logo

படைப்பின் அடுத்த அரவணைப்பு - ஓவியக் கவிஞர் அமுதபாரதி


படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களை அரவணைத்துக் கொள்கிறது படைப்பு குழுமம். அதன்படி கவிஞர் அவர்களுக்கு ஆயுள் முழுக்க  அவருக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்று மாதந்தோறும் கொடுக்க இருக்கிறோம்

கவிஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு பார்வை:

இலக்கிய உலகில் முதல் முறையாக... படைப்பாளிகளை அரவணைக்கும் கரங்களாக... படைப்புக் குழுமம் தொடங்கிய திட்டமே கவிஞர் காப்பீட்டுத் திட்டம் .மூன்று பெரும் பிரிவுகளில் இத்திட்டம் செயலாற்ற இருக்கிறது. 

பசிப்பிணி தீர்க்கும் குடும்ப நலநிதி, 
வருங்கால சந்ததிக்கான கல்விநிதி,
எதிர்பாரா விபத்து அல்லது இழப்புகள் என்றால் மருத்துவ நிதி...

இந்த மூன்றையும் ஒரே திட்டமாக ஒருங்கிணைப்பதே கவிஞர் காப்பீட்டுத் திட்டம்.

எந்தவொரு பின்புலமும் இல்லாத, வாழ்வாதாரம் இழந்து நிற்கும், வறுமைக்கோட்டில் தன் வரிகளுக்கான கேள்விக்குறியாக இருக்கும் கவிஞர் களுக்கான இந்த முழு இலவச நிதி உதவித் திட்டத்தினை படைப்புக்குழுமம் பெருமையோடு அறிமுகப்படுத்துவதோடு உதவிக்கரமும் நீட்டுகிறது.

இதன் முதல் பயனாளியாக கவிஞர் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா அவர்களையும் இரண்டாவதாக எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களையும் அரவணைத்துக் கொண்டது. அதேபோல இப்போது மூன்றாவதாக ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களையும் அவர் பிறந்த நாளான 31-08-2021 அன்று படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொண்டது. அதன்படி இனி வாழ்நாள் முழுக்க அவர்களுக்கான  உணவு மற்றும் மருத்துவம் போன்ற  வாழ்வாதார செலவுகளை படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in