logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

க. அய்யப்பன் கவிதோழன்

சிறுகதை வரிசை எண் # 305


அம்மையார் ஹைநூன் பீவி சிறுகதை பரிசு போட்டி 2023 முந்திரி பர்பி .......................... க. அய்யப்பன் அன்று ஒரு நிலையில் இல்லை வினோதினி. மனதில் எதையோ போட்டு உழற்றிக்கொண்டு இருக்கிறாளென்பது மட்டும் நன்றாக தெரிந்தது. மாலையில் பள்ளித்தோழி அனிதாவை பார்த்து விட்டு வந்ததிலிருந்துதான் இந்த மாற்றம். இரவு உணவை இயல்பாக உண்ணாமல் ஏதோ போலிருந்ததால் ஏன்டி என்னாச்சு சாயுங்காலதிலிருந்து நானும் பார்க்கிறேன் ஏதோ ஒரு மாதிரி இருக்கிற எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு என்கிறாள் அம்மா நீலவேணி ஒன்றுமில்லை அம்மா என் போன் ரீசார்ஜ் பண்ண போனப்போ அனிதாவ பார்த்தேன் அனிதாவுக்கு சார் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். நாளைக்கு பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்டாம். என் போனில் ரீசார்ஜ் தீர்ந்து போனதால் எனக்கு தெரிய வரல அதான் ஒரே டென்சனா இருக்கு மா. கொரோனா டைமா இருந்ததால சரியான தேதி அறிவிக்க முடியாமல் இழுத்து கொண்டே போன தேர்ச்சி அறிவிப்பு நாள் திடீரென அறிவிக்கப்பட்டிருக்கிறது கொரொனா கால கட்டத்தில் பெருசா பள்ளிகள் இயங்காத நிலையில் எல்லாம் ஆன்லைன் வகுப்பிலே நடந்ததால் மதிப்பெண் எப்படி வருமோ என்ற கவலை வினோதினிக்கு. பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற போது பன்னிரண்டாம் வகுப்பில் எப்படியாவது மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை. லட்சியமும் தான். ஆனால் அந்த ஆசையை நிராசை ஆக்கும் அளவுக்கு சோதனையா வந்த கொரொனா காலத்தை சபித்தாலும் காணொளி வகுப்பை ஒரு நாளும் தவறவிடாமல் மிக ஆர்வமாக கலந்து கொண்டாள். ஆரம்பத்தில் புதிய வழிமுறை கல்வி கற்பதில் கொஞ்சம் சங்கடம் இருந்த போதும் போகப்போக ஓரளவு நன்றாகத்தான் படித்தாள் ஆனாலும் மனதில் ஒரு வித அச்சம். அதான் வினோதினி டென்சனுக்கு காரணம். நல்லாத்தானே பரிச்சை எழுதியிருக்கேன்னு சொன்ன அப்பறம் ஏன் கவலை படுற. சும்மா எதையும் நினைச்சு வருத்திகாமல் சாதாரணமா இரு நீ வேணா பாரு எதிர்பார்த்ததை விட நல்ல மதிப்பெண் தான் வரும். கொஞ்சம் திருநீறுஅள்ளி பூசிவிட்டு நிம்மதியா தூங்கு என்றாள் வினோதினி அம்மா நீலவேணி. அம்மாவின் வார்த்தை கொஞ்சம் ஆறுதலா இருந்தாலும் வினோதினி மனசு முழு நிம்மதி அடையவில்லை லாக்டவுனில் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து விட்டு ஆப்லைனில் தேர்வு எழுதியது தான் அவளை பதற்றம் அடைய செய்தது. இன்று திடீரென நாளை தேர்வு முடிவுகள் வெளியாகப்போகிறது என்ற செய்தி கேட்டதும் மதிப்பெண்கள் எப்படி வருமோ என்ற கவலை அவளை வாட்டியது. காலை தேநீர் பருகி கொண்டிருந்த அப்பா நீலகண்டன் மடியில் மெல்ல தலைவைத்தாள்... அப்பா அவள் தலையை வருடியபடியே இன்னைக்கு ரிசல்ட்டாம்லா அம்மா சொன்னாள் ஏற்கனேவே இரவு நீலவேணி தெரியப்படுத்தி இருந்ததால் நேரடியாகவே கேட்டு விட்டு அதுக்கு ஏன் வினோதினி இப்படி வருத்தமா இருக்க... அம்மா சொன்ன மாதிரி எல்லாம் நல்லதே நடக்கும் இல்லைப்பா நான் தேர்ச்சி ஆகிருவேன்னு எனக்கு தெரியும் அப்பறம் என்ன... அதுக்காக கவலைப்படலப்பா நீங்கள் என்னிடம் படிப்பு விசயத்தில் ஒரு நாள் கூட திட்டி மிரட்டி கண்டிப்பா நடந்ததில்லை எனக்காக கடனுக்கு ஸ்கிரீன் டச் போன் வாங்கி தந்து அதுக்கு இன்னும் கூட தவனை கட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் முழு சுதந்திரம் தந்து என் மீது நம்பிக்கை வைச்சு நான் என்ன பண்றேன்னு கூட நீங்க இதுவரை கேட்டதில்லை. அதான் உங்கள ஏமாத்தாத அளவுக்கு மதிப்பெண் வரனும். அட கழுத இதுக்காகவா இவ்வளவு வருந்தப்படுத மொதல்ல டீய குடி மெல்ல கடிந்தபடி இந்த பொறுப்பான எண்ணம் உன்னிடம் இருப்பதே எனக்கு மனநிறைவும் நிம்மதியும் தான் நீ உன்னால முடிஞ்சத படிச்சு எழுதி இருக்க அதனால மதிப்பெண் எப்படி வந்தாலும் அப்பா ஏமாற்றம் அடைய மாட்டேன் நீ ரிசல்ட் வந்ததும் அப்பாவுக்கு போன் பண்ணு.... தேர்வு முடிவுகள் மத்தியானம் தானே என்று சொல்லி விட்டு வழக்கம் போல வேலைக்கு கிளம்பி விட்டார் மதியம் இரண்டு மணி இருக்கும் சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வை யொழுக வேலை செய்து கொண்டிருக்கையில் கைபேசியில் அழைப்பு மணி சப்தம் ஒலிக்க கைபேசியை எடுத்து பார்த்தார் நீல கண்டன். மகள் வினோதியிடமிருந்துதான் பச்சை பொத்தானை அழுத்தி காதில் ஒத்தி அலோ... அலோ அப்பா.. நான் பாஸாகிட்டேன். சரிம்மா சந்தோசம் நான் ராத்திரி வரும்போது உனக்கு இனிப்பு வாங்கிட்டு வாரேன்னு சொல்லி விட்டு அதற்கு மேல் வினோதினி எதையோ சொல்ல வந்ததை கேட்கும் முன்பே மின்கலன் தீர்ந்து கைப்பேசி அடங்கிப் போனது நீலகண்டன் கைப்பேசி பழைய கைப்பேசி என்பதால் மின்கலன் அதிக நேரம்தாக்குபிடிப்பதிலை அவ்வப்போது இப்படித்தான் மக்கர் பண்ணும் புதிய கைப்பேசி வாங்க ஆசை இருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி வெகுநாளகவே இந்த ஓட்டை கைப்பேசியை வைத்து ஒப்பேத்திக்கொண்டிருந்தார். அன்றும் அப்படித்தான் வினோதினி அதற்கு மேல் என்ன சொல்லவந்தாள் என்பதை திரும்ப அழைத்து கேட்கவும் வழியின்றி முழுமையாக கேட்பதற்கு முன்பே கைப்பேசி அனைந்து விட்டது. வேறு நபரின் அழைபேசிலிருந்து அழைத்து கேட்கலாமென்று ஒரு கணம் நினைத்த நீலகண்டன் வீனாக வினோதினியை தொந்தரவு செய்ய வேண்டாமென்று தொடர்பு கொள்ளாமலே விட்டு விட்டார். சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே வந்து போன இளந்தென்றல் போல வினோதினி தேர்ச்சி பெற்ற செய்தி இருந்தாலும் அவள் கம்மிய குரல் நீலகண்டனை எதுவோ செய்தது கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு திரும்பிய நீல கண்டன் வினோதினிக்கு பிடித்த "முந்திரி பர்பி" வாங்கி கொண்டு நடந்தார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புடைசூழ வீடு பரபரப்பாக இருப்பதை கண்டதும் திடுக்கிட்டவராய் கொஞ்சம் களேபரம் தொற்றிக்கொண்ட முகத்தோடு சற்றே எல்லோரையும் ஒதுக்கிய படி வீட்டில் நுழைந்த போது நீலகண்டன் அதிர்ச்சியில் உறைந்தார் வினோதினியை சுற்றி கூட்டம் நின்று கொண்டிருந்தன மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தது பற்றி எதோவொரு மீடியா பணியாளர் கேட்ட கேள்விக்கு விடாமுயற்சி இருந்தால் எந்த சூழ்நிலையில் இருந்தும் வெற்றி பெறலாம். என் அப்பா அம்மா எனக்களித்த சுதந்திரமும் என் விடாமுயற்சியும் தான் என்னை இந்த வெற்றிக்கு சொந்தமாக்கியது என்றும் வினோதினி பேட்டி தந்து கொண்டு இருந்தாள். அவளை உற்சாக படுத்தும் முனைப்பில் எல்லோரிடமிருந்தும் கைதட்டல் ஒலிஒலிக்க நீலகண்டன் முந்திரி பர்பியை எடுத்து வினோதினிக்கு ஊட்டி விட்டார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in