logo

பிணக்காட்டு மரங்கள்


நூல் பெயர்    :  பிணக்காட்டு மரங்கள்
                      (கவிதை )

ஆசிரியர்    :  கோபிநாதன் பச்சையப்பன்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2021

பக்கங்கள்    :  102

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 100
பூவிலிருந்து தொடங்கி மீண்டும் பூக்கும் வலிமையோ அல்லது விதையிலிருந்து தொடங்கி மீண்டும் விதைக்கும் வல்லமையோ ஒன்று உண்டெனில் அதுவே மரம். தூளியில் சுமந்தது முதல் நான்கு பேரால் தோளில் சுமந்தது வரை நம் எல்லாப் பயணங்களிலும் சுமைதாங்கியாகி நிற்பது மரமே. வெறுமனே வெயிலை வாங்கிக்கொண்டு நிம்மதியாய் நிழலைத் தர யாரால்தான் முடியும் மரங்களைத் தவிர. எந்த மரமாக இருந்தாலும் இருவகையே. இயற்கையாக நம்முடன் இருப்பது காட்டு மரங்கள், இயற்கை எய்திய பிறகும் இருப்பது பிணக்காட்டு மரங்கள். வாழ்வின் பாதித்த தருணங்களை எல்லாம் சிறு குறு படைப்புகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'பிணக்காட்டு மரங்கள்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது மலரும் நினைவுகளை வாசிப்பவர் மனதில் விதைத்து விட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், கத்தார் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி 'கோபிநாதன் பச்சையப்பன்' அவர்களுக்கு படைப்பு குழுமத்தில் இது முதல் தொகுப்பு. கத்தார் நாட்டில் வழங்கப்படும் 'தமிழ் மகன் விருது' என்ற தனித்துவமான விருதையும், உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா வழங்கிய 'The Enlightenment Award', எனும் விருதைப் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.