logo

கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2024


அன்புள்ளம் கொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் வணக்கம்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்த பெரிதும் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:

மொத்த பரிசு :40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு :  15,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : 10 நபர்கள் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 13 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: படைப்பு குழுமம்

போட்டி விவரம்:

தலைப்பு: எந்த தலைப்பிலும் / எந்த கருவிலும் கவிதைகள் எழுதலாம் 

ஆரம்ப நாள் : 22-நவம்பர்-2024 இரவு மணி 12 முதல்

கடைசி நாள் :24-நவம்பர்-2024 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : மகாகவி ஈரோடு தமிழன்பன்

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப்பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்.  உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு கவிதையை மட்டுமே எழுதி சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் வரும் 23-நவம்பர்-2024 ( சனி மற்றும் ஞாயிறு)  ( 48 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.

2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (கஸல்/நவீனம்/மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.

3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 24-நவம்பர்-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.

6. போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு கவிதை நூலாக வெளியிடப்படும்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 13 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் மகாகவி ஈரோடு தமிழன்பன் கையொப்பமிட்டு வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும். பரிசளிப்பு, நமது படைப்பு சங்கமம் விழாவில் நடைபெறும். விழாவில் நேரில் வந்து மட்டுமே பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

8. கவிதைகள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படைப்பு இணையதளத்தில் குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதிவிட முடியாதபடி "கவிதைகள் சமர்ப்பிக்க" பயன்படுத்தும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும். அதனால் சரியாக 48 மணிநேரம் மட்டுமே உங்கள் கவிதைகள் சமர்ப்பிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்க.

9. போட்டி முடியும்  நாளான 24-நவம்பர்-2024 (ஞாயிற்றுக்கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல்) அன்று வழக்கம் போல கவிதையை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் படைப்புகளை உங்கள் நட்பு வட்டத்திற்கோ, பொது மக்கள்  பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பு இந்த போட்டியை திறம்பட நடத்திட முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த போட்டி  அறிவிப்பை முடிந்த வரை பகிருங்கள். உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாக அமையும். வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு : 73388 97788 / 73388 47788 

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • sivaram kumar Avatar
    sivaram kumar - 1 month ago
    அவள் """""""" பெருங்காற்றின்‌கு றுந்தென்றலாய் @அவள்.... @அவள் வளர்ந்திடும் மலர்களோடு மறைந்திடும் இதழ்..... கண்களில் வரும் இரக்கங்கள் அவள்.. கதைகளில் வரும் வரங்களின் மகள்..... இன்னொரு முறை இதயத்திலேறி... இருவறைகளையும் குறும்புகளால் நிறைக்கிறாய்.... அதைமறைத்திட உனைத்தொடர்ந்திட விரல்நுனி.....நீ பிடித்தபடி.... அடுத்த நொடி அது உன் மடியிலடி..... "ஆரிராரோ"க்களின் அர்த்தங்கள் சொல்ல... வரும் ஜென்மங்கள் என்னுடன் பிற... இருவரும் வாதங்கள் இட..! போதும் போதுமென அழுதிட...!! தமையனாக அல்ல தகப்பனாக்கிய என் தங்கையே..!!! பூ.சிவராம் குமார் 9943691369

  • கவித்தேனீ யாழிசை Avatar
    கவித்தேனீ யாழிசை - 1 month ago
    முடிவு எப்போது வெளியாகும்?

  • இரா.ராஜா Avatar
    இரா.ராஜா - 1 month ago
    எத்தனை பார்வையற்றவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமோ.....???? தீக்குச்சியின் நினைப்பு ராஜா சேத்தியாத்தோப்பு

  • தீபக்கவி இர.சத்தியராஜ் Avatar
    தீபக்கவி இர.சத்தியராஜ் - 1 month ago
    கவிஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நல்லதொரு குழு கவி ஆளுமைகள் நடுமை வகிக்கும் காலத்தின் ஒளி விளக்கு மென்மேலும் தமிழ் வளர்க்கும் குழுவில் பயணம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் தமிழை வளர்த்தெடுக்க நானும் உங்களுடன் கைகோர்த்து பயணம் செய்கிறேன் மகிழ்ச்சி வாய்ப்பு வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல படைப்புக் குடும்பத்திற்கு

  • த. தேன்ராஜன் அன்புச்சோலை. Avatar
    த. தேன்ராஜன் அன்புச்சோலை. - 1 month ago
    நல்லதொரு குழுமத்தோடு பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; ஊக்குவித்தல் என்பது மிகவும் அவசியம், அதை சிறப்பாக செய்து வருகிறது "படைப்பு" குழுமம் - அன்பு வாழ்த்துகள்!

  • கார்த்திகேயன். Avatar
    கார்த்திகேயன். - 1 month ago
    பரிசு கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக வளர்வோம் வளர்ப்போம் என்ற உயர்ந்த குறிக்கோளின் பலனாக நானும் எனது கவிதையும் காதலோடு கலந்து விட்டோம்.❤️

  • கு.சந்திரன் Avatar
    கு.சந்திரன் - 1 month ago
    நின்னை சரணடைந்தேன் **** உன்னையே சுற்றி வரும் என் உள்ளம் செக்குமாடா இல்லை ராட்டின குதிரையா உன்னையே பற்றிக்கொள்ளும் என் இதயம் வாலிப குரங்கா இல்லை இளமை உடும்பா உன்னையே தொடரும் என் நினைவுகள் இரட்டை நிழலா இல்லை ஜோடி சுவடா **** கு. சந்திரன் திருச்சி 8 9976277611

  • ப.தாணப்பன் Avatar
    ப.தாணப்பன் - 1 month ago
    கவிதைக்கு கீழ் பெயர் இடம் பெறலாமா

  • கா.ந.கல்யாணசுந்தரம்  Kaa Na Avatar
    கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na - 2 months ago
    தமிழ்ப்பணியில் படைப்பு குழுமம் சாதனை புரிந்து வருகிறது . இனிய வாழ்த்துகள் .

  • பாக்யபாரதி Avatar
    பாக்யபாரதி - 2 months ago
    மிகச் சிறப்பு... வாழ்த்துகள்... (ஆவலுடன் என் எழுதுகோலும்)

  • ஜெய வெங்கட் Avatar
    ஜெய வெங்கட் - 2 months ago
    அருமை சிறப்பு வாழ்த்துகள்