வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்தியாறாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
சிறார் இலக்கியப் படைப்பிற்காகச் சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கரின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. வாழ்வைத் தேடியலையும் மனிதர்களின் தவிப்பினைப் பேசும் `தி ரோட்` திரைப்படம் குறித்த கவிஜியின் பார்வை, கவிஞர் இரா.மீனாட்சியின் படைப்புகள் குறித்த மு.முருகேஷின் வாசிப்பனுபவம், மேனரிஸம் குறித்த அமிர்தம் சூர்யாவின் ஆழமான எளிமையான விளக்கம், ரீயூனியன் தீவில் கொண்டாடிய தீபாவளி குறித்த இந்திரனின் பயண அனுபவம், காதல் குறித்த ஆதிரனின் அலசல், நீ காதல் நான் கஸல் நூல் குறித்த பிரபுசங்கரின் விமர்சனம் என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.
கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என நிறைந்திருக்கும் இந்த மாதத் தகவின் அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
Ratings & Reviews
No Review Found