வணக்கம். படைப்பு ‘தகவு’ எண்பத்தேழாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களுக்கான படைப்புக் குழும இலக்கிய விருதுகள் இவ்இதழில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என்னும் பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கியச் சுடர் விருது, படைப்புச் சுடர் விருது பெற்ற இலக்கிய ஆளுமைகளின் பட்டியலும் இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
கவிஞர் பிருந்தா சாரதியுடனான நேர்காணல் இவ்இதழிலும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. கவிஞர் கலாப்ரியா குறித்த பகிர்வுகள், கவிஞர் விக்ரமாதித்யனுக்குச்
சிற்றிதழாசிரியர் குன்றம் மு.இராமரத்நம் எழுதியுள்ள கடிதங்கள், கவிஞர் அம்சப்ரியாவின் கவித்திறனை வெளிப்படுத்தியிருக்கும் ‘கவிதைக்குள் கலந்திருக்கும் கதை’ பகுதி, சாப்பி திரைப்படம் குறித்து அலசியுள்ள உலக சினிமா பகுதி, மாயப்பசி நாவல் குறித்த வாசிப்பனுபவம், இன்பாக்ஸ் உரையாடல்கள் குறித்த எள்ளல் கட்டுரை என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.