? அப்புறம் அந்த இடியட் ரிபோர்ட்டர் கேட்டானே..அந்த விஷயம்...” “ மிஸ்டர் சிதம்பரம் உங்க பொண்ணு நல்லாத்தான் இருக்கா... ஃபோர்ஸ்ஃபுல் என்ட்ரினால முகம், வஜீனா, மார்பு இடங்களெல்லாம் பலத்த காயம்.. எல்லாத்தையும் கிளீன் செஞ்சு ட்ரீட் பண்ணிட்டோம்.. உடளவிலேவிட.. மனதளவிலே அதிர்ச்சியில இருந்ததாலே செடேடிவ் கொடுத்துருக்கோம்.. இன்னும் நாலைந்து மணி நேரம் மயக்கமா இருப்பாங்க.. இன்னிக்கு ஒரு நாள் அப்செர்வேஷன்ல வச்சிட்டு நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” “ஃபோர்ஸ்ஃபுல் என்ட்ரின்னா....பலாத்..” தடுமாறினார் “ எஸ்..ஐயாம் ஸாரி..” இப்போது அவர் முகத்தை மூடிக்கொண்டு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தார். டாக்டர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர் பக்கம் வந்து அவர் தோளை தட்டி, “ஆனா நாங்க எல்லாத்தையும் கான்ட்ராசெப்டிக் வாஷ் பண்ணிட்டோம்..பின் விளைவு எதுவும் இருக்காது.. ரிலாக்ஸ் ஸார்” “ எல்லாத்தையும் வாஷ் பண்ணமுடியுமா? எப்பிடி டாக்டர்..எப்பிடி.. பின்விளைவு ஏற்படாதா? எப்படி முடியும் டாக்டர்?.. மெடிகலா வேணா இதெயல்லாம் சரி பண்ணியிருக்கலாம்.. ஆனா நிஜ வாழ்கையில இதெ சரியாக்க முடியுமா? அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் டாக்டர்.. இனிமே நான் எந்த மொகத்தை வச்சுக்கிட்டு..” வார்த்தையை முடிக்கமுடியாமல் கேவி கேவி அழ ஆரம்பித்தார். டாக்டர் அவர் முதுகை தடவியவாறே “ மிஸ்டர் சிதம்பரம் கூல் டவுன். இப்போ உங்க மகள் சைகலாஜிகலா ஒரு ட்ரோமால இருக்காங்க. இந்த சமயத்திலே அவங்களுக்கு இமோஷனல் சப்போர்ட் ரொம்ப தேவை.. நீங்கெல்லாம்தான் அவளுக்கு தைர்யமும், ஆறுதலும் தரணும். நீங்களே இப்படி உடைந்து போனா எப்படி...” கண்ணை துடைத்தபடியே “ புரியுது டாக்டர்.. நா ஒரு ரிடையர்டு கவர்மென்ட் ஹெச் ஆர் ஆபிசர்.. கொஞ்சம் சைகாலாஜி தெரியும்..” “ சரி..சரி..நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு வந்தா போதும் “ டாக்டர்..ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. என் பெண்ணோட பேரு விவரமெல்லாம் மீடியாகிட்ட தயவுசெய்து சொல்லாதீங்க.. அவளுடைய கல்யாணம் அடுத்த மாசம்..பிள்ளை வீட்டுகாரங்க அமெரிக்காவில இருக்காங்க..அடுத்த வாரம்தான் இந்தியா வராங்க..அவங்களுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது.. நீங்கதான் காப்பாத்தனும்” என்று அவர் கையை பிடித்து கெஞ்சினார்.. “ சார்.. எங்க ஹாஸ்பிடல்லேந்து எந்த விஷயமும் வெளிவராமா இருக்க நா பாத்துக்கறேன்..ஆனா இது போலீஸ் கேஸ்..அதனால அவங்ககிட்டேயும் சொல்லிவையுங்க..” “ ரொம்ப தேங்க்ஸ்” சிதம்பரம் ஹாஸ்பிடலை வெளியேறுமுன் சற்று எட்டிப்பார்த்து, அந்த நிருபரின் கண்ணில் படாதவாறு முகத்தை மறைத்து வீட்டிற்கு விரைந்தார். வீட்டில் அவர் மனைவி, கற்பகமும், அவர் அம்மாவும் இருப்புகொள்ளாமல் தவித்துக்கொண்டிருநதனர். அன்று விடியற்காலை 4 மணி அளவில் போலிசிடமிருந்து வந்த போன் கேட்டு அலறிப்புடைத்து கிளம்பிய சிதம்பரத்திடமிருந்து ஒரு தகவலும் இல்லை. கிளம்பும்முன் அவர் சொன்ன செய்தி அவர்களை கதி கலங்க வைத்தது. “ நித்யாவுக்கு ஆபிசிலிருந்து வரவழியில ஓஎம்ஆர் ரோடில ஆக்சிடென்ட்டாம் .ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம் உடனே வரசொல்றாங்க” என்று சொல்லி விரைந்தவரின் பின்னாடி ‘நானும் வரேன்’ னு கிளம்பிய மனைவியை தடுத்துவிட்டு போனவரிடமிருந்து இதுவரை ஒரு தகவலும் இல்லை. போனிலும் தொடர்புகொள்ளமுடியவில்லை. அவசரத்தில் கிளம்பியதால் செல் போனையும் எடுத்து செல்லவில்லை. வீட்டு வாசலில் மனைவியும், பூஜை அறையில் 9௦ வயதான அவர் அம்மாவும் பதைபதைப்புடன் காத்திருந்தனர். ​​******************************************** நித்யா இவர்களின் ஒரே பெண்...விரித்து நீட்டிய தலை முடி, ஸ்லீவ்லெஸ் டிஷர்ட், இடுப்புக்கு கீ....ழே நழுவிவிடும்போல் அங்கெங்கே கிழிந்திருக்கும் ஜீன்ஸ், அதை விழாமல் தடுக்க பட்டை பெல்ட், முகத்தையே மறைக்கும் அளவு கறுப்பு கண்ணாடி.. சுருக்கமாக நித்யா இந்த தலைமுறை பெண்களின் உண்மையான பிரதிநிதி.. இதற்கு நேர் மாறாக சிதம்பரம், கற்பகம் தம்பதியினர், நித்யா இவர்கள் பெண்ணா? என்று வியக்கும் அளவுக்கு, உடையிலும், நடவடிக்கைகளிலும் பழமைவாதிகள். அதிலும் சிதம்பரத்திற்கு இந்த கால இளசுகளின் எந்த விஷயங்களும் ஒத்துவராது. “ இவனுக போடற ட்ரெஸ்ஸும், கேக்கற பாட்டும், பேசற பேச்சும். சே உருப்படவே உருப்படாது” என்று அடிக்கடி ஆபிசிலும் வீட்டிலும் புலம்புவார். இதுபற்றி நித்யாவுடன் அவர் சண்டையிடாத நாட்களே கிடையாது. அதுவும் அவள் போன மாதம் பிகாம் முடித்த கையோடு ஒரு அமெரிக்க பிபீஒவில் நைட் ஷிப்டில் வேலைக்கு சேரப்போகிறாள் என்று சொன்னதும் அதை கடுமையாக எதிர்த்தார். இவருடைய எல்லா எதிர்ப்புகளையும் நித்யா முறியடிக்க முக்கிய காரணம் அவர் அம்மா. 90 வயதை நெருங்கும் அவர் அம்மா! சிதம்பரத்திற்கு 15 வயதாகும்போதே விதைவை ஆகி, கணவர் அலுவலகத்திலியே அனுதாபத்தினால் கிடைத்த வேலையில் உழைத்து முன்னேறி சிதம்பரத்தை வளர்த்தவள். “ நா வாழறத்துக்கு நீதாண்டா காரணம்” என்று சொல்லி சொல்லியே வளர்த்தாள். அதனாலேயே சிதம்பரம் அம்மா சொல்லுக்கு கட்டுப்படுவார். தன்னை அவ்வளவு கண்டிப்பாக வளர்த்தவள், இன்று நித்யாவின் நடவடிக்கைகளை எப்படி ஆதரிக்கிறாள் என்பதுதான் அவருக்கு புரியவில்லை. “ நாங்கெல்லாம் எப்பிடி வளர்ந்தோம் தெரியுமா? எங்க அப்பா எவ்வளவு டிசிப்ளிண்டா இருந்தார் தெரியுமா?” என்றெல்லாம் அவர் நித்யாவிடம் கத்தும்போது “ போறுண்டா உங்க அப்பா பெருமையை பீத்தறது ..அந்த காலம் வேறே இந்த காலம் வேறே.. நித்யா நீ போம்மா ..நா இவன்கிட்டே பேசிக்கிறேன்” என்று சிதம்பரத்தை அடக்கிவிடுவாள். நித்யாவும் எதாவது ப்ராப்ளம் என்றால் “ பாட்டி அப்பாவை பாருங்க” என்று அவள் மூலம் தன் காரியத்தை சாதித்து விடுவாள். அப்படித்தான், இந்த பிபிஓ வேலையை, பாட்டியின் குறுக்கீட்டின்மூலம் அப்பாவின் எதிர்ப்பை சமாளித்து ஏற்றுகொண்டாள்.. ஆனால் இப்போ நடந்ததை பாக்கும்போது தான் செய்தது தவறோ என்று பாட்டி விசனப்பட்டாள். தெருக்கோடியில் சிதம்பரம் வருவதை கண்டதும் அவர் மனைவி ஓடி போய் “ என்ன ஆச்சு? நித்யா எப்பிடி இருக்கா ?” என்று பதட்டத்துடன் கேட்டாள் “ எல்லாம் வீட்டுக்குள்ள போய் பேசலாம்” என்று விடுவிடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவர் வந்த அரவம் கேட்டு பூஜை ரூமிலிருந்திருந்து வெளி வந்த பாட்டி “ என்னடா? கொழந்தை எப்பிடி இருக்கா?” என்று நடுங்கியவாரே கேட்டாள். ஹாலிலிருந்த சோபாவில் சரிந்தபடியே ´அத எப்பிடிம்மா வெளக்கமா சொல்ல முடியும்....சொல்ல வாய் கூசுதேம்மா”” அவர் குரல் தழுதழுத்தது. “என்னடா சொல்லறே..கொஞ்சம் புரியும்படிதான் சொல்லேன்” ”ஆபிஸ் முடிந்து, கால்டாக்சி பிடித்து வரும் வழியில் அந்த டிரைவர் அவளை...” மேலே சொல்லமுடியாமல் துண்டால் வாயை பொத்தி குலுங்கினார். பாட்டியும் மனைவியும் திகைத்து சிலையாக நின்றார்கள். சிதம்பரம் முகத்தை அழுத்தி துடைத்துகொண்டே “ இப்போ அழுது என்ன பிரயோஜனம்? நா எவ்வளவோ சொன்னேன்.. ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டீங்க இந்த கால் சென்ட்டர் வேலைய விட சொல்லுனு ஆனமட்டும் சொன்னேன் கேக்கல..நைட் ஷிப்டுக்கு போகும்போது கன்னாபின்னான்னு டிரஸ் பண்ணிக்க விடாதேன்னு சொன்னேன் கேக்கல.. எல்லாருமா சேந்து என் வாயை அடச்சுட்டீங்க.. இப்போ என்ன ஆச்சு ? குடும்ப மானத்தையே கப்பலேத்திட்டா ” “ போறுண்டா.. அவ உடம்பு எப்பிடி இருக்கு அத சொல்லு ?” “ ஆமா உடம்புக்கு ஒண்ணுமில்ல.. உசிரோடதான் இருக்கா.” “ நிறுத்துடா.. என்ன பேச்சு பேசறே.. அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாதேன்னு நான் வயத்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருந்தேன்.. “ இப்போ எந்த மொகத்த வச்சுக்கிட்டு நா வெளிய போவேன்..நல்ல வேளை இதெல்லாம் பாக்காம எங்க அப்பா போயிட்டார்..எப்பேர்பட்ட மானஸ்தர்..” ‘ போறும்..உங்கப்பா புராணத்தை ஆரம்பிக்காதே.. இப்போ ஆக வேண்டியதை யோசிப்போம்.. “ “ அம்மா.. இனிமேயாவது நான் சொல்றதை கேளு.. நான் எல்லாத்தையும் யோசிச்சிட்டேன்.. இந்த விஷயம் நம்மள தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது.. நாளைக்கு நித்யா வந்ததும் அவ கிட்டயும் சொல்லிடு..பிள்ளை வீட்டுகாரங்க அடுத்த வாரம்தான் வராங்க.. அதுக்குள்ள நித்யா நார்மலாயிடுவா..இங்கே ஒன்னும் நடக்கலே..கல்யாணம் அடுத்த மாசம் நடக்கணும்..நடக்கும்..அம்மா நீதான் நித்யாவை பாத்துக்கணும் அவ கிட்டே சாதாரணமா நடந்துக்க சொல்லணும்..” அடுத்த நாள் நித்யாவை வீட்டுக்கு கூட்டிவந்தார்கள். அவளறையில் அவளை தனிமையில் விட்டு, அவ்வப்போது பாட்டியும், கற்பகமும் மட்டும் சென்று வந்தனர். அவளிடம் சாதாரணமாக பேசவேண்டும் என்றும் இந்த விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்றும் பாட்டி சொல்லிவிட்டாள். பிள்ளை வீட்டார்கள் வருவதற்கு முன் நார்மலாக வேண்டுமே என்று சிதம்பரம் அஞ்சிக்கொண்டேயிருந்தபோது, இரண்டாவது நாளே அந்த அமெரிக்கா பையன் வீட்டுக்கு வந்துவிட்டான். அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் “ வாங்க வாங்க மாப்பிள்ளே.. என்ன திடீர்னு, அடுத்த வாரம்தானே வரதா இருந்தீங்க..” “ ஆமா அங்கிள்.. சடன்னா ஒரு ஆபிஸ் வேலை வந்தது..நல்லதா போச்சுன்னு கிளம்பி வந்துட்டேன்..அம்மா அப்பா அடுத்த வாரம்தான் வராங்க..நித்யா ஃப்ரீன்னா கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போலாம்னு வந்தேன்..” ‘ நித்யா.. இப்போ.. அவளுக்கு இப்போ ஒடம்பு செரியில்லே..தூங்கறா..” “ அப்படியா? என்ன உடம்பு ?” “ ம்..ம்.. இது.. ஜுரம்.. வைரல் ஃபீவர்.. ஆமா.. வைரல் ஃபீவர்.. ஹை ஃபீவர்..தூங்கிட்டு இருக்கா..” “ நா பாக்கலாமா?” என்று எழுந்தான் “ இல்ல தூங்கிகிட்டு இருக்கா.. நா போய் பாத்துவிட்டு வரேன்” என்று அவரும் கூட எழுந்தபோது.. “ ஹாய்..” என்று முனகியவாறே அறைக்கதவை திறந்து நிலையில் தலையை சாய்த்து நித்யா நின்றாள். “ ஹாய் யூ லுக் வெரி சிக் அன் டயர்ட்” என்றவாரே அறைக்கு சென்றவனை சிதம்பரமும் அவசர அவசரமாக பின் தொடர்ந்தார். “ நித்யா..உனக்கு வைரல் ஃபீவர்..உன்னால வெளியிலவரமுடியாதுன்னு சொல்லிட்டிருந்தேன்..” “ அப்பா.. கொஞ்சம் எங்கள தனியா விடுங்க.. பேசணும் “ “ சரிம்மா.. உனக்கு வைரல் ஃபீவர்.. பாத்துக்கோ..” “ அப்பா ப்ளீஸ்..” என்றவாரே அவனை உள்ளே அழைத்து கதவை மூடினாள் வெளியே வந்த சிதம்பரம் அம்மாகிட்டேயும், கற்பகத்திடமும் புலம்ப ஆரம்பித்தார்.. “ இந்த பொண்ணு எதாவது உளறக்கூடாதே.. என்ன பண்ண போறாளோ..அம்மா நீ அவகிட்டே இந்த விஷயத்தை பத்தி சொல்லாதேன்னு சொல்லிட்டியா..” “ நீ கொஞ்சம் சும்மா இருடா.. அவ கெட்டிக்காரி..அவளுக்கு என்ன பண்ணனும்னு தெரியும்” அறைக்குள் போய் அரை மணி ஆயிற்று. இன்னும் அவன் வெளி வரவில்லை.சிதம்பரம் இருப்புகொள்ளாமல் தவித்தார். கடைசியில் ஒருவழியாக கதவை திறந்த அவன், பின்னாலையே கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த நித்யாவை மெலிதாக அணைத்து “ கெட் வெல் சூன்..டேக் கேர்” என்றவாறே வெளியேறினான். பதட்டத்துடன் காத்திருந்த சிதம்பரம், கற்பகம், பாட்டி ஆகியோரிடம் சிரித்தவாறே “ கொஞ்சம் ஷாக்ல இருக்கா.. ஷி வில் பீ ஆல்ரைட் சூன் “ என்றான்.. சிதம்பரம் அவசரமாக “ ஆமா ஆமா வைரல் ஃபீவர் இல்லையா.. டாக்டர் கூட சொன்னார் “ அவன் அவரை கூர்ந்து நோக்கி “ அங்கிள்.. ப்ளீஸ்..எனக்கு எல்லாம் தெரியும்.. நித்யா சொல்லிட்டா..” “ நித்யா..நித்யா..என்ன சொன்னா? வைரல் ஃபீவர்னு தானே?” “ அங்கிள்..அவளுக்கு என்ன ஆச்சுன்னு எல்லாத்தையும் டீடைலா சொல்லிட்டா..” “எல்லாத்தையும் னா?” அவர் தயங்கினார் “ ஆமா எல்லாத்தயும்தான்..” “ அப்போ நீங்க..உங்களுக்கு.. கல்யாணம்..” தடுமாறினார். “ அதுக்கு இன்னும் ஒரு மாசமிருக்கே அதுக்குள்ள அவ சரியாடுவா” “ அப்போ. உங்களுக்கு.. ஒன்னும் ஆட்சேபனை..அவளை ஏத்துப்பீங்களா?” “வாட் நான்சென்ஸ்..ஏத்துக்கறதா.. இதெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் வோர்ட்..அவ இதிலே என்ன தப்பு பண்ணினா? இட் வாஸ் ஜஸ்ட் அன் அக்சிடென்ட்..அவ்வளவுதான்..” சிதம்பரம் சரேலென அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “ மாப்பிளே..இதை உங்க கால நினைச்சு உங்களை வணங்கிறேன்..நீங்க ரொம்ப பெரிய மனசு படைச்சவர்..” “ இட்ஸ் ஓகே அங்கிள்.. இந்த வர்ஜினிட்டி விஷயங்களையெல்லாம் நாங்க உடலவுள பாக்கிறதில்ல...நித்யாவை நல்லா பாத்துங்கங்க..எனக்கு ஒரு மீட்டிங்..லேட் ஆயிடுச்சு.. அப்புறமா ஒரு முக்கியமான விஷயம்.. இந்த மேட்டர் என் பேரெண்ட்ஸ்க்கு தெரிய வேண்டாம்..அவங்க ஓல்ட் ஜெனரேஷன்.. அவங்களுக்கெல்லாம் கொஞ்சம் நேரோ வியுதான் இருக்கும். தவிர இந்த மேட்டர் எனக்கும் நித்யாவுக்கும் மட்டும்தான் சம்பந்தப்பட்டது. ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டான்ட்.. ஓகே..பை” என்று சொல்லி கிளம்பிவிட்டான். இதுவரை நடந்தவற்றை வாயடைத்து கேட்டுகொண்டிருந்த பாட்டி மெதுவாக எழுந்து சிதம்பரம் முன் நின்று “ பாத்தியாடா..அவன் எப்படி உசந்து நிக்கறான்.. அதைவிட உன் பொண்ண பாத்தியா.. எல்லாத்தையும் ஒளிக்காம மறைக்காம சொல்லிட்டா..எல்லாத்தையும் மறைச்சு ஒளிக்க பாத்தியே நீ.. அதுதாண்டா பழைய தலைமுறைக்கும், இந்த தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம்..இந்தகாலத்து பசங்க டிரஸ் உனக்கு ஆபாசமா இருக்கலாம்..ஆனா அவங்க மனசு வெள்ளையா இருக்கு..அவங்க கிட்ட நம்ம மாதிரி ஒளிவு மறைவு கிடையாது.. எல்லாத்தையும் ஒப்பனா ஷேர் பண்ணிக்க தயங்கறதில்லே.. அந்த காலத்திலே சுதந்திரம் கிடைச்ச சமயத்திலே நடந்த மத கலவரத்திலே எத்தனையோ பெண்களின் கற்பு சூரையாடப்பட்டது. அந்த மாதிரி சமயத்தில பாதிக்கப்பட்ட பெண்களை கைவிட்டுடாதீங்கன்னு, அவங்க கணவன்மார்களுக்கு, காந்திஜி மாதிரி ஒரு மஹாத்மா வேண்டுகோள் விடவேண்டியிருந்தது. அப்பிடியும் எனக்கு தெரிஞ்ச சில கணவன்மார்கள் பொண்டாட்டிகளை தள்ளிவைத்த அவலத்தை நான் பாத்திருக்கிறேன். அதுதாண்டா நீ பீத்திக்கிற அந்த கால தலைமுறை. இப்போ பாத்தியா..இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்னு சிரிச்சிட்டே சொல்றானே.. அதுதாண்டா இந்த தலைமுறையோட பெருந்தன்மை..” பாட்டி மேலே பேசுவதற்குள், நித்யா குறுக்கிட்டாள் “ அப்படி சொல்லாதே பாட்டி நீயும் அந்த கால தலை முறைதானே? எப்படி அப்பா எங்க தலைமுறையை ஒட்டு மொத்தமா குத்தம் சொல்றது தப்போ அதே மாதிரி அந்த கால தலை முறையை நீ குத்தம் சொல்றதும் தப்பு. காலங்காலமாகவே இன்னிவரை மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டேதானிருக்கு தனிமனிதர்களின் அத்துமீறலுடன் பலமான நாடுகள் பலவீன நாடுகளை ஆக்ரமிக்றதையும் பாக்றோமே? ஆனா இவைகளை பற்றிய புரிதல்களும் அந்த உரிமை மீறல்களை கண்டிப்பதும், இதனால் பாதித்தவர்களை அரவணைப்பதும் இப்போ பரவலா அதிகமாகியிருப்பது வரவேற்கவேண்டிய முன்னேற்றம்தான்....விரைவில் இந்த புரிதல்களும்,கண்டிப்புகளும், அனுதாபங்களும் அத்துமீறல்களை குறைக்க உதவட்டும்...” இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த நித்யாவை பெருமையுடன் வாஞ்சையாக அணைத்துக்கொண்டாள் பாட்டி. ****************************************** By: M. SHANKAR, 430, 22nd Street, 5th Sector, KK Nagar,Chennai 600078. Mobile 9908765550 , Email: emyes_04@yahoo.co.in

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.