logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Karthik

சிறுகதை வரிசை எண் # 156


பொது ஆவுடையர் மழை வருவது போல் இருந்தது வெண்ணிலா அவசர அவசரமாக வெளியில் கிடந்த துணிகளை எடுக்க ஓடிக்கொண்டு இருந்தால் கார்த்திகை மாதம் என்பதால் எப்ப மழை வரும் வெயில் அடிக்கும் சென்று சொல்ல முடியாது.மேகம் கருமையாக திரண்டு குளிர்ந்த காற்றை வீசிக்கொண்டு இருந்தது .வெண்ணிலா மகன் அன்பு தன் நண்பன் செல்வத்திற்கு போன் செய்து பொது ஆவுடையார் கோயிலுக்கு போகலாம் பாலத்து அடிக்கு வந்துரு என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வெண்ணிலா சொன்னால் மழை வருவது போல் இருக்கிறது நீ என்னனா கோயிலுக்கு போறங்கிற அதெல்லாம் ஒன்னும் பிரச்சனைஇல்லை நா போய்ட்டு வந்துறேன் நு சொல்லி கிளம்பி பாலத்தில் தனக்காக காத்திருந்த நண்பன் செல்வத்தைத் கூட்டி கொண்டு பொது ஆவுடையார் கோயிலுக்கு புறப்பட்டான் .இருவரும் பைக்கை நிறுத்திவிட்டு கோயிலுக்கு மேற்கு பக்கமாக நடந்து சென்றார்கள் இரு பக்கமும் கடைகளால் நிரம்பி இருந்தன, பட்டாணியும் ,கடலையும் கலந்த வாடை காற்றில் மிதந்து வந்தது. மிளகாய் பச்சி டீ விற்றுக் கொண்டு இருந்தார்கள் .அன்பு சொன்னான் கூட்டம் அதிகமாக இருக்கு கொஞ்ச நேரம் அந்த பக்கம் போய் உக்காந்து விட்டு அப்பறம் வந்து டீ குடிப்போம் என்று சொல்லி ஒரு இடத்தில் போய் அமர்ந்தார்கள்.அவர்களை கடந்து மக்கள் வீட்டுக்கு சென்றுக் கொண்டு இருந்தார்கள் .சிலர் சிறுநீர் கழிக்கவும் அந்த பக்கம் சென்றார்கள். அப்போது செல்வத்திடம் எட்டு ஒன்பது வயது மதிக்க தக்க ஒரு குழந்தை குறத்தி மகள் வந்து கையே நீட்டி காசு கேட்டால் . முகமெல்லாம் சந்து போட்டு அப்பி இருந்தது ரெட்டை சடை பழைய மேல் ஆடை கீழ கால்சட்டை அணிந்து இருந்தாள். செல்வம் சொன்னான் காசு தர முடியாது எதாவது வாங்கி தருகிறேன் . உடனே ஐஸ்கிரீம் கடையே நோக்கி கையே நீட்டினாள் அவளுடன் இன்னும் இருவர் சேர்ந்து வந்து நின்றார்கள் அவர்களும் தோற்றத்தில் இவளை ஒத்தவர் களாக தான் இருந்தார்கள் .அதில் ஒருவன் ஆண் பையன் ஒரு வழியாக மூவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு வந்து உக்காந்தான் . குறத்தி மகளுடன் இருந்த மற்ற இருவர்களும் ஓடிவிட்டர்கள் .இவள் மட்டும் ராட்டினம் சுற்றும் இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள் .ராட்டினம் சுற்றுவதை கண்டு ஒரு வகை மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டு இருந்தாள்.ராட்டினம் சுற்றி முடித்துவிட்டு வருபவர்களிடம் காசு கேட்டாள் .அவர்கள் இவளை ஒரு பொருட்டாக கூட கருதாமல் கடந்து போனார்கள். தந்தை மகன் மகள் சேர்ந்த ஒரு குடும்பம் வந்தது . அவர்களிடம் கையே நிட்டினால் .அந்த குழந்தைகளின் தந்தை சிறிது நேரம் எதோ சொன்னான். இவள் கொழஞ்ச சிரிப்பு சிரித்து தலையே சொரிஞ்சிகிட்டு இருந்தால் அவன் தனது பாக்கெட்ல் இருந்து இருபது ரூபாய் கொடுத்தான். அதை ராட்டினகாரணிடம் கொடுத்தால் அவன் இன்னும் பத்து ரூபாய் கொண்டு வானு சொல்லி அனுப்பிவிட்டான்.அவன் சொன்னதை பார்த்தால் இவள் அடிக்கடி அவனை தொல்லை செய்து இருப்பாள் போன்று இருந்தது. தன்னிடம் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு கூட்டத்தை நோக்கி நடக்க தொடங்கினாள்.அன்பும் செல்வமும் இவளை கவனித்துக் கொண்டு இருந்தார்கள் .அன்பு கேட்டான் செல்வம் இவளை பின்தொடருவமா ?இவள் வாழ்க்கை எப்டி இருக்குமுனு தெரிஞ்சிக்கலாம். போலாம் அன்பு என்றான் செல்வம் .இருவரும் அவளை பின் தொடர தொடங்கினார்கள். இளைஞர் கூட்டம் ஒன்று வலையம் போடும் இடத்தில் போட்ற ரமேஷ் போட்ற என்று ஒரே சத்தமாக கத்திக்கொண்டு இருந்தார்கள்.அந்த ரமேஷும் சரியாக போட்டு விட்டுட்டு .ஒரே சத்தம் வெற்றி முழக்கம் இட்டார்கள். நண்பர்கள் ரமேஷ் ஐ பாராட்டி கூட்டி சென்றார்கள்.இவள் சென்று தன்னிடம் இருக்கும் முழு பணத்துக்கும் வலையம் வாங்கினால். வலையம் போடும் பலகையில் பார்லேஜி பிஸ்கட் பத்து ரூாய் நோட்டு துணி சோப்பு மற்றும் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது .இவள் நூறு ரூபாய் ஐ குறி வைத்துக் கொண்டு இருந்தாள்.அன்பு சொன்னான் பாத்தியா ராட்டினம் சுற்ற வலையம் போட வந்து இருக்க அதுக்கு பத்து ரூபாய் எல்லாம் விட்டுடு நூறு ரூபாய்க்கு குறி வைக்கிற பாரு .செல்வம் சொன்னான் அது எல்லாம் சரி தான் அந்த நூறு ரூபாய் விழாது என்று அவளுக்கு தெரியவில்லையே ?ஆமாம் அவளுக்கு தெரியவில்லை தான் ஆன அவ முயற்சி தான் எனக்கு பிடிச்சிருக்கு அது மட்டும் இல்லை நாமே வாழ்க்கையே பற்றி ஒரு முடிவு செஞ்சிகிட்டு தான் வாழ்கிறோம் தவிர அதன் போக்கில் நாம செல்வதில்லை .அவளின் இலக்கு பாரேன் அதன் போக்கில் அவளை கூட்டி செல்கிறது . சரி சரி அங்கே பாரு அவ இலக்கை நோக்கி வீச போகிறாள் இருவரும் ஆர்வமாக நிற்க ஒரு மலர் மாலையை போல் வீசினால் வலையம் நூறு ரூபாய் இருந்த கட்டை மேல் சறுக்கி சென்று பலகை விட்டு விலகி போய் விழுந்தது தன்னிடம் உள்ள அனைத்தையும் வீசினால் ஒவ்வொன்றும் நூறு ரூபாய் இருந்த கட்டையில் பட்டும் அதன் மேல் பாதி விழுந்த நிலையிலும் ஒன்றும் பலனளிக்கவில்லை .இருவரும் ஆர்வமாக இருந்தார்கள் அடுத்து என்ன செய்ய போகிறாள் என்பதில் திடீர்னு மழை பெய்யத் தொடங்கியது .செல்வத்திற்கு வீட்டில் இருந்து போன் வந்தது . அவனுக்கு திருமண மாகி சில மாதங்கள் ஆகியிருந்தன ,மழை வருது இன்னும் என்ன பண்றீங்க என்பது போல் போனில் அவன் அம்மா கேட்டால் இந்த வந்த்ரம் என்று சொல்லி போனை காதில் வைத்துக் கொண்டு நகர்ந்து போய் பேசினான் . அன்புக்கு கொஞ்சம் பதட்டம் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி விடுவானோ என்று இருவரும் ஒரு ஓட்டு கொட்டகையில் ஒதுங்கி நின்னானுங்க .அன்பு குறத்தி மகள் எங்கு போய் கொண்டிருக்கிறாள் என்பதை கவனித்தபடி இருந்தான்.மழை குறைய தொடங்கியிருந்தது இரவை வெல்லும் வகையில் டுவுப் லைட் வெளிச்சம் பரவி இருந்தது .அவள் தனது தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டால் ஒரு இடத்தில் அம்மா பாட்டி பேத்தி மூவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள் . அவர்களிடம் கையே நீட்டி காசு கேட்டால் அவர்கள் பாதி தின்றுக் கொண்டு இருந்த கடலை பொட்டனதை கொடுத்தார்கள் அதை வாங்கி கிட்டு ஒரு பெண்ணை பின்தொடர்ந்து நாலு ஐந்து ஆண்கள் சென்றார்கள் .அந்த வயதில் ஆண்கள் அதை சந்திக்காமல் வர முடியாது தான். அவர்களிடம் காசு கேட்டால் முதலில் இவளை கண்டுகொள்ளவில்லை இவள் அவர்களில் ஒருவன் சட்டையே பின்னிருந்து இழுத்தபடி சென்றால் அவன் இவ கையே தட்டி தட்டி விட்டு பார்த்தான் இவ அவனுகளை விடவில்லை அதில் ஒருத்தன் சொன்னான் நீ போய் அந்த அக்கா கிட்ட இந்த போன் நம்பர் ஐ கொடுத்துவிட்டு வா காசு தர்றேன் நு சொன்னான் .வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் கையில் திணித்தாள் .அந்த பெண் சொரானையே இல்லாதது போல் நடந்து போய் கொண்டு இருந்தாள். அதை அவ அம்மா பார்த்து வாங்கி கீழே போட்டுவிட்டு இந்த பசங்களை முறைத்தாள் .இவனுங்க அவங்க அம்மா பத்துட்டங்கடா நு சொல்லி கலைந்து ஓடி விட்டார்கள்.செல்வம் சொன்னான் அவ ராட்டினம் சுற்றுவதற்கு நாம காசு குடுத்துவிடலமா என்றான் .வேண்டாம் அவ தனது இலக்கை நோக்கி எவ்ளோ தூரம் செல்கிறாள் என்று பார்ப்போம் நாம காசு குடுத்து விட்டால் அவ குறுக்கு வழியே கண்டு பிடித்து விடுவாள் கொஞ்சம் பொறுத்து இருப்போம் அவ வேற யுக்தி எதுவும் வைத்து இருந்தால் அவ நம்மள அவ இலக்கு வழியாக நம்மையும் கூட்டி செல்கிறாள் இது இன்னும் எவ்ளோ தூரம் செல்கிறது என்று பார்த்து விடலாம். ஒரு வேளை அவ இலக்கில் இருந்து பின் வாங்கினால் நாம காசு குடுக்கலாம் செல்வம் சொன்னான் இது ஒரு வகைல அவ கஷ்டத்தை ரசிப்பது போல் இருக்கிறது .நீ இருக்க ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் வேலை செய்ற மத்த நேரம் ஓய்வு எடுக்கிறே இதுவே ரொம்ப நாள் தொடந்து செய்து வந்தால் உன் உழைப்பின் அதிக பட்சம் இரண்டு மணி நேரம் தான் .அது போல தான் வாழ்க்கையும் சாதாரண விசயங்களில் முடிந்து விடாமல் அதிக பட்சத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் . சில நேரங்களில் வாழ்க்கை உன்னை அதிக பட்சதிற்கு கூட்டி செல்லும் அப்போது அதனோடு சென்று விடனு அந்த வாய்ப்பை தவற விட கூடாது இப்ப கூட வாழ்க்கை அந்த அதிக பட்சத்திற்கு தான் அவ வழியாக அவளையும் நம்மையும் அழைக்கிறது .நாம அவளுக்கு காசு கொடுத்து அந்த அதிக பட்சதிற்கு செல்வதை தடுக்க வேண்டாம்.வாழ்க்கை என்பது கஷ்டம் மகிழ்ச்சி எல்லாம் கடந்து அனுபவமாக தான் நான் காண்கிறேன்.வாழ்க்கையில் நீ எவ்ளோ உயர்த்த அனுபத்தை அடைகிறாய் என்பது தான் வாழ்க்கையாக இருக்க வேண்டும் .குறத்தி மகள் அடுத்த திட்டத்தை உருவாக்கி இருந்தால் அவங்க கூட்டத்துக்கு ஓடி சென்று குழந்தையே தூக்கி கொண்டு வந்து பிச்சை எடுக்க தொடங்கினாள். 2 சிலர் மட்டும் தான் கொடுத்தார்கள் அதுவும் சில்லரை தான் .யாரு இவளை பற்றி கவலைப் பட போகிறார்கள் .அது மட்டும் இவளுக்கு தெரியாமல் இருக்க வேண்டும். இந்த உலகத்தில் நம்மை நேசிக்க யாரும் இல்லை என்றால் வாழ்க்கையே அர்த்தமற்றதாக மாறி போயி விடதா ?வாழ்க்கை என்ற சக்கரம் நம்பிக்கை என்ற ஆச்சானியில் தான் சுற்றுகிறது என்ற வார்த்தை வேனுமானால் சாதாரண ஒன்றாக இருப்பது போல் இருந்தாலும் அது தான் உண்மை போல் தோன்றுகிறது.வறுமை மனிதனை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும் . வறுமைக்கு முன்னாள் எல்லாம் தவறுகளும் செய்ய அனுமதிக்கப் படுகிறது .வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை என்றால் பிரச்சனை இல்லை எதாவது வேனு மென்றால் அந்த எண்ணம் எதற்கு தோன்றுகிறது .இந்த எண்ணத்தை மனிதன் தான் உருவாக்குகிறான் .அவன் அந்த எண்ணத்தை வெற்றிப் பெற செய்து மக்களை அதை செய்யவும் வைத்துவிட்டான் .இந்த வாழ்க்கையே வாழ விடாமல் எத்தனை விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது .அனைத்தையும் கடந்து தான் வாழ வேண்டியுள்ளது .இதை எல்லாம் கடந்து செல்வது தான் ஒருவேளை வாழ்க்கையோ என்னமோ ?குறத்தி மகள் ஓடி போய் குழந்தையே விட்டு விட்டு வந்தால் அடுத்து அவளின் செயலை ஊகிக்க இயலாமல் காத்திருந்தார்கள். மெதுவாக கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நடந்தால் கடைகளை சாத்தி கொண்டு இருந்தார்கள் .இப்போது ராட்டிணம் அருகே வந்து சேர்ந்து இருந்தாள் .அன்று தான் பொது ஆவுடையார் கோயிலின் முடிவு நாள் .அனைவரும் கடையே முட்டைக் கட்டி கொண்டு இருந்தார்கள் .ராட்டினகாரனும் தன் வேலையின் முடிவுக்கு வந்துவிட்டான். அங்கே நின்றாலவது இறக்க பட்டு ராட்டினம் சுற்ற அழைப்பான் என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள் .நேரம் இரவு ஒன்பது இருக்கும் .செல்வத்திற்கு அடுத்த போன் வீட்டிலிருந்து வந்தது. செல்வத்தின் அப்பா கண்டிப்பானவர் இரவு நேரத்துக்குள் எல்லாம் வீட்டுக்கு வந்து விட வேண்டும் இல்லனா கண்ணா பின்னான்னு சத்தம் போடுவார். எதுக்கு அதுக்கெல்லாம் எடம் கொடுத்துக்கிட்டு நு நேரத்துக்கு சென்று விடுவான் .அன்பு செல்வத்திடம் பேசிவிட்டு திரும்பினான்.குறத்தி மகளை காணும் எங்கே சென்றால் என்று தெரியவில்லை .ஒருவேளை ராட்டினம் சுற்ற வேண்டாம் என்று நினைத்து போயி விட்டாளா ?ரொம்ப நேரமும் இவளை தேட இயலாது . செல்வம் அன்பு கிட்ட போகலாம் நு சொன்னான் அன்புக்கு அவளுக்கு பணம் தராமல் போக மனசு கடினமாக இருந்தது .கஷ்டமா இருக்கு என்றான் அன்பு .அதுக்கு தான் அப்பவே சொன்னேன் நீ தான் கேட்கல சரி விடு அவ நிறைய ஊருக்கு போவாள் எப்டியாவது ராட்டினம் சுற்றிவிடுவா? அவ ராட்டினம் சுற்றலாம் ஆனால் இங்கு சுற்றாதது தான நமக்கு நினைவில் இருக்கும் .நீ சொல்வது நியாயம் தான் ஆனா நாம இரண்டு பேரும் பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை என்றான் செல்வம். வேறு வழியில்லாமல் அரை சமானத்துடன் நகர்ந்தான் போகும் வழியெல்லாம் அன்புக்கு குறத்தி மகளைப் பற்றி தான் நினைப்பு .குடும்ப குடும்பமாக கலைந்து சென்றுக் கொண்டு இருந்தார்கள் .எல்லோர் கைலும் தின்பண்டங்கள் .வாங்க டி உங்களை எங்க எல்லாம் தேடுவது உங்களுக்காக டெம்போ எவ்ளோ நேரம் நிக்கும் அப்டி என்னாத்த பாக்ரியெளோ என்று சொல்லி இரண்டு பெண்களை ஒருத்தி வந்து கூட்டி சென்றால்.திரும்ப ராட்டினம் அருகில் நின்றுக்கொண்டு இருந்தாள் குறத்தி மகள் . அழுத குழந்தை ஒன்றை திட்டிக் கிட்டே ஒருவர் கூட்டி வந்து ராட்டினம் சுற்ற எவ்ளோ? முப்பதுறுவ . அழுவாத போய் ஏறிக்க அந்த குழந்தை கார் வடிவத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் மீண்டும் குழந்தை அழுதது இப்ப ஏன் அழுவுற தனியாக சுற்ற பயமாக இருக்கிறது என்றால் அப்பனா வா வீட்டு போலாம் என்றான் .குழந்தை அழுதது தனியா விளையாட பயமாக இருந்த என்ன பண்றது? அப்பங்காரணுக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை மூச்சை இழுத்துக் விட்டு கொண்டு நாலாபக்கமும் பார்த்தான் .அவன் அருகில் குறத்தி மகள் நின்னாள் .அவளை பார்த்து நீ ராட்டினம் சுற்றுகிறாயா என்றான்?தலையே ஆட்டினாள் போய் ஏறிக்க இவள் நேர ஓடி குதிரை வடிவில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் . அந்த குழந்தையே இவளை கண்டு சிரித்தது .சீக்கிரம் ராட்டினம் இயங்க வேண்டுமென்பது போல் இருந்தது. ராட்டினக்காரன் ஒவ்வொன்றையும் தயார் செய்வது தாமதமாகியது . இவளுக்கு ரட்டினக்காரன் இறக்கி விட்டு விடுவானோ என்ற பயம் வேறு. ராட்டினம் மெதுவாக கிரிச்சு கிரிச்சினு சத்தம் எழுப்பிக் கொண்டு நகர .வானத்தில் பொட்டு என்று சத்தம் எழுப்பி வெடி வெடித்து .பொது ஆவுடையார் கோயிலில் பூஜைக்காக வான வேடிக்கை நடக்க தொடங்கியிருந்தது .இப்போது ராட்டினம் அதனது முழு வேகத்தில் சுழன்றது .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.