Jabarulla Khan
சிறுகதை வரிசை எண்
# 154
நீர்குமிழி மனசு
===============
சதீஷ் நீங்க அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி ஆபிஸ் க்கு லீவு போடுறீங்க இனிமேல் இப்படி நடந்தால் உங்களை இந்த கம்பெனி விலக்கிடும் பார்த்து கோங்க என மேனஜர் கூவியதும் மனதிற்குள் ஒலித்தது. வீட்டுக்கு வெளியே கிடக்கும்சருகுகள் சப்தம் கூட காதில் ஒலிக்கும் நிசப்தம் அறைக்குள் நிலவியது.
மீண்டும் டாக்டர் சொன்னது காதில் ஒலித்தது.சொல்றேன்னு வருத்தப் படாதீங்கஉங்க அம்மாவுக்கு வந்தது இரத்த புற்றுநோய். அவங்க வாழுறதே அதிக பட்சம் இன்னும் இரண்டு மாதம் தான். நீங்க வேற டாக்டர் கிட்டே காட்டலாம்ன்னு
நினைக்காதீங்க. அவங்களுக்கு அவங்க விரும்புறதை கேட்கிறதை செஞ்சுட்டு சந்தோசமா பார்த்து கிட்டாலே போதும்.
இந்த கடைசி காலத்தில் நீங்கள் கொடுக்க வேண்டியது அன்பும் பாசமும் அரவணைப்பும் தான் கவலைப்பட வேண்டாம் கடவுள் இருக்கான் என டாக்டர் கூறியது அவன் மூளைக்குள் ஒலித்தது.இந்நிலையில் அவனது இமைகள் கண்ணீரோடு போராடும் சப்தமும் இதய படபடப்பும் அவனை உணர வைத்தது.அறையில் காத்தாடி சுத்தும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.உற்று பார்த்தான் மீண்டும் அவனுக்குள் அவன் மனைவியின் குரல் ஒலித்தது.
இதை பாருங்க உங்களுக்கு சமைச்சு போட துவைச்சு போட நான் ஒன்னும் வேலைக்காரி இல்லை. உங்க அம்மா படுக்கையில் சிறுநீர் போறாங்க மலமும் போயிடுறாங்க.அந்த வாடை என்னால சகிச்சுக்க முடியலை.இங்கேயே இருந்தால் எனக்கும் நோய் வந்திடும் போல.உங்க சம்பளத்துல உங்க அம்மாவின் வைத்திய செலவுக்கே சரி ஆயிடுது இதுல போயி நான் விரும்புறதும் வாங்கிக்க முடியலை.அனுபவிக்கட்டும் என்னோட கருவை கலைத்த பாவத்துக்கு தான் உங்க அம்மாவுக்கு இந்த தண்டனை.இனிமேலும் நமக்கு குழந்தை பிறக்க போறதில்லை. அதனால எனக்கு டிவேர்ஸ் கொடுங்கள் என்று கோபத்துடன் மேஜையில் டிவேர்ஸ் பேப்பரை வைத்து விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.மேஜையில் இருந்த டிவேர்ஸ் பேப்பர் காற்றில் கையெழுத்து போட சொல்லி சலசலத்து கொண்டு இருந்தது.
உரலுக்கு ஒரு பக்கம் தான் அடி
மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி
ஆனால் இந்த கடத்துக்கு உடம்பெல்லாம் அடிம்பாங்க அது போல அவன் மனநிலை இருந்தது.
ஒரு பெண் ஹோட்டல் அறையின் கதவை திறந்து உள்ளே செல்கிறாள். அங்கே மெல்லிய ஒளியின் வெளிச்சத்தில் ஒவ்வொரு முகத்தையும் தேடி பார்க்கிறாள். அறையில் மென்மையான இசை கேட்கிறது. பரிச்சயம் இல்லாத முகங்கள் தெரிந்தது. சற்றே உற்று நோக்கினால் ஒரு டேபிள் முன் தலையில் கை வைத்த படி தன் தோழி உட்கார்ந்து இருப்பது தெரிகிறது. அருகில் வந்து அவள் தோளை தட்டி "என்னடி சங்கீதா" ரொம்ப அவசரமாக என்னை வர சொன்னியே! என்ன காரணம்? என்று கேட்ட படியே அருகில் அமர்கிறாள். மெல்ல தலை நிமிர்ந்து சங்கீதா தன் தோழியை பார்க்கிறாள்.கண்ணீர்கண்களில் வழிவதை தொடைத்து கொண்டு "அருணா ஒரே குழப்பமா இருக்குடி! என விசும்பினால். கவலைப்படாதே! முதலில் உன் பிரச்சினை என்னேன்னுசொல்லு அப்புறம் அழுத்துக்கோ என்றாள்.
அப்போது சங்கீதா வுக்கு ஓர் போன் வந்தது. போனை எடுத்து பேசுகின்றாள். "சொல்லும்மா" என்றாள். சங்கீதா அம்மா தான்மறுமுனையில்பேசுகிறார்கள் என்று அருணா புரிந்து கொண்டாள். அமைதியாக பேசுவதை கவனிக்கலானாள்.
சொல்லிட்டாயா? என்று கண்டிப்பான குரலில் கேட்டது.
"ம்ம்"என்றாள். டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட சொல்லி சொன்னாயா? என மீண்டும் கனத்த குரலில் கேட்டது. "ம்ம்" என்றாள் சங்கீதா. சரி சீக்கிரமே வீட்டுக்கு வா! என்றார்கள். சரிம்மா என சொல்லி போனை கட்பண்ணிவைத்தாள்.கண்களில் வரும் கண்ணீரை துடைத்த படியே மெல்ல அருணாவை ஏறிட்டு பார்த்தாள் சங்கீதா. இப்ப சொல்லு யாரு போன்ல அம்மாவா? ஆமாம் என "என்ன விஷயமாக""சொல்றேன்"அவருக்கு வருமானம் பத்தலை? ரெண்டு வருஷம் ஆகியும் குழந்தை வேற இல்லை? இனி அவரோடு வாழ வேண்டாம்னு சொல்லி டிவேர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்க சொல்லி அவருகிட்ட கொடுக்க சொன்னாங்க. நானும் கொடுத்துட்டு வந்துட்டேன். நான் செய்ஞ்சது சரியா?தவறான்னு? புரியவில்லை. அதான் உன்னை இங்கே வர சொல்லி போன் பண்ணி கூப்பிட்டேன். அருணா மென்மையான குரலில் முட்டாள் இதை செய்யிறதுக்கு முன்னாலே சொல்லிஇருக்கலாம்ல.சொன்னா நீ வேணான்னு தான் சொல்லுவே அதான் உன்கிட்ட சொல்லாமலே செஞ்சுட்டேன்.
ஒரு நல்லவரை ஏண்டி உனக்கு பிடிக்காம போச்சு? அவரு எங்கிட்ட பாசமா இருக்காரு!பண்பா நடந்துக்கிறாரு!கோபப்படமாட்டாரு! குறை சொல்ல மாட்டாரு! தான் ஆனால். வருமானம் இல்லையே?
குழந்தை குட்டி வேற இல்லையே?
இது ரெண்டும் இல்லாமல் அவரு கூட எப்படி வாழுறது? எனக்கு தெரியாமலே என் கருவை டாக்டர் கிட்டே சொல்லி கலைக்க கையெழுத்து போட்ட மிருகம் தானே டிவேர்ஸ் பேப்பர்ல போடாதா? என்ன? இப்ப சொல்லு
எங்க அம்மா சொன்னது சரின்னு பட்டது அதான் செஞ்சேன்.
ஒஹோ! உங்க அம்மா சொன்னா சரியா தான் இருக்கும்னு நினைக்கிறே பார்த்தியா அதான்டி உன்னோட தப்பு நீயும் இவரை டிவேர்ஸ் பண்ணி இன்னொருத்தரோட நல்ல வாழ்க்கை வாழ முடிவுக்கு வந்துட்டே! சரி நாளைக்கு நீ கட்ட போறவன் நல்லா பார்த்து கிறலைன்னா? அவனுக்கும் குழந்தை இல்லன்னா? அவனையும் டிவேர்ஸ் பண்ணி வாழ வெட்டியா இருக்கபோறியா?
ஆங்காரமாய் கேட்டாள். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதையும் ஏத்து கிடுவேன் என்றாள் அமைதியாக. சற்று யோசித்து கொண்டே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படியேமௌனமாக இருந்தார்கள்.
அந்த வேளையில் சில மனிதர்களின் மெல்லிய குரல்களும் சிலரின் போன் ரிங்டோன் சப்தமும் மேஜையில் உள்ள தட்டை மங்கு கரண்டியின் சப்தங்கள் மட்டுமே அந்த மெல்லிய இசையோடு கேட்டு கொண்டே இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே பேசாமல் இருந்தனர்.அந்த வேளையில் ஒரு பெண் ஹாய்! சங்கீதா என்றாள். இருவரும் அந்த பெண்ணை உற்று நோக்கினர். அந்த பெண் என்னை தெரியலையா? என்று கேட்ட படியே அவர்களின் அருகில் உள்ள சேரில்அமர்ந்தாள் நீ சங்கீதா தானே ? "ஆமாம்"
உன் கணவர் சதீஷ் தானே? "ஆமாம்" என்ன? எப்படி? உங்களுக்கு தெரியும்!உன்னை தெரியாதா! எனக்கு நீ கன்சீவ்வா இருக்கையில் மயக்கப்பட்டு கீழே விழுந்துட்டே...உன் கணவர் சதீஷ் "என் மனைவியைகாப்பாத்துங்க" டாக்டர் ன்னு அழுது கிட்டே உன்னை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்தாரு. அப்போ நான் தான் டூட்டி டாக்டர் . உன்னை செக் பண்ணேன். உன்னோட இதயம் ரொம்ப பலகீனமா இருந்துச்சு.
அப்புறம் ஹார்ட் ஸ்பெசிலிஸ்ட்ட வரச் சொன்னேன். எல்லா செக்அப் பண்ணி பார்த்துல உன்னோட இதயத்துல ஒரு சின்னதா ஓட்டை இருந்துச்சு. சோ! இப்ப நீங்கள் குழந்தை பெத்துகிட்டா உங்க மனைவி மற்றும் குழந்தை உயிரோடு இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கருவை கலைச்சிடுங்க. அவங்க உடல் ரீதியாக முன்னேறி வரட்டும். அதுவரை ஒரு ரெண்டு மூணுவருஷம் அவங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிடனும். அப்புறம் நீங்கள் தாராளமாக குழந்தை பெத்துக்கிடலாம்னு சதீஷ்கிட்டே எங்க சீப் டாக்டர் சொன்னாங்க. அவர் ஒரே அழுகையா அழுதார். பிறகு சமாதானமாகி குழந்தையை கலைக்க சம்மதம் சொன்னாரு. நீ இருந்த நிலையில் உனக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் அத்தோடு உன் வியாதிக்குள்ள மாத்திரைகளை சத்து மாத்திரை ன்னும் சொல்லி சாப்பிட வச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னார்.நீஅதேஹாஸ்பிடலில் தானே குழந்தை க்காக பார்த்து வாரீங்க.நான் இப்போது வேற ஹாஸ்பிடலில் வேலை பார்க்கின்றேன். அதான் உன்னை பார்த்ததும் கேட்கணும்னு தோணுச்சு. உனக்கு ரொம்ப நல்லா கணவன் கிடைச்சிருக்காருமா .நேரமாயிடுச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லி டாக்டர் கிளம்பும் முன் சற்று திரும்பிமீண்டும்அவர்களை நோக்கி ஒரு யோசனையுடன் இந்த விஷயத்தை உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு உன் கணவர் சொன்னாரு. என்னமோ தெரியலை! உன்னை பார்த்ததும் சொல்லனும்ன்னு தோனுச்சு சொன்னேன்.உடம்பைபார்த்துக்கோ சதிஷ் கிட்டே டாக்டர் பிரியா கேட்டாங்கன்னு சொல்லு பார்க்கலாம் என கூறி சிறு புன்னகையுடன் டாக்டர் கிளம்பினாள். சங்கீதா அழ ஆரம்பித்து விட்டாள். அருணா சமாதானப் படுத்தினாள். இருவரும் ஹோட்டலை விட்டு வேகமாக கிளம்பி வீட்டுக்கு சென்றார்கள். வீட்டில் முன் கதவு திறந்த படியே இருந்தது. ஹாலில் யாரும் இல்லை டீவி சப்தம் மட்டுமே கேட்டது. பதட்டத்துடன் மெல்ல இருவரும் உள்ளே நுழைந்தனர். சோபா அருகில் உள்ள டீப்பாயில் சங்கீதா கொடுத்து சென்ற டிவேர்ஸ் பேப்பர் மற்றும் ஒரு கடிதம் கண்ணில் பட்டது. வேகமாக எடுத்து பார்த்தால் சதீஷ் என கையெழுத்து போட்டு இருந்தது. அத்துடன் இருந்த கடிதத்தை சங்கீதா பிரித்து வாசிக்கின்றாள். அருணாவும் அதை காதில் கேட்க்கிறாள்.
அன்புள்ள சங்கீதாவுக்கு...
கடைசி வரை பொல்லாதவன் போல இருக்கும் உன் கணவன் சாரி கயவன் எழுதியது!
எனது வருமானம் தான்
உனக்கு அவமானம் என்றாய்!
உன்னை மார்போடு அணைத்து தூங்கியே பழகினேன்! எதற்காக தெரியுமா? உன் இதய துடிப்பு கேட்கிறதா? இல்லையா? என்றே பல நாள் தூங்காமல் விழித்தே இருந்திருக்கிறேன். உனக்குத் தெரியாது?சில காரணங்களை உனக்கு சொல்லாமல் இருந்தேன்.
நீ தினந்தோறும் சண்டை போடுவாய்! உன்னை குழந்தை போல தான் பார்த்து கொண்டே இருந்தேன். நீயோ அடம் பிடிக்கும் குழந்தையாக மாறிவிட்டாய்.உன் உடல்நிலை பாதித்து விடுமோ? என்ற அச்சத்தில் மௌனமாக இருப்பேன். ஆனால் நீயோ மௌனராகம் ரேவதி போல இந்த வக்கத்த பயலோடவருமானத்தில் வாழ்ந்தது போதும் இனிமேல் வாழ முடியாது என டிவேர்ஸ் கேட்டாய்.மறுத்து விட்டால் மறுபடியும் உனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ? என்று பயந்து இப்ப கையெழுத்து போட்டு இருக்கின்றேன். இந்த கையெழுத்து கூட உன் தலை எழுத்தை மாற்றி விடும் என்ற நம்பிக்கையில் தான். உன் குழந்தைத் தனத்தை தான் விரும்பினேன். தாயின் அன்பை தான் உன்னிடம் விரும்பினேன். இப்ப கூட நீ என் மூஞ்சியிலே முழிக்க கூடாதுன்னு எண்ணி இருப்பாய். பிடித்து இருந்தால் பிறை கூட அழகாக தெரியும்! பிடிக்கவில்லை என்றால்
முழுமதியும் கலங்கமாய் தான் தெரியும்! கஷ்டமோ? நஷ்டமோ? நான் தனியாக இருக்க பழகிக் கொள்கிறேன். உன் கண்கள் கலங்குவதைநான்விரும்பவில்லை. என் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தாங்கி கொள்ளும் வலிமையை இறைவன் எனக்கு தருவான்.
நீ சற்றும் கலங்காதே! என்னை விட்டு விலகினால் தான் உனக்கு சந்தோஷம் என்றால் உன் சந்தோஷம் தொடர... இனி
என்னால் உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் எந்த தொந்தரவும் தர மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.பிரிவில் தான் உறவுபிரிந்தால் தான் வாழ்வுஅன்புடன் சதீஷ்
படித்து முடித்ததும் இருவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தொண்டையில் நாவறட்சி தொற்றி கொண்டது. இருவருக்கும் ஒரு வித மனபயம் தொற்றிக் கொண்டது அறையில் தேடினார்கள் பாத் ரூம் திறந்து பார்த்தனர் பால் கனியில் சென்று பார்த்தனர் காணவில்லை. மாடியில் இருந்து கீழே பார்த்தனர் கீழே உற்று நோக்கினார்கள். காய்கறி வியாபாரியிடம் தெருவில் உள்ளவர்கள் காய்கறிகள் வாங்கி கொண்டு கூட்டமாக இருந்தனர்.
பதட்டத்துடன் இருவரும் சேர்ந்து சேர்ந்து திரும்ப. அங்கே புன்னகையுடன் வாங்க என்றான் கையில் இரண்டு காபி கப் உள்ளன . இருவரும் அவனை சற்று ஆச்சரியமாக பார்க்கின்றனர். அவனும் கவலைகளை காட்டிக்கொள்ளாமல் டீப் பாயில் டீயை வைத்து சோபாவில் அமர்ந்தான். சற்றும் தாமதிக்காமல் சங்கீதா அவன் காலடியில் விழுந்து என்னை மன்னிச்சிடுங்க உங்க அருமை புரியாமல் அவசரப்பட்டு கஷ்ட படுத்திட்டேன் என்று கதறி அழுதாள். அவனோ சற்றும் கோபப்படாமல் ஆத்திரமும் படாமல் "ஏய் எதுக்கு அழுகின்ற?
உன் விருப்பம் என்னவோ அதை தான் செய்தேன்" என்றான். சில நொடிகளில் அவளின் உள்ளங்கை பற்றி மெதுவாக அழுத்தி எதுவும் நடக்காதது போல நானிருக்கிறேன் என்று மெல்ல அவளை எழ சொல்லிவிட்டு தன் அருகில் உட்கார வைத்து அவள் முகத்தை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். கண்ணீர் வழிந்த படியே இருந்தது அதை தன் கையால் அவள் நாடி பிடித்து துடைத்தான். அவளுக்கு தன் தவறை மன்னித்து விட்டான் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வந்தது. அந்த வேளையில் அவளது போனில் மணி அடித்தது. போனை எடுத்து பார்த்தால் அம்மாவின் அழைப்பு வந்தது. கண்டிப்பான குரலில் டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு வாங்கிட்டாயா? என கேட்டாள். கண்ணீரை துடைத்த படியே வாங்கிட்டேன். ஆனால் இப்போ அதை கிழிச்சு போட போறேன் என்று சொல்லி கொண்டே டிவேர்ஸ் பேப்பர கிழித்து போட்ட படியே வேறென்னமா? செய்ய... உன்னால ஒரு நல்ல வாழ்க்கையை இழக்க பார்த்தேன். "என்னடி சொல்றே" கோபமாக அம்மா கேட்டாள். இனிமேல் தயவுசெய்து என் வீட்டுக்கு வந்திடாதே என போனை கட் பண்ணி வைத்தாள். மீண்டும் தன் கணவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். மெல்ல அவள் அவனின் மார்பில் சாய்ந்தாள். அவனும் அவளை அணைத்து கொண்டான். அவள் நெற்றியில் முத்த மிட்டான். அருணா சற்று தள்ளி நாணத்தால் டிவி யை நோக்கி பார்த்தால் டிவி யில் விளம்பரம் ஓட ஆனந்தம் ப்ரு உடன் ஆரம்பம் என பாடல் பாடியது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்