logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

மு.முபாரக்

சிறுகதை வரிசை எண் # 1


சிறுகதை... பசுமையான சருகு... நடுவழியில் தனது இரண்டுசக்கர வாகனம் நின்ற போது தான் ஐயோ,வேலைக்கு போற அவசரத்துல வண்டிக்கு பெட்ரோல் போட மறந்துட்டேனே என தன்னையே திட்டிக்கொண்டான் ஆனந்த், இங்கிருந்து ஐந்து கிலோ மிட்டர் தூரத்துல இருக்கே பெட்ரோல் பங்க் என்ன செய்றது என சிந்தித்து கொண்டிருக்கும் போதே, சாலையில் கடந்து போகின்ற வாகன ஓட்டிகளிடத்தில் கொஞ்சம் பெட்ரோல் கேட்டுப்பார்ப்போம் என வருகின்ற வாகனங்களை மறித்து கேட்க தொடங்கினான் ஆனந்த், ஒருவரும் நிற்காமல் அவசர அவசரமாய் கடந்து சென்று கொண்டிருந்தார்கள் ...அரை மணி நேரம் கடந்திருந்தது இதுக்கு மேல காத்திருப்பது வீண் என வண்டியை உருட்டிய படி நடக்கத்தொடங்கினான் ஆனந்த், ஒரு கிலோ மீட்டர் கடந்த பிறகு பின்னாடி சைக்கிளில் வந்த பெரியவர் ஒருவர் என்னாச்சு தம்பி என கேட்க, கொஞ்சம் எரிச்சலோடு பெட்ரோல் தீந்து போச்சுங்க என்றான் ஆனந்த், அப்படியா இன்னும் நாலு கிலோ மீட்டர் இருக்கே தம்பி என்றார் வருத்தத்துடன் கேட்ட பெரியவர், ஆமா பெரியவரே வேற வழியில்லாம உருட்டிட்டு போறேன்னான் ஆனந்த், தம்பி ஒரு ஐடியா சொல்லவா என கேட்ட பெரியவரிடம் என்ன சொல்லுங்க என்றான் ஆனந்த், ஒரு நூறு ரூபா கொடுங்க சைக்கிள்,ல போய் பெட்ரோல வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு போறேன் என்ற பெரியவரை ஒரு மாதிரியாக பார்த்தான் ஆனந்த், தம்பி என் கையுல இப்ப காசு இல்லப்பா இன்னைக்கு வேலைக்கு போன சம்பளத்த நாளைக்குத் தான் தர்றதா முதலாளி சொல்லிட்டார் இல்லைனா, என் காச போட்டு பெட்ரோல் வாங்கி கொடுத்துட்டு அப்புறம் கூட உங்ககிட்ட வாங்கிக்கிருவேன் தம்பி என்றார் பெரியவர், இன்னும் சாப்டாத நாள ரொம்ப டயர்டா இருக்கு உருட்டவும் கஷ்டமா இருக்கு, என மனதில் நினைத்துக் கொண்டு அரைகுறை நம்பிக்கையோடு அந்த பெரியவரிடம் நூறு ரூபாய் கொடுத்தான் ஆனந்த், கொஞ்ச நேரம் இந்த மரத்துக்கிட்ட நில்லுங்க தம்பி என சொல்லிவிட்டு தனது சைக்கிளில் வேகமாய் கிளம்பினார் பெரியவர், தன் கையில் இருந்த செல்போனில் பாடல் கேட்டபடி பெரியவருக்காய் காத்திருக்க தொடங்கினான், அரைமணி நேரம் கடந்திருந்தது, நாலு கிலோ மீட்டர் தானே இந்நேரம் போயிட்டு வந்திருக்கலாமே போன பெரியவரைக் காணாமே, இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்போம் வயதான பெரியவர் மெதுவா வந்தாலும் வரலாம், என காத்திருக்கத் தொடங்கினான் ...இன்னொரு அரை மணி நேரம் கடந்திருந்தது, பெரியவர் என்னை ஏமாத்திட்டார் என தனக்குள் தீர்மானித்துக் கொண்டதில் முகம் கொஞ்சம் கோபத்தில் சிவந்திருந்தது ஆனந்திற்கு, இனி காத்திருப்பது வீண் வேலை என வண்டியை வேகமாக உருட்டத்தொடங்கினான் கைக்கடிகாரம் மணி மேலும் ஒன்றைக் கூட்டியிருந்தபோது பெட்ரோல் பங்க் வந்தடைந்தான்.முகமெல்லாம் வியர்த்து உடல்சோர்ந்து "தம்பி நூறுரூபாய்க்கு" என்றான். ஸ்ஸ்ஸ்...என்ற சத்தத்தோடு பெட்ரோல் நிரம்பியது. பணம் கொடுக்க பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டபோதுதான் தெரிந்தது அவனது பர்ஸ் காணாமல் போயிருந்தது.அதில் தான் வீட்டு வாடகை கொடுக்கவும் ,இம்மாத மளிகைக்கும் சேர்த்து ஏழாயிரத்தி சொச்சம் வைத்திருந்தான்... ஐயோ என கத்தி.... எங்கு தொலைத்தோம் என நினைவுக் குளத்தில் நீந்தி ஒருவழியாய் ஆபீஸ் ல இருந்து திரும்பி வரும்போது தருகிறேன் என பெட்ரோல் பங்க்கில் சொல்லி வெளியேறுகையில் கோபத்தின் உச்சியிலிருந்தான் அவன்... "ச்ச எல்லாத்துக்கும் காரணம் அந்தப் பெரியவர்தான் இப்படி ஏமாத்திட்டானே அந்தாளு"... என்றபடி அவரைத் திட்டிக்கொண்டே அலுவலகத்திற்கு இரண்டுமணி நேரம் தாமதமாய் வந்து சேர்ந்தான். அப்போது அங்கே ஓடிவந்த செக்யூரிட்டி மணி "சார் உங்களப் பாக்க ஒரு பெரியவர் வந்துருக்கார் சார்...என்றார்... என்னைப்பார்க்கவா??? யாரது ஊரிலிருந்து போனவாரம் வரேன் னு சொன்ன மாமா வா? என நினைத்துக் கொண்டிருக்கும் போதே "தம்பி என்ன மன்னிச்சுடுங்க ...நான் பெட்ரோல் வாங்க போனப்போ சைக்கிள் பஞ்சராயிடுச்சு ,சட்டு னு பஞ்சர் ஒட்டிட்டு பெட்ரோல் வாங்கி வர்றதுக்குள்ள உங்கள் அங்க காணோம்.... அடடா...இப்ப உங்கள எப்படிக் கண்டுபிடிக்கறது ணு சொல்லிட்டு நினைச்சுட்டுருந்தப்போ தான் அங்க ஒரு பர்ஸ் கிடந்துச்சு" எடுத்துப் பார்த்தப்போ உங்க ஐடி கார்டு அதுக்குள்ள இருந்துச்சு அதான் எப்படியிருந்தாலும் இங்க வருவீங்க ணு நான் முன்னாடியே வந்துட்டேன் தம்பி்... இந்தாங்க பெட்ரோல்,பர்ஸப் புடிங்க உள்ள வச்சுருக்குற பணமெல்லாம் சரியா இருக்கா ணு பார்த்துக்குங்க தம்பி...என்றவாறே இவன் நன்றி சொல்வதற்குக் கூட இடம் தராமல் நகர்ந்து கொண்டிருந்தார் பெரியவர்... சற்று நேரத்திற்கெல்லாம் சிலையாய் நின்றிருந்த ஆனந்த் "ஐயா கொஞ்சம் நில்லுங்க" என்றபடி தன் பர்ஸிலிருந்து, இரு இருநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினான்... அதைக் கண்டதும் புன்னகைத்த பெரியவர், தம்பி காசு எல்லாம் வேணாம் ங்க...பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல குடியிருக்கேன், இப்போதாவது நேரமிருந்த நம்ம வீட்டுப்பக்கம் வாங்க தம்பி , அவர் அருகில்தான் சென்றாலும் சரியாகத் தெரியவில்லை ஆனந்த் திற்கு. விழிகளில் வடிந்த கண்ணீர் திரையிடத் தொடங்கியிருந்தது... மு.முபாரக் 8072600090

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.