logo

படைப்பு - கவிதைக்கான களம் மட்டும் அல்ல... தமிழுக்கான தளம்.


படைப்பு - கவிதைக்கான களம் மட்டும் அல்ல... தமிழுக்கான தளம்.

அன்புள்ளம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
இதுவரை கவிதைகளை மட்டுமே மாதந்தோறும் தேர்வு செய்து பரிசுகளும் விருதுகளும்கொடுத்துக் கொண்டிருந்த நம் படைப்பு குழுமம், இனி கதை (சிறுகதை, நுண்கதை,ஒருபக்க கதை..),  கட்டுரை, நூல் விமர்சனம், புதினம் மற்றும்மொழிபெயர்ப்பு படைப்புகள் என எல்லாவகை இலக்கியங்களையும் அங்கீகரிக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவிக்கிறோம்.

விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள்:
1. எல்லாவகை இலக்கியங்களையும் படைப்பு முகநூல் குழுமத்தில் பதியலாம். எழுதும்போதுகண்டிப்பாக படைப்புகளுக்கு கீழே எழுத்தாளரின் பெயர் தமிழில் எழுத வேண்டும்.
2. படைப்புகள் அந்தந்த வகைமைகளுக்கு ஏற்றவாறு ஹேஷ் டேக் செய்வது சிறப்பு. எடுத்துக் காட்டாக, கவிதை எழுதினால் #கவிதை என்றும், கட்டுரை எனில் #கட்டுரை என்றும், நூல் விமர்சனம் என்றால் #நூல்_விமர்சனம் என்றும்பதியலாம். இப்படி பதிந்தால் பிரித்தெடுப்பது சுலபமாக இருக்கும்.
3. தேர்வாகும் படைப்புகளுக்கு மாதாந்திர பரிசுகளும் அதில் தொடர்ச்சியாக பங்களிப்பவர்களுக்கு படைப்பின் உயரிய விருதான 'இலக்கியச் சுடர்' என்ற விருதும்வழங்கப்படும். பரிசுப்பெற்ற படைப்புகள் யாவும் படைப்பு இணையதளத்தில் பரிசுப்பெற்ற படைப்புகள் என்று பிரசுரமாகும். மேலும் அந்தந்த வகைமைகளுக்கு ஏற்றவாறு பரிசுகளும் விருதுகளும் பெறும் படைப்பாளிகளை நம்ஆண்டு விழாவில் வைத்து சிறப்பிக்கப்படும்.
4. நாம் இதுவரை கவிதையில் சிறந்த பங்களிப்பு செய்யும் படைப்பாளிகளுக்கு கவிச்சுடர் எனும்உயரிய விருதை வழங்கிச் சிறப்பிப்பதைப் போலஇனி கவிதை அல்லாத பிற இலக்கியங்களில் சிறந்த பங்களிப்பு செய்யும் படைப்பாளிகளுக்கு படைப்பின் புதிய விருதான 'இலக்கியச் சுடர்' என்ற உயரிய விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறோம். மேலும் படைப்பில் கவிச்சுடர் விருது பெற்றவரும் மீண்டும் இவ்விருதை பெறும் வாய்ப்பு உண்டு.
5. பரிசுகள் மற்றும் விருதுகள் பெறுவோரின் தகவல்களை உலகம் முழுக்க உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் நம்இணையதளத்தில் இருக்கும் படைப்பாளிகளின்சுயவிவர பக்கத்தில் பதியப்படும். இனி படைப்பாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவோருக்கு அவரது படைப்பு பக்கத்தில் உள்ள சுயவிவரப்பக்கம் சென்றாலே எல்லாம்கிடைக்கும் வண்ணம் அமைத்து தரப்படும்.
6. இனி படைப்பு குழுமம் கவிதைக்கான களம்மட்டும் அல்ல தமிழுக்கான தளம் என்று ஒரேகுடையின் கீழ் அனைத்து வகையானஇலக்கியங்களையும் அரங்கேற்ற இருக்கிறது.
7. கவிதை மட்டுமல்லாது இனி எல்லா வகையான இலக்கியங்களையும் படைப்பில் (படைப்பு முகநூல் குழுமத்தில் ) பதியலாம். மொழிபெயர்ப்புபடைப்புகள் தவிர்த்து மற்ற படைப்புகள் அனைத்துக்கும் கண்டிப்பாக சொந்த படைப்பாகமட்டுமே இருத்தல் வேண்டும்.
8. ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்  பதியலாம் அதுவும் படைப்புமுகநூல் வழியே மட்டுமே பதிவிட வேண்டும். வேறு  வழியாக வரும் பதிவுகளுக்கு இது பொருந்தாது.
9. சிறந்த படைப்புகள் படைப்பு-தகவு (கலை இலக்கிய திங்களிதழ்) இதழில் பிரசுரம்செய்யப்படும். மேலும் அவர்களுக்கு படைப்பு பதிப்பகம் வழியே நூல் வெளியிட முன்னுரிமை அளிக்கப்படும்.

வாருங்கள் படைப்பாளிகள்...

உங்களுக்கான இலக்கிய உலகை உருவாக்ககாத்திருக்கிறது
உங்களுக்காக காத்திருக்கிறது உங்கள் படைப்பு.

வாழ்த்துக்கள் அனைவருக்கும். படைப்பின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உடன் நிற்கும்படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும், அடுத்தடுத்த மைல்கல்லை எட்ட வைத்துக் கொண்டிருக்கும் நிர்வாகக் குழுவிற்கும் அன்பின் நன்றிகள்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in