logo

மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020


தமிழக காவல்துறை & படைப்பு குழுமம் இணைந்து நடத்தும்,மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020

~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

மதுவைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தரும் வகையில் "மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி" ஒன்றை தமிழக காவல் துறை மற்றும் படைப்பு குழுமம் இணைந்து இந்தாண்டு முதல் மக்கள் நலனுக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மதுவினால் சீரழியும் மக்களுக்கு எச்சரிக்கை மணியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மதுவைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு தரும் வகையிலும் இருக்கட்டும்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்: மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் முவ்வாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : ஏழு நபர்கள் - 7000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: தமிழக காவல்துறை

போட்டி விவரம்:

தலைப்பு : விஷம் நுரைக்கும் கோப்பைகள்

ஆரம்ப நாள் : 16-ஜனவரி-2020

கடைசி நாள் :18-ஜனவரி-2020

மொத்தமாக 72 மணி நேரம்

போட்டி நடுவர் : மக்கள் கவிஞர் மு.மேத்தா

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

தலைப்பு விளக்கம்: இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிட முடியாத சாதனை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் மதுவினால் இச்சமூகம் அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை விவரித்து சொல்லும் இது. ஆதலால் இது முழுக்க முழுக்க மதுவும் மது சார்ந்த விழிப்புணர்வு சுமந்து வரும் வரிகளைக் கொண்டு எழுதப்படும் கவிதைப் போட்டியாகும். மேலும் இக்கவிதை போட்டிக்கு எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் இச்சமூகத்திற்கு நம் படைப்புகள் மூலம் நாம் செய்யும் விழிப்புணர்வு சமர்ப்பணமாகவே இது இருக்க போகிறது.

போட்டி விதிமுறைகள்: 1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 16-ஜனவரி-2020 முதல் 18-ஜனவரி-2020 ( 72 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.

2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.

3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள்18-ஜனவரி-2020 அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் மு.மேத்தா தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.

6. சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் ''விஷம் நுரைக்கும் கோப்பைகள்'' என்ற சிறப்பு மின்னிதழில் பிரசுரிக்கப் படும். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் ஆளுமை மிக்க கவிஞர் பலரால் அணிந்துரை எழுதப் பட்டும் காவல்துறை அதிகாரிகளின் வாழ்த்துரைகளுடனும் கவிதை நூலாக வெளியிடப்படும்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 10 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

8. கவிதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆனபிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.

9. கவிதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 24 வரிகளுக்கு மேல் கவிதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

10.கவிதைகள் மது பற்றிய விழிப்புணர்வு மற்றும் மதுவிலக்கு சார்ந்ததாக மட்டுமே இருத்தல் மிக அவசியம்.

11. வயது வரம்பு ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். இது நம் சமூகத்தில் நல்ல ஒரு மாற்றம் வளர வழிவகை செய்யட்டும். நல்ல விழிப்புணர்வு கொண்ட வரிகளை மதுவிலக்கு சுகாதார மையங்களில் எழுத்தாளர் பெயருடன் பொறிக்கப்பட்டு அங்கீகாரம் செய்யப்படும்.

12. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.

13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்புமே இறுதியானது.

14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று விழிப்புணர்வு தர இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

உங்கள் எழுத்து மாற்றட்டும் ஒருவரின் தலையெழுத்து...

தமிழக காவல்துறை & படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • க.தங்கபாபு Avatar
    க.தங்கபாபு - 4 years ago
    போட்டி முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?

  • வி. பாலகிருஷ்ணன் Avatar
    வி. பாலகிருஷ்ணன் - 4 years ago
    வெற்றியாளர்கள் பட்டியல் எப்போது......

  • Harikrish Agora Avatar
    Harikrish Agora - 4 years ago
    24 வரிகள் மேல் கூட்டிய கவிதைகள் தேர்ந்தெடுக்கப்படுமா...?

  • Harikrish Agora Avatar
    Harikrish Agora - 4 years ago
    வாழ்த்துக்கள்

  • Dhanalakshmi Avatar
    Dhanalakshmi - 4 years ago
    போட்டி முடிவுகள் என்று அறிவிப்பார்கள்?

  • வி. பாலகிருஷ்ணன் Avatar
    வி. பாலகிருஷ்ணன் - 4 years ago
    ஐயா வணக்கம், போட்டி முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்

  • புதுக்கவி நேசமுடன் ஈசு Avatar
    புதுக்கவி நேசமுடன் ஈசு - 4 years ago
    இப்போட்டியால் இணைந்துள்ள கவித்தோழர்களே காவல்துறைக்கும் கைக்குலுக்குவதோடு படைப்பு குழுமத்திற்கும் படையலிடுவோம் வீர வணக்கங்களை... வேறெங்கும் நாட்டின் பிரச்சினைகளை நகமாக வெட்டியெறிய கவிஞர்களே கையிலெடுப்போமா நம் கவிதை கருவிகளை??? செல்பேசி எண்களை சேமிப்போமா??? இணைவோம் இதுபோன்றதோர் இன்னுமொரு கவி மாலையில்... நேசமுடன் ஈசு🖋

  • Vijay Anand Avatar
    Vijay Anand - 4 years ago
    editing option செயல்படவில்லை.. கொஞ்சம் உதவவும்..

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    போட்டி முடிந்தவுடன் எடிட் செய்ய இயலாது. போட்டி நடக்கும் நாட்களில் மட்டுமே அது ஓபன்ல இருக்கும்.

  • V.Dhanalakshmi Avatar
    V.Dhanalakshmi - 4 years ago
    என் கவிதையை போட்டிக்கு ஜனவரி 17 க்கே அனுப்பி இருந்தேன் . பட்டியலில் காணப்படவில்லையே . =தனலெட்சுமி, திருச்சி -21

  • Saravanan Avatar
    Saravanan - 4 years ago
    மிகவும் அருமை உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள்

    புதுக்கவி நேசமுடன் ஈசு Avatar
    புதுக்கவி நேசமுடன் ஈசு - 4 years ago
    உங்கள் பாராட்டுக்கு உள்ளம் மகிழ்கிறேன் நெஞ்சம் நெகிழ்கிறேன் சரவணன்

  • கவிஞர் கவி செல்வா Avatar
    கவிஞர் கவி செல்வா - 4 years ago
    வணக்கம் கவிதையை முகநூல் பக்கம் பதிவு செய்யலாமா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    செய்யலாம் தோழமை...

  • வள்ளி வள்ளி Avatar
    வள்ளி வள்ளி - 4 years ago
    அருமையான ,சமுதாயச் சாடல்...அற்புதமான விழிப்புணர்வு கவிதை...வாழ்த்துகிறேன் ஈஸ்

    புதுக்கவி நேசமுடன் ஈசு Avatar
    புதுக்கவி நேசமுடன் ஈசு - 4 years ago
    உங்கள் பாராட்டுகளுக்கு மகிழ்கிறேன் நெஞ்சம் நெகிழ்கிறேன் வள்ளி

  • Vetrivel Avatar
    Vetrivel - 4 years ago
    வணக்கம் ஐயா.. நான் தற்போதுதான் இந்த குழுவில் இணைந்துள்ளேன் அடுத்த போட்டி எப்போது நடக்கும்? S. வெற்றிவேல் திருப்பூர்...

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    படைப்பு இணையதளத்தில் அறிவிப்பு வரும் தோழர். அதுவரை இணைந்திருங்கள். வாழ்த்துகள்

  • புதுக்கவி நேசமுடன் ஈசு Avatar
    புதுக்கவி நேசமுடன் ஈசு - 4 years ago
    நாட்டை நசுக்கி சுடுகாடாக்கும் மதுவுக்கெதிரான சிறப்பு பணி விதைக்தோர்க்கும் வளம் சேர்ந்தோர்க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எனது கவிதை எண் 188 க்கு மாற்று கவியை கருத்து களத்தில் பதிந்துள்ளேன் பரிசீலிக்க பணிந்து வேண்டுகிறேன் நேசமுடன் ஈசு

  • மா.காளிதாசன் Avatar
    மா.காளிதாசன் - 4 years ago
    சிறப்பான சீர்படுத்தும் முயற்சி...கவிஞர்களுக்கு வாழ்த்துகள்,படைப்பு குழுமத்திற்கு நன்றி.

  • sakthi somu Avatar
    sakthi somu - 4 years ago
    ஐயா! எனது கவிதையை முன்னர் கடவுச் சொல் கொடுத்து உட்சென்று பதியாது மேலெழுந்தவாரியாகப் பதிவிட்டதால், அதில் திருத்தம் செய்ய இயலவில்லை. எனவே திருத்தம் செய்து புதிதாகப் பதிந்தேன். எனவே எனது (சோமு.சக்தி)கவிதை எண் 34க்குப் பதிலாக கவிதை எண 182 ஐ(சக்தி சோமு) எடுத்துக் கொள்ளவும். 34-ஐ விட்டுவிடவும். நன்றி! (18-01-2020)

  • எஸ்தர் ஜெகதீசுவரி ம Avatar
    எஸ்தர் ஜெகதீசுவரி ம - 4 years ago
    அருமையான முன்னெடுப்பு அசராத சமூகப் பணி வாழ்த்துகள் படைப்பு குழுமத்திற்கு

  • பொ.கந்தசாமி Avatar
    பொ.கந்தசாமி - 4 years ago
    கவிதை வரிசை எண் வந்து விட்டது. நன்றி. முகவரி கேட்கப்படவில்லை. தர வேண்டுமா ?

  • அச, பிரபு @ ஜனனன்பிரபு Avatar
    அச, பிரபு @ ஜனனன்பிரபு - 4 years ago
    அன்பு வணக்கங்கள், காவல் துறையோடு கை கோர்த்து களமிறங்கும் படைப்பு குழுமத்திற்கு ,கன்னம் வழித்து ஒரு நெட்டி முறிப்பு , சமூக அக்கறைக்கும் , நல்ல மாற்றத்திற்க்கானக்கான மின்னணு முன் நடவடிக்கைக்காக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் - ஜனனன் பிரபு, திருப்பூர்

  • சூர்யநிலா Avatar
    சூர்யநிலா - 4 years ago
    வாழ்த்துகள் படைப்புக் குழுமத்திற்கு

  • aga nambi Avatar
    aga nambi - 4 years ago
    மகிழ்வும் நன்றியும் - அகநம்பி புன்னமை கிராமம் செங்கல்பட்டு மாவட்டம்

  • sakthi somu Avatar
    sakthi somu - 4 years ago
    ஐயா! எனது கவிதையை படைப்புக்குள் உள்ளிடாமல் அந்த விளம்பரத்தின் மீத சொடுக்கி நேரடியாகப் பதிவு செய்தேன். ஆனாலும் ஏற்றுக் கொண்டுவிட்டது. இப்பொழுது அதனைத் திருத்த படைப்பின் தளம் வழியாக உள்ளே சென்றால் - மாற்றி அமைக்க எனும் பட்டனைக் காட்டவில்லை. கவிதை மேல் சொடுக்கினால் அனுமதி மறுக்கப்பட்டது என்று வருகிறது.

  • கவிஞர். நா.பிரகாஷ் Avatar
    கவிஞர். நா.பிரகாஷ் - 4 years ago
    வணக்கம் ஐயா.. போட்டிக்கு அல்லாத விழிப்புணர்வு வாசகங்களை எவ்வாறு பதிவிடுவது

  • sakthi somu Avatar
    sakthi somu - 4 years ago
    பதிவிட்ட கவிதையில் எழுத்துத் திருத்தம் எப்படி செய்வது ? யாரிடம் தொடர்புகொள்வது? சோமு. சக்தி 9840829790

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    மாற்றியமைக்க என்ற பட்டன் கொடுக்கப்பட்டிரு அய்யா. அதை சொடுக்கி எடிட் செய்து கொள்ளலாம். சமர்ப்பிக்கப்பட்ட கவிதைகள் பட்டன் க்ளிக் செய்து உங்கள் கவிதையை சொடுக்கி பார்க்க. அங்கே உங்களுக்கு எடிட் செய்லாம்

  • Fathima Musthafa M. R Avatar
    Fathima Musthafa M. R - 4 years ago
    When we will get the results of this competition

  • சாவி. அனில் Avatar
    சாவி. அனில் - 4 years ago
    ஐயா வணக்கம்... சிறந்ததோர் தலைப்பில் கவிதை போட்டிக்கு நன்றிகள் பல... கவிதை பதியும் போது ஐந்து சொற்கள் ஒரே வரிசையில் இல்லாமல் உடைந்து விடுகிறதே! இதன் நிமித்தம் வரிகள் எல்லை தாண்டுகிறதே ...திரை அளவினை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதா அல்லது மாற்று வழி உண்டா? அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    பரவா இல்லை அய்யா. வரிகள் உடைந்து வந்தாலும் நாம் ப்ரிண்ட் எடுக்கும்போது சரியாகவே வரும். கவலை கொள்ள தேவை இல்லை. வாழ்த்துகள்

  • Kavignar Thanigai MANIAM Avatar
    Kavignar Thanigai MANIAM - 4 years ago
    kavignar Thanigai. while submitting my poem to competition my moble number wrongly posted with poem ie.8915584566 but that is wrong. :correction: 8015584566 is right. thanks. vanakkam.

  • நயினார் . Avatar
    நயினார் . - 4 years ago
    பங்குபெறும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்...

  • க.தங்கபாபு Avatar
    க.தங்கபாபு - 4 years ago
    மது மாநிலமாக நமது மாநிலம் மாறாதிருக்கட்டும்! மது விழிப்புணர்வை விதைக்கட்டும் படைப்பின் கவிதைகள்! நற்செயலுக்கு படைப்பு குழுமத்தார்க்கும்.. தமிழக காவல் துறைக்கும்.. ஒரு "ராயல் சல்யூட்!"

  • Ibrahim Shareef Avatar
    Ibrahim Shareef - 4 years ago
    பங்குபெறும் அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். .

  • Saleem Khan S Avatar
    Saleem Khan S - 4 years ago
    அனைத்து படைப்பாளிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    மகிழ்ச்சி

  • Rohith Sai Ram Avatar
    Rohith Sai Ram - 4 years ago
    படைப்பின் முன்னெடுப்பு படைப்பாளிக்கு ஊக்குவிப்பு.

  • Jinna Asmi Avatar
    Jinna Asmi - 4 years ago
    வாழ்த்துகள் அனைவருக்கும்

    Dhanalakshmi Avatar
    Dhanalakshmi - 4 years ago
    முடிவு என்று கூறுவார்கள் ஐயா

    Faiz Ahamed N Avatar
    Faiz Ahamed N - 4 years ago
    முடிவுகள் வரும் தேதி பற்றி ஏதுமறிவீரோ ??