logo

வேர்த்திரள் - பரிசுப்போட்டி நடுவர் அறிவிப்பு


வேர்த்திரள் - பரிசுப்போட்டி நடுவர் அறிவிப்பு:

-------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

 

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அம்மையார் ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டிக்கான நடுவர் மதிற்பிற்குரிய கவிஞர், சாகித்ய அகாதமி விருத்தாளர் வண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை உங்கள் முன் அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

 

மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ் கண்ட இணையதள முகவரி அறிவிப்பு பக்கத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறோம். போட்டியின் முடிவுகள் அந்த அறிவிப்பில் உள்ளபடியே நடக்கும்.

https://padaippu.com/hainoonbeevi2019

இனி ஒவ்வொரு போட்டிக்கும் நடுவரை போட்டி முடித்த பின்பே அறிவிக்க இருக்கிறோம். அப்போதுதான் படைப்பாளிகள் நடுவருக்கு ஏற்ற மாதிரி நடையை மாற்றாமல் தங்கள் சொந்த நடையிலேயே எழுதுவார்கள்.

உங்கள் கவிதைகள் யாவும் உலகம் போற்றும் உன்னத கவிஞர் கையில் தவழ இருக்கிறது என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கிறோம்.

குறிப்பு:
மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற சிறப்பு அந்தஸ்து மிக்க பரிசுக்கு மட்டுமே மக்களின் வாக்கு அதாவது வாசகர்கள் அல்லது பொதுமக்கள் இடும் விருப்பக் குறியீடு (லைக்) வைத்து தேர்வு செய்யப்படும். மீதி உள்ள போட்டிக்கான அனைத்து பரிசுகளும் அதாவது முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் அனைத்தும் நடுவர் அவர்களே தேர்வு செய்வார். நடுவரிடம் கொடுக்கும்போது படைப்பாளிகளின் பெயர் இருக்காது. அவர்களின் வரிசை எண் மட்டுமே கொடுக்கப்படும். நடுவர் முடிவே இறுதியானது.

மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்று தேர்வு செய்யும் வாக்கெடுப்பு இம்மாதம் 30 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 வரை பதிவாகும் வாக்குகளை (லைக்) வைத்து முடிவு செய்யப்படும். அதன்பிறகு வரும் லைக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

கவிதை சமர்ப்பிக்கும்போது போட்டிக்கான கவிதை என்று சமர்ப்பித்தவர்கள் மட்டுமே மக்கள் கவிஞர் என்ற தேர்வுக்கோ அல்லது நடுவர் தேர்வு செய்ய இருக்கும் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்பு பரிசுகளுக்களின் தேர்வுக்கோ எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்த புதுமையான போட்டியை மிகச் சிறப்பாக நடத்த உதவிய அனைத்து படைப்பாளிகளுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், படைப்புக் குழும நிர்வாக குழுவுக்குக்கும் அன்பின் நன்றிகளை முதலில் பரிமாறிக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளை பகிரலாம். சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.
வாழ்துக்கள் அனைவருக்கும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.