logo

அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019


அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019:

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில்...

கடந்த ஆண்டு இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் போட்டி அம்மையார் ஹைநூன் பீவி அவர்களுக்கு செய்யும் நினைவாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் தாயாக இருக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு கவியஞ்சலியாக இருக்கட்டும்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:

மொத்த பரிசு :15000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : இரு நபர்கள் - 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா இரண்டாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : மூன்று நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு :ஆறு நபர்கள் - 3000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஐநூறு ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 15000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 12 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: சகா(சலீம் கான்)

போட்டி விவரம்:

தலைப்பு : வேர்த்திரள்

ஆரம்ப நாள் : 16-மார்ச்-2019 இரவு மணி 12 முதல்

கடைசி நாள் :17-மார்ச்-2019 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : கவிஞர் வண்ணதாசன்(கல்யாண்ஜி)

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

தலைப்பு விளக்கம்:

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிட முடியாத சாதனை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய இயலாமல் நாம் இருப்பதே இயற்கையின் நியதி. அப்படிப்பட்ட இயற்கையின் கொடையான காடுகளையும் அதைச் சார்ந்த அனைத்து வகையான நிலைகளையும், பறவைகள், விலங்குகள் மற்றும் காட்டு உயிரனினங்கள் இன்றைய சூழ்நிலையில் படும் துயரங்களையும், காடழிப்பு அதனால் ஏற்படும் விளைவுகள், இயற்கையை அழித்ததன் பிரதிபலன்கள் அதை விவரித்து சொல்லும் தலைப்பே இது. ஆதலால் இது முழுக்க முழுக்க காடும் காடு சார்ந்த நினைவுகளை சுமந்து வரும் வரிகளைக் கொண்டு எழுதப்படும் கவிதைப் போட்டியாகும். மேலும் இக்கவிதை போட்டிக்கு எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் இயற்கைக்கு நம் படைப்புகள் மூலம் நாம் செய்யும் சமர்ப்பணமாகவே இது இருக்க போகிறது.

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 17-மார்ச்-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே நாள் மட்டும் ( 24 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.

2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.

3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 24 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 18-மார்ச்-2019 (ஞாயிற்றுக் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. கவிதையை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம். இம்முறை முதன்முறையாக மதிப்பெண்(லைக்) ஒவ்வொரு கவிதைக்கும் மக்களே தீர்மானிக்க இருக்கிறார்கள். இதன் முடிவில் அதிக மக்கள் வாக்கு பெறும் படைப்பாளிக்கு மக்கள் செல்வாக்கு மிக்க கவிஞர் என்ற அங்கீகாரமும் ஸ்பெஷல் சான்றிதழும் பரிசும் வழங்க இருக்கிறோம். இதுவரை யாரும் செய்யாத இந்த புது முயற்சியையும் அரவணைக்க வேண்டுகிறோம். மற்றபடி போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் வண்ணதாசன் தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.

6. சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் ''வேர்த்திரள்'' என்ற சிறப்பு மின்னிதழில் பிரசுரிக்கப் படும். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் ஆளுமை மிக்க கவிஞர் பலரால் அணிந்துரை எழுதப் பட்டு கவிதை நூலாக வெளியிடப்படும். இதில் அணிந்துரை எழுதப் போகும் கவிஞர் யார் யார் என்பதை பின்பு அறிவிப்போம்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 12 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

8. கவிதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆனபிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.

9. கவிதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 24 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 24 வரிகளுக்கு மேல் கவிதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

10.கவிதைகள் காடுகள் மற்றும் காடு சார்ந்ததாக மட்டுமே இருத்தல் மிக அவசியம். காடுகளை பற்றி சொல்லும் எந்த படைப்பும் ஏற்றுக்கொள்ளப்படும். எந்த கருவிலும் எழுதலாம் ஆனால் அது காடு சம்பந்தமான கவிதையாக இருக்க வேண்டும்.

11. போட்டி முடிந்து அடுத்த நாளான 18-மார்ச்-2019 (ஞாயிற்றுக் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல்) அன்று வழக்கம் போல கவிதையை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் படைப்புகளை உங்கள் நட்பு வட்டத்திற்கோ பொது மக்கள் மக்கள் பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் ஓட்டளிக்கும் ( லைக் கணக்கிலும்) உங்கள் மதிப்பெண் கணக்கிடப்படும் அது மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற உயர்ந்த அந்தஸ்தை பெற்று தரும்.

12. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.

13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. மக்கள் தீர்ப்பும் நடுவர் தீர்ப்புமே இறுதியானது.

14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

குறிப்பு

படைப்புக் குழுமம் தயாரித்து வெளியிட இருக்கும் தமிழ் இசை ஆல்பத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு இப்போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் என்பது பெருமை மிகுந்த விசயம்.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.