logo

சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

முதல் முறையாக WRC ( Women's Renaissance Centre) மற்றும் படைப்பு குழுமம் இணைந்து நடத்தும் சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும் கவிதை போட்டி இந்தாண்டு முதல் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : 7 நபர்கள் - 7000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: WRC ( Women's Renaissance Centre) 

போட்டி விவரம்:

தலைப்பு : மாண்புமிகு மகளிர்
கரு: மகளிர் சம்பந்தமான எந்தக் கருவிலும் எழுதலாம். அது பெண்மை, தாய்மை, பெண் சுதந்திரம்,பெண் கல்வி, பெண் சமூகம், இப்படியாக பெண் சார்ந்து, அவர்களுடைய உரிமை சார்ந்து, அவருடைய வாழ்வியலை சார்ந்து, அவர்களுடைய அறிவுத் திறமையை சார்ந்து, எந்த மாதிரியான கருப்பொருளிலும் எழுதலாம் ஆனால் கண்டிப்பாக பெண் சம்பந்தமான கவிதையாக மட்டுமே இருக்க வேண்டும்.

பங்கு பெறுவோர்: மகளிர் மட்டும்

ஆரம்ப நாள் : 20-பிப்ரவரி-2022 இரவு மணி 12 முதல்

கடைசி நாள் : 22-பிப்ரவரி-2022 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : கவிஞர் பெருந்தேவி

முடிவு அறிவிப்பு நாள் : 08-மார்ச்-2022 (மகளிர் தினத்தன்று)

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 20-பிப்ரவரி-2022 ( திங்கள் மற்றும் செவ்வாய்)  ( 48 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.

2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (நவீனம்/மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.

3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 22-பிப்ரவரி-2022 (செவ்வாய்க் கிழமை) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் பெருந்தேவி அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. மகளிர் மட்டுமே போட்டியில் பங்கு பெற இயலும். மகளிரை தவிர்த்து வேறு யாரும் போட்டியில் பங்கேற்க இயலாது அப்படியே பங்கேற்று போட்டியில் கவிதை எழுதினாலும் அவர்களுடைய கவிதை போட்டிக்காக எடுத்துக் கொள்ள மாட்டாது. இது முழுக்க முழுக்க மகளிருக்கான போட்டி என்பதை நினைவில் கொள்க.

6. போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு கவிதை நூலாக வெளியிடப்படும்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 10 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் பெருந்தேவி கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

8. கவிதைகள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படைப்பு இணையதளத்தில் குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 48 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

9. போட்டி முடியும்  நாளான 22-பிப்ரவரி-2022 (செவ்வாய்க் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல்) அன்று வழக்கம் போல கவிதையை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் படைப்புகளை உங்கள் நட்பு வட்டத்திற்கோ பொது மக்கள் மக்கள் பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடத்திட முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழ் மகளிர் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

சமூகத்தில் மகளிருக்கான இடம் தனித்துவமானதாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மகளிர் மேம்பாட்டுக்காக, WRC அமைப்பு படைப்பு குழுமத்துடன் இணைந்து இம்மாதிரியான ஒரு முயற்சியை எடுத்துள்ளோம். ஒத்துழைப்பு தாருங்கள் இதை சாத்தியமாக்க நம்முடன் கைகோர்த்துள்ள  நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறோம்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • S .Kavya Avatar
    S .Kavya - 2 years ago
    போட்டி முடிவுகளை எப்படி அறிந்து கொள்வது 🤔 பதில் கூறுங்கள் நன்றி......

  • முனைவர் அ.புவனா ஜீவானந்தம் Avatar
    முனைவர் அ.புவனா ஜீவானந்தம் - 2 years ago
    தேர்ந்தெடுத்த கவிதைகளைப் பார்க்க முடியுமா?எதில்?எப்போது?அனைவரும் எதிர்பார்க்கிறோம்.100கவிதைகள்.

  • வி.கலைமதிசிவகுரு Avatar
    வி.கலைமதிசிவகுரு - 2 years ago
    100 கவிதைகள் புத்தக வெளியீடு எப்போது எங்கு பார்க்க முடியும்.

  • இரா. கோமதி Avatar
    இரா. கோமதி - 2 years ago
    எங்கு காண்பது என்பது தெரியவில்லை, யார் வெற்றியாளர் என்பதனை இங்கே தெரிவித்தால் நலம், இல்லையேல் எங்கு காண்பது என்பதனைத் தெளிவு படுத்துங்கள் நன்றி 🙏🙏🙏

  • இரா. கோமதி Avatar
    இரா. கோமதி - 2 years ago
    போட்டி முடிவுகள் வந்து விட்டதா என்பதனை எவ்வாறு தெரிந்து கொள்வது விளக்கம் தருகிறீர்களா

  • சௌ.சந்தானலட்சுமி. Avatar
    சௌ.சந்தானலட்சுமி. - 2 years ago
    போட்டி முடிவுகளை இப்பகுதியிலேயே தெரிவியுங்கள். Announcement. பகுதிக்கு முயற்சித்தும் வரலை. உதவுங்களேன்.! நன்றி

  • Dheepthi Velayutham Avatar
    Dheepthi Velayutham - 2 years ago
    Friends... Announcements la potrukanga.. Check panunga

    இமையி Avatar
    இமையி - 2 years ago
    காமிக்கல

  • சௌ.சந்தானலட்சுமி. Avatar
    சௌ.சந்தானலட்சுமி. - 2 years ago
    முடிவை எதிர்பார்த்த வண்ணம் நாங்கள்!பதிலும் சொல்லலையே!நாளை தெரியுமா?

  • அ.சீமா Avatar
    அ.சீமா - 2 years ago
    Mam eppo mam result potuvinga

  • M.Sushithra Avatar
    M.Sushithra - 2 years ago
    Mam when will come poem competition result mam

  • Gayathree Selvarengam G Avatar
    Gayathree Selvarengam G - 2 years ago
    போட்டியின் முடிவுகள் எப்படி தெரிந்து கொள்வது??

  • வேம்பு. ரா Avatar
    வேம்பு. ரா - 2 years ago
    பாேட்டி முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது...?

  • பத்மாவதி மாணிக்கம் Avatar
    பத்மாவதி மாணிக்கம் - 2 years ago
    அனைவருக்கும் மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

  • சௌ.சந்தானலட்சுமி. Avatar
    சௌ.சந்தானலட்சுமி. - 2 years ago
    போட்டி முடிவு எப்போ சொல்வீங்க?

  • T.Arasikumari Avatar
    T.Arasikumari - 2 years ago
    What time and which link we can see the result. Please reply

  • S.POONGUHZALI Avatar
    S.POONGUHZALI - 2 years ago
    When will we get the result. Anyone can answer please

  • கா.தபசும் Avatar
    கா.தபசும் - 2 years ago
    போட்டி நடத்தும் குழுவினருக்கு என் அன்பான வணக்கம் ☺️என் பெயர் கா.தபசும் (வரிசை எண்:350) நாளை போட்டிகளின் முடிவுகள் எவ்வாறு எந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்? இது எனக்கான வெற்றி என்பதை தாண்டி எந்த சிறந்த கவிதை அதை பெறப் போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறேன். 😊 ஏனெனில் நான் பலரின் கவிதைகளை வாசித்தேன் அவை மிகவும் சிறப்பாக இருந்தது.. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • நீலா உமா Avatar
    நீலா உமா - 2 years ago
    ஐயா. என் பெயர் நீலா உமா. என் கவிதை வரிசை எண் 470. கவிதையில் சிறு திருத்தம். என் கவிதையில் மூன்றாம் வரி எரிந்த சிறகுகளும் என்பதை எரிந்த சிறகுகளோடு என திருத்தி வாசிக்க வேண்டுகிறேன். நன்றி.

  • கவிதா பிருத்வி Avatar
    கவிதா பிருத்வி - 2 years ago
    வாய்ப்பிற்கு அன்பும் நன்றியும்🙏

  • வித்ய சுகி Avatar
    வித்ய சுகி - 2 years ago
    நான் தலைப்பும் சேர்த்திருக்கிறேனே செல்லாதா?

  • சௌ.சந்தானலட்சுமி. Avatar
    சௌ.சந்தானலட்சுமி. - 2 years ago
    நீங்கள் குறித்த Link openஆகலையே!

  • T.Arasikumari Avatar
    T.Arasikumari - 2 years ago
    இனி எல்லா கவிதைகளையும் எந்த இணைய பக்கத்தில் பார்க்க முடியும்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    https://padaippu.com/submitted/magalir2022 இங்கே பார்க்க இயலும்

  • அ. சிவப்பிகல்யா Avatar
    அ. சிவப்பிகல்யா - 2 years ago
    வணக்கம். என் பெயர் அ. சிவப்பிரகல்யா. எனது கவிதை எண். 509. கவிதை போட்டியில் எனது பெயர் சிவப்பிகல்யா என தவறுதலாக அனுப்பி விட்டேன். தயவு செய்து திருத்தவும். நன்றி!!

  • K.kéerthana Avatar
    K.kéerthana - 2 years ago
    En kavitai ungalukku eppadi therium

  • முனைவர்.துரை.மஞ்சு Avatar
    முனைவர்.துரை.மஞ்சு - 2 years ago
    நன்றி இனியொரு விதி செய்வோம்

  • செ.ரஞ்சிதா லெனின் Avatar
    செ.ரஞ்சிதா லெனின் - 2 years ago
    கவிதையின் தலைப்பை தவிர்த்து கவிதை 24 வரிகளை கொண்டிருக்க வேண்டுமா..? அல்லது... தலைப்பையும் உள்ளடக்கி 24 வரிகள் எழுத வேண்டுமா..??!! இல்லையேல் தலைப்பிடாமல் கவிதையை சமர்ப்பிக்கலாமா..?! சந்தேகத்திற்கு பதில் தருமாறு போட்டிக் குழுவினரை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    தலைப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் கவிதைகளை மட்டும் எழுதி அனுப்பினால் போதுமானது

  • p.keerthana Avatar
    p.keerthana - 2 years ago
    கவிதையை சமர்ப்பிப்பது எப்படி?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    மிகத் தெளிவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது தயவுகூர்ந்து ஒருமுறை முழுதாக படிக்க வேண்டுகிறோம்

  • கவிப்பொய்கை Avatar
    கவிப்பொய்கை - 2 years ago
    ஏன் சமர்பிக்க முடியாது உள்ளது

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    மேலே கவிதையை சமர்ப்பிக்க என்று ஒரு பட்டன் இருக்கிறது அதை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டுகிறோம்

  • Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகளிர்க்கு மட்டுமே தனித்துவமாக நடக்கும் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்று மகளிர் வாகை சூட மனமார வாழ்த்துகிறேன்

    சியாமளா பாலகிருஷ்ணன். Avatar
    சியாமளா பாலகிருஷ்ணன். - 2 years ago
    நான் 2 முறை கவிதை பதிந்தும் என் கவிதை காணவில்லையே