திருமதி க.கற்பகவல்லி
சிறுகதை வரிசை எண்
# 167
சிறுகதை : யதார்த்த வாழ்வு
வீட்டின் முன் ஆட்டுக் கொட்டகை, ஆடுகளைப் பராமரித்து வந்தனர் பாண்டியும் அவன் தாத்தாவும்,ஒரு நாள் திடீரென மழை அவசரம் அவசரமாக ஆடுகளை அவிழ்த்து தாத்தா இருக்கும்
குடிசைக்குள் ஆடுகளை அனுப்பி நனையாது காத்தான் பாண்டி.தாத்தா எப்படி ஆடுகளைப் பேணிக்காக்க வேண்டும் என்று பாண்டிக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.
விஜிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரன் பாண்டி.ஒருவயது இளமை தான் விஜி.இருப்பினும் தங்கை மீது கொண்ட பாசத்தால் ஆறாம் வகுப்பு இரண்டு வருடம் படித்தான் பாண்டி.ஏழாம் வகுப்பிலிருந்து இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.கல்வி கற்பதில் இருவரும் போட்டிபோட்டு படிக்க வகுப்பாசிரியரும் தலைமையாசிரும் வெகுவாக பாராட்டினர்.பாண்டி எட்டாம் வகுப்பு பயிலும் போதே பள்ளியின் முதன்மை மாணவனாக பதவி பெற்றான்.விஜியும் பல்வேறு கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு குறிப்பாக நடனத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்று தங்களது கிராமப்புற பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளிக்கு தனிச்சிறப்பு பெயரைப் பெற்றுத்தந்தாள். இப்படியாக வாழ்நாட்கள் நகரும் வேளையில் பாண்டியின் தாத்தா வயோதிம் காரணமாக இறக்க நேரிட்டது.பாண்டி அவன் தந்தையிடம் நெருங்கி இருந்ததைவிட தாத்தாவிடம் பற்றுதல் அதகம்.தாத்தா இல்லாத காரணத்தால் ஆடுகளை கவனிக்கும் முழுப் பொறுப்பையும் தான் ஏற்று அதிகாலை மற்றும் அந்திமாலை இரு வேளையும் பராமரிப்பு செய்வதோடு தன் படிப்பையும் கைவிடாது கற்று முன்னேற்றம் கண்டான்.எட்டாம் வகுப்பில் இருவரும் 450 மதிப்பெண்கள் பெற்றனர்.தன் தங்கையை மட்டும் உயர்கல்வி படிக்க நகர்ப்புற பள்ளிக்கு அனுப்ப பாண்டி அவன் தந்தையிடம்ஆலோசனை வழங்கினான்.
பெண்ணுக்கு கல்வி அவசியம்.நான் நம் வீட்டிலிருந்து ஆடுகளைப் பராமரித்து அதன்மூலம் வருமானம் ஈட்டித்தருகிறேன் என்று கூறிவிட்டான்.
விஜியும் பாண்டியின் சொல் கேட்டு நன்கு படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 90% மதிப்பெண் பெற்றாள்.
தங்கையை கல்லூரிக்கு அனுப்பாமல்
டி என் பி எஸ் சி தேர்வுக்கு படிக்க ஆயத்தப் படுத்தினான்,பாண்டி.தான் கஷ்டப்பட்டாலும் தன் தங்கை நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது பாண்டியின் இலட்சியமாக இருந்தது.
அண்ணனின் ஆசையை விஜி புரிந்து கொண்டு கடின முயற்சியுடன் அயராது படித்தாள்.தேர்விலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று உயர் பதவயில் அமர்ந்தாள்.பாண்டியும் கடின உழைப்பு மேற்கொண்டு ஆடுகளை இயற்கை உணவு கொடுத்து சீரிய முறையில் வளர்த்தான்.வாழ்வு செழிப்படைய அதிகப்படியான வருமானம் பெற்றான்.
இயற்கை உரம் தயாரிப்பு பணியும் பாண்டிக்கு கைகொடுத்தது.கடின உழைப்பும் விடாமுயற்சியும் அண்ணன் தங்கையின் வாழ்வில் வளமை கொடுத்து உயர்நிலை அடைய வைத்துள்ளது.பாண்டியின் பெற்றோரும் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.எல்லா வளமும் நலமும் பெற்று இனிய வாழ்க்கை வாழ்ந்தனர்
கிராமத்தில் பெண் கல்வியும்,ஆண்கள் வீட்டுப்பொறுப்பையும் ஏற்கும் சிந்தனையை இக்கதையில் பதிவுசெய்கிறேன் .
நன்றி வணக்கம்.
க.கற்பகவல்லி
திருவில்லிபுத்தூர்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்