Aamir P
சிறுகதை வரிசை எண்
# 304
ஓர் இரவில் இடியும், மின்னலும் சேர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. காலை பொழுது விடிந்தது, பெற்றோர் இருவரும் மாணவியை எழுப்பினார்கள். மாணவி பள்ளிக்கு செல்ல காலை எழுந்தாள்.
விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததால் மாணவி தொலைக்காட்சியை விரைந்து சென்று பார்த்தாள். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டது. மாணவி குஷியில் துள்ளி குடித்தாள்.
பெற்றோர் இருவரும் சிரித்து கொண்டே மாணவியை வீட்டில் பத்திரமாக இருக்க சொன்னார்கள். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லுபவர்கள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பெற்றோர், வீட்டு வாசலில் காலணிகள் அணிந்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுது, மாணவியிடம் நாள் முழுவதும் ஒய்வு எடுக்காமல் நன்கு படிக்குமாறு தந்தை கேட்டுக்கொண்டார். வேலைக்காரி வரும்போது தனக்கு உணவுக்கு என்ன வேண்டுமோ கேட்டு சாப்பிடுமாறு தாயார் கூறினாள். மாணவி தான் வீட்டையும், தன்னையும் நன்று பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறினாள்.
வழக்கத்துக்கு மாறாக வேலைக்காரி வரும் நேரம் தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. மாணவி பசியில் வாடி கொண்டு இருந்தாள். பிறகு வேலைக்காரி வந்தாள். மாணவி பசியின் வேகத்தில் ஏன் இவ்ளோ தாமதம் நான் பசியில் வாடுகிறேன் எனக் கூறினாள். வேலைக்காரி மன்னிப்பு கேட்டு விட்டு உணவை தாயார் செய்து கொடுத்தாள்.
மாணவி உணவை உண்டு கொண்டே செய்திகளை தொலைக்காட்சி வாயிலாக பார்த்துக்கொண்டு இருந்தாள். மழை நீர் தேங்கி இருப்பதால், அதனை அகற்றும் பணி மேலும் இரண்டு நாட்கள் ஆகலாம், அது மட்டும் இல்லாமல் மழை அடுத்த இரண்டு மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் என செய்தி வெளியானது. புயல் உருவாக்கி உள்ளது எனவும் செய்தி வந்தது.
மாணவி மகிழ்ச்சியில் கத்திக்கொண்டு, பாட்டுப் பாடி மகிழ்ந்தாள். நண்பர்களுக்கு கைப்பேசி வாயிலாக இந்த செய்தியை பகிர்ந்து கொண்டாள். பள்ளிகள் திறக்க எப்படியும் ஒரு வாரம் ஆகும் நாம் விடுமுறையை நன்கு கொண்டாடுவோம் என பேசி கொண்டு இருந்தாள்.
வேலைக்காரி சோகமான முகத்துடன் வீட்டை பெருக்கி, துடைத்து கொண்டு இருந்தாள். மாணவி இதனை கண்டு சங்கடம் அடைந்தாள். தான் கடுமையாக பேசியது அவரை வேதனை படுத்தி இருக்குமோ என தோன்றி மன்னிப்பு கேட்டாள்.
வேலைக்காரி மாணவியிடம் நீ எனது மகள் போல் பெண்ணே, நான் என் மனதில் எதுவும் எடுத்து கொள்ளவில்லை எனக் கூறினாள். பிறகு ஏன் சோகமாக இருக்கிறீர்கள் எனக் மாணவி கேட்டாள்.
நேற்று இரவு கன மழை பெய்ததால் எனது வீட்டில் மழை நீர் புகுந்தது. நான், என் கணவர் மற்றும் எனது மகன் தூக்கத்தை இழந்தோம். மழை நீரை அகற்றம் செய்ய பார்த்தால் விஷ பூச்சி, பூரான், தவளை போன்ற உயிர் இனங்கள் இருந்தன. பயத்தில் நாங்கள் படுக்கையின் மேல் உட்கார்ந்து இருந்தோம். பொழுது விடிந்ததும் நானும், என் கணவரும் எதுவும் சாப்பிடாமல் வேளைக்கு வந்து விட்டோம். தண்ணீர் வடிந்ததும் மகனை வெளியில் இருக்கும் உணவகத்தில் ஏதாவது சாப்பிட சொன்னோம். அதிகாலை பிறகு, மழை பெய்யாததால் நான் தண்ணீர் வடிந்து விடும், என் மகன் சாப்பிட போவான் என நம்புனேன். இப்பொழுது, மழை அதிகரிக்கும் எனக் செய்தி வந்ததால் அவன் எப்படி வீட்டுக்கு செல்வான்? என்கே இருப்பான் என பெத்த மனம் துடிக்கிறது எனக் வேலைக்காரி கணீர் வடித்தாள்.
மாணவிக்கு குற்ற உணர்ச்சி வந்தது. தான் சுயநலவாதி ஆகிவிட்டதாக உணர்ந்தாள். அவள் மழை பெய்தால் விடுமுறை கிடைக்கும் எனக் மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால், பிறருக்கு நடக்கும் தீங்கு பற்றி அவள் சிந்திக்கவில்லை. மாணவி மனம் கலங்கி வேலைக்காரியிடம் தான் கடுமையாக பேசியதற்கும், பிறருக்கு நடக்கும் துன்பத்தைப் பற்றி சிந்திக்காமல் மகிழ்ச்சி அடைந்ததற்கும் மன்னிப்பு கேட்டாள்.
வேலைக்காரி மன்னித்து விட்டாள். அப்பொழுது, மழை வெளுத்து வாங்க தொடங்கியது. மாணவி வேலைக்காரியிடம் நீங்கள் இங்கேயே இருங்கள் மழை விடும் வரை, தங்களது மகனையும் இங்கே வர சொல்லுங்கள் எனக் கூறினாள். வேலைக்காரியும் மழை இப்பொழுது தான் ஆரம்பிக்கிறது. ஆதலால், இது நல்ல யோசனை எனக் ஒப்புக்கொண்டார்.
மாணவியின் கைப்பேசி வாயிலாக வேலைக்காரி தனது கணவரை தொடர்பு கொண்டார். கணவர், மகனை தங்களது உறவினர் வீட்டுக்கு கூட்டி செல்வதாக கூறினார். மழை நீர் அகற்றும் பணி வரும்வரை நாம் இங்கே தற்காலிகமாக இருப்போம் எனக் கூறினார். வேலை முடிந்ததும் நீயும் இங்கே வந்து விடு எனக் கூறினார். வேலைக்காரியின் மனம் அமைதியாது. கணவரின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தாள். இதை மாணவியிடம் கூறினாள்.
மாணவி மதியம் உணவு தங்கள் வீட்டுக்கும் சேர்ந்தே செய்யுங்கள் எனக் கூறினாள். வேலைக்காரி மகிழ்ந்தாள். பிறகு, மாணவி தங்களது கணவர் என்ன செய்கிறார் எனக் கேட்டாள்.
வேலைக்காரி, இப்பொழுது என் கணவர் தோட்டக்காரராக ஒரு பணக்காரர் வீட்டில் வேலை செய்கிறார். ஒரு நேரத்தில் நாங்கள் எங்களது சொந்த ஊரில் மழையை தெய்வமாக கும்பிடுவோம். மழை என்பது தெய்வத்தால் வானிலிருந்து அனுப்பப்படும் ஆசீர்வாதம் என கருதுவோம். இப்பொழுது, நாங்கள் துன்பமாக பார்க்கும் சூழல் வந்து உள்ளது.
மாணவி மழையை தெய்வமாக பார்ப்பீர்களா? எனக் கேட்டாள். ஆம் பெண்ணே, நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். மழை பெய்தால் ஆறு, குளம், ஏறி, அணை, கிணறு போன்ற நீர் சேமிப்பு இடங்கள் நிரம்பும். அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு முக்கியமானது. வறட்சியிலுருந்து பயிர்களை காப்பாற்றும், பயிர்கள் நம்மை பசியிலிருந்து காப்பாற்றும். கிணறு எங்களை தாகத்திலிருந்து எப்படி காப்பாற்றுகிறதோ; அதை போல் ஏறி, குளம் பறவைகளை தாகத்திலிருந்து காப்பாற்றும். தண்ணீர் உணவுக்கு எல்லாம் உணவாகும். எல்லாம் உணவுக்கும் தண்ணீர் இருந்தால் தான் சமைக்க முடியும். பல ஏழைகள் தங்களது வயிற்று பசியை போக்க தண்ணீர் குடித்து நிரப்புகிறார்கள். ஊரில் இருக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை தண்ணீரை குனிந்து இரு கைகளை இணைந்து தண்ணீர் கேன் வாயிலாக குடிப்போம். தண்ணீர் கடவுளின் அமுதம் அதை குனிந்து குடித்து நாங்கள் எங்களது மரியாதையை சொல்கிறோம். இப்பொழுது, சொல் தண்ணீர் வானில் இருக்கும் தெய்வத்துக்கு சமம் தானே? எனக் வேலைக்காரி கேட்டாள்.
மாணவி ஆமாம் எனக் பதில் அளித்தாள். அவள் ஆச்சரியம் அடைந்தாள். இப்படி பட்ட வாழ்வை விட்டு ஏன் நகரம் வந்தீர்கள்? எனக் கேட்டாள்.
மரங்கள் இல்லாமல் பருவ மழை பெய்ய குறைந்தது. வானில் இருக்கும் தெய்வத்திற்கு கூட எங்களால் ஊர் திருவிழா வாயிலாக நன்றி செலுத்த முடியவில்லை எனக் வேலைக்காரி கூறினாள்.
மரங்கள் ஏன் இல்லை? எனக் கேட்டாள் மாணவி. மரங்களை பணக்காரர்கள் வெட்டி வாணிகம், மரச்சாமான்கள் போன்ற செயல்கள் செய்கிறார்கள். மரம் வெட்டினால் ஒரு மரம் நடுவோம் எனும் எண்ணம் அவர்களிடையே இல்லை. நாங்கள் நட்டு நாளும் மரமாக வருடங்கள் ஆகும் எனக் வேலைக்காரி கூறினாள்.
மாணவி மனம் உடைந்து போனாள். நீங்கள் ஊருக்கு அண்மையில் சென்றீர்களா? எனக் கேட்டாள். வறட்சியில் பயிர்கள் உயிர் இழந்தன பிறகு நிலத்தை மனைக்கு விற்றோம். அதன் பிறகு, வேறு தொழில் தேடி நகரம் வர முடிவு எடுத்தோம். ஆதலால், வீட்டையும் விற்று நகரத்தில் கிடைக்கும் வேலைகளை செய்ய தொடங்கினோம். மழை பெய்யாவிட்டால், விவசாயிகள் விவசாயத்தை கை விட்டு விடுவார்கள் எனக் வேலைக்காரி கூறினாள்.
...சமையல் முடிந்தது. மழையும் சிறிது நேரம் விட்டது.
வேலைக்காரி நான் கிளம்புகிறேன் எனக் கூறி உணவும் எடுத்துச் சென்றாள். மாணவி வழி அனுப்பி வைத்தாள்.
மாணவி அன்று நிறைய குழப்பத்தில் இருந்தாள். பிறகு, விழிப்பு வந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தன்னை நல்ல இடத்தில் வெய்ததற்கு கடவுளிடம் நன்றி தெரிவித்தாள். நமக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைகிறோம்; பிறருக்கு அது எப்படி இருக்கிறது என்பதை நாம் உணர்வது இல்லை எனக் சிந்தித்தாள். அந்த ஆண்டு முதல், நண்பர்களோடு ஆண்டு தோறும் மரம் நடுக்க தொடங்கினாள். வேலைக்காரியிடம், நான் மாற்றத்திற்காக உழைப்பான் என சத்தியம் செய்தாள்.
படித்து மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றாள். சாலைகளை சீர் அமைத்தாள். மழை நீர் தேங்காமல், விபத்துகளும் நடக்காமல் மூன்று ஆண்டுகள் சிறப்பாக சென்றது. அரசு விருது கொடுத்து கவுருவப்படுத்தியது. இந்த புகழுக்கு பிறகும், தெருவுக்கு தெரு தண்ணீர் பம்ப் வைத்து கொடுத்தாள். தனது மாவட்டத்தில் இருக்கும் விவசாய ஊர்களுக்கு அணை கட்டி தந்தாள். பேரும், புகழுக்கும் உழைக்காமல் மாற்றத்திற்காக உழைத்தாள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்