logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ர. ரமேஷ்

சிறுகதை வரிசை எண் # 168


செல்ல மகள் யப்பா யப்பா எங்க பள்ளிக்கூடத்துல எல்லாரையும் ஒரு வாரம் கழித்து சுற்றுலா கூட்டிட்டு போறாங்கப்பா ஒரு வாரம் சுற்றுலா வாமாம்ப்பா நானும் போகவாப்பா என்று கூறிக் கொண்டே தனது புத்தகப் பையை தூக்கி வீசியபடி ஓடி வந்தாள் முருகனின் செல்ல மகள் அருந்ததி.... அருந்ததி குக்கிராமத்தில் வாழும் ஏழை விவசாயின் முருகனின் மகள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லாமல் ஏறாத மலை இல்லை சுற்றாத கோவில் இல்லை அப்படி தவமிருந்து பெற்ற மகள். அவளின் தந்தையோ விவசாயி அவரின் வருமானம் அன்றாடம் உணவிற்க்கும் செலவுக்குமே சரியாக இருக்கும். அருந்ததியின் அம்மா கலாமணி பெரிதாக படிப்பு ஒன்றுமில்லை. கலாமணியும் கணவனுக்கு துணையாக தன் பங்கிற்க்கு கிடைக்கும் சின்ன சின்ன வேலைகள் செய்து பிள்ளையையும் குடும்பத்தையும் கவனித்து வந்தாள். புத்தகப் பையை வீசியதை பார்த்த கலாமணி, அருந்ததியை பார்த்து, என்னடி பைய இப்படி வீசிட்டு போறவ, மெதுவா வைச்சுட்டு தான் போறது. வீசுற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு இப்ப என்று கேட்க" காதில் விழாதது போல் சென்றாள் அருந்ததி. நேராக அப்பாவிடம் சென்று "யப்பா எங்க பள்ளிக்கூடத்துல சுற்றுலா கூட்டிப் போறாங்கப்பா, எல்லாரும் போறாங்கப்பா பக்கத்து வீட்டு பரிமளாவும் போராப்பா, எனக்கும் போகணும்னு ஆசையா இருக்குப்பா, நானும் போகவாப்பா" என்று குழந்தை போல அப்பாவிடம் கேட்டாள் அருந்ததி... வீட்டிற்க்கு ஒரே மகள் அதுவும் செல்ல மகள் என்பதால் முருகனும் மகளிடம் "சரி புள்ள சுற்றுலா செல்ல எவ்வளவு ரூவா ஆகும் என்று கேட்க " மகளோ ஆயிரம் ரூவா ஆகும்ப்பா என்று தன் பிஞ்சு முகத்தில் புன்னகையுடன் கூறினாள்..முருகனோ சிறிது நேரம் யோசித்து கொண்டிருக்க.அருந்ததி கூறியது கலாமணியின் காதில் விழ "என்னாடி சொல்ற ஆயிரம் ரூவாவா கொஞ்சம் மனசாட்சியோட பேசுடி, நம்ம இப்ப இருக்க நிலைமைக்கு இப்ப நீ சுற்றுலா போகணுமா, அடியே ஆயிரம் ரூவா இருந்த மழை வந்த உள்ள தண்ணி வராம இருக்க நம்ம வீட்டை சரி பண்ணலாம். அதுவும் இல்லாம உங்க அப்பனக்கு அப்ப அப்ப ஒடம்பு முடியாம போகுது, அது என்னனு ஒரு எட்டு ஆஸ்பத்திரியில போய் பாத்துட்டு வந்துருலாம். உனக்கு போட்டுக்க நல்ல துணி மணி வாங்கிறலாம். என்று அடுக்கிக் கொண்டே போனால் கலாமணி." இதை கேட்ட செல்ல மகளுக்கு முகம் வாடியது.யாரிடமும் பேசமால் அமைதியாக இருந்தாள். அம்மாவோ சாப்பிட பலமுறை அழைத்தும் எதற்கும் செவி சாயிக்கவில்லை அருந்ததி.அழுது கொண்டே இருந்தாள் அருந்ததி. அவள் கண்களில் நீர் வருவதை கவனித்த முருகன் மகளை அழைத்து மடியில் அமரவைத்து. "என் மக எதுக்கும் முகம் வாடி போகக்கூடாது. அழக்கூடாது எப்பவும் முகத்துல சிரிப்பு இருந்துகிட்டே இருக்கனும். நீ ஒன்னும் கவலைப்படாத ஆயிரம் ரூவா தான நான் பாத்துக்குறேன் கண்ணு நீ கண்டிப்பா சுற்றுலா போவ நான் ரூவா தாரேன்" என்று சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தான் முருகன். மகிழ்ச்சியடைந்த அருந்ததி முருகனின் மடியிலேயே உறங்கிக் போனாள். மெல்ல கணவனின் அருகில் வந்த கலாமணி "என்னங்க அவதா சின்னப் புள்ள விவரம் இல்லாம கேக்குற நீங்களும் சரி சொல்லி தூங்க வச்சுட்டீங்க அப்பறம் போற அப்ப இல்லனு சொன்ன மனசு உடைஞ்சு போயிருவா. வேணாமுங்க காலையில அவகிட்ட, இப்ப வேணா இன்னொரு வருஷம் போய்கிலானு சொல்லிருங்க" என்று சொல்ல. அடப் போடி கிறுக்கச்சி நமக்கு புள்ள இல்லாம தவமா தவமிருந்து கிடைச்ச புள்ள. ஆசையா வந்து அப்பன்கிட்ட கேக்குது அத போய் முடியாதுனு சொல்ல சொன்னா புள்ள தாங்கிக்குமா. அதும் இல்லாம எல்லாரும் போகும் போது எம்புள்ள ஏக்கத்தோட நின்னு பாக்கும், பள்ளிக்கூடத்துல புள்ளைங்க எல்லாம் நாளைக்கு சுற்றுலா போய்ட்டு வந்தத பத்தியே பேசுங்க. கேக்குற நம்ம புள்ள ஏங்கி போய்யிற மாட்ட, நானும் போயிருந்த எல்லாம் பாத்துருக்கலானு ஏங்கி தவிச்சு போய் நம்மகிட்ட வந்து சொல்லும். அப்படி சொல்லிறக் கூடாதுனு தான் நான் பாத்துக்குறேன்னு சொன்ன என்று கூற. என்னமோ போங்க எனக்கு ஒன்னும் புரியல நீங்களும் உங்க புள்ளையையும் என்னமோ பண்ணிக்கோங்க என்றாள் கலாமணி.. கவலைப்படாத மணி நமக்கு நம்ம வயல் இருக்கும் போது என்ன கவலை நல்லா விளஞ்சு நிக்குது அத அறுவடை செஞ்சா நல்ல லாபம் கிடைக்கும். அதுல வரத வச்சு புள்ளைய சுற்றுலா அனுப்பலாம்... என்று கூற, அவளும் சரி பாப்போம் என்று கூறி உறங்க சென்றாள்... முருகனும் வயலை நினைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனான்.. காலையில் அருந்ததி வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்ப மீண்டும் ஒரு முறை அப்பாவிடம் கேட்டாள்... "யப்பா கண்டிப்பா என்ன சுற்றுலாக்கு அனுப்புவல்ல, அப்பறம் முடியாதுனு சொல்லிற மாட்டயே என்று கேட்டாள்... முருகனும் இல்லை புள்ள கண்டிப்பா உன்ன அனுப்புறன் இப்ப பள்ளிக்கூடத்துக்கு பாத்துப் போய்ட்டு வா என்று வழியனுப்பி வைத்தான் முருகன். அவளும் மிகவும் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றால்... பள்ளி சென்ற அருந்ததி பள்ளி தோழிகளிடம் நானும் உங்களுடன் சுற்றுலா வருவேன் என்று கூறிக் கொண்டிருந்தாள்... என்றும் இல்லாத மகிழ்ச்சி அவளுக்கு... இன்னும் இரண்டு நாட்களில் அறுவடை பண்ணனும் இல்லனா முடியாது. என்று புலம்பிய படி வயல் பக்கம் சென்று பாப்போம் என்று புறப்பட்டான்... வயலை சென்று பார்த்தான். பயிரும் நல்ல செழிப்பாகா இருந்தது. பயிருக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து விட்டு வீடு திரும்பினான். அவனும் வீடு வர செல்ல மகளும் பள்ளி முடிந்து வீடு வந்தாள்... யப்பா யப்பா எங்க இருக்கப்பா என்று கூவிக் கொண்டே வர எதிரே வந்தான் முருகன். எம்புள்ள இப்படிக் கூவிக்கிட்டே வரவ. யப்பா நீ சொன்னனு நான் பள்ளிக்கூடத்துல எல்லார்கிட்டயும் சொல்லிட்டன். நீ மட்டும் எனக்கு ரூவா தரல அப்புறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. என்று கூறிவிட்டு யப்பா நான் செல்வி வீட்டுக்கு போறன். பிறகு வரேன்னு சொல்லிட்டு அங்கிருந்து மறைந்தாள் அருந்ததி... புள்ளையின் மிரட்டலைக் கேட்ட முருகன் சிரித்தபடி ரசித்தான்... வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு உறங்கினர்... கனவிலும் தன் பிள்ளை மிரட்டுவது போன்று கனவு கண்டு சிரித்துக்கொண்டிருந்தான் முருகன்... மறுநாள் காலை வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது ஊரில் அனைவரும் பயிருக்கு புதிதாக தெளிக்கப்பட்ட மருந்தை பற்றி பேச முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் நண்பனான செல்வத்திடம் அடேய் செல்வா என்னாச்சு என்ன நடக்குது இங்க என் எல்லாரும் இப்படி பேசிட்டு அப்படி இப்படியுமா ஓடிடக்கிட்டு இருக்காங்க என்னடா ஆச்சு. கொஞ்சம் சொல்லு என்று கேட்க... அடேய் முருகா நம்ம பயிருக்கு புதுசா ஒரு மருந்து வந்துச்சுனு அத வாங்கி தெளிச்சோம்ல அது உண்மை இல்லையா பொய்யான மருந்தாமாடா அதனால பயிரெல்லாம் வீணாப் போகுதா என்று கூற முருகனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது. மயக்கம் போட்டு கீழே விழ செல்வம் தண்ணீர் தெளித்து மயக்கம் கலைத்து விசாரித்தான்.என்னடா ஆச்சு என் உடம்பு எதும் சரியில்லையா என்று கேட்டான் செல்வம்... தலையில் அடித்த படி அடேய் நானும் அந்த மருந்த வாங்கி என் பயிருக்கு தெளித்து விட்டேன். என்று வாயிலும் வயித்துலையும் அடித்துக் கொண்டு வயலுக்கு சென்றான் முருகன். பெறும் அதிர்ச்சி அவன் பயிரெல்லாம் வீணாகி விட்டது.காரணம் தெளித்த மருந்தின் விபரீதம். என்ன செய்வதேன்று ஒன்று புரியாமல் அழுக ஆரம்பித்தான் முருகன். இத நம்பித்தானே எம்புள்ளைக்கு வாக்கு கொடுத்த இப்ப இப்படி ஆயிருச்சே நான் எங்க போய் சொல்லுவன்.. என்று கதறி அழுதுகொண்டிருந்தான் முருகன். அங்கு வந்த செல்வம் முருகனை சமாதானப்படுத்தி எல்லாம் சரி ஆகிடும் கவலைப்படாத முருகா சரி பண்ணிரலாம். என்று ஆறுதல் கூற அவனிடம் அனைத்தும் கூறினான் முருகன்... சரிப்பா நீ சொல்றதும் நியாயம் தான் ஆன இப்படி ஆகும்னு நாம என்ன கனவா கண்டோம். சரி விடுப்பா வேற ஏதா பண்ணலானு சொல்லிக்கொண்டு அவனும் போக. மனமுடைந்த முருகன் வீட்டிற்க்கு சென்று நடந்தவற்றை எல்லாம் கலா விடம் கூறினான்.. அவளும் முருகனுக்கு ஆறுதல் கூற சரி விடுங்க சரி ஆயிடும் இனி அந்த மருந்த வாங்க வேணாங்க வேற எதாவது பண்ணலாம் என்று என்று சொன்னால்... ஆனா முருகனோ அது இல்லடி சரி பண்ணிக்கலானு எனக்கும் தெரியும் எம்புள்ள வந்து கேட்ட நான் என்ன சொல்லுவன் இன்னும் இரண்டு நாள்ல சுற்றுலா கூட்டி போக போறான்னு சொல்லிட்டு எவ்ளோ சந்தோசமா போன இப்ப வந்து கேக்கும் போது இப்படி சொன்ன எம் புள்ள மனசு ஒடஞ்சு போய்யிற மாட்ட அதுக்குத்தான் என்ன பண்றதுனு தெரில என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளி முடிந்து அருந்ததி வர மீண்டும் அதையே சொல்ல முருகனும் சரி புள்ள கண்டிப்பா போவயாம்மா. போய் விளையாடு புள்ள என்று சொல்ல அவளும் ஆனந்தமாக விளையாட சென்று விட்டாள்... இரண்டு நாள்ல எப்படி ஆயிரம் ரூவா புரட்டுவனு தெரியலையே.. என்று யோசிக்க ஆரம்பித்தான் முருகன். நாள் நெருங்க நெருங்க அருந்ததி அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க... திடீரென்று முருகன் பயிர் விடயமாக நான் வெளியூர் போற வர இரண்டு நாள் ஆகும். நான் போய்ட்டு வரேன் அதுவரைக்கும் நிலத்தை பாத்துக்கோங்கனு சொன்னான். யப்பா பள்ளிக்கூடத்துல் சுற்றுலா கூட்டிபோறாங்கன்னு சொன்னல நீ இப்ப போறன்னு சொல்ற நான் எப்படிப்பா போவனு செல்ல மகள் கேட்க நான் இரண்டு நாளைக்குள்ள வந்துருவ புள்ள கவலைப்படாத புள்ள. அப்பா வந்துருவேன் என கூறிக் கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தான் முருகன்... செல்வமமும் முருகனும் பக்கத்து ஊரில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தனர்.. இரண்டு நாட்கள் கடுமையாக உழைத்த முருகன் சரியான துக்கமும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் தன் மகளுக்காக கடுமையாக உழைத்து ஆயிரம் ரூவா சம்பாரித்து விட்டான்.. ஆயிரம் ரூவா கிடைத்ததும் ஊருக்கு இருவரும் புறப்பட்டனர்.. முருகன் படும் கஷ்டங்களை எல்லாம் பார்த்து விட்டாள் அருந்ததியின் தோழி... வீட்டிற்க்கு வந்த முருகன் மனைவி கலா நலம் விசாரிக்க முருகன் தன் செல்ல மகளை தேடினான்.அவள் விளையாட சென்றதால் இப்பொழுது வரமாட்டாள் என்று கூறினாள் கலா. பயணம் செய்த களைப்பில் உறங்கிப் போக நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டான்..தன் வேலை முடிந்த அருந்ததி அப்பாவை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தாள்..நாளை சுற்றுலா செல்ல வேண்டும் என்ன இவர் இப்படி தூங்குகிறார் என்று முருகனை எழுப்ப முயன்று தோற்றுப்போனாள். அப்பாவின் மீது கோபம் கொண்ட மகள் எதுவும் சாப்பிடாமல் அழுகையில் உறங்கிப் போனாள்... காலை பொழுது விடிந்தது முருகனுக்கு முன் மகள் எழுந்து கொண்டாள் ஒரு வழியாக அப்பாவை எழுப்பி இன்று நான் சுற்றுலா செல்ல வேண்டும் நான் கேட்ட ரூவா எங்கே என்று கேட்க முருகனும் எடுத்துக் கொடுத்தான். கலாவோ எதவும் கூறாமல் அமைதிக் காத்தாள்... மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளி சென்றாள் அருந்ததி. சுற்றுலா செல்ல எல்லோரும் தாயராகிக் கொண்டிருக்க.அவளின் தோழி ஒருத்தி மட்டும் சுற்றுலாவுக்கு வரவில்லை. அவள் அருகில் சென்று கேட்டாள் நீ மட்டும் இன்னும் என் புறப்படாமல் இருக்கிறாய் வா போகலாம் என்று அழைத்தாள். அவளோ நான் வரல எங்கிட்ட அவ்வளவு ரூவா இல்ல நீ போய் வா என்று கூற அருந்ததியோ சிரித்தாள். என் சிரிக்கிற என்று வெகுளியாக கேட்க என்கிட்ட கூடதா ரூவா இல்ல எங்க அப்பா கிட்ட சொன்ன அவர் தான் கொடுத்தார். நான் கேட்ட என்னவேனா செய்வாரு எங்க அப்பா என்று பெருமை பட்டுக் கொள்ள. அவள் தோழியோ நீ இப்படி பெருமையா சொல்லுறதுக்கு உங்க அப்பா எவ்ளோ கஷ்டபட்டாருனு எனக்கு தான் தெரியும்... என்று அவர் இரண்டு நாட்கள் பட்ட கஷ்டத்தை மொத்தமாக அவள் கூற அருந்ததி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது... வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள்.சுற்றுலாவுக்கு கொண்டு சென்ற பையை தூக்கி வீசினாள். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முருகன். எம்புள்ள என்னாச்சு இன்னும் நீ போகலையா இங்க இருக்குறவ. சீக்கிரம் போ அவுங்க எல்லா போய்டப் போறாங்க என்றான் முருகன்... எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். மீண்டும் முருகன் கூற ஓடி வந்து முருகனை கட்டி அணைத்தால் மகள். அப்படியொரு அழுகை முருகன் எவ்வளவோ கூறியும் அழுகை நிற்க்கவில்லை. யப்பா என்ன மனுச்சுருப்பா. நீ இந்த ஆயிரம் ரூவா சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்பட்டனு எனக்கு தெரியும்ப்பா. நான் சுயநலமா இருந்துட்டன்ப்பா என்னோட ஆசை நடந்த போதும்னு இருந்துடன்ப்பா. உன் நிலைமை கொஞ்சம் கூட புருஞ்சுக்காம நான் சந்தோசமா இருந்துட்டா போதும்னு இருந்துட்டன்ப்பா என்ன மனுச்சுக்கப்பா. சுற்றுலா என்னப்பா சுற்றுலா நான் உன்ன சுத்துனா அதுதா எனக்கு இன்பச் சுற்றுலா. என் உலகமே நீதாம்ப்பா உன்ன சுத்துனா நான் உலகத்தையே சுற்றுலாப் போய்ட்டு வந்த மாதிரிப்பா என்று அழுகையோடு கூறினாள் அருந்ததி. இதைக் கேட்ட முருகனின் கண்களில் கண்ணீர். அப்படிலா இல்லா புள்ள உன் சந்தோசம் தான் எங்க சந்தோசம் புள்ள போய்ட்டு வா புள்ள என்று கூற இல்லப்பா நான் போகல உன்ன விட்டு நான் எங்கையும் போக மாட்டப்பா போனா எல்லாரும் சேர்ந்து போலாம் இல்லனா வேனாப்பா என்று கூறினாள். என் புள்ள இப்படி சொல்ற நீ சந்தோசமா போய்ட்டு வரத்தான நான் ரூவா கொடுத்த இப்ப இப்படி சொல்றவ... நீ இந்த ரூவா சாம்பாதிக்க எவ்வளவு கஷ் ப்பட்டனு எனக்கு தெரியும்ப்பா. அத மறந்துட்டு நான் எப்படிப்பா சந்தோசமா போவ. நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நான் சந்தோசமா இருக்கவா வேணாம்ப்பா நம்ம எல்லாரும் சந்தோசமா இருப்போம்ப்பா என்று கூறினாள்... இதைக் கேட்ட முருகன் நெகிழ்ச்சியில் உறைந்து போனான். முருகன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது.கலாவோ மகளை கட்டியணைத்து முத்த மழை பொழிந்தாள்.. எங்க அப்பா தான் இந்த ஊர்லயே ரொம்ப நல்லவர் என் அப்பாக்கு நிகரா யாரும் இல்லை எனக்கு கிடைத்த அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. என்று உரக்கச் சொன்னால்... அனைத்தும் கேட்ட முருகன் தன் செல்ல மகளைக் கண்டு செய்வதரியாது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனான்... செல்ல மகளைக் கண்டு பெருமை கொண்டான்... முற்றும்......

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.