logo

படைப்பு 'பதிப்பகம்'

Showing 121 - 140 of 154

Year

காலநதி

  • ஆரூர் தமிழ்நாடன்

0   1451   0  
  • January 2020

இருளும் ஒளியும்

  • பிருந்தா சாரதி

0   2309   0  
  • September 2019

தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம்

  • பிரபு சங்கர்

0   2266   0  
  • September 2019

இசைதலின் திறவு

  • ஜானு இந்து

0   1846   0  
  • September 2019

நீர்ப்பறவையின் எதிரலைகள்

  • குமரேசன் கிருஷ்ணன்

0   1279   0  
  • September 2019

சொல் எனும் வெண்புறா

  • மதுரா

0   1492   0  
  • September 2019

வான்காவின் சுவர்

  • ஜின்னா அஸ்மி

0   1713   0  
  • September 2019

பொலம்படைக் கலிமா

  • தா. ஜோசப் ஜூலியஸ்

0   1783   0  
  • September 2019

ஆரிகாமி வனம்

  • முகமது பாட்சா

0   1463   0  
  • September 2019

யாவுமே உன் சாயல்

  • காயத்ரி ராஜசேகர்

0   1397   0  
  • September 2019

எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு

  • நடன.சந்திரமோகன்

0   1787   0  
  • September 2019

நீ பிடித்த திமிர்

  • அகதா

0   2131   0  
  • September 2019

மறை நீர்

  • கோ. லீலா

0   1913   0  
  • September 2019

வேர்த்திரள்

  • சகா (சலீம் கான்)

0   1562   0  
  • September 2019

நம் காலத்துக் கவிதை

  • விக்ரமாதித்யன்

0   1767   0  
  • September 2019

நீர் வீதி

  • ஜின்னா அஸ்மி

0   1456   0  
  • September 2018

பாதங்களால் நிறையும் வீடு

  • ஜின்னா அஸ்மி

0   1404   0  
  • September 2018

உயிர்த்திசை

  • சலீம் கான் (சகா)

0   1193   0  
  • September 2018

சிண்ட்ரெல்லாவின்  தூரிகை

  • குறிஞ்சி நாடன்

0   1276   0  
  • September 2018

காலநதி

ஆரூர் தமிழ்நாடன்

நூல் பெயர்     
காலநதி
(கட்டுரை)

ஆசிரியர்
ஆரூர் தமிழ்நாடன் 

பதிப்பு
முதற்பதிப்பு 2020

பக்கங்கள்
113

வடிவமைப்பு
முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்
ஆரூர் த. இலக்கியன்

வெளியீட்டகம்
இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்
படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு
படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்
ஜின்னா அஸ்மி

விலை    ரூ100

View

இருளும் ஒளியும்

பிருந்தா சாரதி

சமகால எழுத்துலகில் எக்காலத்திற்கும் பொருத்தமான எழுத்துக்களைக் கண்டறிந்து புத்தகமாக்கித் தரமான படைப்புகளைத் தன்வசம் கொண்டுள்ள படைப்புக் குழுமம் தனது பெருமைக்குரிய படைப்பாக வெளியிடும் ‘இருளும் ஒளியும்’ நூல் பதிப்பக நூல்களின் வரிசையில் மிக முக்கியமானதொரு நூல் என்றால் அது மிகையல்ல. வாசிப்பின் மேல் காதலும் வேட்கையும் கொண்ட ஒவ்வொரு சாமானியனும் வாசித்துத் திளைக்க வேண்டிய புத்தகம் ‘இருளும் ஒளியும்’.
நிலவறை இருட்டுக்குள்ளிருந்து பொக்கிஷப் பெட்டகமொன்றின் ஒளிக் கசிவில் நின்றுகொண்டிருப்பவனைப் போலத்தான் இப்புத்தகத்தை அணுக வேண்டியதிருக்கும். அப்பழுக்கற்ற அவ்வொளியானது படரும் பொழுது எதிரிருப்பவரின் மீது தெய்வீகம் படர்கிறது. இருளைக் குழைத்துச் செய்யப்படும் நிகழ்வுகளில்தான் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது என்பதை இப்புத்தகத்தின் இருள்வழி எங்கும் காண முடிகிறது. ஒரு மந்தகாசப் பொழுதில் தானாகக் கலங்கித் தெளியும் ஒரு பெரு நீர்ப் பரப்பைப் போல வாசித்து முடிப்பவரின் மனநிலை மாறிவிடும் என்பது திண்ணம். படைப்பாளி "பிருந்தா சாரதி" அவர்கள் தன் இருள் தூரிகை மூலம் வெளிச்சத்தை வரைந்து இப்பிரபஞ்சத்தைத் தொடுகிறார். அதில் ஏற்படும் இறைநிலை உணர்வலைகளை எல்லாம் ஒன்று திரட்டி இப்பிரபஞ்ச மானுடத்திற்கே திருப்பித் தருகிறார்.
சென்னையை வசிப்பிடமாகவும் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரைப்பட இயக்குனரான இவருக்கு இது ஆறாவது தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் நிறைய விருதுகளைப் பெற்றிருந்தாலும் தனது "எண்ணும் எழுத்தும்" நூலுக்குப் படைப்புக் குழுமத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் இலக்கிய விருதும் 2018 இல் சிறந்த கவிதை நூலுக்காகப் பெற்றவர்.

View

தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம்

பிரபு சங்கர்

நூல் வகைமை: கவிதை

நூல் விலை: 80

வெளியீடு: படைப்பு பதிப்பகம்

அட்டைப்படம்: கமல் காளிதாஸ்

 

நமது படைப்பு குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கத்தில் வரும் செப்டம்பர் 8ஆம் நாள் (8-9-2019) மதியம் 1.30 மணி முதல் நடைபெறவுள்ளது. அன்று இந்நூல் வெளியிட இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

View

எறும்பு முட்டுது யானை சாயுது

கவிஜி

எறும்பு முட்டுது யானை சாயுது
கவிஜி

ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றி இருக்கும் ஆனால் ஒரு தோல்வி ஒருபோதும் வெற்றியாகாது. இருப்பினும் எல்லா வெற்றியும் ஏதோவொரு தோல்வியிலிருந்தேதான் வர முடியும் என்ற தத்தத்துவமும்,  ஒவ்வொரு காலையும் இரைத்தேடப் புறப்படும் தாய்ப்பறவை கூடடையும் மாலைப் பொழுதில் இரையை வைத்துக்கொண்டு கூட்டையும் குஞ்சுகளையும் காணாமல் தேடும் கொடுமையை பிரதிபலிக்கும் சமூகத்தையும்.  வாழ்வின் தாத்பரியங்களை, காதல் தண்ணீர் மேல் தவழும் காமத் தாமரையைப்போல பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் வரிகள் வழியே சொல்லும் காதலையும் கலந்து, கனவு காதல் காலம் என  முப்பரிமாணங்களில் காட்சிப்படுத்தி இருப்பதே படைப்புக் குழுமம் வெளியிடும் இந்த "எறும்பு முட்டுது யானை சாயுது..." கவிதை நூல். முப்பது வரிகளில் சொல்ல வேண்டியதை மூன்று வரிகளிலோ அல்லது  சில சொற்களிலோ அடக்கிவிட்ட ஆற்றல் மிகுந்தது இந்த எழுத்து என்பதும், எளிய காட்சிகளில்தான் அடர்த்திமிக்க அடையாளங்கள் அரங்கேறும் என்பதும் இந்நூலை வாசித்தாலே போதும், அது எவ்வளவு உண்மை என்று  புரிய வரும். எளிமையை நேசிக்கும் ஒவ்வொரு இதயமும் இக்கவிதைத் தொகுப்பை தன் எழுத்தாகவே தன் ஸ்பரிசமாகவே நினைக்கும் என்பது இத்தொகுப்பின் பலம்.
வால்பாறையை பிறப்பிடமாகவும் கோவையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிஜி  அவர்களுக்கு இது நான்காம் தொகுப்பு. வால்பாறையே தனக்கு இலக்கியம் வளர முக்கிய காரணம் என சொல்லும் இவர்  சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும் கட்டுரைகளாலும் கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். மேலும்  தன் "ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்"  என்ற சிறுகதை தொகுப்பிற்காக படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருது -2018 விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View

இசைதலின் திறவு

ஜானு இந்து

இசைதலின் திறவு
ஜானு இந்து

ஓவியத்தி வழியே உள்நுழைந்து வெளியேறும் உயிர்ப்பை எந்தவொரு வார்த்தையாலும் சொல்லிவிட முடியாததைப்போலவே அகம் சார்ந்த எழுத்தும். இவ்வகையான எழுத்துக்களை வசப்படுத்துவதென்பது, மனதில் தோன்றி மறையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கைகளிலும் கூறிய வாளை பரிசளிப்பது போன்றது. காரணம் ரணங்களை ஊடறுத்துச் செல்லும் வகையில் சொற்களெனும் ராட்டினத்தை சுழற்ற வேண்டும். இம்மாதிரியான சுழன்றடிக்கும் சொற்களை தாங்கி நிற்கும் வரிகளைக் கொண்டே அகக்கண்களின் திரையை விலக்க முடியும். அப்படி அகக்கண்களின் வழியே தரிசித்ததை எல்லாம் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “இசைதலின் திறவு” தொகுப்பு. இன்றைய காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் ஆழ்மன சஞ்சலங்களை சொல்லும் எழுத்துக்களுக்கு தனியே ஒரு வாசகர் வட்டம் இருப்பது இத்தொகுப்பின் பலம்.
தமிழகத்தை பிறப்பிடமாகவும், பெங்களூரை வாழ்விடமாகவும், சமூக சேவகியுமான படைப்பாளி ஜானு இந்து அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவர் வாரப பத்திரிக்கைகளிலும், சமூக வளைத்தளங்களிலும் தன் எதார்த்தமிக்க பல படைப்புகளால் நன்கறியப்பட்டவர். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பைடத்தக்கது.

View

நீர்ப்பறவையின் எதிரலைகள்

குமரேசன் கிருஷ்ணன்

நீர்ப்பறவையின் எதிரலைகள்.. குமரேசன் கிருஷ்ணன்

                          கவிதைகளின் வகைமையை வைத்தும் அதன் வடிவத்தை வைத்தும் வரலாற்றை கணக்கிடும் அளவுக்கு இலக்கியம் ஒரு ஆராய்ச்சிக்கான அனைத்து தகுதியையும் பெற்று இருக்கிறது. அப்படி தோன்றிய பல வடிவங்களும் வகைமைகளும், காலப் போக்கில் காணாமல் போய்விட்டன இருப்பினும் ஒருசில வகைமைகள் இன்னும் மக்கள் மனதிலிருந்தும் அவர்களது மொழிநடையிலிருந்தும் ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஜப்பானிய ஹைக்கூ எனப்படும் குறும்பாக்களும் ஒன்று. மலையளவு செய்தியை கடுகளவு வார்த்தைகளால் கவிதையில் சொல்லி முடிப்பதால் என்னவோ இன்றளவும் உலகளவில் இலக்கியத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட குறும்பாக்களால் பழைய குளத்தில் புதிய பாஷோவின் நினைவலைகளால் உயிரூட்டப்பட்டு இருப்பதே   "நீர்ப்பறவையின் எதிரலைகள்". மண் சார்ந்தும், இயற்கை சார்ந்தும், மனிதர்கள் அல்லாத பிற உயிரனங்களின் வாழ்வியல் சார்ந்தும் என ஹைக்கூவின் நெறி பிறழாமல் எழுதியிருப்பது இத்தொகுப்பின் பலம்.

  சங்கரன்கோவிலை வசிப்பிடமாகக் கொண்டு, மின்சார வாரியத்தில் பணிபுரியும் படைப்பாளி "குமரேசன் கிருஷ்ணன்" அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பான "நிசப்தங்களின் நாட்குறிப்பு" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் மற்றும் படைப்புக் குழுமம் நடத்திய பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசும் பெற்றவர்.

View

சொல் எனும் வெண்புறா

மதுரா

சொல் எனும் வெண்புறா
மதுரா (தேன்மொழி ராஜகோபால்)

அடைகாக்கும் தாய்ப் பறவையின் அலகிலிருந்து வழியும் ஒருவவ துளி அன்பை போல நிகரானதொரு நிகழ்வு இவ்வுலகில் எதுவுமில்லை. அதைப்போலவே ஒரு சேய் தன் தாயைப்பார்த்து தனது மொழியில் முதன் முதலாக அழைக்கும் அந்த ஒற்றை சொல் எல்லா மொழிகளிலும் மிக உயர்ந்த சொல் எனவும் சொல்லி விடலாம். அப்படிப்பட்ட உருகும் வார்த்தைகளை ஒன்றுதிரட்டி கொஞ்சம் நவீனம், கொஞ்சம் அடர்த்தி, கொஞ்சம் புதுமை கலந்து உருவாக்கப்பட்டிருப்பதே "சொல் எனும் வெண்புறா" நூல். சிலந்தி கூட்டில் சிக்காத சிலந்தியின் வாழ்தலைப்போலொரு நீட்சியை ஒவ்வொரு கவிதையும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் வாசிக்கத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும். அதே சிலந்தி கூட்டில் சிலந்தியைத் தவிர மற்றவை எல்லாமே சிக்கிக் கொள்ளும் தன்மையை பெற்றிருப்பதைப் போலவே வாசிப்பவரும் வரிகளின் வசீகரித்தில் சிக்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
தஞ்சையை பிறப்பிடமாகவும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான படைப்பாளி தேன்மொழி ராஜகோபால் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் மதுரா என்ற பெயரில் எழுதிவரும் இவர், தன் நவீன கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். இவரின் கவிதைக்கு சான்றாக படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View

வான்காவின் சுவர்

ஜின்னா அஸ்மி

வான்காவின் சுவர்
ஜின்னா அஸ்மி

வயதாகும்போது இன்னும் வலிமை அதிகரிக்கும் வாழ்வு மொழிக்கு மட்டும்தான் உண்டு. ஒரு மொழியை வைத்தே அந்தச் சமூகத்தின் வரலாற்றை வரையறுத்துச் சொல்லிவிட முடியும். அந்த வரலாற்றுச் சரித்திரத்தை ஆதியிலிருந்து இன்றும்  தாங்கி நிற்பது கல்வெட்டுகளே. அதனால்தான் இணைய வசதிகள் பெருகிவிட்ட இந்நாட்களில் கூட கவிதைகளை தாங்கி நிற்கும் மின்னிதழிற்கு கல்வெட்டு என்று பெயர் சூட்டி அடிக்கல் நாட்டியது படைப்புக் குழுமம். படைப்பாளர்களால் குழுமத்தில் பதிவேற்றப்பட்ட சிறந்த கவிதைகளை மாதந்தோறும் மின்னிதழாக வெளியிட்டு படைப்பாளிகளின் அங்கீகாரத்தை இலக்கிய மேடையில் அரங்கேற்றம் செய்தது. அப்படி அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை மொத்தத் தொகுப்பாக்கித் தருவதே வான்காவின் சுவர். 
எல்லா வசந்தங்களையும் கொடுக்கும் இயற்கையால் கூட எல்லா காலங்களிலும் வசந்தங்களைக் கொடுக்க முடியாது ஆனால் எழுத்தால் கொண்டு வர முடியும் என்பதே இலக்கியத்தின் ஆகப்பெரும் சக்தி. அப்படிப்பட்ட இலக்கியத்தின் வாயிலாக உலகத்தையே ஒன்றிணைத்திருப்பது இந்நூலின் பலம். படைப்புக் குழுமத்தின் சொந்தப் பதிப்பாக வெளிவரும் நூல் இது.

View

பொலம்படைக் கலிமா

தா. ஜோசப் ஜூலியஸ்

பொலம்படைக் கலிமா
ஜோசப் ஜூலியஸ்

வரலாற்றை எடுத்துச் சொல்ல இலக்கியம் எப்போதும் ஒரு மிகச் சிறந்த கருவியாக பயன்பட்டது. அதை விட, பல வரலாறுகள் இலக்கியம் வாயிலாகத்தான் அறியவே முடிந்தது என்பது இலக்கியத்தின் பெருமையை சொல்லும் மற்றொரு பரிமாணம். அதிலும் சங்க இலக்கியங்கள் பற்றி சங்கம் வைத்து சொன்ன பெருமை தமிழுக்கு உண்டு. அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களின் பரிமாணங்களையும் அதன் பரிணாம வளர்ச்சியாக இருக்கும் அழகியல், யாப்பியல், இசை, வனப்பு, அணி நலம், எண்ண ஊற்றுகள் போன்ற இலக்கியத்தின் நெருங்கிய கூறுகளை ஆராய்ந்து தொகுக்கப்பட்டிருப்பதே பொலம்படைக் கலிமா என்ற ஆய்வு நூல். இலக்கிய அறிவையும் அதில் ஞானத்தையும் பெற விரும்புவோர்க்கு இந்நூல் ஒரு பொக்கிஷம் என்பது இதன் பெரும்பலம்.
சென்னையை வசிப்பிடமாகவும், பொருளாதாரம் மற்றும் கிறிஸ்துவ இறையியலில் முதுகலை பட்டங்கள் பெற்றவரும், தமிழக அரசின் தணிக்கைத் துறையில் உதவி இயக்குனராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவருமான படைப்பாளி ஜோசப் ஜூலியஸ் அவர்களுக்கு இது எட்டாவது தொகுப்பு. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமைமிக்கவர். மேலும் தன் கவிதைக்காக படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் மற்றும் தன் கட்டுரைத் தொகுப்பிற்காக படைப்பு இலக்கிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

View

ஆரிகாமி வனம்

முகமது பாட்சா

ஆரிகாமி வனம்
முகமது பாட்சா

மௌனப் புரட்சி என்பது வெறும் சப்தங்களால் ஆனதல்ல மாறாக அது வார்த்தைகளாலான எழுத்துப்புரட்சி. அப்படிப்பட்ட எழுத்துகளே, சப்தமிட்டு சொல்லாமல் சபதமிட்டு எழுதி சில சகாப்தங்களை படைத்திருக்கிறது வரலாற்றில். இப்பிரபஞ்சத்தின் தராசில், தாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை, பார்த்தவைகளை, பாதித்தவைகளை நிறுத்திக் காட்டுவதே படைப்புகள். அவ்வாறான சமூக சிந்தனைமிக்க படைப்புகளை அதிலும் ஆழ்மன நிலையில் தோன்றும் சத்திய வார்த்தைகளைக் கொண்டு கட்டமைத்து இருப்பதே "ஆரிகாமி வனம்" தொகுப்பு.  காடுகளை அழித்து காகிதம் செய்துகொண்டிருக்கிறோம் ஆனால் வருங்காலத்தில் காகிதத்தில் மட்டுமே காடு இருக்கும் நிலை வரலாம் என்பன போல எதிர்கால வாழ்வியலை எதார்த்தமாக சொல்லி இருப்பதும் உலகளாவிய சிந்தனைகளை உரக்க சொல்வதால் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கொடுத்திருப்பதும்  இத்தொகுப்பின் பலம்.
காரைக்காலை வசிப்பிடமாக கொண்ட படைப்பாளி "முகமது பாட்சா" அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவரது பல படைப்புகள்  பிரபல பத்திரிகை இதழ்களிலும், படைப்பு கலை இலக்கிய திங்களிதழான தகவு மின்னிதழிலும் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் மற்றும் படைப்புக் குழுமம் நடத்திய பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View

யாவுமே உன் சாயல்

காயத்ரி ராஜசேகர்

யாவுமே உன் சாயல்

காயத்ரி ராஜசேகர்

கவிதைகளைப் பதியமிட மழைக்காலத்தைப் போலொரு உகந்த நாட்கள் இல்லை எனச் சொல்லி விடலாம். மழைக்காலத்தின் துவங்கு நாட்களில் ஒரு வண்டல் நிலத்திலிருந்து ஒரு ரம்மிய மணம் சூழ்ந்தெழும்புவதைக் கவனிக்கத் தவறியவர்களுக்கும், காணக் கிடைத்திடாதவர்களுக்கும் படைப்புக் குழுமம் வெளியிடும் இந்த "யாவுமே உன் சாயல்" அவ்வுணர்வைத் தருவிக்கும் என்பது திண்ணம். ஒரு சராசரி மனிதனானவன் தன் வாழ்வுக்காலங்களை புகைப்படமெடுத்து தன் உற்றார்களோடு தன் அந்திமக் காலங்களில் இருந்து ரசிப்பது எவ்வளவு அலாதியானது என்பதை உணர்ந்திருப்பீர்களேயானால் இப்புத்தகம் உங்கள் வாசிப்பு அலமாரியில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளும். ஒவ்வொரு கவிதைகளையும் தன் பிரதியாகவே, பிம்பமாகவே வாசகர்கள் அனுபவிக்கலாம் என்பதை போல அமைந்து விட்டது இத்தொகுப்பின் பலம்.

தஞ்சையை பிறப்பிடமாகவும் சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி காயத்ரி ராஜசேகர் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் தன் எதார்த்தக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். இவர் கவிதைக்கு சான்றாக படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View

எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு

நடன.சந்திரமோகன்

எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு

நடன. சந்திரமோகன்

இலக்கியங்கள் எவ்வகையானாலும், அதை சுருங்கச் சொல்வதிலேயே அதன் உன்னதம் உணரப்படுகிறது. அந்த உணர்தலின் வெளிப்பாடே அதை உயர்த்தவும் செய்கிறது. அப்படி உயர்வான இலக்கியங்கள் செய்வதில் தமிழே முதன்மையான மொழியாகவும் மூத்த மொழியாகவும் இருக்கிறது. அதில் ஈரடியில் சொன்ன வள்ளுவரும், ஓரடியில் சொன்ன ஔவையாரும் முன்னோடிகள். அதன் நீட்சியாக ஹைக்கூ, சென்ரியூ, துளிப்பா, குறும்பா என இன்று உலகில் பல வகைமைகள் வலம் வருகின்றன. அப்படிப்பட்ட, சுருங்கச்சொல்லி பெரிய பொருள் தரும் குறும்பாக்களால் சமூகம், வாழ்வியல், அழகியல் என எல்லா உணர்வுகளையும் ஒன்றுதிரட்டி தொகுக்கப்பட்டிருப்பதே ‘எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு’ தொகுப்பு. சாமான்யர்களுக்கும் புரியும்வகையில் மிக எளிமையாக, எதார்த்தமாகச் சொல்லியிருப்பது இந்நூலின் பலம்.

தஞ்சையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவரான படைப்பாளி நடன. சந்திரமோகன் அவர்களுக்கு இது நான்காவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் மருத்துவப் பணியோடு இன்றும் எழுதிவருகிறார். தன் கல்லூரிக் காலத்தில், நாடகத்தை அரங்கேற்றி முதல்பரிசு பெற்றவர். மேலும் '80களில் தஞ்சையில், கவிநிலா எனும் திங்களிதழை கவிதைக்காக மட்டுமே வெளியிட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View

நீ பிடித்த திமிர்

அகதா

நீ பிடித்த திமிர்
அகதா

போகிறபோக்கில் புதிதாக ஓரிரு சொற்களை நமக்கே தெரியாமல் நாம் பிரயோகப்படுத்தி விட்டுப்போகும் பிராயத்திலிருந்து
தொடங்கிவிடுகிறது ஒவ்வொருவருக்குமான முதல் தேடல். அந்த தேடலின் தொடக்கப்புள்ளியிலிருந்து உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும், யாராலும் உணரமுடியாத ஆதிரகசியத்தின் திமிர் ஒளிந்திருக்கும். விழிகளின் ஆலாபனையாக வெளியே தெரியும் இப்படியான சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே "நீ பிடித்த திமிர்" தொகுப்பு. இதில் உள்ள சொற்களை உச்சரிக்கும்போது கவிதையாகிறது, அதையே உணரும்போது காதலாகிறது. "என் பால்யத்தில் நான் கிறுக்கி கொண்ட எழுத்தல்லவா இது " என வாசிப்பவர் எல்லோரும் உள்ளுக்குள் நினைத்து உருகும் நிலைக்கு தள்ளப்படுவதே இத்தொகுப்பின் பலம்.
பெரம்பலூரை வசிப்பிடமாகவும், தமிழ்த்துறை முனைவருமான படைப்பாளி "அகதா" அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பான "அசோகவனம் செல்லும் கடைசி இரயில்" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற தனித்துவமான விருதும் பெற்றவர்.

View

மறை நீர்

கோ. லீலா

View

வேர்த்திரள்

சகா (சலீம் கான்)

வேர்த்திரள்

சகா

எல்லா உயிர்களுக்குமான ஆதித்தாய் காடு. அதில் வாழும் உயிர்களுக்கு நீராதாரம் மழை. மழை இல்லையென்றால் காடு இல்லை அதேபோல காடு இல்லையென்றாலும் மழை இல்லை. அப்படி ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருக்கும் மழையையும் காடுகளையும் பற்றி  "மழைக்கு ஒதுங்கிய வானம்" என்ற தலைப்பின் கீழ் கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டிக்காகவும், "வேர்த்திரள்" என்ற தலைப்பின் கீழ் 'அம்மையார் ஹைநூன்பீவி' நினைவு பரிசுப்போட்டிக்காகவும், போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன்   முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் மனதில் நிறைந்துகொண்டிருக்கும் இந்த வேர்த்திரள் தொகுப்பு. இப்போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் பரிசுப்பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த இரு போட்டிகளுக்கும் வந்திருந்த ஆயிரக்கணக்கான சிறந்த கவிதைகளினின்றும் மிகச்சிறந்த கவிதைகளைப் பரிசிலுக்காகத் தேர்வு செய்தும் சற்றும் சலிப்புறாது இத்தொகுப்பிற்கான வாழ்த்துரை வழங்கியும் நம்மைப் பெருமைப்படுத்திய கவிஞர். விக்ரமாதித்யன் மற்றும் கவிஞர் வண்ணதாசன் அவர்களுக்குப் படைப்புக் குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.

View

நம் காலத்துக் கவிதை

விக்ரமாதித்யன்

 நம் காலத்துக் கவிதை

விக்ரமாதித்யன்

எழுத்து என்பது மொழியின் ரகசியம். இந்நவீன உலகில் காலத்திற்கு ஏற்ப எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்ததைப் போல எழுத்திலும் நவீனத்துவம் என்பது இயல்பானது. "முட்டைக்கு ஓடு என்பது குறிப்பிட்ட காலம் வரை தேவைப்படுகிறது. ஆனால் அது காலம் முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே ஓடு உடைக்கப்படல் வேண்டும்" என்பதாக பழமையை உடைத்து நவீனம் பிறந்தது. தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனையும் எண்ணங்களை, நம்பிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் மைய விழுமியாக இருக்கிறது இன்றைய நவீனம். அப்படிப்பட்ட நவீனக் கவிதைகளை ஆய்வு செய்து தொகுக்கப்பட்டிருப்பதே "நம் காலத்துக் கவிதை" எனும் கட்டுரைத் தொகுப்பு.  

தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் ”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்" உட்பட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை எழுதியுள்ளார். மேலும் 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருதும் பெற்றுள்ளார்.  

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாகத் தனது தொகுப்பை வெளியிட முன்வந்த படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் ரவி பேலட் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'படைப்பு' ஆசிரியர் குழுவுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. வளர்வோம்...! வளர்ப்போம்..!!

படைப்புக் குழுமம்.

View

நீர் வீதி

ஜின்னா அஸ்மி

View

பாதங்களால் நிறையும் வீடு

ஜின்னா அஸ்மி

எல்லா உயிர்களுக்கும் இந்த உலகமே ஒரு வீடு, வீடுகளே இல்லாத உயிர்களுக்கும்கூட. அதில் கருவறை தொடங்கி கல்லறை வரை பாதங்களால் நீக்கமற நிறைந்திருக்கும் வீடுகள் எத்தனை எத்தனையோ... அதில் எங்கெல்லாம் எப்படியெல்லாம் நம் பாதச் சுவடுகளைப் பதித்தோம் எனப் "பாதங்களால் நிறையும் வீடு" என்ற தலைப்பின் கீழ் போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன் முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் மனதில் நிறைந்துகொண்டிருக்கும் இந்த வீடு.

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டியாக நம் குழுமத்தில் நடத்திய "பாதங்களால் நிறையும் வீடு" எனும் கவிதைப் போட்டியின் கவிதைகள் தொகுப்பே இந்நூல். இப்போட்டிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சிறந்த கவிதைகளினின்றும் மிகச்சிறந்த கவிதைகளைப் பரிசிலுக்காகத் தேர்வு செய்தும் சற்றும் சலிப்புறாது இத்தொகுப்பிற்கான வாழ்த்துரை வழங்கியும் எங்களைப் பெருமைப்படுத்திய கவிஞர். கலாப்ரியா அவர்களுக்கும் மற்றும் இப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த போட்டியாளர்களுக்கும் படைப்புக் குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.

View

உயிர்த்திசை

சலீம் கான் (சகா)

நம் மனித சமூகம் எவ்வளவோ மகத்தான மனிதர்களை இவ்வுலகிற்குக் கொடுத்திருந்தாலும் சாதாரண சாமானியன் முதல் சாதித்த மகான்கள் வரை அனைவருமே ஏதோ ஒரு தாயின் கருப்பையிலிருந்தே ஜனித்தவர்கள். அப்படிப்பட்ட தாயின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்ல தாய்மை, தாய்ப்பாசம், தாயின் நினைவுகள், அம்மாவின் அரவணைப்பு, தாயின் தியாகம் இப்படி எவ்வளவோ இருக்கிறது. அதை விவரித்து முழுக்க முழுக்க தாயின் நினைவுகளைச் சுமந்து வரும் வரிகளைக் கொண்டு "உயிர்த்திசை" என்ற தலைப்பின் கீழ்ப் போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன் முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் கைகளில் விரவிக் கொண்டிருக்கும் உயிர்த்திசை.

இதனை 'அம்மையார் ஹைநூன்பீவி' நினைவு பரிசுப்போட்டியென அறிவித்து அதற்கு மொத்தப் பரிசில் தொகையையும் வழங்கிய எம் படைப்புக் குழுமத்தின் மூத்த உறுப்பினரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு. சலீம் கான் (சகா) அவர்களுக்கும், செம்மையாய் நடுவர் பணியேற்று தன் அழகுத் தமிழில் வாழ்த்துரை தந்த 'பாட்டரசர்' பழநிபாரதி அவர்களுக்கும் மேலும் போட்டியில் பங்கெடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை இச்சமயத்தில் உரித்தாக்கிக் கொள்கிறது.

View

சிண்ட்ரெல்லாவின்  தூரிகை

குறிஞ்சி நாடன்

மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் அமையப்பெற்ற தீபகற்ப இந்திய நாட்டை, மூன்று பக்கம் வாழ்வியலாலும் ஒரு பக்கம் அழகியலாலும் சூழ்ந்து நிற்கும் தீபகற்ப இலக்கிய நாட்டைப் போல வரிகளால் வடிவமைத்துக்கொண்டார் படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்கள். பின்பு அதன் (மா)நிலங்களைக் கவிதைகளாய் வரைந்தும் அதற்குள் மானுடச் சமூகத்தை வரையறுத்தும் பல ஓவியங்களாகத் தீட்டினார். கடைசியாக அந்த ஓவியங்களையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்த ஒரே கவிதை தேசமாக ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதே "சிண்ட்ரெல்லாவின் தூரிகை". கவிதைக்கு ஓவியம் வரையலாம்.. ஆனால் கவிதையையே ஓவியமாகத் தீட்டி இருக்கும் இந்த தூரிகையைப் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது.

படைப்பாளி "குறிஞ்சி நாடன்" அவர்கள் தன் பார்வைத் தூரிகை மூலம் இப்பிரபஞ்சத்தைத் தொடுகிறார். அதில் ஏற்படும் உணர்வலைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓவியமாக்கி "எங்கே எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்படும்" என்பதைப் போல மீண்டும் இப்பிரபஞ்ச மானுடத்திற்கே திருப்பித் தருகிறார். ஆனால் உணர்ச்சிகளாக இருந்ததை எல்லாம் உருமாற்றி உணர்வுகளாகத் தருகிறார். சென்னையை வாழிடமாகவும் துபாயை வசிப்பிடமாகவும் கொண்ட முதுகலைப் பட்டதாரியான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.

View

Showing 121 - 140 of 154 ( for page 7 )