அன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும்
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...
பரிசு விவரம்:
மொத்த பரிசு :40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).
முதல் பரிசு : 15,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய்).
இரண்டாம் பரிசு : 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).
மூன்றாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).
சிறப்பு பரிசு : 10 நபர்கள் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)
ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 13 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்
பரிசளிப்பவர் விவரம்: படைப்பு குழுமம்
போட்டி விவரம்:
தலைப்புகள் : 1. யாருமற்ற சிலுவை, 2. பால்வெளியில் விரியும் உன் குறுஞ்செய்தி, 3. கொஞ்ச நேரம் இரு (இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டுமே கவிதை எழுத வேண்டும்)
ஆரம்ப நாள் : 08-நவம்பர்-2022 இரவு மணி 12 முதல்
கடைசி நாள் :10-நவம்பர்-2022 இரவு மணி 12 வரை
போட்டி நடுவர் : கவிஞர் மனுஷ்ய புத்திரன்
முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
போட்டி விதிமுறைகள்:
1. கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டுமே கவிதை எழுத வேண்டும். ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும். மூன்று தலைப்புகள் இருப்பதால் மூன்றுமுறை பத்தியக்கூடாது. மூன்றிலிருந்து உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்துகொண்டு ஒரு கவிதையை மட்டுமே எழுதி சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் வரும் 08-நவம்பர்-2022 ( புதன் மற்றும் வியாழன்) ( 48 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.
2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (நவீனம்/மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 10-நவம்பர்-2022 (வியாழன் கிழமை) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.
4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.
6. போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு கவிதை நூலாக வெளியிடப்படும்.
7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 13 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் கையொப்பமிட்டு வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும். பரிசளிப்பு, நமது படைப்பு சங்கமம் விழாவில் நடைபெறும். விழாவில் நேரில் வந்து மட்டுமே பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
8. கவிதைகள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படைப்பு இணையதளத்தில் குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 48 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
9. போட்டி முடியும் நாளான 10-நவம்பர்-2022 (வியாழக்கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல்) அன்று வழக்கம் போல கவிதையை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் படைப்புகளை உங்கள் நட்பு வட்டத்திற்கோ பொது மக்கள் மக்கள் பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
10. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடத்திட முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு : 73388 97788 / 73388 47788
போட்டியை வெற்றி பெற செய்வோம்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log inகொழுமம் ஆதி - 1 year ago
கொழுமம் ஆதி - 1 year ago
Dhivya - 1 year ago
Mohan Periyasamy - 2 years ago
VELPRAKASH S - 2 years ago
R.T. Gnanam - 2 years ago
VELPRAKASH S - 2 years ago
கு.பிரியா குமரவேல் - 2 years ago
Easwari Gurunathan - 2 years ago
Selva .Moorthy - 2 years ago
பா. செந்தில் பாண்டியன் - 2 years ago
M.prema - 2 years ago
M.prema - 2 years ago
Meena - 2 years ago
Livin - 2 years ago
ஷாராஜ் - 2 years ago
மஞ்சுளா - 2 years ago
Rajakumar Sivan - 2 years ago
Arun - 2 years ago
கரு. கிருஷ்ணமூர்த்தி - 2 years ago