logo

படைப்பு சிறுகதைப் போட்டி - 2020


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில்...

கடந்த ஆண்டுகளில் இந்த போட்டியை கவிதைப் போட்டியாக நடத்தினோம். இனி இந்தாண்டு முதல் சிறுகதைப் போட்டியாக மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு :20,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஐந்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா இரண்டாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : மூன்று நபர்கள் - 3000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 20,000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 6 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: சகா(சலீம் கான்)
போட்டி விவரம்:

தலைப்பு மற்றும் கரு : எழுத்தாளரின் விருப்பம்
ஆரம்ப நாள் : 16-மார்ச்-2020 இரவு மணி 12 முதல்

கடைசி நாள் :19-மார்ச்-2020 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : எழுத்தாளர், கதைச்சொல்லி. பவா செல்லதுரை
முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 17-மார்ச்-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று முதல் 19-மார்ச்-2020 வரை  மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிந்து விடவேண்டும்.

2.இது சிறுகதைப் பரிசுப்போட்டி என்பதால் கதை மட்டுமே எழுத வேண்டும். கதை 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. கதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 72 மணி நேரம் வரை யார் பதிந்த கதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 19-மார்ச்-2020 (வியாழக் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. பரிசு பெறும் கதையை கதைச்சொல்லி பவா செல்லதுரை அவர்களே நேரடியாக கதையாடல் நிகழ்ச்சி மூலம் சொல்ல இருக்கிறார்.

6. போட்டிக்கு வந்த கதைகளில் சிறந்ததாக இருக்கும்  கதைகளைத் தொகுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூலாக வெளியிடப்படும். இந்த நூலுக்கான தலைப்பும் தேர்வாகும் கதைகளில் உள்ள ஒரு பெயரையே சூட்டப்பட்டு அந்த எழுத்தாளரை கவுரவிக்கப் படும்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 6 கதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் எழுத்தாளர் கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

8. கதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆனபிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.

9. கதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 1000 வார்த்தைகளுக்கு மேல் கதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

10. என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். என்ன கருவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

11. போட்டிக்கு வரும் கதைகள் இதற்கு முன் வேறு எங்கும், எந்த வடிவிலும் பிரசுரமாகி இருக்க கூடாது மேலும் வேறு எங்கும் பரிசும் பெற்று இருக்க கூடாது.

12. கதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். அது வேறு எந்த தழுவலாகவோ, நகலாகவோ இருக்க கூடாது.

13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.

14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் வேறு எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • துரை.  அறிவழகன் Avatar
    துரை. அறிவழகன் - 3 years ago
    முடிவு அறிவிப்பு நாள் 30-8-2020 மாலை 5 to 6 நேரலை ஒளிபரப்பு. படைப்பு மேடை யில் விபரம் பார்க்கவும். வாழ்த்துக்கள் நண்பர்களே...

  • kumar Sethuraman Avatar
    kumar Sethuraman - 3 years ago
    முடிவு அறிவிக்கும் தேதியைச் சொல்லலாமே..? இல்லை போட்டி கை விடப்பட்டதா..?

  • Rasigan Avatar
    Rasigan - 3 years ago
    இத்தனைபேர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்? எப்போதுதான் முடிவுகளை அறிவிப்பீர்கள்? அல்லது இந்த போட்டியே கைவிடப்பட்டுவிட்டதா? ஏதேனும் பதில் சொல்லுங்கள். நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் எழுதி அனுப்பி காத்திருப்போரின் மனநிலையை கொஞ்சம் யோசியுங்கள். உண்டு, இல்லை என்றால் வேறு ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பி அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். ஒரு போட்டியை அறிவித்துவிட்டு, உடனே அடுத்த போட்டியை அறிவிப்பது சரியா

  • Ahamed Thippu Sultan TK Avatar
    Ahamed Thippu Sultan TK - 3 years ago
    முடிவுகள் எப்போது?

  • puthuvaipraba Avatar
    puthuvaipraba - 3 years ago
    தோழர் தோழியரே... எனது சிறுகதை " அர்த்தமற்றவைகளுக்குள் நுழைந்துகொள்ளும் அர்த்தங்கள்" - வரிசை எண் : 188. படித்துவிட்டு நிறை குறைகளை பகிரவும் . அன்புடன் புதுவைப் பிரபா

  • Umaiyaal Aadhi Avatar
    Umaiyaal Aadhi - 4 years ago
    Hello, Good morning. could you please tell me when will you announce the result for short story competition..?

  • Settu Matharsha. S Avatar
    Settu Matharsha. S - 4 years ago
    வணக்கம். போட்டி முடிவு எப்போது வெளியிடப்படும் என்பதைப் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி.

  • ஜே.வஹாப்தீன் Avatar
    ஜே.வஹாப்தீன் - 4 years ago
    வாய்ப்புக்கு நன்றி

  • ஏ.ஆர்.முருகன்மயிலபாடி Avatar
    ஏ.ஆர்.முருகன்மயிலபாடி - 4 years ago
    தேடிப்புடீங்க.. தெளிவாப்படீங்க..(169).. தீர்க்கமா விமர்சியுங்க அன்பு நெஞ்சங்களே!!

  • Mohamed Ifham Avatar
    Mohamed Ifham - 4 years ago
    இப் போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் நாள் திட்டமிடப்பட்டு விட்டதா??

  • Devika Kulasekaran Avatar
    Devika Kulasekaran - 4 years ago
    Thozhargallae! Yenadhu Sirukadhai Yenn 162. Kadhaiyai padiththuvittu pinnoottam vazhanga vaendugiraen! Tamizh typing thaeriyaadhu! - Devika Kulasekaran

    Arjunan Avatar
    Arjunan - 4 years ago
    உங்களுக்கு பிடித்த சில எழுத்தாளர்களின் பெயர்கள் சொல்லுங்கள்...

  • Ahamed Thippu Sultan TK Avatar
    Ahamed Thippu Sultan TK - 4 years ago
    சகபடைப்பாளிகளே! எனது கதை 62. படித்து உங்கள் கருத்தை பதிவிட வேண்டுகிறேன்.

  • Arjunan Avatar
    Arjunan - 4 years ago
    இந்த சிறு கதை போட்டியில் திரைத்துறை சார்ந்த யாரேனும் பங்கு பெற்றிருக்குறீர்களா? இருந்தால் அறிமுகம் ஆகிக் கொள்ள விருப்பம். நான் சினிமா உதவி இயக்குனர். நானும் இந்த தளத்தில் என் கதையை பதிவிட்டிருக்கிறேன். கதை என்-49.

  • கி.ரவிக்குமார் Avatar
    கி.ரவிக்குமார் - 4 years ago
    சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் கண்டு கொள்ளப்படுமா!!

  • எஸ்.லஷ்மி காந்தன் Avatar
    எஸ்.லஷ்மி காந்தன் - 4 years ago
    சிறுகதை எண் 47. ___ vanavil avaiyar font... நன்றி.. நன்றி

  • Rajarajan M Avatar
    Rajarajan M - 4 years ago
    அண்ணா தலைப்பு கொடுக்க மறந்துவிட்டேன் மாற்றி அமைக்க ஏதும் வழிவகை இருந்தால் கூறவும் நன்றி

  • சரவணன் Avatar
    சரவணன் - 4 years ago
    கதையின் தலைப்பை கதையுடன் சேர்த்து பதிவிட தவறி விட்டேன். (கதைக்கு தலைப்பு இல்லாமல் பதிவேற்றம் செய்தது நான் மட்டுமாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.) கதையின் தலைப்பை தனி பெட்டியில் உள்ளிட்டு விட்டு அடுத்த பெட்டியில் கதையை பதிவேற்றம் செய்வது போல் வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய ஆலோசனை. மற்றபடி தளம் மிக சிறப்பாகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். ஒரு நாளைக்கு 20 கதையாக படிக்க வேண்டும்.

  • தோகை.திலிப்இலங்கேஷ் Avatar
    தோகை.திலிப்இலங்கேஷ் - 4 years ago
    படைப்பு குழுமத்திற்கு வணக்கம்... சிறுகதையை படிக்கும் வாசகர்களால் கமெண்ட் செய்ய‌ இயலவில்லை....லாகின் கேட்கிறது... படைப்பாளர்கள் மட்டுமின்றி படிப்பவர்கள் அனைவரும் கருத்திடும் படி அமைந்தால் மிக்க மகிழ்ச்சி

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    படிப்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கருத்திட லாகின் தேவை. அது அரசாங்க விதிமுறை. காரணம் யாராவது பிரச்சனைக்குரிய கருத்திட்டு விட்டால் அல்லது யாரையாவது துன்புறுத்தும் வகையில் கருத்திட்டால் அவர்களை அடையாளம் கண்டு எடுத்து சொல்ல நமக்கு ஆதாரம் வேண்டும் அல்லவா. அதனால் தான் வாங்குகிறோம். இவ்வளவு எளிமையாக யாருமே தருவதில்லை நம் படைப்பு தருகிறது அதை. இவ்வளவு பெரிய முகநூலில் கூட எவரும் லாகின் ஆகாமல் ஒரு பதிவை படிக்க கூட இயலாதல்லவா ஆனால் இங்கே படிக்க லாகின் கேட்க்கப் படுவதில்லை மாறாக கருத்திட மட்டுமே கேட்கிறோம். காரணம் படிப்பது அவரவர் சுதந்திரம் அதுவே ஒருவரைப் பற்றி கருத்திடும்போது விமர்சிக்கும்போது தனிப்பட்ட ஒருவரது சுதந்திரம் அல்லவே அது எதிராளியின் சுதந்திரம் மற்றும் அவரது புற வாழ்வு சம்பந்தப்பட்ட விசயமல்லவா அதனால் தான் கேட்கிறோம். புரிதலுக்கு நன்றி.

    தோகை.திலிப்இலங்கேஷ் Avatar
    தோகை.திலிப்இலங்கேஷ் - 4 years ago
    ஆனால் அய்யா அதில் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்கிறது அவரவர் முகவரியை உள்ளிடும் போது அக்கவுண்ட் எரர் என்று காட்டுகிறதாம்

    சரவணன் Avatar
    சரவணன் - 4 years ago
    ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான விஷயம்.

    தோகை.திலிப்இலங்கேஷ் Avatar
    தோகை.திலிப்இலங்கேஷ் - 4 years ago
    அப்படி தான் அனைவரும் கூறுகின்றனர்

  • அ. வேளாங்கண்ணி Avatar
    அ. வேளாங்கண்ணி - 4 years ago
    கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.. நாளை முதல் ஒவ்வொரு கதையாகப் படிக்க வேண்டும்

  • meiyan  nadaraj  Avatar
    meiyan nadaraj - 4 years ago
    போட்டித் தொடங்கிய அடுத்த நொடியே சிறுகதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போட்டியாளர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது .ஆனால் இத்தனை விரைவாகவும் கதை எழுதக் கூடியவர்கள் இருக்கிறார்களே என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது.. படைப்பின் அடுத்த மைல் கல் தன் லட்சியத்தை எட்ட வாழ்த்துகள்.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    மகிழ்ச்சி அய்யா. வாழ்த்துகள்

  • Joseph J Avatar
    Joseph J - 4 years ago
    நல்வாழ்த்துகள்! படைப்புக்குழுமத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மிகச்சிறப்பு. இலக்கியப்பணி மேன்மேலும் செழித்தோங்கட்டும்!

  • KALAYARASSY G Avatar
    KALAYARASSY G - 4 years ago
    என் கதை எண் 159. தலைப்பு அழகு. முதல் தடவை தலைப்பை மட்டும் பதிந்து விட்டுத் தவறுதலாகச் சமர்ப்பி பட்டனை அழுத்திவிட்டேன். மாற்றியமைக்கும் வசதியிருப்பதைப் பார்க்காது இரண்டாம் முறை கதையைச் சரியாய்ப் பதிந்தேன். இரண்டு முறை என் ஒரே சிறுகதையைப் பதிந்திருப்பதற்கு மன்னிக்க. சிரமத்துக்கு வருந்துகிறேன். ஞா.கலையரசி

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    பரவா இல்லை. சமீபத்திய பதிவை எடுத்துக் கொள்வார்கள். வாழ்த்துகள்

  • Devika Kulasekaran Avatar
    Devika Kulasekaran - 4 years ago
    kadhai ready! Ippo...ippo...ippo anuppuraen

  • Mary Jacinta Avatar
    Mary Jacinta - 4 years ago
    ஐயா எனது சிறு கதையுடன் நான் ஏற்கனவே அனுப்பியுள்ள புகைப்படத்தையும்இணைத்து கண்ணுறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    https://padaippu.com/profile/2051 உங்கள் பெயர் மேல் சொடுக்கிப் பார்க்க. உங்கள் சுயவிவரம் பக்கம் செல்லும் அங்கு உங்கள் போட்டோவை வைத்துக் கொள்ளலாம். வேறு எங்கும் வைக்க இயலாது. வேண்டியவர் உங்கள் சுய விவரங்கள் சென்று பார்த்துக் கொள்ள இயலும். வாழ்த்துகள்

  • தமிழ்ச்செல்வன் Avatar
    தமிழ்ச்செல்வன் - 4 years ago
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • வாணி அரவிந்த் Avatar
    வாணி அரவிந்த் - 4 years ago
    போட்டியில் இப்போது கலந்து கொண்டு அனுப்பலாமா ஐயா.. நாளை இரவு வரை கால அவகாசம் உள்ளது.. words ல் டைப் பண்ணி அனுப்பலாமா?.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    நேரடியாக பதிவிட வேண்டும். நாளை இரவு வரை நேரம் இருக்கு

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 4 years ago
    வணக்கம் ஐயா... என் கதையை பதிவு செய்துவிட்டேன் அருமையான. வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி....🙏🙏 முடிவு எப்பொழுது அறிவிப்பீர்கள் ஐயா நன்றி 🙏🙏

  • Mathurai Muthu Avatar
    Mathurai Muthu - 4 years ago
    ஐயா, சிறுகதை சமர்பிக்க என்ற பட்டன் இருக்கிறது போட்டிக்கு சமர்பிக்க என்ற பட்டன் எங்கே இருக்கிறது

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    சிறுகதை சமர்பிக்க என்ற பட்டன் சொடுக்கி உங்கள் கதையை சமர்ப்பிக்க வேண்டும். அதே போட்டிக்கு வரும்

  • Arjunan Avatar
    Arjunan - 4 years ago
    சிறுகதை வரிசை எண் 49 பிறகு 50 இல்லையே..?

  • Ratha Mariyaratnam Avatar
    Ratha Mariyaratnam - 4 years ago
    எனது கதையைப் பதிவு செய்து விட்டேன். மிக நன்றி குழுமத்திற்கும் நிர்வாகத்தினருக்கும்.பங்குபெறும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா Avatar
    ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா - 4 years ago
    படைப்பாளர்களை ஊக்கப் படுத்தும் படைப்பு குழுமத்திற்கு இனிய வாழ்த்துகள்.அனைத்துப் படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  • அழ. இரஜினிகாந்தன் Avatar
    அழ. இரஜினிகாந்தன் - 4 years ago
    நான் கதையை பதிவு செய்து சமர்ப்பி பட்டனை அழுத்தியதும் page expired என்று ஒரு வார்த்தை வெளிப்பட்டது.. எனில் எனது கதை பதியப்பட்டிருக்குமா

  • Mrs.Furkan Bee Ifthikar Avatar
    Mrs.Furkan Bee Ifthikar - 4 years ago
    How can i upload the story. it showing me to paste it there. but it's changing the font automatically. give me a solution. Thank You

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    Please paste Unicode font. It won't take some other font while entering

  • Ilanjiam Palanisamy Avatar
    Ilanjiam Palanisamy - 4 years ago
    I have registered here. Thankyou.

  • C.Puvana Avatar
    C.Puvana - 4 years ago
    நான் பதிவு செய்து விட்டேன்.ஆனால் சரியாக ஏற்றுக் கொள்ளப் பட்டதா என்று தெரியவில்லை.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    இதே பக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதை என்று ஒரு பட்டன் இருக்கு அதை சொடுக்கிப் பார்க்கவும்

  • Ramya Thirumurugan Avatar
    Ramya Thirumurugan - 4 years ago
    வாய்ப்பளித்மைக்கு நன்றி

  • kiruthiga Avatar
    kiruthiga - 4 years ago
    வணக்கம். படைப்பில் உறுப்பினராவது எப்படி?

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 4 years ago
    உங்களால் கருத்து பதிவிட முடிகிறதென்றால், தாங்கள் மெம்பர் தான்...

  • Arjunan Avatar
    Arjunan - 4 years ago
    போட்டியாளர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்...

  • Saleem Khan S Avatar
    Saleem Khan S - 4 years ago
    படைப்பு சிறுகதைப் போட்டி - 2020 அன்பிற்கினிய நேசங்களே, அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் படைப்பு குழுமத்தின் சார்பாக இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • கோமகள் குமுதா Avatar
    கோமகள் குமுதா - 4 years ago
    என்னால் கதையை பதிவிட இயலவில்லை. நான் படைப்பு மெம்பர் தானே

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 4 years ago
    நீங்கள் கருத்து பதிவிட முடிந்திருப்பதால் மெம்பராகத்தான் இருக்கிறீர்கள். 12:00 மணிக்கு மேல் பதிவிடலாம்

  •  Subashini  Ramanan  Avatar
    Subashini Ramanan - 4 years ago
    அனைவருக்கும் வாழ்த்துகள்

  • Ratha Mariyaratnam Avatar
    Ratha Mariyaratnam - 4 years ago
    நான் உறுப்பினராக இருக்கிறேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை. சிறுகதைப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அத்துடன் 1000 சொற்களுக்கு மிகையாகாமல் எழுதச் சொல்லி இருக்கிறீர்கள். 1000 சொற்களுக்கு உட்பட்டு என்றால் குறைந்து எத்தனை சொற்கள் வரவேண்டும். 700 அல்லது 800 சொற்கள் போதுமானதா.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    நீங்கள் கருத்து பதிவிட்டு இருப்பதால் ஏற்கனவே உறுப்பினர் தான். ஆகவே கவலை வேண்டாம். மேலும் 1000 வார்த்தைகளுக்கு உட்பட்டு எத்தனை வார்த்தைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் விருப்பம்

  • Firthouse Rajakumaaren Nazeer Avatar
    Firthouse Rajakumaaren Nazeer - 4 years ago
    படைப்பு குழுமத்தில் .உறுப்பினர் ஆக பதிவு செய்வது எப்படி ?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    நீங்கள் கருத்து பதிவிட்டு இருப்பதால் ஏற்கனவே உறுப்பினர் தான். ஆகவே கவலை வேண்டாம்

  • Firthouse Rajakumaaren Nazeer Avatar
    Firthouse Rajakumaaren Nazeer - 4 years ago
    படைப்பு - சிறுகதைப்போட்டி 2020 ல் கலந்து கொள்ள .நான் உறுப்பினர் ஆகவேண்டும் . அன்புடன் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் .

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    நீங்கள் கருத்து பதிவிட்டு இருப்பதால் ஏற்கனவே உறுப்பினர் தான். ஆகவே கவலை வேண்டாம்

  • Mathurai Muthu Avatar
    Mathurai Muthu - 4 years ago
    வாழ்த்துகள்

  • Shalini G Avatar
    Shalini G - 4 years ago
    வாழ்த்துகள் தோழமைகளே..!!❤️

  • ராஜேஷ் குமார் Avatar
    ராஜேஷ் குமார் - 4 years ago
    link work aagala bro

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    இன்று இரவு 12 மணிக்கு தான் ஓபன் ஆகும்

  • Padmasini madavan Avatar
    Padmasini madavan - 4 years ago
    கதை பேச்சு வழக்கில் அமையலாமா

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    எப்படி வேண்டுமானாலும் அமையலாம். எழுத்தாளர் விருப்பம்

  • Raj Kumar Karunanithi Avatar
    Raj Kumar Karunanithi - 4 years ago
    PDF or word file ??? எந்த கோப்பில் பதிவு செய்ய வேண்டும் தோழர்...?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    தட்டச்சு செய்யப்பட்ட வார்த்தைகளாகத்தான் நேரடியாக போட்டி பட்டன் சொடுக்கி சமர்ப்பிக்க வேண்டும். PDF document போன்றவற்றில் அனுப்ப இயலாது

  • a.muthuvijayan a.muthuvijayan Avatar
    a.muthuvijayan a.muthuvijayan - 4 years ago
    போட்டிச்சிறுகதை படைக்க ஆவலாக உள்ளேன் பவாவின் வார்த்தைகளில் எனது சிறுகதையைக்கேட்க ஆவலாக இருக்கிறேன் நல்ல தொரு வாய்ப்பை நல்கிய படைப்புக்குழுமத்திற்கு பாராட்டுதல்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.....வாழ்த்துகள். பெயர் கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

  • Padmasini madavan Avatar
    Padmasini madavan - 4 years ago
    நான் பதிவு செய்துவிட்டேன்.. அதனை எங்கு உறுதி செய்வது.. கதையை எங்கு பதிவேற்ற வேண்டும்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    கதை சமர்ப்பிக்க என்று ஒரு பட்டன் இந்த பக்கத்திலேயே இருக்கு. அதை சொடுக்கி சமர்ப்பிக்க வேண்டும்

  • Ratha Mariyaratnam Avatar
    Ratha Mariyaratnam - 4 years ago
    என்னையும் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன். மிக மகிழ்ச்சி

  • yasmine Avatar
    yasmine - 4 years ago
    கதைகளை நேரடியாக தட்டச்சு செய்ய வேண்டுமா....அல்லது காபி பேஸ்ட் செய்யலாமா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    காப்பி பேஸ்ட் செய்தாலே போதும். வாழ்த்துகள்

  • KALPANA MANIVASAGAM Avatar
    KALPANA MANIVASAGAM - 4 years ago
    ஒரு நபர் ஒரு கதை மட்டும் தானே அனுப்பவேண்டுமய்யா ? அது தானே நிபந்தனை ?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    ஆம். ஒருவர் ஒரு கதை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

  • கரு. கிருஷ்ணமூர்த்தி Avatar
    கரு. கிருஷ்ணமூர்த்தி - 4 years ago
    தற்பொழுதுதான் எனக்கு கானக்கிடைத்தது மிக்க மகழ்ச்சி விரைவில் தயாராகிறேன்

  • ஷாராஜ் Avatar
    ஷாராஜ் - 4 years ago
    பதிவர் ஆகிவிட்டேன். போட்டிக்கு கதையும், போன வாரமே எழுதியாகிவிட்டது. பதிவிட, நீங்கள் கொடுத்துள்ள கால அவகாசத்துக்காகக் காத்திருக்கிறேன். உங்களின் படைப்புத் தள செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள்!

  • T.Sathya Priyah Avatar
    T.Sathya Priyah - 4 years ago
    நான் இந்த பக்கத்தில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பதிவு செய்ததற்கான எந்த ஒரு சான்றும் காட்டப்படவில்லை. எனது பெயர் பதியப்பட்டு உள்ளதா இல்லையா என எப்படி பார்ப்பது??? சிறுகதையை இணையத்தில் பதிவிட வேண்டும் என்றால் இந்தப் பக்கத்தில் நம்முடைய படைப்பை வாசிப்பை நேசிப்போம் குழுவில் பகிர்தல் போல நேரிடையாக பதிய வேண்டுமா?

    ஷாராஜ் Avatar
    ஷாராஜ் - 4 years ago
    பதிவானால் அதன் அறிவிப்பு (Notification) உடனே வரும். அல்லது /& மேலும், இதே பக்கத்தின் மேல் பகுதியில் உங்கள் பெயர் டிஸ்ப்ளே ஆகும்.

  • S. Dhanalakshmi Avatar
    S. Dhanalakshmi - 4 years ago
    Pdf வடிவில் பதிவேற்றம் செய்யலாமா

  • தேவராஜ் Avatar
    தேவராஜ் - 4 years ago
    நான் இந்த பக்கத்தில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பதிவு செய்ததற்கான எந்த ஒரு சான்றும் காட்டப்படவில்லை. எனது பெயர் பதியப்பட்டு உள்ளதா இல்லையா என எப்படி பார்ப்பது??? சிறுகதையை இணையத்தில் பதிவிட வேண்டும் என்றால் இந்தப் பக்கத்தில் நம்முடைய படைப்பை வாசிப்பை நேசிப்போம் குழுவில் பகிர்தல் போல நேரிடையாக பதிய வேண்டுமா?

    ஷாராஜ் Avatar
    ஷாராஜ் - 4 years ago
    உங்களின் முதல் கேள்விக்கு பதில் அறிய - மேலே உள்ள, சத்யப்ரியாவின் அதே கேள்விக்கு நான் அளித்துள்ள பதிலைப் பார்க்கவும்.

  • Sendhil Mohan Avatar
    Sendhil Mohan - 4 years ago
    ஐயா, நான் இந்த தளத்தில் உறுப்பினராக இருக்கின்றேனா அல்லது புதிதாக பதிய வேண்டுமா என தெரிவிக்க வேண்டுகிறேன்.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    நீங்கள் கருத்து பதிவிட்டு இருப்பதால் ஏற்கனவே உறுப்பினர் தான். ஆகவே கவலை வேண்டாம்

  • Vijayakalyani Subhash Avatar
    Vijayakalyani Subhash - 4 years ago
    பங்கு பெற விரும்புவோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • ஈச்சம்பாடி செல்வராஜி Avatar
    ஈச்சம்பாடி செல்வராஜி - 4 years ago
    நல்வரவு வாழ்த்துகள்

  • SILAMBARASAN GV Avatar
    SILAMBARASAN GV - 4 years ago
    அருமையான முயற்சி... வளர்வோம்..... வளர்ப்போம் 👍🌷

  • Chokkappa G Avatar
    Chokkappa G - 4 years ago
    கதைகளை உறுப்பினர் ஆனபின் அனுப்புங்கள் என்று விதிமுறையில் சொல்லப்படுள்ளது உருப்பினரராக பதிவு செய்யவதற்கான விதிமுறைகள் என்ன விவரிக்கவும்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    நீங்கள் கருத்து பதிவிட்டு இருப்பதால் ஏற்கனவே உறுப்பினர் தான். ஆகவே கவலை வேண்டாம்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    இணையதளத்தில் உறுப்பினர் ஆக ரெஜிஸ்ட்டர் செய்து கொள்ளலாம். இல்லையெனில் நீங்கள் நேரடியாக கதையை பதிவிடும்போது தானாகவே உங்களை அங்கிகரித்துக் கொள்ளும் நம் இணையதளம். கவலை வேண்டாம். வாழ்த்துகள்

  • Thanges Waran Avatar
    Thanges Waran - 4 years ago
    வாழ்த்துக்கள்

  • A. RAJANIKANTHAN Avatar
    A. RAJANIKANTHAN - 4 years ago
    படைப்பாளிகளின் பாசறையாக விளங்கும் படைப்பு குழுமத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • a.muthuvijayan a.muthuvijayan Avatar
    a.muthuvijayan a.muthuvijayan - 4 years ago
    அருமை நிச்சயம் பங்கேற்கிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • சக்திஅருளானந்தம் Avatar
  • Rohith sairam Avatar
    Rohith sairam - 4 years ago
    ஆயிரம் வார்த்தைளுக்குப் பதில் இத்தனை பக்கங்களில் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்யுங்கள்.

    ஷாராஜ் Avatar
    ஷாராஜ் - 4 years ago
    எத்தனை பக்கம் என்பது சரியான அளவு முறை ஆகாது. ஒரு பக்கத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு வித எண்ணிக்கையில் எழுதக் கூடும்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    அப்படி கொடுத்தால் எதில் எத்தனைப் பக்கம் வர வேண்டும் என குழப்பம் வரும் இன்னும் ஒருசிலர் கட்டுரை நோட்டில் ஒருப்பக்கம்தான் வரும் என்று முறை இடுவார்கள். இந்த குழப்பத்துக்கெல்லாம் தீர்வாகத்தான் வார்த்தைகள் என்ற அளவீடு வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைத் தான் இன்று பரவலாக கடைபிடிக்க படுகிறது. வாழ்த்துகள்

  • மகேஸ்வரிகண்ணன் Avatar
    மகேஸ்வரிகண்ணன் - 4 years ago
    அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

  • ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா Avatar
    ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா - 4 years ago
    ஆகா...பெரும் மகிழ்ச்சி , கலந்து கொள்ளூம் அனைத்துப் படைப்பாளர்களுக்கும் இனிய வாழ்த்துகள். தொடர்ந்து படைப்பாளர்களை ஊக்குவிக்கும் படைப்பு குழுமத்திற்கும் வாழ்த்தகள்.

  • செல்வராஜ் ஏகாம்பரம் Avatar
    செல்வராஜ் ஏகாம்பரம் - 4 years ago
    போட்டியின் சிறப்பம்சம் எதுவெனில் சிறுகதைக்கானதலைப்பை எழுத்தாளர் விருப்பத்துக்கு விட்டதுதான்..

  • செந்தில்குமார் அமிர்தலிங்கம் Avatar
    செந்தில்குமார் அமிர்தலிங்கம் - 4 years ago
    அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

  •  Kanagarajan Maruthan Maruthan Avatar
    Kanagarajan Maruthan Maruthan - 4 years ago
    கதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற **கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். (திருத்தம்?)

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    திருத்தம் செய்தாகி விட்டது தோழர். மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள்

  • தமிழ் நேசன் இராஜ்குமார் Avatar
    தமிழ் நேசன் இராஜ்குமார் - 4 years ago
    படைப்பு குழுமத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    சூர்யநிலா Avatar
    சூர்யநிலா - 4 years ago
    கதைக் களம் படைப்புக்கு புதிதுதானெனினும் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். .

  • ஈச்சம்பாடி செல்வராஜி Avatar
  • Selva Mani Avatar
    Selva Mani - 4 years ago
    இனிய வாழ்த்துகள்

  • Sembaruthisembaruthi Avatar
    Sembaruthisembaruthi - 4 years ago
    வாழ்த்துகள்

  • Jabarulla Khan Avatar
    Jabarulla Khan - 4 years ago
    உங்கள் சிந்தனைகளை சிறுகதைகளாக்கி செதுக்கி வெற்றி பெற வாழ்த்துகின்றேன் நண்பர்களே

  • Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    வாழ்த்துகள் அனைவருக்கும்

    கவிதாபாரதி Avatar
    கவிதாபாரதி - 4 years ago
    அன்பும், நன்றியும்