படைப்பு ‘தகவு’ எழுபத்திரண்டாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் பரிசுப்போட்டி முடிவுகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன. முதல் மூன்று பரிசு பெற்ற சிறுகதைகளும் சிறப்புப் பரிசு பெற்ற இரு சிறுகதைகளும் இதழில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் மானசீகனின் கட்டுரைத் தொடர் இவ்இதழில் தொடங்குகிறது. தற்காலப் புனிதர்களைவிட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகாலம் முந்திய முக்கோல் பகவர் எவ்விதம் முற்போக்கானவர் என்று அலசி இந்த இதழில் எழுதியுள்ளார். சர்ரியலிஸம் பற்றிய அமிர்தம் சூர்யாவின் கட்டுரை, வன்முறை குறித்த ஆதிரனின் பார்வை, க்ளோஸ்டு கர்டன்ஸ் என்ற திரைப்படம் குறித்த கவிஜியின் அலசல், கவிஞர் ராசி அழகப்பனின் கவிதைகள் குறித்த மு.முருகேஷின் திறனாய்வு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் குறித்த தி.கலையரசியின் கட்டுரை, நகுநாவின் கவிதை நூல் குறித்த அறிமுகம் என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.
Ratings & Reviews
No Review Found