logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சௌ.நாகநாதன்

சிறுகதை வரிசை எண் # 153


ஆணவக்கொலை ********************* மாலை பள்ளி விட்டு வந்த மருதாணி ஆடிப்பாடியபடி வந்தாள். வீட்டின் வாசலில் சாய்வு கட்டிலில் அமர்ந்திருந்த பெரியபண்ணை வீட்டிற்குள் நுழைந்த மருதாணியை நிறுத்தி... "இங்கா வா" "என்னங்க அப்பா ?" "எங்க போயிட்டு வர்ற?" "பள்ளிக்கூடத்திற்குத்தான் பா" "பொய் சொல்லாத" "நான் ஏன்பா பொய் சொல்லணும் வேணும்னா என் தோழி சுகந்திகிட்ட கேளுங்க." "யாரு அந்த சேரிப்பொண்ணு தானே ?" "ஏன்பா அப்படி சொல்றீங்க அவ என் வகுப்புத் தோழி பா" "நீ வாயை மூடு எத்தனைவாட்டி சொல்லுவேன் சேரி பசங்ககூட சேராதனு.." "நான் பேசுவேன் " அதைக்கேட்டுக்கொண்டிருந்த மருதாணியின் தாய் மரகதம் ஓடிவந்து "அப்பாருகிட்ட என்னடி வாய்க்குவாய் அடிக்கிற உள்ள போ "என்று கண்ணைக்காட்ட.. ஓங்கிப் பளார்னு ஒரு அறைவிட்டார். "என்னடி தாயும் பிள்ளையுமா நடிக்கிறீங்களா ?" "அவ என்ன பண்றா ஏது பண்றா தெரியல இப்படி ஊர்ல என் மானத்தைக் குழிதோண்டிப் புதைச்சிட்டு நிக்கிறா நீ அவளுக்கு ஒத்து ஊதுறியா?" "அவ என்னங்க பண்ணிட்டா கூடப்படிக்கிற பொண்ணுகூட பேசுறதும் பழகுறதும் என்ன தப்பு ?" "இங்க பாருடி அந்த சனத்துக்கும் நமக்கும் செட்டாகாது ஆனால் போகட்டும் சனியன்னு விட்டுருவேன் ஆனா அந்த கீழ்சாதியில போயி வாக்கப்படணும்னு நினைக்கிறாடி உன் பொண்ணு." "என்னங்க சொல்றீங்க ? " "நம்ம பொண்ணு அப்படி பட்டவ இல்லை யாரோ தப்பா சொல்லியிருக்காங்க" "மருதாணி, அப்பா என்னடி சொல்றாங்க ?" "அம்மா, எனக்கு எதுவும் தெரியாதுமா" "பொய் சொல்றா பாரு கையும் களவுமாக மாட்டிக்கிட்டே என்னமா நடிக்கிறா பாரு" "ஐயோ குழப்பாதீங்க, அவ பொய் சொல்லமாட்டாங்க." "நீயே கேளு எங்க சுத்திட்டு வர்றானு "இல்லமா நான் பள்ளிக்கூடம் விட்டதும் சுகந்திகூடத்தான் வந்தேன்." "பொய் சொல்றா பள்ளிக்கூடம் விட்டது இரண்டு மணிக்கு இப்போ நேரத்தைப் பாரு ஆறுமணி ." "குழந்தைகளோடு விளையாடிட்டு வந்திருப்பாங்க அதான் அந்த பொண்ணுகூட வந்தேன் சொல்றாளே" "இல்லடி அவ நம்ம தோட்டத்துல வேலை பாக்குறான்ல மாயாண்டி அவன் மகன் சின்னையனோட மந்தோப்புல தனியா இருந்ததா எனக்கு செய்தி வந்துடுச்சு உண்மையா பொய்யானு கேளு" "சத்தியமா சொல்றேன்மா அப்பா பொய் சொல்றாங்கமா ." ""அந்த அண்ணாகூட நான் பேசியதே இல்லை , யாரோ வேணும்னே பொய் சொல்லியிருக்காங்க நான் ஏன்மா அங்க போறேன்" "சரி நீ மாந்தோப்பு போனியா ?" "ஆமாமா நானும் சுகந்தியும் போனோம்" "ஆமா எதுக்கு போனீங்க ?" "அதுவந்து...வந்து ...நான் தனியா சொல்றேன்மா" "பாத்தியா அவ போனாளாம் ஆனா தப்பு பண்ணலையாம், கேட்கிறவன் கேனையனு நினைச்சிட்டாடி உன் பொண்ணு " "ஒரே பொண்ணுனு செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டாச்சு" "அதா அப்பா கேட்கிறாருல இங்கேயே சொல்லு" "அம்மா புரிஞ்சுக்கோ நான் தப்பு பண்ணல அதையெப்படி அப்பாகிட்ட சொல்றது ?" "நீ இப்ப தப்புப்பண்ணலனு அவருக்கு நிரூபிச்சுச்தான் ஆகணும் இல்லனா அவரு சொன்னது உண்மையினுதான ஆகும் ?" "அம்மா அவளுக்கு இரத்தப்போக்கு வந்துடுச்சு வர்ற வழியில அவளால் நடக்க முடியல அங்க பக்கத்துல இருந்த வீட்டுக்கு அழைச்சிட்டு போய் அவளுக்கு எல்லாம் துணிமணி மாத்தி அவளைக் கொண்டு போய்விட்டுவர இவ்வளவு நேரம் போதுமா ?" "நல்லா கதை சொல்றாடி உன்பொண்ணு" "என்னங்க என்பொண்ணு என்பொண்ணுனு தலையில தூக்கிவச்சு ஆடுற நீங்க இப்போ உன் பொண்ணு உன்பொண்ணுனு சொல்றீங்க ?" "என் பொண்ணா இருந்தா இப்படி கேடுகெட்ட வேலைபார்த்துட்டு வந்திருப்பாளா ?" "ம்க்கூம் அவதான் இவ்வளவு சொல்றாளே இன்னுமா நம்பல " "நீ உள்ளபோடி அம்மா நான் நம்பறேன் என்று அவளை அழைத்துப்போனாள் செல்லம்மா." " உனக்கு நான் சொல்றது இப்ப புரியாது பின்ன ஐயோ அம்மானு புலம்பப்போறவ நீதான் " என்று எழுந்து வெளியே போனார். ************** "வாங்க பெரிய பண்ணை நான் சொன்னது சரிதானே உங்க பொண்ணு நேரத்துக்கு வந்திருக்காதே."என்று சாராயக் கடையில் அமர்ந்திருந்த லிங்குசாமி சொல்ல .. "கோபம் தலைக்கேறி யோவ் நீமூடிட்டு ஒருபாட்டில் கொண்டுவா" என்றார். "எதுக்கு இப்ப கோபப்படுறீங்க ?" "நம்ம சாதிப்பொண்ணு அந்த கீழ்சாதி நாயிங்ககூட கூட்டு வச்சிக்கிட்டா நாளை நம்ம மானம்போவதோடு நம்ம சாதியும் சாக்கடை ஆகிடுமேனு சொல்றேன்" "அதுவும் ஊருக்கே நியாயம் சொல்ற பெரியபண்ணை வீட்டுல இப்படின்னு யாராவது சொல்றதுக்குள்ள முந்திக்கணுமேனு சொன்னேன்" என்று தூபம் போட்டான் சாராய வியாபாரி லிங்குசாமி. ஏற்கனவே கோபத்தில் இருந்த பெரிய பண்ணை "ஒருவேளை உண்மையாக இருக்குமோ? ஆனால் அவ்வளவு தீர்மானமாக சொல்றாளே மருதாணி அவனுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லைனு ". "இவன் சொல்றதிலும் நியாயம் இருக்கிறது நாளை நம்ம குடும்பத்திலிருந்து ஒருத்தி ஓடிப்போனா ஊரே காரித்துப்பும் அதன்பின் நாம் இவ்வளவு கெத்தா எப்படி நடப்பது?" "இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்" என்று நினைத்தவர் சாராயப் பாட்டிலை எடுத்து கடகடவெனக் குடித்துவிட்டு நேராகக் களத்துமேட்டில் இருந்த கணவனை இழந்த சேரிப்பெண் அருக்காணி வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் தூங்கப் போயிருந்த அருக்காணி கதவை யாரோ தட்டுவது கேட்டு யாரு என்று கேட்டாள் "நான் தான்டி பெரியபண்ணை கதவைத்தொற " என்று கத்த... இந்த நேரத்தில் இவர் ஏன் வந்தார் என்று தெரியாமல் கதவைத் திறந்தவள் "என்னங்க ஐயா இந்த நேரத்தில்? ஏதாவது வேணுமா ?" "நீதான் வேணும்" என்று அவளை கட்டியணைக்க... "ஐயோ தப்புங்க ஐயா விடுங்க" என்று உதறித்தள்ள .. கீழே விழுந்த பெரிய பண்ணை "அடியே நாறமுண்ட என்ன கொழுப்பு இருந்தா என்னையே கீழே தள்ளுவது உன்னை என்னை செய்றேன் பாரு" என்று அவளை வழுக்கட்டாயமாக இறுக்கி அணைத்து அவளைக் கட்டிலில் தள்ளினார். "ஐயா நான் கஞ்சிக்கு இல்லாட்டியும் இப்படி தப்பு பண்ணி பொழப்பு நடத்தமாட்டேன் என்ன விட்டுருங்க " "வீட்டுல மகாலட்சுமி மாதிரி அம்மா இருக்காங்க அவங்களைக் கொஞ்சம் நினைச்சுப்பாருங்க ,தயவுசெஞ்சு விட்டுருங்க ஐயா" "என்னடி ஓவரா சீன்போடுற, எனக்கே அறிவுரை சொல்றியா ? ஒழுங்கா வந்துபடு ஒரு பத்து நிமிடம் வேலையை முடிச்சிட்டுப் போறேன் " "வேணாங்கய்யா தப்பு " "இப்ப என்னடி, நீயா வர்றியா இல்ல?" "தயவு செஞ்சு வெளிய போங்க" என்று கத்தினாள். "என்னடி மயிருமவளே நீ சரிப்பட்டு வரமாட்ட "என்று ஓங்கி அறைவிட அருக்காணி அப்படியே மல்லாந்தாள். குடிபோதையில் ஆத்திரமும் கொண்ட பெரியபண்ணை தான் வந்த காரியத்தைச் செயல்படுத்தப் பிணம்போலக் கிடந்தாள் அருக்காணி . வியர்க்க விறுவிறுக்க அவளைக் கெடுத்துவிட்டு எழ போதை தெளிந்திருந்து .அவிழ்ந்த வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு சட்டைப்பையில் இருந்த ரூபாய் நோட்டுக்களை அவள்மீது வீசியெறிந்துவிட்டு நடையைக் கட்டினார் பெரியபண்ணை . அருக்காணி காட்டுமிருகத்தின் தாக்குதலில் சிக்குண்ட மானைப்போல நிலைகுத்திய விழிகளில் அப்படியே ஆடை கலைந்து கிடப்பதைக்கூட சரிசெய்யத் தோன்றாமல் அப்படியே படுத்திருந்தாள். இரவு நடுநிசியில் வந்து கதவைத்தட்டிய பெரிய பண்ணைக்கு மனைவி மரகதம் கதவைத் திறந்துவிட.. அரைபோதையில் வந்த கணவனிடம் எதையும் கேட்க வேண்டாமென அமைதியாக உள்ளே போனாள். "ஏய் சாப்பிட்டியானு கேட்டியாடி நீ பாட்டுக்கு போற ?" "மணி இப்ப என்ன ? ஒன்றரை மணி இப்போ வந்துட்டு சாப்பிட்டியானு கேட்கலனு என்கிட்ட கேட்குறீங்க?" "வேலைக்குப்போற மனுசன்கிட்ட கேட்கலாம் நீங்கதான் குடிக்க போனவருதானே அங்க சாப்பிடாமயா வந்துருப்பீங்கனு கேட்கல" "என்னடி வரவர எதிர்த்துப்பேசற" "நான் எங்கங்க எதிர்த்து பேசறேன் ? உண்மையைத்தானே சொல்றேன். வயசுப்புள்ள இருக்கிற வீடுங்கறதையே மறந்துட்டு இப்படி கண்ட இடங்களுக்குப் போயிட்டு இராவுல வந்து சண்டை வளர்க்குறீங்க" "நான் ஆம்பளைடி நாலு இடத்துக்குப் போய்ட்டு வருவேன் அதுக்காக நீ கேள்வி கேட்பியா?" "ஐயோ சாமி ஆளவிடுங்க நான் கேள்வியே கேட்கல நீங்க தான் போனவளைக் கூப்பிட்டு பேசுறீங்க" "இப்ப என்ன சொல்ற, சோறு இருக்கா இல்லையா ?" "நீங்க வரலைன்னு இப்பத்தான் தண்ணி ஊத்தி வச்சேன் " "எதோ முதல்ல கொண்டுவா பசிவயித்தைக்கிள்ளது " "வெறும்வயித்துல சாராயத்தைக்குடிச்சா பின்ன என்னபண்ணும் ?" "சரிதான் போடி எடுத்துவா முதலில்" என்று அப்படியே உட்கார ... "கையைக்கழுவுங்க" என்று தண்ணீரையைக் கொடுக்க இருந்த இடத்திலேயே கையைக் கழுவிவிட்டு அப்பிடியே குண்டானில் கையைவிட்டுக் கரைத்து ஒரேமூச்சில் குடித்து முடிக்க ... "என்னங்க அவசரம், அதைப்பொறுமையா குடிச்சா என்ன ?" என்று மரகதம் கேட்டதுகூட காதில் வாங்காமல் அப்படியே அதே இடத்தில் சாய்ந்தார். இந்த மனுசனை எழுப்ப முடியாது காலைல போதைதெளிந்து எழும்பட்டுமெனப் பாத்திரத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டுப் படுக்கப்போனாள். ******* பெரியபண்ணை விடிந்தது கூட தெரியாமல் தூங்க ... வேலைக்காரன் மணி ஓடிவந்து களத்துமேட்டில் அருக்காணி தூக்குப் போட்டுக் கொண்டாள் என்று செய்தி சொல்ல பதறிவிழித்த பெரிய பண்ணை "அட கூறுகெட்டவ இப்ப என்ன நடந்துடுச்சுனு இப்படி போயிட்டா , சனியன் தொலையட்டும்" "போகும்போது எதுவும் பிரச்சினையைக் கிளப்பாம போனாளா இல்லை ?"என்று நினைத்தமாத்திரத்தில் ... எழுந்து சட்டையை மாற்றிக்கொண்டு தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு விரைந்தார். அங்கே ஏற்கனவே நூறு பேருக்கு மேல் குவிந்திருக்கப் பிணத்தை இறக்குவதற்குத் தயங்கிக்கொண்டு நின்றவர்களை விலக்கி உள்ளே போனார். "என்னய்யா பாத்துட்டு இருக்கீங்க ? முதல்ல பொணத்தை இறக்குங்க" "இல்லைங்க ஐயா போலீஸ்ல பின்னாடி பிரச்சினை வரும்னு.."என்று ஒருவர் இழுக்க.. "நல்ல ஆளுய்யா அதுக்கு அவங்க வரும்வரை தொங்க விடுவீர்களா ? அவங்க வந்தா நான் பேசிக்கறேன் முதல்ல இறக்குங்க" என்று சொல்ல இருவர் கட்டிலைப்போட்டு ஏறி அவளை இறக்கிக் கட்டிலில் கிடத்த இரவு வரும்போது மறந்துவிட்டு போன விலையுயர்ந்த தனது கடிகாரம் கீழே கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியானார். அதனைக் குனிவதைப்போல தோளில் கிடந்த துண்டால் மூடி எடுக்கவும் போலீஸ் வரவும் சரியாக இருந்தது. "வணக்கம் சார் வாங்க ஏன் இவ்வளவு நேரம் ?" "ஏன் சார் அங்கிருந்து வரவேணாமா ரோட்டு மேலயா இருக்கு?" "வயல்காட்டுல இருக்க வீட்டுக்கு வந்து சேர வேண்டாமா ?" "சரி எங்க பிணம் ? தூக்குல தொங்குதுனு சொன்னாங்க இங்கே எதுவும் காணோம்." "சார் அங்க பாருங்க கீழ கிடத்தி வச்சிருக்கோம் " "என்ன சார் நீங்க பிணத்தை நாங்க வராம ஏன் இறக்குனீங்க ?" "நல்லா இருக்கே, என்ன சொல்றீங்க நீங்க " "ஊருக்குள் ஒரு சாவு விழுந்திருக்கு அதை அப்படியே போட்டுட்டு இருப்பாங்களா ?" "இல்லை சார் இந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சா இல்லை யாராவது கொலை பண்ணிட்டாங்களானு போஸ்ட் மார்ட்டம் பண்ணுறதுக்கு முன்னாடி மத்தவங்க எப்படி தொடலாம்?" "என்னது போஸ்ட்மார்ட்டமா ?" "என்ன சார் நீங்க அந்த சிறுக்கிமவ புருசன் செத்த துக்கத்துல தூக்குப்போட்டு செத்துருக்கா" "அவகிட்ட என்ன சொத்து இருக்குனு இவளை கொலை செய்யப்போறாங்க.?" "நீங்க வேற சார் நம்ம கிராமத்துல போலீஸ் கேசுனு யாரு போயிருக்கா எல்லாம் பஞ்சாயத்துல முடிவு பண்றது தானே .." "ஏதோ புருசனைப் பறிக்கொடுத்தானு களத்துமேட்டுல இடம் கொடுத்து தங்க வச்சோம் , இங்க உள்ள வேலை பாத்துட்டு இருந்தா இப்படி அநியாயமா தூக்குபோட்டுட்டா இவளை யாருங்க கொல்லப்போறா " "அப்படியில்லை சார் சின்ன வயசுபொண்ணா தனியா வேற இருந்திருக்கா யாராவது தப்பா நடந்து யாராவது தூக்கிவிட்டுருந்தா" "ச்சீ ச்சீ இந்த சேரிக்காரியை எவன் தொடுவான் இங்க இருக்கவன் சாதிக்காரனுக,அவ்வளவு கேவலமா போகமாட்டானுக.. "நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் நாங்களே அடக்கம் பண்ணிடுறோம்" "இல்லை அது வந்து... யாராவது மேலிடத்துக்கு தகவல் கொடுத்தா....?" "இங்கு யாரும் தகவல் கொடுக்குறவங்க இல்லை " "ஏப்பா யாராவது தகவல் கொடுக்கணும்னு நினைக்கிறீங்களா ?" "தாராளமாக சொல்லுங்கப்பா அருக்காணியைக் கீறிகிழிச்சு தரச்சொல்றேன்" எல்லோரும் ஒருசேர "வேண்டாங்கய்யா மகராசி யாருகிட்டயும் நிமிர்ந்து பேசமாட்டா அவளை அப்படி பண்ணிடாதீங்க" என்று சேரிப்பொண்ணு ஒருத்தி சொல்ல ... "இங்க பாருங்க சார் பாவம் அவளே மனவுளைச்சல்ல போயிருக்கா அவளை மறுபடி கஷ்டப் படுத்தணுமா ?" "சரி ஊரே சொல்றதால என்ன செய்ய முடியும்? சரி சார் நீங்களே அடக்கம் பண்ணிடுங்க " "ஒரு கையெழுத்து மட்டும் போட்டுருங்க" என்று போலீசார் வாங்கிக்கொண்டு கிளம்ப அப்பாடா என்று பெருமூச்சுவிட்டார் பெரியபண்ணை தான்நினைச்ச மாதிரி எந்த பிரச்சனையும் நடக்காததால் அவளைச் சுடுகாட்டுக்கு கைப்பாடையாகத் தூக்கி வைத்து கொண்டு போய் எரித்துவிட்டு சாராயக் கடைக்குப்போய் உட்கார்ந்தார். ***** "என்ன பெரியபண்ணை இன்னிக்கு அந்த களத்துமேட்டில் தனியா இருந்த அருக்காணியை எவனோ தூக்கிவிட்டுட்டான்போல போலீசுலாம் வந்துச்சாமே..?" "ஆமா லிங்கு அந்த கூறுகெட்டவ இப்படி பண்ணியிருக்கா ஆமா எவனோ தூக்கிவிட்டுட்டான்னு எப்படி சொல்ற?" "பின்ன என்ன பெரியபண்ணை இந்த வயசுலயும் தளதளன்னு இருந்தாள்ல எவனோ கைவச்சிருப்பான் அதான் தூக்குல தொங்கியிருப்பா இதுக்கு சிஐடியா வைக்க..." "அவன் நல்ல நேரம் நீங்க தலையிட்டு அவனைக் காப்பாத்திட்டீங்க. மாட்டியிருக்கணும் நானே செருப்பால் அடிச்சிருப்பேன்" "சரி சரி இப்போ அந்தக்கதை எதுக்கு நீ போய் ஒருபாட்டில் கொண்டுவா நேரங்காலத்துல வீட்டுக்குப்போக..".என்று அவசரப்படுத்த... "என்ன இன்னிக்கு அவசரம் ?" "காலையிலேயே கிளம்பி வந்தது அதான்" என்று இழுக்க... "நான் சொன்னது ஞாபகம் இருக்கா ?" நம்ம பொண்ணும் நாளைக்கு எவன்கிட்டயாவது போயிட்டு வந்தா நாமதான் தூக்குல தொங்கணும் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சொல்லிப்புட்டேன் " என்று உரு ஏற்ற.. பெரியபண்ணைக்கு அருக்காணி தூக்கில் தொங்கிய காட்சி தன்மகள் மருதாணியாகத் தெரிய .. வெறியேறியது பாதிகுடித்தும் குடிக்காமலும் வைத்திருந்த சாராயப்பாட்டிலை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு நேராக வீட்டுக்கு வந்தார் பெரியபண்ணை . அவருக்காக வாசலில் நின்றுகொண்டிருந்த மரகதம் "என்ன எல்லா வேலையும் நல்லபடியா முடிஞ்சதா ?"என்று கேட்டாள். "நான் என்ன கல்யாணத்துக்கு போனேன் கருமாதிக்குத்தானே போனேன்" என்றார் "தெரியும் தெரியும்" என்று முனகிக்கொண்டே சமையலறைக்குள்ளே நுழைந்தாள் ஏற்கனவே லிங்குச்சாமி குழப்பிவிட மரகதம் வேறு கேள்வி கேட்க.. சூடான பெரியபண்ணை சாப்பிடாமல் போய்ப்படுத்தார். இரவு பன்னிரண்டு மணி தூக்கம் வராமல் எழுந்து தண்ணிக்குடிக்க போனவர் நடுஹாலில் படுத்துக் கொண்டிருந்த மருதாணியைப் பார்க்க அச்சுஅசலாக அருக்காணியைப்போல தெரிய... கண்களைக் கசக்கிப்பார்த்தார். இப்போது மருதாணி அருக்காணியை ப்போல இடைவிடாது சிரிக்க... லிங்குசாமி சொன்னதுபோல் நடந்துவிடுமோ ? என்று நினைத்து தலையணையை எடுத்து மருதாணியைக் கொலைசெய்ய ஆரம்பித்தார் . மருதாணியின் அலறல் சத்தங்கேட்டுத் திடுக்கிட்டு விழித்த மரகதம் ஓடிவந்து "என்னங்க பண்றீங்க அவளை ?" எதுக்குங்க கொல்லப்பார்க்குறீங்க? "நீ சும்மாஇரு சாதிகெட்ட அந்த சேரிப்பையனோடு சேர்ந்து சுத்துற இவ இருந்தா நம்ம மானம்தான் போகும் இவளை இன்னிக்கே முடிச்சிடுறேன்" என்று தலையணையை முகத்தில் வைத்து அழுத்தினார். "விட்டுருங்க அவ எந்த தப்பும் பண்ணல ,யாரோ சொல்றதைக் கேட்டு நம்ம பொண்ணைக் கொன்னுடாதீங்க " என்று கெஞ்சினாள். பெரியபண்ணை மரகதத்தைத் தள்ளிவிட அவள் சுவற்றில் மோதி மண்டை உடைந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது மீண்டும் எழுந்துவந்து கெஞ்சினாள் அவர் விடுவதாக இல்லை மருதாணியின் கால் துடித்து அடங்கப்போவதைக் கண்ட மரகதம் அருகில் இருந்த இரவு விளக்கை எடுத்து பெரியபண்ணையையின் மண்டையில் ஒரே அடியாக அடிக்க அப்படியே கவிழ்ந்து விழுந்தார் பெரிய பண்ணை. மருதாணி எழுந்து மரகதத்தின் பின்னால் வந்து நின்றுகொண்டாள். "என்னடா சாதிசாதினு தூக்கிவச்சு ஆடுற?" "என்பொண்ணு படிக்கிற பிள்ளைகூட பேசினா தப்பு , பழகினா தப்புன்னு சொல்ற நாயி நீ , உன் உடம்புப்பசிக்கு எந்த சாதி கீழ்சாதினு சொல்லுறியோ அவளைக் கெடுத்து அவ சாவுக்குக் காரணமாயிட்டு உன் சாதியைத் தூக்கிப்பிடிக்க போறியா?" "என்னடா இவளுக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா ?" நேத்து உன் முதுகுல நகக்கீறல்கள் இருக்கும்போதே கொஞ்சம் சந்தேகம் இருந்தது " "காலைல வேலைக்காரன் சொன்னதும் விழுந்தடிச்சுப் போகும்போதே நினைச்சேன் அவ சாவுக்கும் உனக்கும் ஏதோ தொடர்புனு அது இப்போ நிரூபணம் ஆயிடுச்சு." "ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு மனிதனைக்கடிச்ச கதையா எந்தத் தப்பும் செய்யாத எம்பொண்ணுமேல கைவைக்கத் துணிஞ்சிட்ட " "உன்னை மாதிரி மிருகம், இருக்கறதுக்கு இல்லாமலே இருக்கலாம் இந்த சமூகம் நல்லா இருக்கும்." என்று அவர் கண்முன்னே தாலியைக்கழற்றி வைத்துவிட்டு ஓங்கி ஒருஅடி போட்டாள் பெரியபண்ணை அப்படியே இரத்தம் கொட்டக்கொட்ட மூச்சை விட்டுக்கொண்டு இருந்தார். ஆணவத்தால் கொலை செய்யத் துணிந்த பெரியபண்ணையை ஆணவக்கொலைசெய்து பாரதிப்பெண்ணாய் நிமிர்ந்து நின்றாள் மரகதம். கவித்தென்றல் சௌ.நாகநாதன் முகவரி கவித்தென்றல்சௌ.நாகநாதன் த/பெ.சோ.சௌந்திரபாணாடியன் 4/516 காமராஜர் தெரு சின்ன இரெட்டையூரணி இரெட்டையூரணி அஞ்சல் இராமநாதபுரம் மாவட்டம் 623544 9597820184. ngsnaga69@gmail.com.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in