logo

படைப்பு சிறுகதைப் போட்டி - 2024


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி"  இந்தாண்டும் உங்களுக்காக சிறுகதைப் போட்டியாக படைப்புக்குழுமம் மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:

மொத்த பரிசு : 40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 20,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபதாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்  பத்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்  ஐந்தாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : ஐந்து நபர்கள் - 5000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 8 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப்படும்

பரிசளிப்பவர் விவரம்: சகா (சலீம் கான்)

போட்டி விவரம்:

தலைப்பு மற்றும் கரு : எழுத்தாளரின் விருப்பம்

ஆரம்ப நாள் : 31-03-2024 (இரவு 12 மணி முதல்)

கடைசி நாள் : 03-04-2024 (இரவு 12 மணி வரை)

போட்டி நடுவர் : 

எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள்

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:

1.  ஒருவர் அதிகபட்சம் ஒரு கதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 31-மார்ச்-2024 (ஞாயிற்றுக்கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 03-ஏப்ரல்-2024 (புதன் இரவு 12:00 மணி வரை)  மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை https://padaippu.comஎன்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிவு செய்ய வேண்டும்.

2. இது சிறுகதைப் பரிசுப்போட்டி என்பதால் கதை மட்டுமே எழுத வேண்டும். கதை 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. கதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 72 மணி நேரம் வரை யார் பதிந்த கதைகளும் யாராலும் பார்க்க இயலாது. கதைகள் பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். போட்டிக்கான நேரம் முடிந்த அடுத்த வினாடி முதல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணைய தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து தாங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சப், மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திலும் பகிரலாம். இந்த முறை எதற்கு என்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. போட்டிக்கு வந்த கதைகளில் சிறந்ததாக இருக்கும்  கதைகளைத் தொகுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூலாக வெளியிடப்படும். இந்த நூலுக்கான தலைப்பும் தேர்வாகும் கதைகளில் உள்ள ஒரு பெயரே சூட்டப்பட்டு அந்த எழுத்தாளரை கெளரவிக்கப்படும்..

6. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 8 கதைகளுக்கு சிறந்த படைப்பிற்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் எழுத்தாளர் கையொப்பமிட்டு வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

7. கதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆன பிறகு மட்டுமே பதிவு செய்ய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.

8. கதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணி நேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் 2000 வார்த்தைகளுக்கு மேல் கதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

9. என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். என்ன கருவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

10. போட்டிக்கு வரும் கதைகள் இதற்கு முன் வேறு எங்கும், எந்த வடிவிலும் பிரசுரமாகி இருக்க கூடாது மேலும் வேறு எங்கும் பரிசும் பெற்று இருக்க கூடாது.

11. கதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். அது வேறு எந்த தழுவலாகவோ, நகலாகவோ இருத்தல் கூடாது.

12. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.

13. தயவு செய்து போட்டி நடக்கும் முன் வேறு எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

14. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாக அமையும்.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in