KRISHNARAJ A
சிறுகதை வரிசை எண்
# 283
கால[னி]ணி காதல்
[ஒரு மரத்தின் அடியில் இருக்கின்ற பழைய கிழிந்த 30 வருட செருப்பு தான் இங்கு வந்த கதையை சொல்ல ஆரம்பித்தல்]
வணக்கம்,என் பேரு முத்துவீரன், இந்த மரத்துக்குகீழதான் 30 வருசமா கெடயா கெடக்குறேன்,எத்தனையோ சனம் தன் சொந்த சோக கதைய இங்கன நின்னு எளப்பாறிட்டு பேசிக்கிட்டு போவாக...
என் கதைய ஒரு பெயலும் கேட்க மாட்றானுவோ,அதாம்லே சுயசரிதை சொல்லலாம்னு இருக்கேன்...
[1980:செருப்புசெய்யும் தொழிலாளி சின்னான்]
சின்னான்: செல்வி டயர்,சொலுஷன் டப்பா கொண்டாப்ளே
என்னைய செஞ்சது இவகதான், எங்களுக்கு அப்பா.
Size பாத்து வெட்டி, தச்சி கலைநயமா என்னைய செஞ்சாக..
கொஞ்ச நேரம் பொறவாள,என் பக்கத்துல எங்கணக்கா ஒருத்தி வந்தா.. அவ பேரு பொம்மி, பாத்த மாத்ரத்துலயே காதல் வந்து போச்சி..
பொம்மி கொஞ்சம் பயந்துக்குவா..
நாங்க பேசிட்டே இருக்கும்போது,எங்கள மூடையில கட்டி கடைக்கி கொண்டு போனாக..
அங்கனதான் செலாப்பு மேல எங்கள சேத்து வச்சாக..
நெறயா பேரு வருவாவோ,கால்ல போட்டுபாப்பாக,வேணாம்னு சொல்லிடுவாக..
வெகுகாலம் சென்டு,சின்னா மொவ காத்தவராயன் [அண்ண மொற வேணும்] செருப்பு கேட்டாக,கடக்காரன் மேலயும்,கீழயும் பாத்துப்புட்டு எங்கள காட்னாரு,அண்ணெ போட்டு பாத்துட்டு,ரூவா கொடுத்தாக..
அண்ணெ நடக்கும்போதுதரையில ஒரசி வர்ற சத்தத்துல பொம்மியும் நானும் பேசிட்டே வந்தோம்...
பொம்மி: முத்து உம்மகிட்ட ஒரு விசயம் சொல்லனுமே
முத்து : சொல்லுப்ள [அவ ஆசைய எப்போ சொல்வானு நித்தம் ஏங்கினே]
பொம்மி: அது வந்து..
முத்து: இம்புட்டு அழகா வெக்க பட்றவ,அதயும்சொல்லேன்..
[நாங்க பேசிட்டு இருக்கப்பவே, ரெண்டுபேரு அண்ணென கூப்டாக]
மேலத்தெரு,கீழத்தெருனு பேசுனாக பட்டுனு அண்ணென அடிச்சிட்டாக
பொம்மி அடிக்காதிங்கனு கத்துனா,எல்லா மனுசபெயலும் செவுடாகிட்டாக.
செருப்ப கலட்டுலேனு சொன்னாக, அண்ணெ கலட்டுச்சி
பெறவு அழுதுட்டேபோச்சி, நாங்க ஈரக்கொலை நடுங்கி கெடந்தோம்
அவிங்க பார்வ எங்க மேல விழந்துச்சி,ஒரு ஆளு பொம்மிய கைல எடுத்து கல்லு மேல அடிச்சாக,என் கண்ணு முன்னாலயே நாரா கிழிச்சாக
எச்சி துப்பி தூக்கி கெடாசிட்டாங்க,பொம்மி அழுக காதுல கேக்குது இன்னமும்..என்னையும் பொம்மி கணக்கா சித்ரவத செஞ்சி கெடாசிட்டாக..
வெள்ளத்துல அடிச்சிட்டுவந்து வெயில்ல காஞ்சி இங்கன கெடக்கேன்.
இத்தன வருசத்துல எவ்ளோ புயலு மழைனு பாத்திட்டேன் பொம்மி தவிர..
மண்ணோட மண்ணா மக்கி போற முன்ன மவராசி மொவத்த ஒரு தரம் பாத்துட்டா போதும்.....
[2010:காத்தவராயனுக்குகல்யாணமாகி 2 ஆம்பள புள்ளஇருக்கு]
காத்தவராயன்: எங்கடே கெளம்பிட்ட
கௌதமன்: friend வீட்டுக்கு பா
காத்தவராயன்: எங்கன?
கௌதமன்: மேலத்தெருக்கு பா
காத்தவராயன்: shoe கேட்டில்ல திண்ணைல வச்சிருக்கேன்....
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்