வணக்கம். படைப்பு
‘தகவு’ எண்பத்தைந்தாவது இதழ் உங்கள்
கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர் ஜில்லேள்ள பாலாஜியுடனான நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது.
படைப்பு
குழுமம் வருடந்தோறும் நடத்திவரும் அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் பரிசுப்போட்டியில்
சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதைகள் இவ்இதழில்
வெளியாகியுள்ளன. உலக
சினிமா பகுதியில் ‘எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்’ திரைப்படம் அலசப்பட்டுள்ளது. கவிதைக்குள் கலந்திருக்கும் கதை பகுதியில் கவிஞர் சக்திஜோதி குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெயர் வைப்பதில் உள்ள நுண் அரசியலைப் பேசும் எள்ளல் கட்டுரை
இடம்பெற்றுள்ளது. பாரதியின் சக்திக்கூத்து, ஆதீண்டுக்குற்றி குறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன.