சுப்பிரமணிய காந்தி
சிறுகதை வரிசை எண்
# 171
சூரியான் ஒரு சூரியன்
அதிகாலை சூரியன் விழித்தெழும் நேரம் நானும் விழித்தெழுந்தேன் எனது வயல்காட்டின் நினைப்பு வந்தது அதனால் வீட்டில் சொல்லிவிட்டு வயல்காட்டை நோக்கி நடந்தேன். எனது வயல்களும் கிராமத்து அனைத்து வயல்களும் பசுமையாகவே இருந்தன எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்சம் கிழக்குப் பக்கமாக திரும்பினேன் ஆனால் நாலைந்து சிறுவயல்கள் மட்டும் எத்தனையோ நாள் சாப்பிடாததுபோல் பயிர் வெளுத்துப் போய் பசுமையின்றி சோகமாய் வாடிப் போயிருந்தது. அது சூரியான் காளியம்மாள் வயல்கள். அதனால் மிகவும் வேதனையடைந்தேன் ஏனெனில் சூரியானைய் போல் ஒரு சிறுவிவசாயி எங்கள் கிராமத்தில் இருந்தது மிகப்பெரிய வரப்பிரசாதம் அவன் இருக்கும் வரை எந்தவயல்களில் உள்ளபயிரையும்காய விடமாட்டான் நீர்பாய்ச்சி் வாய்க்கால் வரப்பு வெட்டமுடியாதவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வான் அவனுடையவயல் அப்படிக் கேட்பாரின்றி கிடப்பது எனக்கு மிகவும் வேதனை அளித்தது அவன் வயல் அருகே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன். இந்த வருஷம் விவசாயாத்திற்குத் தேவையான மழைபெய்திருந்தது எங்கள் ஏரியாவில் சிலகாலங்களில் முன்னால் மழைபெய்யும் பின்னால் மழை பெய்யாது விவசாயம் அம்போதான் சிலரேங்களில் கடைசியாக மழைபெய்து எல்லா விவசாயத்தையும் கெடுத்துவிடும் விவசாயம் இருந்தும் பயன் பெறமுடியாத நிலை அதனால் சிறுநகரங்களுக்குச்
சென்று பிழைத்து வந்தோம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் வெளியூர் சென்றுவிட்டால் எல்லோருக்குமே உதவியாக இருந்தான் சூரியான் அப்படி உதவிசெய்து கொண்டிருந்த சூரியான் ஒருநாள் சாயங்கால வேளையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடிரென்று பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி இறந்து போய் விட்டான். அதனால் நான்கு சின்ன சின்ன பெண் குழந்தைகளையும் விட்டுவிட்டு காளியம்மா தனிமரமாகிப் போனால் நாலு பெண்குழந்தைகளையும் காப்பாற்ற கஸ்டப் பட்டுக் கொண்டிருந்தால். எனது சிந்தனையெல்லாம் சூரியானின் குடும்பத்தையே அற்றிக் கொண்டிருந்தது வீட்டுக்கு வந்தேன் வெளியூரில் சம்பாதித்து சேர்த்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு சிறுநகரான கருணைக்குடிக்குச் சென்று சூரியான் வயலுக்குத் தேவையான அனைத்து உரமும் வாங்கிக் கொண்டு எனது கிராமத்துக்கு வந்தேன் இரவு சற்று உறங்கி விட்டு நள்ளிரவு 2மணிக்கு உரத்தை எடுத்துக் கொண்டு சூரியானின் எல்லா வயல்களுக்கும் நன்றாகப் போட்டு விட்டு வீடு திரும்பினேன் மறுநாள்காலை எனது குடும்பத்தில் அனனவரிடமும் சொல்லிவிட்டு வீடுதிரும்ப நாளாகும் என்று சிறுநகருக்கு சென்று விட்டேன் பிழைப்புக்காக ஒன்றறைமாதம் கழித்து மீண்டும் எனது கிராமத்தை நோக்கி வந்தேன். வயலைக் கடந்துதான் எனது ஊருக்குள் வரவேண்டும் அப்போது நிறைய விவசாயிகள் சூரியானின் வயலை சுற்றி நின்று கொண்டு எதையோ பேசிக் கொண்டிருந்தனர் அப்பொழுது ஒரு விவசாயி நாமெல்லாம் எவ்வளவோ உரம் போட்டோம் ஆனால் ஒன்றும் சரியில்லை ஆனால் சூரியான் வயலனைத்தும் சக்கை போடு போட்டிருக்கு நல்ல விளைச்சல் அதில் ஒரு விவசாயி டேய் நிச்சயமா சூரியான் ஆவியா வந்து விவசாயம் செஞ்சு நல்லா விளைய வச்சிருக்கான் அவனைநாம எல்லாரும் சாமியா வச்சு கும்பிடனும்டா என்றான். பேசிய அந்த நேரத்திலேயே ஊருக்குள்ள ஒரு கருங்கல்லை நட்டு தேங்காய்,பழம்,சூடம்,
பத்தவச்சு கும்பிட ஆரம்பிச்சாங்க. அடுத்த வருஷம் நல்லாவிளையனும் என்று எல்லாரும் கும்பிட்டாங்க மறுவருஷம் சூரியானைக்கும்பிட்டு விதை போட்டாங்க இது வரை நல்ல விளைச்சல் பஞ்சமேஇல்லை இப்போ எனக்கு வயது தொன்னூறு இப்போது சூரியானுக்கு மிகப்பெரிய கோயிலைக் கட்டிட்டாங்க சூரியானை நினைக்கும்போது எனது கண்களில் நீர்வழிந்தது ஊர்மக்கள் அனைவரும் சூரியானின் குடும்பத்துக்கு எல்லா மக்களும் அனைத்து பக்தர்களும் வந்து எல்லா பேருதவுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் சூரியான் சூரியனாய் இருந்து ஒளிகொடுத்துக் கொண்டிருக்கிறான்.
நன்றி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்