logo

படைப்பு குறும்பட போட்டி - 2020


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

மதுவைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தரும் வகையில் "மதுவிலக்கு விழிப்புணர்வு குறும்படப்போட்டி" ஒன்றை தமிழக காவல் துறை மற்றும் படைப்பு குழுமம் இணைந்து இந்தாண்டு முதல் மக்கள் நலனுக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மதுவினால் சீரழியும் மக்களுக்கு எச்சரிக்கை மணியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மதுவைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு தரும் வகையிலும் இருக்கட்டும்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு தொகை :1,50,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்).

விருது விவரம்:

சிறந்த குறும்படம்
சிறந்த இயக்குனர்
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
சிறந்த குணச்சித்திர நடிகர்& நடிகை
சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள்


போட்டி விவரம்:

குறும்படம் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி நடுவர் : இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள்

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

கரு: மதுவும் மது சார்ந்த விழிப்புணர்வு சுமந்து வரும் கருவைத் தாங்கி குறும்படம் இருக்க வேண்டும்.

போட்டி விதிமுறைகள்:

1. குறும்படம் (short film) 8 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது கால அளவு 8 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது.


2. குறும்படம் (short film) மதுவிலக்கு விழிப்புணர்வு சம்பந்தமான எந்த கருப்பொருளிலும் இருக்கலாம்.

3. பிறர் மனம் புண்படும்படியோ , சாதி மத இன ரீதியான தாக்குதலோ,அரசியல் விமர்சனமோ இருத்தல் கூடாது.

4. போட்டிக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் இதற்கு  முன் வேறு எங்கும் வெளியிட்டு இருக்க கூடாது.மேலும் போட்டியின் முடிவு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதலோ வெளியிடுதலோ கூடாது.

5. சொந்த படைப்பாக இருக்க வேண்டும். பிற படங்களின் தழுவலோ மற்றும் வேறு எவ்வகையான காப்புரிமை பிரச்சனைகளோ இருத்தல் கூடாது.

6. படத்தில் ஆங்கில சப் டைட்டில் (subtitles) இருப்பது நடுவரின் கூடுதல் கவனம் பெறும்.

7. தமிழக திரைப்பட சென்சார் போர்ட் விதிமுறைகள் அனைத்தும் இப்போட்டிக்கும் பொருந்தும்.

8. பிறமொழி கலப்பு இருக்கலாம் ஆனால் வசனங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.

9. கடைசி தேதி பின்னர் அறிவிக்கப் படும். அதுவரை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

10. ஆவணப்படங்கள் (documentary films) ஏற்றுக்கொள்ள இயலாது.

11. நடுவரின் முடிவே இறுதியானது.

12. Padaippu Media Networks, #23 third floor, Aarthi Arcade, R.K Salai, Mylapore, Chennai. 600 004 என்ற முகவரிக்கு  பென் ட்ரைவ் (pen drive) மூலம் நேரிலோ அல்லது கொரியர் அல்லது ரிஜிஸ்டர் போஸ்டரிலோ  படங்களை அனுப்ப வேண்டும். அல்லது wetransfer மூலம் admin@padaippu.com / padaippu2016@gmail.com என்ற மின்னஞ்சல்களுக்கோ அனுப்பலாம்.


13. போட்டிக்கு வரும் குறும்படங்களை திருப்பி அனுப்ப இயலாது.

14. போட்டிக்கு குறும்படங்களை அனுப்பி வைத்த பிறகு படைப்பு இணையதளத்தில் உள்ள போட்டி பகுதியில் படங்களைப் பற்றிய தகவல்கள் சமர்ப்பித்து உங்கள் பங்களிப்பை/பதிவை (Registration) உறுதி செய்ய வேண்டும்.

15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக கலைஞர்கள் அனைவரும் பங்கேற்று விழிப்புணர்வு தர இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

உங்கள் குறும்படம் மாறட்டும் ஒருவரின் வாழ்க்கைப் பாடமாக..

தமிழக காவல்துறை & படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  •  முகமது பாட்சா  Avatar
    முகமது பாட்சா - 4 years ago
    சிறப்பு! பங்கு பெறும் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துகள்

  • Mani Bharathi NK Avatar
    Mani Bharathi NK - 4 years ago
    குறும்படத்தை எப்பொழுது சமர்ப்பிக்க இயலும்.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    அறிவிப்பில் உள்ள அட்ரஸில் கொடுக்க வேண்டும். +917871357579 இந்த நம்பர்ல கால் செய்து உறுதி செய்த பிறகு நேரில் சென்று கொடுக்கவும். நேரில் அனுப்ப முடியாதவர்கள் வி டிரான்ஸ்பர் மூலம் padaippumedia@gmail.com இந்த மெயிலுக்கு அனுப்பலாம்

  • Mani Bharathi NK Avatar
  • க.தங்கபாபு Avatar
    க.தங்கபாபு - 4 years ago
    அசத்தலான போட்டிதான்.வாழ்த்துகள்!

  • Ahamed Thippu Sultan TK Avatar
    Ahamed Thippu Sultan TK - 4 years ago
    திரைக்கதைக் கான போட்டியை நடத்தினால் எல்லோரும் பங்கு பெறலாம். பரிசீலிக்கலாமே!

  • Ahamed Thippu Sultan TK Avatar
    Ahamed Thippu Sultan TK - 4 years ago
    மொபைல் போனில் எடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    ஏற்றுக் கொள்ள படும். ஆனால் கிளாரிட்டி நன்றாக இருக்க வேண்டும்

  • திருமலை கேஷிஹன் Avatar
    திருமலை கேஷிஹன் - 4 years ago
    ஈழத்திலிருந்தும் போட்டிக்கு பங்கு பெற்றலாமா ????

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    கண்டிப்பாக பங்குபெறலாம்