ஆ. மார்ஸ் அரவிந்தன்
சிறுகதை வரிசை எண்
# 170
நம்பிக்கையும், விடாமுயற்சியும் (கவிதை போட்டி)
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் நண்பராக இருந்தன.. ஒரு நாள் இருவரும் இதைத்தேடி அலைந்து கொண்டிருந்தன. எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தை பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கிக் கொண்டிருந்தன. இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன.
திடீரென ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீர் தத்தளிக்க ஆரம்பித்தன
"நண்பா இப்படி வந்து தண்ணீரில் விழுந்து விட்டோமே இப்ப என்ன பண்றது " என்றது செவ்வெறும்பு.
"நிச்சயம் எதாவது உதவி கிடைக்கும். அதுவரை நீந்தி கொண்டே இருப்போம்" என்றது கட்டெறும்பு.
நேரம் நேரமாகிக் கொண்டே இருந்தது எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.
" நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால் எல்லாம் சக்தி இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது தண்ணீரில் மூழ்கி இறக்க தான் போறேன் என்றது செவ்வெறும்பு.
"இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம் ஏதாவது உதவி கிடைக்கும்" என்றது கட்டெறும்பு.
" இனி எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை நான் சாகத்தான் போறேன் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது" செவ்வெறும்பு.
ஏதாவது உதவி கிடைக்கும் என்றது நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு அந்த வழியே போன எறும்புக் கூட்டம், " இந்த குளத்தில் வந்து மாட்டிக்கிட்டியா இந்த குளத்துல விழுந்தயாருமே பிழைச்சதில்லை" என்று சொல்ல.
இந்த குளத்துல இருந்து நம எங்க தப்பிக்க போறோம் என்று தன் மேல் இருந்த நம்பிக்கை இழந்த கட்டெறும்பு. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.
இறந்து போன மீன் மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளைப் பார்த்து.
" கடவுளே என் உயிரை ஏன் இவ்வளவு சீக்கிரம் சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க"?
நான் உன்ன சாகடிக்கல நீயே தான் இறந்துட்ட..
" என்ன சொல்றீங்க.. கடவுளே என்றது கட்டெறும்பு.
நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதற்காக உன் மேல் உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போராடுறத விட்டுட்டு தண்ணீரை மூழ்கி இருந்துட்ட. ஆனால் நீ மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்தா நிச்சயம்; ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து காத்திருப்பேன்.
"கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்து விடுவான்" என்றார் கடவுள்.
ஆ.மார்ஸ் அரவிந்தன்,
புதுச்சேரி - 1
புலனம் எண்:9043704430
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்