logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Thippurahim

சிறுகதை வரிசை எண் # 187


சேர்ந்து வாழும் கொடுப்பினை மன்னார்குடி ரயில் நிலையம் இரவு எட்டு மணி சென்னை போகும் மன்னை விரைவு இரயில் கிளம்புவதற்கு தயார் நிலையில்.. ஒலிபெருக்கியில்.."பயணிகளின் கவனத்திற்கு!சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து கிளம்பும் என்று கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது.."என்று தமிழ் ஆங்கிலம் இந்தியில் தெரிவிக்கின்றன.. பயணிகள் தங்களுடைய இருக்கைகள் தேடி நடந்து கொண்டிருந்தார்கள்.. ஜன்னல் ஓரத்தில் இருக்கை கிடைத்தது பிரபாகரனுக்கு. வெளியே மனைவி சுகந்தி கணவனின் பிரிவைத் தாளாமல் கண்ணீருடன்... "என்னங்க போனதும் உடனே ஃபோன் பண்ணுங்க.." "சரி ரயில் கிளம்புது நீ பத்திரமாக வீட்டுக்கு போ நான் போய் ஃபோன் பண்ரேன்.." "மாப்ளே மாப்ளே.... இந்தாங்க வாட்டர் பாட்டில்... பத்திரமாக போயிட்டு வாங்க மாப்ள.." "சரி மாமா உங்க உடம்பை பாத்துக்கோங்க மாமா..." இரயில் நிலையம் மறையும் வரை மனைவிக்கும் மாமனாருக்கும் கை காட்டிக் கொண்டே வந்தான். பிறகு திரும்பி அமர்ந்து பெருமூச்சு விட்டபடி எதிரே அமர்ந்திருந்த பெரியவரை இப்போது தான் பார்த்தான். அவர் இவனை பார்த்து இலேசாக புன் முறுவல் பூத்தார். "எங்கே சென்னையா?"என்றார். "ஆமாம் சென்னை சென்று காலையில் விமானத்தில் துபாய் போகிறேன்"என்றான். "ஓ அப்படியா? என்ன ஊர் நீங்கள்? என்று கேட்டார் அந்த பெரியவர். "மன்னார்குடி தான்.ஆமாம் நீங்கள் என்ன ஊர்?சென்னை போறீங்களா? "ஆமாப்பா அங்கே என் மகன் இருக்கார்.அவர் கூடத்தான் நான் இருக்கிறேன்.என் சொந்த ஊர் லெட்சுமாங்குடி.என் மனைவி இங்கு என் மகள் வீட்டில் இருக்கிறாள்.இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து பார்த்து போவேன்"என்றார். "ஏன் நீங்கள் அங்கும் உங்கள் மனைவி இங்கும் இருக்கீங்க?" இந்த கேள்வியை கேட்டதும் கடுமையாக சிரித்தார்.பிறகு சொன்னார்.. "காலத்தின் கட்டாயம்.! சில நேரம் நாம் அனைவரும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது." "ஐயா நான் ஏதும் தவறாக கேட்டு விட்டேனா?" "அப்படி இல்லை தம்பி நானும் உங்களைப் போல் ஒரு நாள் வெளிநாடு கிளம்பியவன் தான் என் பிள்ளைகளை படிக்க வைத்து மிகப் பெரிய ஆட்களாக உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தோடு நான் இருந்தேன்." "எனக்கு ஒரு மகன் ஒரு மகள் என் மனைவியை அவர்கள் இருவரையும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்த்து விட்டு நீங்கள் எங்களுடவே ஊரில் தங்கி விடுங்கள் என்று கேட்டாள்." ஆனால் நானோ என் மனைவியிடம்... "கொஞ்ச நாள் பொறுத்திரு நம் பிள்ளைகளை பெரிய ஆட்களாக உருவாக்க வேண்டும்.அவர்கள் அப்படி ஆனதுக்கு பிறகு நாம் இருவரும் ஒன்றாக இருப்போம்.! இந்த உலகத்தை சுற்றி வருவோம்" என்று சொல்வேன். "நான் படிக்கவில்லை வெளிநாட்டிலே சிரமப்பட்டு கொண்டிருந்தேன். என்னுடைய பிள்ளைகளை மிக உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன். அதற்காக என்னுடைய இளமையை,என் மனைவியின் ஆசையை அனைத்தையும் நாங்கள் துறந்தோம்." "நான் நினைத்தது போல எனது பிள்ளைகள் படித்து வேளையில் சேர்ந்து பின்னர் திருமணம் செய்து வைத்தேன்." "இனி நாங்கள் இருவரும் ஒன்றாக ஊரில்..விவசாயம் செய்து கிராமத்து வாழ்க்கையை வாழ போறோம்.!என்று நினைத்தோம்." "ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது." என்னாச்சு ஐயா"?" "என் மகனுக்கு தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதற்கு பணம் தேவைப்பட்டது.நான் என்னுடைய நிலத்தை விற்று என் மகனுக்கு கொடுத்து விட்டேன்." "அதோடு என் மகள் பிரசவத்திற்கு போன என் மனைவியை அங்கேயே தங்க சொல்லி விட்டது என் மகள்." "என் மகன் தொழில் ரீதியாக வெளியூர்களுக்கு செல்வதால் நானும் என் மகனோடு வந்து விட்டேன்." "நாங்கள் இருவரும் கணவுகளுடன் வாழ்ந்து வருகிறோம்.என்றைக்காவது ஒரு காலம் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கையில்." "பிரபாகரனுக்கு ஒரு விஷயம் அப்போதுதான் விளங்கியது அந்த பெரியவர் தன் மகனை 'அவர்'என்று பண்மையில் சொன்னதும் அதில் எத்தனை வருத்தம் வேதனை தூரம் உள்ளது, மனைவியை 'அவள்' என்று சொல்வதில் எத்தனை அன்பு பாசம் உரிமை அன்யோன்யம் உள்ளது." திருவாரூர் இரயில் நிலையம் வந்ததும் பிரபாகரன் பெட்டியை தூக்கி கிளம்பினான். "என்னாச்சு தம்பி எங்கே போறீங்க?" "ஐயா என் கண்களை திறந்து விட்டீர்கள்.உங்களை போல் தான் என் தாய் தந்தை உள்ளனர்.முதலில் நான் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டு பிறகு நான் வெளிநாடு செல்கிறேன்." என்று சொல்லி விட்டு மயிலாடுதுறையிலேயே இறங்கி கொண்டான். திப்பு ரஹிம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.