logo

படைப்பு சிறுகதைப் போட்டி - 2022


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி"  கடந்த ஆண்டைப் போல் இந்தாண்டும் உங்களுக்காக சிறுகதைப் போட்டியாக படைப்புக்குழுமம் மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு : 40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 20,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபதாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்  பத்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்  ஐந்தாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : ஐந்து நபர்கள் - 5000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 8 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: சகா(சலீம் கான்)
போட்டி விவரம்:

தலைப்பு மற்றும் கரு : எழுத்தாளரின் விருப்பம்

ஆரம்ப நாள் : 28-03-2022 (இரவு 12 மணி முதல்)
கடைசி நாள் : 31-03-2022 (இரவு 12 மணி வரை)

போட்டி நடுவர் : 
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் அவர்கள்
(சாகித்திய அகாதமி விருதாளர்)

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 28-மார்ச்-2022 (திங்கள் கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 31-மார்ச்-2022 (வியாழக்கிழமை இரவு 12:00 மணி வரை)  மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிந்து விடவேண்டும்.

2.இது சிறுகதைப் பரிசுப்போட்டி என்பதால் கதை மட்டுமே எழுத வேண்டும். கதை 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
3. கதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 72 மணி நேரம் வரை யார் பதிந்த கதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். போட்டிக்கான நேரம் முடிந்த அடுத்த வினாடி முதல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து தாங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. பரிசு பெறும் கதையை நடுவர் நாஞ்சில் நாடன் அவர்களே நேரடியாக சொல்ல இருக்கிறார்.

6. போட்டிக்கு வந்த கதைகளில் சிறந்ததாக இருக்கும்  கதைகளைத் தொகுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூலாக வெளியிடப்படும். இந்த நூலுக்கான தலைப்பும் தேர்வாகும் கதைகளில் உள்ள ஒரு பெயரையே சூட்டப்பட்டு அந்த எழுத்தாளரை கவுரவிக்கப் படும்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 8 கதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் எழுத்தாளர் கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

8. கதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆன பிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.

9. கதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 2000 வார்த்தைகளுக்கு மேல் கதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

10. என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். என்ன கருவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

11. போட்டிக்கு வரும் கதைகள் இதற்கு முன் வேறு எங்கும், எந்த வடிவிலும் பிரசுரமாகி இருக்க கூடாது மேலும் வேறு எங்கும் பரிசும் பெற்று இருக்க கூடாது.

12. கதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். அது வேறு எந்த தழுவலாகவோ, நகலாகவோ இருக்க கூடாது.

13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.

14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் வேறு எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • K.Kavitha Avatar
    K.Kavitha - 1 year ago
    முடிவு எப்போது வெளியிடப்படும் என்பது தெரிந்தால் கதை எழுதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஆவலாக இருக்கும்.

  • Ramesh kannan Avatar
    Ramesh kannan - 2 years ago
    முடிவு எப்போது அறிவிக்கப்படும்.

  • ஷாராஜ் Avatar
    ஷாராஜ் - 2 years ago
    // வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும். // எனத் தெரிவித்துள்ளீர்கள். எனது சந்தேகங்கள் அல்ல; முந்தைய அனுபவ அடிப்படையிலான கேள்விகள் இவை. பதில் எதிர்பார்க்கிறேன். 1. ஹைனுன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி - 2020ல், கிறிஸ்துவ விநாயகர் என்ற தலைப்பிலான எனது சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றிருந்தது. ஆனால், அதற்கான பரிசுத் தொகை இதுவரை எனக்கு வந்து சேரவில்லை. அது ஏன்? 2. இந்த வருடமாவது, பரிசு பெறுகிறவர்களுக்குப் பணம் அனுப்பப்படுமா? 3. (எனது) பழைய பாக்கி செட்டில் செய்யப்படுமா?

  • மு.இராசேந்திர குமார் Avatar
    மு.இராசேந்திர குமார் - 2 years ago
    போட்டியின் முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது. தேதி எப்போது அறிவிக்கப்படும் ?

  • ஷாராஜ் Avatar
    ஷாராஜ் - 2 years ago
    ஹைனுன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி - 2020ல், கிறிஸ்துவ விநாயகர் என்ற தலைப்பிலான எனது சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றிருந்தது. ஆனால், அதற்கான பரிசுத் தொகை இதுவரை எனக்கு வந்து சேரவில்லை. இப்படித்தான் ஓரிரு ஆண்டுகள் முன்பு, சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டியில் அணில் சேவை என்ற தலைப்பிலான எனது கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருந்தது. அதற்கான பரிசுத் தொகையும் இதுவரை வந்து சேரவில்லை. இது போல வேறு சில அமைப்புகளிலிருந்து நடத்தப்பட்ட போட்டிகளிலும் பரிசு பெற்றதாக அறிவிப்பு வருவதோடு சரி; பணம் தரப்படுவதில்லை என்ற தகவலை போட்டியில் பரிசு பெற்ற கதையாசிரியர்களோ, தகவல் அறிந்தவர்களோ தெரிவித்துள்ளனர். முகநூலிலும் இது குறித்து பதிவுகள் வெளியிட்டுள்ளேன். ஹைனுன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி இந்த வருடமும் நடத்தப்பட்டிருப்பதை 01-04-22 தேதியான இன்றுதான் தற்செயலாகப் பார்த்தேன். கதை அனுப்ப நேற்றோடு கடைசித் தேதி. இந்த வருடமாவது, பரிசு பெறுகிறவர்களுக்குப் பணம் அனுப்பப்படுமா என்ற கேள்வி எழுகிறது. (பழைய பாக்கியை செட்டில் செய்வார்களா? - என்ற கேள்வியும்தான்).

  • sakthi somu Avatar
    sakthi somu - 2 years ago
    பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துகள்! கதைகளை எழுதியோர் மட்டுமல்ல , வாசிப்போரும் கருத்துச் சொல்வோரும் பங்கேற்பாளர்களே! சோமு.சக்தி

  • ஷபி.அ Avatar
    ஷபி.அ - 2 years ago
    வணக்கம் ஐயா போட்டியில் எண் 187ல் எனது சிறுகதையை சமர்பித்து விட்டேன். பெயரை தமிழில் மாற்றுவதற்கு மீண்டும் பதிவிடும் போது தமிழ் பெயரில் 190 எண்ணில் அதே கதை மீண்டும் பதிவாகியுள்ளது ஏதேனும் ஒன்றை நீக்கிவிட முயன்றாலும் முடியவில்லை. அதனால் இரண்டில் ஒன்றை தாங்களே நீக்கிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

  • P. Akasamuthu Avatar
    P. Akasamuthu - 2 years ago
    வணக்கம் ஐயா, மேலே இருக்கும் சிறுகதை சமர்ப்பிக்க பட்டனை கிளிக் செய்து எனது சிறுகதையை சமர்ப்பித்தால் போதுமா . இந்த வெப்சைட்டில் உறுப்பினர் ஆக வேண்டும் என்று சொல்கிறீர்களே. எப்படி . அல்லது நான் ஆகி விட் டேனா

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    அதுவே போதுமானது. நேரடியாக பதிவிட்டு விடுங்கள்

    P. Akasamuthu Avatar
    P. Akasamuthu - 2 years ago
    நன்றி

  • Subbu  Raj Avatar
    Subbu Raj - 2 years ago
    சிறுகதைகளுக்கான நிபந்தணைகளில் முதலில் 1000 வார்த்தைகளுக்குள் என்று போட்டிருந்தீர்கள். அதன்படி ஐம்பது கதைகளுக்கு மேல் பதிவேற்றமும் செய்யப்பட்டு விட்டது. தற்பொழுது ஒரு நண்பர் சுட்டிக்காட்டி நானும் பார்த்தேன். வார்த்தை வரம்பு 2000 என்று உயர்த்தப் பட்டிருக்கிறது. இது பற்றி பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். போட்டி தொடங்கிய பின்பு இப்படி நிபந்தணைகளை மாற்றிக் கொள்வது நியாயமா? முன்பே இப்படி ஒரு நிபந்தணை இருந்திருந்தால் நானே கூட இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக எழுதப்பட்ட சிறுகதையைப் பதிவிட்டு இருப்பேனே....! நிபந்தணையை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பது பற்றிய விளக்கத்தை எதிர்பார்க்கலாமா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    அறிவிப்பு பதித்து இரண்டாவது நாளிலேயே 2000 என்று மாற்றி அமைத்து விட்டோம். 2000 வார்த்தைகள் என்பதற்கு பதில் 1000 என்று மாறி வந்ததால் அதை சரி செய்து விட்டோம் அவ்வளவு தான் தோழர். இன்னும் இரு நாட்கள் இருக்கு இப்போது கூட நீங்க மாற்றி எழுதி பதிவிடலாமே.

  • பாலசாண்டில்யன் aka Kalyanaraman Balasubramanian Avatar
    பாலசாண்டில்யன் aka Kalyanaraman Balasubramanian - 2 years ago
    மிகவும் அருமையாக சீராக நடத்தப்படும் போட்டி. இதில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மிகுந்த பணிவன்புடன் டாக்டர் பாலசாண்டில்யன்

  • Ayyappan Avatar
    Ayyappan - 2 years ago
    குட்டி கதை ,, ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி வந்து ஒபெரசன் அறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்..... அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு என்னவானாலும் நடந்தா யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்... வைத்தியர் : சிரித்த முகத்துடன் கூறினார் எனக்கு வைத்தியசாலையில் இருந்து call வந்தது அவசரமாக ஓடி வந்துட்டேன்... பொறுமையாக இருங்கள் உங்கள் மகன் இறக்கவில்லை.. நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.. ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகனுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா எண்டார் பிள்ளையின் தகப்பனார்.. Dr சொன்னார். புன்னகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம்க்கு சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகன் மிக்க நலமாக உள்ளார்.. மேலதிக விடயங்களை nurse இடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்.... அவ்விடம் வந்த nurse இடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு Dr.ஏன் அவசரமா போகிறார் என்று வினவினார். அதற்க்கு nurse சொன்னார்.... Dr இன் மகன் நேற்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார். அவரது இறுதி கிரியை மயானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. அந்தநேரம் உங்கள் பிள்ளையின் நிலை குறித்து call பண்ணிய போது அதை விட்டுட்டு Dr.உடனே ஓடி வந்து ஆபரேஷன் செய்து விட்டு மீண்டும் மகனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டார் என nurse கூறினார்... தகப்பன் தான் ஆவேசப்பட்டது தவறு என்பதை உணர்ந்தவனாக மிகுந்த கவலையுடன் தன் மகனை பார்க்க சென்றார். 😢😢😢 நீதி :: யாரையும் வெளியில் பார்த்து இடை போடாதீர்கள் அவர்களுக்குள்ளும் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும்.... எனவே வார்த்தைகளை பேணிக்கொள்ளுங்கள்.. !!

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    இங்கே பதிய கூடாது. நிராகரித்து விடுவார்கள். போட்டி பகுதியில் சென்று பதிவிட வேண்டும்

  • S.Mohan Avatar
    S.Mohan - 2 years ago
    Register செய்தால், 419 இந்தப் பக்கம் காலாவதியாகிவிட்டது என்று காட்டுகிறது.எப்படி register செய்வது ?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    போட்டி பகுதியில் சமர்ப்பிக்க. வேறு எதுவும் கேட்காது.ம்ம்

  • PRAKASH NARAYAN Avatar
    PRAKASH NARAYAN - 2 years ago
    வணக்கம், அழகி மென்பொருள் வாயிலாக MS WORD டாக்குமென்ட் ஆக அனுப்பலாம?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    டாக்குமெண்டில் அனுப்ப இயலாது. நேரடியாக பதிவிட வேண்டும். அறிவிப்பை சரியாக பார்க்க

  • அஞ்யுகா ஸ்ரீ Avatar
    அஞ்யுகா ஸ்ரீ - 2 years ago
    குறைந்தபட்ச வார்த்தைகளின் அளவு என்ன ஐயா? ஆங்கில கலப்பு இருக்கலாமாங்க ஐயா

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    குறைந்தபட்ச அளவு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் கதை இருக்க வேண்டும். ஆங்கில கலப்பு உங்கள் விருப்பம்.

  • K.Kavitha Avatar
    K.Kavitha - 2 years ago
    ஆங்கில வார்த்தைகளை தமிழில் கதையில் குறிப்பிடலாமா?உதாரணமாக uncle என்பதை அங்கிள் என்று?கதை 1000 வார்த்தைகள் இருக்கலாமா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    பயன்படுத்தலாம். நடுவரின் முடிவிற்கு விட்டு விட்டோம்.

  • Neyveli Bharathikumar Avatar
    Neyveli Bharathikumar - 2 years ago
    சிறுகதைப் படைப்பாளிகளை உற்சாகமூட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள அம்மையார் ஹைநூன் பீவி நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் .. மிக்க நன்றி

  • S .Kavya Avatar
    S .Kavya - 2 years ago
    Type pannanuma illa elluthanuma ஐயா

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    ஜஸ்ட் எழுதி சமர்ப்பித்தால் போதும் அல்லது எழுதி வைத்துக் கொண்டு காப்பி பேஸ்ட் செய்து சமர்ப்பித்து விட்டாலும் போதும்

  • மேரித்தங்கம் Avatar
    மேரித்தங்கம் - 2 years ago
    /ஆரம்ப நாள் : 28-03-2022 (இரவு 12 மணி முதல்) கடைசி நாள் : 31-03-3022 (இரவு 12 மணி வரை)/ போட்டி காலம் ஆயிரம் வருஷங்களுக்கா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    திருத்தம் செய்தாயிற்று. மிக்க நன்றிகள்