logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 201 - 220 of 806

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • கலைச்செல்வி

0   484   0  
  • January 2023

மாதாந்திர பரிசு

  • கி.சரஸ்வதி

0   496   0  
  • January 2023

மாதாந்திர பரிசு

  • நீ. சு. பெருமாள்

0   573   0  
  • January 2023

மாதாந்திர பரிசு

  • செ. தமிழ்ராஜ்

0   665   0  
  • January 2023

மாதாந்திர பரிசு

  • இலா. லிவின்

0   546   0  
  • January 2023

கவிச்சுடர் விருது

  • கனகா பாலன்

0   787   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • யாழ்ராகவன்

0   538   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • நெல்சன் வாசுதேவன்

0   747   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • அஸிஸ் எம் பாயிஸ்

0   593   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • பரமேஸ்வரி சண்முகம்

0   699   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • லெனின்

0   543   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • கந்தையா தில்லை விநாயகலிங்கம்

0   568   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • சுபி

0   569   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • மித்ரன்

0   656   0  
  • December 2022

கவிச்சுடர் விருது

  • ந.சிவநேசன்

0   1245   1  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • எஸ்தர் ராணி

0   576   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • மருதம்.ஷப.கஜலஷ்மி

0   550   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • திப்பு

0   690   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • ஜலீலா முஸம்மில்

0   568   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • யாழினி

0   641   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

கலைச்செல்வி

View

மாதாந்திர பரிசு

நீ. சு. பெருமாள்

View

மாதாந்திர பரிசு

செ. தமிழ்ராஜ்

View

மாதாந்திர பரிசு

இலா. லிவின்

View

கவிச்சுடர் விருது

கனகா பாலன்

 

இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் கனகா பாலன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

தென்காசி மாவட்டம் வெள்ளாகுளத்தை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் அவர்கள்  இஞ்சினியரிங்  பட்டய படிப்புடன், ஆசிரியர் பட்டய படிப்பும் முடித்தவர்.  தற்போது தன் குடும்பத்தாருடன்  சென்னையில் வசித்து வருகிறார்.

 

2017 லிருந்து தொடங்கிய கவிஞரின் எழுத்துப் பயணம். இப்போது சிறுகதைகள் ஊடாகவும்  தொடர்கிறது. ஆனந்த விகடன், தினமலர், கணையாழி, கல்கி ,தினமணி, இனிய உதயம்,காமதேனு,ராணி இன்னும் பல பிரபல வார மாத இதழ்களிலும் பல இணையதள இதழ்களிலும்  இவரது கவிதைகள் மற்றும் சிறுகதைகள்  வெளியாகி உள்ளன.

 

இதன் தொடர்ச்சியாக

அகயாழின் குரல்என் கனா யாழ் நீஉன் கிளையில் என் கூடு என்ற மூன்று கவிதை நூல்களும்,  பாறை குளத்து மீன்கள் என்ற சிறுகதை தொகுப்பொன்றும்  வெளியாகியுள்ளன.

 

பல கவியரங்க மேடைகளிலும்   கவிதைகளை அரங்கேற்றி பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ள கவிஞரின் சில கவிதைகளை கவனிப்போம்.

 

அம்மாவின் அன்பு என்பது எப்போதுமே விசேடமானது. அம்மாவை பாடாத கவிஞர்கள் என்று யாரும் இருக்க முடியாது.  ஒவ்வொருவர் பார்வையிலும் அவள் தனித்து விளங்குகிறவள் . கவிஞரும் கூட  அம்மாவின் தகுதியை பெற்றவர் என்றாலும் அவரின் பார்வையில், ஒவ்வொரு  அம்மாவுக்கும் கூட ஓர்   அம்மா தேவைப்படுகிறது என்பதே நுட்பமான பார்வைதான்.

1.        

**அம்மா**

 

நிலாவைக் காட்டி

நாயைத் தடவிக் கொடுத்து

மீசைமாமாவை பூச்சாண்டியாக்கி

உணவூட்டும் அம்மாவின் பசி

அரைகுறையாகத்தான் அடங்குகிறது

அழும் குழந்தையால்

 

படுக்கை ஈரத்தின்

நனையா இடைவெளிகளைத்

தேடித் தேடி

மழலையை நகர்த்தி போட்டவள்

மறந்தேதான் போகிறாள்

இரவு தூங்கவேண்டுமென்பதை

 

தப்புக்குத் தண்டனைதரும்

அப்பாவிடமிருந்து

தப்பித்துக் கொள்ள ஏதுவாய்

தாராளமாக இடங்கொடுக்கும்

வியர்வை மணந்த

அம்மாவின் முந்தானையில்

ப்ரியத்தின் ரேகைகள்

 

தோளணைத்துத் தோழியாக

தலைகோதி முத்தமிட

வேண்டலாகத்தான் இருக்கிறது

அம்மாவின் அருகாமை

நானொரு அம்மாவாகியுங்கூட...

 

அம்மாவின் அன்பை போல்தான் அத்தைகளின் அன்பும்.  அம்மாவிடம் காட்டாத நெருக்கத்தை கூட அத்தைகளின் முந்தானை இடம் பிடித்துக் கொள்ளும்.  உரிமையுடன் எதுவும் பேசும் தகுதியை அவர்களின் அன்பு எளிதாக  வழங்கி விடுகிறது.  வீட்டில் நுழைந்த அண்ணன் மகள் வீடெங்கிலும் வியாபித்து கிடக்கிறாள் என்ற கவிஞரின் வரிகள் பாசத்தின் வாய்ப்பாடு.

2.

 

**அன்பின் விடுமுறை**

 

என்

அனுமதி கேட்பதில்லை

எப்போதும் அவள்

விரும்பி உள்நுழைந்து

வியாபித்துக் கிடப்பாள்

வீடெங்கிலும் விசாலமாய்

 

சேலைக் கொசுவத்திலும்

லீலைகள் காண்பிப்பாள்

வேலைப் பொழுதினில்

வந்தென்னைக் கொஞ்சிச் செல்வாள்

 

தோழர் தோழிகளோடு

தொய்வின்றி அவள்

பொழுதுகள் இருக்க

வேளா வேளைக்கு

திண்பண்டம் மட்டும்

என் பங்காக இருக்கும்

 

சண்டை சச்சரவுக்கெல்லாம்

நாட்டாமை நான்தான்

எதிர்பக்கத் தீர்ப்பாயின்

எரிந்து விழுவதும் என்மேல்தான்...

 

முறைத்துக் கொள்ளும்

அவள் பார்வைக்கங்கே

முத்தமொன்றை கப்பங்கட்டி

இழுத்தணைத்து

இறுக்கிக் கொள்ளுதல்

பிரியமெனக்கு

 

உணர்வொழுகும் கண்ணீரோடு

விடைபெறுகையில் சொல்கிறாள்

"விடுமுறை நாளென்பது

அன்புக்கு இல்லைதானே அத்தே? "

 

நகரத்து இல்லத்தரசிகளின் தனிமையை ஒரு கதை போல் சொல்கிறது கவிஞரின் கவிதை. அவசர ஓட்டங்களில் உறவுகளின் பிணைப்பை சிதைத்து விடுகிறது நாகரீக வாழ்க்கை. இதனை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய ஓர் உளவியல் பிரச்சனையாகும். இந்த இல்லத்தரசியின் மனவோட்டத்தையும் வாசித்துப் பாருங்கள்…. நீங்களும் உங்கள் அடுத்த வீட்டு அழைப்பு மணியை நிச்சயமாக அழுத்துவீர்கள்….

3.

**அழைப்பு மணி**

 

விளையாட்டுக்கேனும்

அடித்துவிட்டுச் செல்லுங்களேன்

யாரேனும் அந்த அழைப்பு மணியை

 

எத்தனை நேரம்தான்

துணிகளோடும் தூண்களோடும்

உரையாடிக் கொண்டிருப்பது

 

தோட்டப் பூச்செடி

சிரித்த வண்ணமே

இருக்கிறதே தவிர

எதிர்த்து ஒரு வார்த்தையையும்

எனக்கு அனுப்புவதேயில்லை

எப்போதுமே

 

அந்தப் பூனைக்குட்டிக்கு

எப்போதும் சுயநலம்தான்

கொஞ்சச் சொல்லி

மடியில் படுத்துக் கொள்ளும்

தேடச் சொல்லி

சேலையில் ஒளிந்து கொள்ளும்

 

வேகப் பட்டுவாடாவில்

நொடித் தரிசனமாகும்

தபால்காரரின் உரத்த குரலும்

பால்காரரின் பழகிய முகமும்

நாளுக்கொரு தரம் மட்டுமே

 

நகரத்தில் தனிமையை

நாமாக ஏற்றுக்கொள்வது

நரகத்தின் சாயலை

நம்மீது திணிப்பதாகுமோ

 

அக்கம் பக்கத்து வீடெல்லாம்

அடைத்தபடியே இருக்க

தேவைப்படலாம் இந்த வாசகம்

 

ஒருவருக்கொருவர்

ஒத்தாசையாக இருக்கட்டும்

பேசத் தெரிந்த மனிதர்கள் சூழ் வாழ்வென்று மனம் நம்பட்டும்

 

விளையாட்டுக்கேனும்

அடித்துவிட்டுச் செல்லுங்களேன்

யாரேனும் அந்த அழைப்பு மணியை.

 

முதுமை என்பது காலம் நகர்த்திய கணக்கு.  அஃது ஒன்றும் வியாதியில்லை. எதற்காக அவர்களை இவர்கள்  ஒதுக்குகிறார்கள்? உண்மையில் அவர்கள்  இந்த உலகத்தால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.  அவர்களுடைய அன்பை பெறுவதே பெரும் நன்மையல்லவா!  அவர்களுக்கு கொடுக்க உங்களிடம் ஒன்றும் இல்லாமல் கூட  போகலாம்ஆனாலும் நேசப் பார்வையும், புன்னகையும் கொடுக்க என்ன பஞ்சம்? இதையும் வாசியுங்கள்….

4.

 

**முதுமையின் பரிசு**

 

பக்தி ததும்பிய அம்முகத்தில்

கொஞ்சம் அச்சமும் இருந்தது

வயோதிகத்தின் தாக்கமென

புரிந்து கொண்ட எனக்கு

வழி சொல்லத் தெரியவில்லை

 

வாஞ்சையாய் வீசிய பார்வையில் சிறிது

பெற்றிருக்கலாம் ஆறுதல்

 

ஊன்றிய கைப்பிடியை

தூக்கிப் பிடித்து வழங்கிய

ஆசிர்வாதத்தின் பாக்கியசாலி நான்

 

கடந்து செல்கையில்

உள்ளங்கையில் 

ஒத்தியெடுத்து

அனுப்பி வைத்த முகம்

எடுத்துச் சென்றது

பாசத்தின் வாசனையை

 

கரையக் கரைய

சேகரித்த நொடிகளை

நெஞ்சுக்குழியில் பத்திரமாக்கினேன்

அன்பு நாணயமாய்

 

இருக்கட்டும் அப்படியே

வேண்டுமென கேட்கவரும்

வேறொரு முதியவளுக்கும்

பகிர்ந்தளிக்க உத்தேசமெனக்கு.

பூங்காவிற்கு செல்வதென்பதே ஒரு மன மகிழ்விற்குதான். அங்குள்ள காற்று, இயற்கை சூழல், முகமறியா மனிதர்கள் என்று நம்மை பரவசப்படுத்தும் உணர்வுகள் கவிதையானால் எப்படியிருக்கும்! கவிஞருக்கு அங்குள்ள சூழல்கள் ஒவ்வொன்றுமே கவிதையாகி இருக்கிறது.  சிறுவன் தின்று வீசிய கோப்பையில் கொன்றை மலர் உட்கார்ந்திருக்கும்  அழகை சிலாகிக்கிறார். கல் மேசையில் விட்டு சென்ற யாரோ ஒருவருடைய  கர்ச்சிப் அவர் வாசனையுடம் இருக்கிறதாம்! ரசனையின் அழகில்  கவிதை

 

5.

 

பூங்கா புகார்கள்

 

           

வேர்க்கடலைக்கும் சுண்டலுக்கும்

காசுயில்லை கையில்

விற்க வருபவனிடம்

பேச்சுக் கொடுத்தால்

மூக்கு முட்ட நிறைந்து போகும் வாசனை

 

 

நேர்க்குத்து மின்சாரக் கம்பத்தில்

காகங்கள் இரண்டு

காதலித்துக் கொண்டிருக்கின்றன

பகுமானமாய் ஊட்டிவிட்டும்

 

சிறுவன் தின்று வீசிய

ஐஸ்கிரீம் கோப்பைக்குள்

கொன்றை மலரொன்று

குத்த வைத்திருக்கிறது

 

மறதியில் விட்டுச்சென்ற

யாரோ ஒருவருடைய

வாசனையோடு

கைக்குட்டை ஒன்று கல்மேசையில்

 

 

அடர் புற்களை

உருவமாற்று செய்கின்றான்

வீச்சுக்கத்தி கொண்டு

யானை ஒட்டகம்

மயிலென்றாகிறது அது

 

பனித்துளிக் கிரீடம்

நாளையில்லையென்ற

வருத்தத்தில்

நுனிகள் சிதறிக் கதறுகின்றன

மண்மீது...

 

ஒழுங்கு சரியில்லை

காரணத்திற்காக

உடனுக்குடன் வெட்டப்படுவதில்லை

எந்தவொரு மனிதனின்

தலையையும்

 

அடிதடியாகப் பொழிந்த மழை

அவசரமாக விரட்டிவிட்டது

பூங்காவிலிருந்து.

 

மேலும் கவிஞரின் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு

6.

 

மூக்குப்பொடி பெரியம்மா

 

 

மூக்குப் பொடியும்

முன்னெத்துன பல்லும்தான்

அடையாளம்

தெக்கு வீட்டு

பெரியம்மாவுக்கு

 

உள்ளூரு விசயம்

ஒன்னுவிடாம சேர்த்துவச்சி

ஒலுங்கு கடி பொறுக்க

ஒரலு மேல குத்தவச்சி

கூடக் கொறைய திருச்சினாச்சும்

 பொரணி பேசுவா

அத்தை ,சித்தி, பாட்டிககூட..

 

சுப்பம்மாக்க ஓட்டுவீட்டை

கார வீடாக்க

செங்கலு ஒருபக்கம்

மண்ணு மறுபக்கம்னு

மலை போல குமிஞ்சி கெடக்கும்

தெருக்கரண்டு இல்லாத

நாளு

பொடிசுக கூட்டத்துக்கு

பொலபொலனு அவுத்துவிடுவா

ராசாக் கதைகளை

 

ஒத்தையடிப்பாதை வழி

ஒரு கூட்டம்

அவ பின்னாடி போக

பக்கத்து ஊரு கொட்டகையில

ஒத்தப் படம் பாக்கியில்லாம

பார்த்து ரசிப்பா

மறுநாளு முழுக்க

வரிவரியாச் சொல்லுவா மத்தவக கிட்ட

 

துஷ்டி வீடு

தூங்காம இருக்கனும்னா

கடுங்காப்பி கூட வேணாம்

கதை சொல்ல அவ இருக்கையில

 

கல்யாண வீட்டு

காய் நறுக்கும் கூட்டத்தில

பலகைபோட்டு

சிரிக்க சிரிக்கப் பேசுவா

பலபேறப் பத்தி

 

பெரியய்யா போயி

பத்து வருஷமாச்சி

பெரியம்மாவுக்கு பேச்சு வந்தும்தான்.

 

**

7.

 

**பாறை முட்டைகள்**

 

 

யுகங்கள் எடுத்து

உருண்டோடி வந்திருந்த

கூழாங்கற்களின் தடத்தில்

இருக்கலாம்

எத்தனையோ காடுகளும்

மலைகளும்

 

பூமி பூஜையில்

விழுந்து வணங்குகையில்

முழங்காலில் வளவளத்து

கூசச் செய்கிறது மனதை

 

அஸ்திவாரத் தோண்டலில்

கிளர்ந்தெழும்

பாறை முட்டைகளின் கருவிலிருந்த

எண்ணற்ற மணல்கள்

பிறப்பெடுக்க

வாய்ப்பில்லை இனி

 

ஊரின் பெயரை

ஆறு' என முடித்து

நிற்க வைத்துவிட்டோம்

எங்கள் இல்லங்களை.

 

**

 

 

8.

 

**வன்மக் கிறுக்கல்கள்**

 

 

விளம்பரப் படுத்தியிருக்கிறான்

பெண்ணின் பெயரோடு

கைபேசி எண்ணினையும்

 

கழிவு இறக்க வந்தவனின்

கழிவிரக்கமற்றச்  செயலுக்கு

காறித் துப்பியும்

வெகுண்டெழும் கோபம்

ஆற்றாமையின் ரணம்

 

சுவற்றுக் கிறுக்கலாய்

வரைந்திருந்த படத்தில்

வரம்புகள் தாண்டிய

சபலக் கூறுகளின்

எச்ச புத்தி.

 

ஓங்கிச் சாத்திய

கழிவறைக் கதவின்

கைப்பிடிக் கம்பியில்

பிசுபிசுத்துக் கிடக்கிறது

குரூரக்காரனின் ரேகைகள்

 

அவசரமென்று

தத்தளிக்கும் மகளை

அடுத்தடுத்தப் பெட்டியாக

சோதித்து இழுத்தலைகிறாள்

அம்மா

 

சுகமென்று அனுபவிக்கும்

ரயில் பயணத்தின்

சன்னலோர இருக்கை

புழுங்குகிறது எனக்கு.

 

9.

 

**ஐந்தாம் வகுப்பு கற்பகம்**

 

வெயில் காய்ந்துகிடக்கும்

குடிதண்ணீர்க் குழாய்முன் வரிசையாகக் காத்திருக்கின்றன

வெற்றுக் குடங்கள்

 

பச்சைக்குப் பின் சிகப்பு

சிறியதற்குப் பின் பெரியது

உங்களுக்குப் பின் நானென முன் நிற்பவளிடம்

ஒப்புவித்தவளுக்கு

கசந்துகிடக்கிறது காத்திருப்பு..

 

பத்தடி தூரத்தில்

பச்சை எலுமிச்சை மரத்தின்

புளிப்பு நிழலை

தலையில் பூசி

பேச்சுத் துணைக்கு ஆள்தேடுகிறது

தனித்திருக்கும் குத்துக்கல்

 

கூடிக் களித்திருக்கும்

தேன்குழல் பூவின்

இனிப்பெல்லாம் உறிஞ்சியவள்

பார்வையோடு விட்டுவிடுகிறாள்

பறக்கும் தட்டான்களை

 

வரிசை நெருங்கியதாக

யாரோ குரல்கொடுக்க

பாஸா?  பெயிலா? வுக்கு

பதில் தெரியாமலே

பாதியில் விட்டுவந்தாள்

எருக்கம் பூவை

ஐந்தாம் வகுப்பு  கற்பகம்.

 

10.

 

 

**நகல்**

 

அவர்கள் வாடகைக்கு

எடுக்கப்பட்டிருந்த

வாசல் வரவேற்பாளர்கள்

 

உணர்வற்ற புன்னகையை

நேர்த்தியாக உதிர்க்கத் தெரிந்த

உயிருள்ள சிலைகள்

ஒட்டவேயில்லை மனதில்

 

முலாம் பூசிய முகத்தில்

ஒளித்து வைத்த

கவலை ரேகைகளை

கண்டுபிடித்தல் சாத்தியமற்றது

 

ஒப்புக்குத் தெளித்தப்

பன்னீர்த் துளிகளில்

கடைமைக்காக இருந்தது

மணந்த வாசம்

 

வெள்ளித் தட்டில்

குங்குமமும் சந்தனமும்

தொட்டுக் கொள்ளக்

கூறிய மொழியில் செயற்கையின் கூடு

 

மொய்யெழுதி

திரும்பி வருகையில்

நின்று களைத்து

நீட்டினர் தாம்பூலத்தை

பதிலுக்கு நன்றியுரைத்து

கேள்வி தொடுத்தேன்

சாப்ட்டீர்களா?

 

11.

 

*அதிரசனை*

 

பூக்கள் தோறும்

முத்தமிட்டுச் செல்கிறது

பட்டாம்பூச்சி

 

மெல்லிய

சிறகசைப்புக்கு

தாளம் கொள்கிறது காற்று

 

கால்களில் ஓட்டிய

மகரந்தங்களில்

பிறிதொரு நாளின்

பழுத்த கனி

 

 

விழியின் திறப்பில்

மையத்துக் குவியலாய்

 அதிரசனையின்

ஆச்சரியச் சுனை

 

 

 

12.

 

*பசி ஊற்று*

 

முவ்வேளைக்கு ஒருவேளையேனும் சாந்தப்படுத்த

முழுநாளையும் காவுவாங்கி

முழுமை கொள்ளாது தவிக்கிறது

அவளின் நாட்கள்

 

நேற்றிரவு மீந்த ரொட்டித்துண்டுகளை

வீதியெறியும் வியாபாரிக்கு

அப்புறப்படுத்துதல் ஒன்றேயன்றி

அக்கறையில்லை கையேந்துபவளின் உணவுத் தேவை

 

வானக்கூரையின் கீழ்

வெளிறிய விழிகளை

மூடுதலின்றி வேடிக்கை காட்டி

உயிர் கவ்விக் கழிகிறது

அகோரப் பசியிரவு

 

ஏந்திய கைகளை கீழிறக்குதலின்றி தொடரும்

அவளின் நீள் பயணத்தில்

மார்புத் தொட்டிலுக்குள்

கங்காருக் குட்டியாய் மகன்

 

அடங்குதலில்லா அந்த ஊற்றுக்கு

அடுத்தடுத்துத் தேவையாகிறது

செரித்துக்கொள்ளச் சிற்றுணவு

 

விடியலின் கணக்குக்கு விடையாகச்

சூரியஒளியை மட்டும் சொன்னால் எப்படி?

 

 

13.

 

*செம்பழுப்புப் பறவை*

 

 

உதிர்ந்த ஒற்றைச்சிறகை

அடையாளமாக்கி

கடந்து போகையில்

தேடியிருக்கக்கூடும்

 

பெயர் எதுவும் பெற்றிராத

அச்செம்பழுப்பு பறவையோ

தெரிந்த பெயர்களை

உச்சரிக்கும் மொழி அறியாது

 

கொழுத்தக் கிளைக்கம்பு நுனியிலமர்ந்து

எங்கோ குளித்துவந்ததின்

ஈரத்துவட்டலை

சிலிர்ப்பு முத்துகளாய்

சிதறவிட்டு மயிர்கூச்செறியும்

 

அந்தப் பறவை

அந்த மரம்

இந்த ரசனை

எதுவுமில்லை இப்போது

 

புதியவரவு வீடொன்றிற்கென

வேரோடு பிடுங்கிய மரத்தை

சவமாகச் சுமந்து நகரும்

ராட்ஷச வாகனத்தை

எப்படி ரட்சிக்க முடியும்?

 

14.

 

*உள்ளங்கைத் தீர்த்தம்*

 

மழை வந்து

அழைக்கும் போதெல்லாம்

ரசிக்கப் போய்விடுகிறது

மனம்

சன்னல் கம்பிகளில்

கைகளைப் பிடிக்கச் சொல்லி

 

இலைப் புனலில்

வழிந்தொழுகும்

தீர்த்த நீர்த்துளிகளை

உள்ளங்கை வாங்கி

உறிஞ்சிக் கொள்கிறது

அவ்வப்போது வாய்

 

உள்ளத்துப் பூரிப்பு

குதூகலித்துக் கிடக்க

கோயில் கருவறை தரிசனம்

வாசலின் முன்னே

பரிபூரணமாய்

 

 

14.

 

*சுயநலச் சுரப்பி*

 

 

வளர்த்தும் சிதைத்தும்

ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்களோடு

பின்னிப் பிணைந்து

சமாதானமாய் இசைவுதரும்

ஆதியிருப்பின் அமைதி ஒப்படைப்பில்

உள்வருந்தும் விசும்பலின் தூவலை

எவரும் கண்டுகொள்வதில்லை

 

சுயநலச் சுரப்பிகளை

சுமந்து திரியும்

அழுக்குடையவனின்

கைப்பிடி இதயத்தில்

மலைக்கோட்டையளவு மாசு

 

விரட்டி விரட்டி

நசுக்கத் துணிபவனின்

நாவெல்லாம்

நஞ்சுக்குப் போதை

 

15

 

**குற்றச்சாட்டுக் கூர்**

 

நிச்சயமாக தெரிந்திருக்கவில்லை

ஏதோவொரு சந்திப்பில்

துளியோண்டு நலம் விசாரிப்பு

உயிரொட்டிப் பிணையுமளவிற்கு

வீரியத்தை சுமந்திருக்கும்

அந்த வார்த்தையின் பலத்தை

 

மனதார அறிந்திருப்பதில்லை

தொட்டுத் தொட்டு

வெடிக்க வைக்கும்

சொடக்குத் தக்காளியின்

அத்தனை ருசியையும்

தொடர்ந்து வந்த உரையாடல்

சுமந்து கொண்டிருப்பதை

 

செல்லக் கோபத்தின்

சின்னப் பிரிவொன்று

வாள்குத்தி உணர்த்திப் போகும்

ஊடலின் ஆழம்

உள்ளத்தைக் கீறிவிடும்போதுதான்

வலிகொள்ளாமல் வந்துவிழுகிறது

குற்றச்சாட்டெனும் கூர்

 

 

16.

 

**பூவுக்கு வேலி**

 

சருகுகளைக்

கூட்டிப் பெருக்கி

அடியொட்டி ஒதுக்கி

நிமிரும் போதெல்லாம்

முன்நின்று கொண்டிருக்கும்

மரத்திற்கான ஆறுதல்

நிச்சயமாக இல்லை

 

 

துளிர்த்த இலைகளை

பத்திரமாக பிடித்து வைத்த

கருங்கிளையின் பதைபதைப்பை

வீசிக்கொண்டிருக்கும்

காற்று சொல்ல

கலவரமாகும் அந்நேரத்து மௌனம்

 

நீர்தெளித்து

கோலமிடுகையில்

மையப்புள்ளியில்

 வந்தமர்ந்த மஞ்சள் பூவுக்கு

கம்பிக் கோடுகளில்

வேலி பின்னிக்கொண்டிருக்கின்றன

மாவு உதிர்க்கும் விரல்கள்

 

 

17.

 

*நினைவு விரல்கள்*

 

 

நரம்புகளை நெம்பி மீட்டிய ஒலிகள்

அழைத்துச் செல்லும் பாதையில்

நினைவு விரல்களை

பத்திரமாகப் பிடித்து

பறந்து போகிறது

 

தொடராது போனாலும்

வற்புறுத்தலின்றி

வாகாகச் செல்லும்

வழியதை தெரிந்தேதான்

தெளிவாக நகருகிறது

 

எங்கோ சென்று

எதிலெதிலோ பிணைந்து

எதுவுமேறியாதது போல

 ஒட்டிக்கொள்ளும் அது

கொஞ்சம் அப்படி இப்படித்தான்

 

18.

 

 

பொறுப்புள்ள குடிமகன்*

 

 

 

கால்கடுக்க நின்றிருந்தவன்

 இடக்கையை குடைக் கம்பிக்கும்

வலக்கையைப் பணம் திணிக்கும்

துவாரப் பொந்திற்கும்

லாவகமாய் ஒப்படைத்து

வெட்கங்கெட்டு அளவு சொல்கின்றான்

 

பின்னின்று நெருக்குபவனின்

பொறாமையை அள்ளியபடி

கண்ணாடிப் போத்தல்களை

காதலியைப் போலவே

கழுத்துச்சுற்றி அணைத்து

அலுங்காமல் குலுங்காமல்

வெளிவருபவனின் பார்வையில்

மமதையின் மிதப்பு

 

நாவொழுகும் எச்சிலை

நைத்து  விழுங்கி

 ஆசைப் பேயாய்

நடந்து போகிறவனின்

வீட்டுச் சமையலறை

பூனை படுத்துறங்கும்

கூடம் இப்போது

 

பட்டை ஊறுகாய்க்கு

இத்துப்போன பித்தளைவாளி

அடமானம் ஆகிறது

காராச்சேவுக்கும் பத்தும்தான் அது

 

அச்சமும் பசியும்

அப்பிக் கொண்டு

அங்கொரு மூலையில்

அவனிரு மகனும்

நிறைமாத மனைவியும்

பெருந்தாக வறுமையை

சொல்லற்று மறைத்தபடி

 

ஊரடங்கில்

உலையேற்ற வழியின்றித்

தவித்தாலும்

போதையேற்றத் தவறவில்லை

பொறுப்புள்ள அக்'குடி'மகன்

 

19.

 

 

*எச்சரிக்கைக் கோடுகள்*

 

சிறகுகளில்

கிழிக்கப்பட்டிருக்கிறது

எச்சரிக்கைக் கோடுகள்

 

எங்கும் நிரவிய

அக்காற்று கூட

சலித்துத்தான்

மூச்சாகிறது

 

மன மத்தியிலிருக்கும்

அச்சரேகைகளின்

அகோர வளர்ச்சியை

எத்தனை ஒடித்தாலும்

துளிர்க்கத் தவறவில்லையது

 

உள்ளடங்கிக் கிடத்தலின்

உரையாடலற்ற தனிமையில்

ஊமையாய் குவிகின்றன சொற்கள்

 

கவிதையாய் கொஞ்சம் சேர்த்ததுபோக

கலையாகவும் மிச்சமிருக்கிறது

சிலபலச் சொற்கள் என்னோடு

 

உங்கள் சிறகுகளிலும்

கிழிக்கப்பட்டிருக்கிறதோ

எச்சரிக்கைக் கோடுகள்

 

20.

 

அப்பொழுதுதான் பெய்த பெருமழையில்

தன்னைக் கழுவிக்கொண்ட

அந்தப் பாறையின்

இடைவெடிப்பு வழியாக

எட்டிப் பார்க்கும் செடியின்

இலைகளையும் மீறி

பூத்துக் கொண்டிருந்தது

நம்பிக்கை

 

21.

 

இலைகளற்ற கிளையில்

தொங்கிக் கொண்டிருக்கும் மழைத்துளி

தழைத்தலுக்கான தலைகீழ் தவம்

 

22.

 

அளந்தெடுத்து

ஊற்றப்பட்ட

மூச்சுச் சுவாசத்தில்

பிறப்பெடுக்கும்

ராகவொலிகளின் தாய்

அந்தப் புல்லாங்குழலென்றே

இருக்கட்டுமே...!

 

23.

 

பாழடைந்த வீட்டின்

ஒன்றும் பாதியுமான எண்களோடு

ஊசலாடிக் கொண்டிருக்கும்

ஒடிசல் கதவில்

ஒட்டியிருக்கும் கைரேகை

கூட்டுக் குடும்பத்தின்

உறவுக் கணக்கு சொல்கிறது.

 

24.

 

பெரும் மௌனத்தில்

ஊறிக் கிடக்கும் வார்த்தைகளில் ஒன்றை

கவன இடுக்கியால்

நுனி பிடித்து

யாரிடமேனும் தந்துவிடக்

காத்திருக்கையில்

காற்றுக்குப் பறந்துகொண்டிருக்கும்

காகிதம்

கவிதை வளர்த்துக் கொள்கிறது...!

 

24.

 

தவம்போல் தனிமை

நிறைக்கிறேன்

 

உடலுருவம் தவிர்த்து

என்னைத் தேட

எதுவுமே மிச்சப்படவில்லை

 

எனக்கே எனக்கான கவிதை

எழுதக் கிடைத்த காகிதத்தில்

யாரோதான் நிரம்பியிருக்கிறார்கள்

இத்தனை நாளும்.

 

25.

 

ஈரச் செம்மண்ணில்

ஊறும்

வெல்வெட் பூச்சியின்

முதுகு தொட்டு

உன் உள்ளங்கைத் தீண்டலை

மீள் கொணர்கிறேன்

 

உயர வளர்ந்த

கிளைகளிலிருந்து

தொங்கும் விழுதுகளின்

கூரிய கண் பார்வை

வேர்களை நோக்கி மட்டுமே

 

நவம்பர் மழைக்கு

ததும்பும் குளத்தில்

உச்சந் தலையைத்

தொலைத்து

மூச்சுத் திணறும்

வேலி மரத்தின் முட்கள் கீறி

நீருக்கு வலிக்கிறதோ என்னவோ?

 

நீ

தொட்டுரசி நிற்கவேண்டுமென்பதை

தொட்டது யாவுமே

கிளர்த்திவிடுகிறது

புரிகிறதா உனக்கது..?

 

26.

 

 

கையிலிருந்த

சமோசாவின்

எஞ்சியிருக்கும்

எண்ணெயினை

ஒத்தி யெடுத்த

காகிதத்தில்

அச்சடிக்கப்பட்டிருந்தது

தெரிந்த கவிஞரின்

புகழ்மிக்க வரிகள்

 

கசக்கி சுருட்டி

இருக்கையின் அடியில்

உருட்டி விட்டவர்

கடைசி வரை தெரிந்திருக்கவில்லை

அந்தக் கவிதையின் வாசனையை

 

சிறிது நேரத்தில்

மொய்த்த எறும்புகள்

கூடிக் கூடிப் பேசுவது

என்னவாக இருக்கும்

 

**

 

27.

 

 

பேசிக்கொண்டிருந்த

அனைவரையும் ஒதுக்கி

பேசப் போனோம் இருவரும்

 

ஒரேயளவாக

எட்டெடுத்து வைக்க

கவனம் முழுவதையும்

பாதங்களுக்குப் பாய்ச்சினாய் ரகசியமாக

 

அவ்வப்போது

தொட்டுரசி நகர்ந்து கொள்ளும்

அவரவர் சுண்டுவிரல்களில்

பிடித்த நடுக்கம்

 

காற்றின் குறும்பில்

கலந்து கொண்ட

நம் வாசனைகளை

நுகரத் தவறவில்லை

நீயுங்கூட.

 

எதிரெதிராக ஊடுறுவிய

விழிகள்

நிலைமைக்குத் திரும்ப

இன்னுங் கொஞ்சம் நேரமாகலாம்.

 

உள்திருப்பிய மொழிகளோடு

அதிசயமாய்

ஆயிரம் பேசிவிட்டோம்

திரும்பலாம் வா..!

 

 

28.

 

 

 

யாரோயிருவர்

அடிதடியில்

புரளுகின்றனர்

கிழிகிறது சட்டை

 

காது நுழையக் கூசும் வார்த்தைகளைப்

பெருஞ்சத்ததில்

ஏலம் போடுகிறான்

நாசுக்கை நசுக்கியவன்

 

தயாராக இரு!

சீக்கிரம் வந்துவிடுவேனென்று

முத்த சத்தியமிட்டு

பணிக்குக் கிளம்பியவன்

எதிர்  வாகனம் மோதி

சக்கரத்திற்கு அடியில்

 

போதையிலொருவன்

சாக்கடையில் உருளுகிறான்

மறைப்பதை விட்டுவிட்டு

அங்கிருந்த மரத்தின்வோரம்

சுருண்டுகிடக்கறதவன் ஆடைகள்

 

மாராப்புத் தொட்டிலுக்குள்

மலங்க மலங்க

விழித்துக் கொண்டிருக்கும்

மழலை

யாசித்தலின் சூட்சுமம்

கற்றுக் கொண்டிருக்கிறது

தன் அம்மாவிடமிருந்து

 

அண்ணே!

அரைக் கிலோ தக்காளி

கால் கிலோ கத்தரிக்காய்

வெங்காயம் ஒன்னு

எவ்வளவு ஆச்சு?

நானும் அங்கு .

 

29.

 

கவனக் குறைபாட்டில்

சட்டைப்பையிலிருந்த சாவியைத்

தவறவிட்டவன்

பரிதவித்துத் தேடுவதைப் போலத்தான்

ஆத்திரத்தில் உதிர்த்த ஒற்றைச் சொல்லுக்கு

கோபித்துப் பிரிந்த

அன்பிற்காக ஏங்கிக் கிடப்பது.

 

 

 

30.

 

இந்த இரவு

தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டது

நானதன் மீது

துயரத்தைப் பூசி

குழப்பிவிடுவதாகச்

சடைத்துக் கொள்கிறது

 

மின்விளக்கு அணைக்கப்பட்டு

இருள் தங்குவதற்கு அனுமதித்திருந்த  அறையில்

 எனது ஐம்புலன்களையும்

ஒளித்துச்

சிந்தனைகளுக்குச்

சிக்கெடுத்தேன் சிறுநேரம்

 

பின்னர்

திரைச்சீலையற்ற

 என் கண்ணாடிச் சன்னல்களில்

மோதி நகரும்

வாகன ஒளிகளை எண்ணியபடி

விளையாடத் தொடங்கினேன்

 

முழுதாகத் தலை திருக்க மறந்த

நீர்க்குழாய்ச் சொட்டுகளின் பக்கம்

கவனம் திரும்பியது

இசையென்று நம்பியேக்

கலந்துவிட்டேன் அதனோடு

 

இரவுப் பூச்சிகளுக்குத்தான்

எத்தனை இனிமையான குரல்

நானதன் பின்னோடு

பனைவண்டி ஓட்டுபவளாகத் தொடர்கிறேன்.

 

மயில் பாதத்து வடிவ

நொச்சி இலை தாங்கிய

கிளையொட்டி வளர்ந்திருக்கும்

குண்டுமல்லி பூத்திருக்கிறது போல

நாசி நுழைந்த மணத்தோடு

ஆழ்ந்துவிட்டேன் அப்படியே

 

யாரோ

உற்றுப் பார்க்கிறார்கள்

அட!

இன்றுமொரு

பகல் தருவதற்கு

வந்துவிட்டான் சூரியன்

 

இனி

வழக்கத்திற்குச் சுழலவேண்டும்

பம்பரம் போல.

 

 

அன்புடனும் நன்றியுடனும்

 

View

மாதாந்திர பரிசு

யாழ்ராகவன்

View

மாதாந்திர பரிசு

நெல்சன் வாசுதேவன்

View

மாதாந்திர பரிசு

அஸிஸ் எம் பாயிஸ்

View

மாதாந்திர பரிசு

பரமேஸ்வரி சண்முகம்

View

மாதாந்திர பரிசு

கந்தையா தில்லை விநாயகலிங்கம்

View

கவிச்சுடர் விருது

ந.சிவநேசன்

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறவர் கவிஞர்  ந.சிவநேசன் அவர்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள ஆரியபாளையம் என்ற சிற்றூரில் தொடக்கப்பள்ளி  ஆசிரியராக பணி புரிகிறார்.

 

விவசாயத்திலும் கவிதையிலும் ஆர்வம் அதிகம் உள்ள கவிஞர்.  தனது இலக்கியம் மீதான ஆர்வத்தை கி.ரா, மேலாண்மை பொன்னுசாமி, சுஜாதா போன்ற ஆளுமைகளை வாசித்ததன் மூலம் துவங்கியதாகக் கூறுகிறார்.  இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'கானங்களின் மென்சிறை' படைப்பு பதிப்பகம் மூலம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுப்பை 'ஃ வரைகிறது தேனீ' என்ற ஹைக்கூ நூலாகவும் வெளியிட்டுள்ளார். 

 

கடந்த 12 வருடங்களாக கவிதைகள் எழுதி வரும் கவிஞரின் படைப்புகள்  காலச்சுவடு, படைப்பு தகவு, கல்வெட்டு, ஆனந்தவிகடன், புரவி, வாசகசாலை, கணையாழி, தி இந்து நாளிதழ், காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் தொடர்ந்து  வெளியாகி வருகின்றன.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ போட்டியிலும், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியிலும் இவரது ஹைக்கூக்கள் பரிசுக்குரியவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் பல்வேறு இதழ்களிலும் போட்டிகளிலும் ஆசிரியரது சிறுகதைகள் தனிக்கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக படைப்பு குழுமம் நடத்திய ஹைநூன்பீவி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2021ல் இவரது 'காக்காபொன்' சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. அதே போன்று அய்க்கண் நினைவுச் சிறுகதைப் போட்டி 2021, அமரர் சேசஷாயி நினைவுச் சிறுகதைப் போட்டி 2021 மற்றும் மதுரை திருநங்கையர் ஆவண மையம் நடத்திய சிறுகதைப் போட்டி 2021 ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

 

 

இவரது கவிதைகள்:

 

சில கவிதைகள் பெரும் பாட்டுப் பாடி ஒன்றுமில்லாமல் போகும். சில கவிதைகள் குறுகிய குடிசையின்  வாசலாய் காட்டி ;  பெரும் வனத்தையே  வியக்கும் வார்ப்பினையள்ளிக்  கொடுக்கும்.  இதுவும் அப்படியொரு கவிதைதான். மாட்டின் மணிச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வைக்கோலை அள்ளுகிறாள் குடியானத்தி. ஆனால் அங்கு மாடு இல்லை. கூரையில் அதன் கழுத்துக் கயிறு மட்டும்  மாட்டியிருக்கிறது.  ஒன்று மாடு இறந்திருக்க வேண்டும். அல்லது விற்பனை செய்யப் பட்டிருக்க வேண்டும்அதை வாசிப்பவரின் யூகத்திற்கே விடுகிறார் கவிஞர். இப்போது மாடு என்பது மாட்டைத்தான் குறிக்கிறதா என்பதும் வாசிப்பவரின் மனவோட்டமே நிர்ணயம் செய்யும்….

 

1

மணிச்சத்தம் கேட்டு

ஓடிவந்து வைக்கோலை அள்ளினாள்

காற்றில் ஆடியது

கூரையில் மாட்டியிருந்த கழுத்துக்கயிறு

.

 

ஈன்ற மகவுக்கு தாயாக இருப்பவளை விட பன் மடங்கு மேலானவள் வளர்ப்பு தாய்.  சில வசதி படைத்தவர்கள் அவர்களின் சுகங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், சிலர் அவர்களின் பணிச் சுமைகளின் காரணமாக குழந்தைகளை பார்த்துக் கொள்ள இயலாமல் வளர்ப்புத் தாதிகளை பணிக்கு அமர்த்துவதும் வழக்கம். பெயருக்குதான் அவள் தாதியே தவிர உண்மையில் அவளும் அக்குழந்தைக்கு ஒரு தாய்தான்.  அக் குழந்தைக்கு அம்மாவாகவே பாசத்தை ஊட்டும் ஒரு தாயின் மன நிலைதான் இக்கவிதை…..

 

2

வளர்ப்புத் தாயாக இருப்பதில் அவளுக்கு யாதொரு வருத்தமுமில்லை

வளர்ப்புத் தாயாக

பணியிலிருப்பது தான் வருத்தம்

 

தன்னை நேசிக்கும் ஒருவரின் வார்த்தைகளே மகிழ்ச்சியின் மன நிலைக்கு கொண்டு செல்லும் காலத்தில் , தன்னைக் கவர்வதற்காகவே   காதலி அனுப்பும் அவளின் வாட்ஸ் அப் புகைப்படங்களால் அவனின்   அழகு கூடுவதில் வியப்பில்லை என்கிறார் கவிஞர்….

 

3

காதலியின் வாட்ஸ்அப் பக்கத்தை

திறந்து

அனுப்பிய செல்பிகளை

எடுத்துப் பார்க்கும்

ஒவ்வொரு முறையும்

அழகு கூடிக்கொண்டே வருகின்றன.

 

அம்மாவின் தோடு என்றும் புதியதாகவே இருக்கிறதாம். அதற்கு காரணம் அது எப்போதும் அடகுக் கடையில் இருப்பதால்தான் என்கிறார் கவிஞர்.  அது ஏன் அங்கு போய் தன்னை புதிதாகவே வைத்துக் கொள்கிறது என்பதைதான் இக் கவிதை சூட்சமமாக சொல்கிறது.

 

4

அதிகநாள் அடகுக்கடை வாசம்

அம்மாவின் தோடு

எப்போதும் புதிதாய்.

 

 

விடுமுறைக்கு விடுமுறை கிராமத்துக்கு  வரும் நாட்களில் எல்லாம்  பாட்டியின் மூக்குத்தி பிரகாசிக்கிறதாம். ஆம். மற்ற நாட்களில் அவள் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளவே விரும்புவதில்லை. காரணம் அவளின் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் மட்டுமே அவளது அழகான உலகமெனும் போது  அவளது அலங்காரமும்  அப்போதுதானே மிளிரும். பாட்டியின் அழகு என்பது மூக்குத்தியில் மட்டும் மிளிர்வதில்லைஅவளின் அன்பு நிறைந்த மெனக்கெடல்களும்தான்.  பாட்டி இறந்த பிறகும், தன் உறவுகளை இன்னமும் தெய்வமாக இருந்து ஒன்று கூடச்செய்து அழகு பார்க்கிறாள் என்று கவிஞர் கூட்டு குடும்பங்களின் நேசத்தை நம்  கண்முன் நிறுத்துவது அழகு

 

5                               

தனிமை பூத்த நிலம்:

 

விடுமுறைக்கு விடுமுறை ஊருக்கு வரும் நாட்களில் மட்டும்

பாட்டியின் மூக்குத்தி அதிகம் பிரகாசிப்பதாகத் தோன்றும்

 

மூன்று மகன்களும்

வரும் நாளில்

தெருமுக்கில் கார் வளையும்போதே

நேராகிவிடும்

கூன் முதுகோடு கம்பீரமும்

 

கோழி நனைக்க சுடுதண்ணி

ஒருபக்கம் காய

குழம்பு செலவுக்கு அம்மியை இழுத்தரைப்பவளின்

கைகளில் அத்தனை தெம்பு

 

பேரன் பெயர்த்திகள் கண்டிராத புதுவகை தீனியெல்லாம்  அடுக்குப் பானையிலிருந்து

நிரம்பி வழிய

நகரத்துப் பண்டங்களை

நாசூக்காக ஒதுக்கிவிடுவாள்

 

பெருமழைக் காலங்களை சமாளித்தது போலவே

வயிறு காய்ந்த நாட்களில் வாரிசுகளை காத்த இரகசியமும் இரவு நேரக் கதைகளாகி

உறங்க வைக்கும்

எல்லோரையும்

 

விடைபெறும் நாளில்

பண்ணையம் பாழாய் போவது பற்றி புலம்பித் தீர்த்தாலும் ஊர் கண் படாமலிருக்க திருஷ்டி

சுற்றி அனுப்புவாள்

 

ஒரு வாரமாய் ஓடியொளிந்த ஒற்றைத் தனிமை மெல்ல எட்டிப் பார்க்க

அடுத்த பண்டிகையை  ஏக்கத்தோடு நினைத்தபடி சாய்வாள் கயிற்றுக்கட்டிலில்

 

இன்று

கிழவி மறைந்து ஆளுக்கொரு நினைவாய் அள்ளிப்போன பிறகும்

சொந்தம் வரும் நாளுக்காக

காரைவீட்டு மூலையில் காத்திருக்கிறது அவள்

ஊன்றி நடந்த கைத்தடி

 

வருடம் ஒருமுறை வந்திருந்து ஞாபகமாய் பொங்கல் வைக்க முடிவானது

வாரிசுகளுக்குள்

 

முன்பிருந்தே சாமிதான் அவள்..

இப்போதுதான் வணங்கத் தொடங்குகிறார்கள்!

 

கவிஞரின் பிற கவிதைகளையும் பார்ப்போம் :

                                      

6

அம்மாவின் சுண்டுவிரல் பிடித்து

கடைக்குப் போகும் போதெல்லாம்

மறுக்க மறுக்க

ஒரு ஆப்பிளை கையில் திணித்து

கன்னம் கிள்ளும் பழக்காரம்மா

இப்போது

கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறாள்

என் தொலைந்துப் போன பால்யத்தை.

 

 

 

7                                   

ஈரத்தின் வனம்:

 

மழை கொட்டிமுடித்த

வனாந்தரத்தின் மேல்

பூவாய் மலர்கிறது வானம்

மௌனத்தின் சாயத்தை

சொட்டவிட்டு தியானிக்கின்றன இலைகள்

அள்ளிமுடித்த இரகசியத்தின் முடிச்சவிழ

சட்டென பரவுகிறது

மேகங்களின் வாசம்

ஊறிய சருகுகளின் தாகத்தை

கசிந்து நிரப்புகிறது

ஈரத்தின் இசை.

 

 

 

8                           

அக்கறை :

நடை எப்போது திறக்குமென

நடந்தபடியே இருந்த

கிழவிக்கு

கடவுளை பார்க்கும் ஆவலை

புறந்தள்ளி

அன்னதானத்தை கேட்டு

முன்நிற்கிறது வயிறு.

உறவுகள் கைவிட்டதில்

உண்ணா நோன்பிருந்தும்

பிரசாதத்தை இலையில்

ஏந்தி நகர்கையில்

சர்க்கரைப் பொங்கலை மட்டும்

மடியில் பத்திரப்படுத்துகிறாள்

பேரனுக்கு

பிடிக்குமென!

 

 

9                        

தானியக் குதிர்:

 

நதி தொலைத்தவன்

கைகளில்

மீன் முட்டைகள்.

 

 

10                    

மின்சாரமில்லா இரவு:

 

இந்த இருட்டைப் பிழிந்து

கண்மை

செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாள்

என் மனைவி

இந்த நிலவை உருக்கி

ஐஸ்கிரீம் ஒன்றை

மூக்கெல்லாம்

ஈசிக் கொண்டிருக்கிறாள்

என் மகள்.

பாட்டி சொல்லிக்

கொண்டிருக்கும்

ராசா கதையை

கேட்டபடியே

கொறிக்கத் தோதாய்

இந்த நட்சத்திரங்கள்

சோளப்பொறிகளாய்

சிதறிக் கிடக்கின்றன

எனக்கோ போதும் போதும்

என்றாகிவிட்டது

இவற்றைப் பிடித்து

இக்கவிதைக்குள்

சிறை வைப்பதற்குள்.

 

 

11                 

பரிசு :

 

ஐஸ்கிரீம் ஒன்றை

நம்பி

உடன் வரும் சிறுமிக்கு

வழிகாட்ட

உங்கள் சுண்டுவிரல்

போதுமானதாய் இருக்கிறது.

ஆயுள் முழுதுமதன்

பால்யத்தின் நினைவுக் கோப்பையில் அந்தக் குளிர்ச்சி

பத்திரமாயும் இருக்கிறது...

பரிசுக்கு பதிலாக

கிடைக்கும்

அக்குழந்தையின் முத்தத்தை

குழந்தையின்

முத்தமாக மட்டும்

நீங்கள் பார்க்கும் வரை.

                       

12

நினைவின் பெண்டுலம்:

 

இறந்துவிட்ட

நண்பனின் முகநூல் பக்கத்தில்

நீண்ட நாள்களுக்குப் பிறகு

அவன் குழந்தையின் புகைப்படம்

பதிவேறியிருக்கிறது

 

சோகத்துக்கும் மகிழ்வுக்கும்

இடையே அலைவுறுகிறது

நினைவின் பெண்டுலம்

 

லைக் பட்டனுக்கும்

அழும் எமோஜிக்கும்

இடையில் விரல் தடுமாறிய

அந்த ஒரு கணம்

அவனுக்கே அவனுக்கானது.

 

 

 

 

13

தப்பிய வாழ்வு:

 

தொங்கும் புழுவின்

அருகில் வந்து

சிக்காமல்

தப்பிய மீனின்

கூடையளவு இன்பம்

காத்திருக்கும் தூண்டில்காரனின்

நதியளவு துக்கம்.

 

 

14

மழைப் பயணம்:

 

பேருந்திலிருந்து

இறங்கிப் போய்விட்டாள்

இரு மழைத்துளிகளை

காதில்

அணிந்தவள்

சன்னலோரக் கம்பியில்

ஆடுகின்றன

ஒரு நூறு ஜிமிக்கிகள்.

 

 

15

எது இலக்கியமெனத்

தொடங்கிய சண்டையிலிருந்து

பேச்சை முறித்துக் கொண்டவள்

புத்தாண்டுக்கு ஸ்மைலி அனுப்பியிருந்தாள்

அது

இலக்கியமாய் இருந்தது.

 

View

மாதாந்திர பரிசு

எஸ்தர் ராணி

View

மாதாந்திர பரிசு

மருதம்.ஷப.கஜலஷ்மி

View

மாதாந்திர பரிசு

ஜலீலா முஸம்மில்

View

Showing 201 - 220 of 806 ( for page 11 )