R.ALLI
சிறுகதை வரிசை எண்
# 275
தலைப்பு : மாற்றம்
விக்கி வேகமாக டெய்லர் கடைக்கு வந்தான் .கடை வாசல் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி அவனுக்கு இன்னும் கொஞ்சம் வேகத்தை கொடுத்தது அப்பா எங்கேம்மா என்றான் தையல் மெஷினில் ஊசி நூல் கோர்த்துக்கொண்டிருந்த நாகவேணி வரும்போதே என்ன அவசரம் வீட்டுக்கு போனீயே பைய ஒழுங்கா வச்சியா முகத்தை கழுவிட்டு வரவேண்டியதுதானே என்றாள் அக்கறையுடன் . அப்பா எங்கேம்மா இதை தவிர வேற வார்த்தை இல்லை விக்னேஷிடமிருந்து டேய் வெளில போயிருக்காரு இந்தா கொஞ்சம் டீ குடிச்சுட்டு வீட்டுக்கு போ பிளாக்கி தனியா இருக்கும் .
இல்லமா அப்பாவை பாத்துட்டுதான் போவேன்
என்ன விசயம் என்றாள் நாகவேணி .
அம்மா எங்க ஸ்கூல்ல டூர் போறாங்க நானும் போறேம்மா அதான் அப்பாகிட்ட கேக்கணும் அப்பா வண்டிக்கு போயிருக்காங்க எப்போ வருவாங்கனு தெரியாம பயந்துகிட்டே இருந்தேன் நல்லவேளம அப்பா வந்துட்டாங்க என்றான் படபடப்புடன் அவன் பேச்சில் அப்பா அவனுக்கு சம்மதம் கொடுத்த திருப்தி தெரிந்தது .
.விக்கி அப்பா வந்தபிறகு பேசிக்கலாம் இப்ப வீட்டுக்கு போய்படி என்றாள் .
.தூரத்தில் அப்பா வருவதை பார்த்தான் இப்போ கொஞ்சம் பயம் சேர்ந்தது அப்பா விடுவாரா சரி கேட்கலாம் என்று நினைத்து கொண்டான் .சைக்கிள் நிறுத்திவிட்டு கடைக்குள் வந்தார் முத்தரசு .
அப்பா நாளைக்கு வீட்டிலதானேப்பா இருப்பிங்க
ஆமா ரெண்டு நாள் வீட்டிலதான் அதுக்குப்பிறகு வண்டிக்கு போவேன் ஏன் கேக்குறே
அப்பா நான் டூர் போகட்டா எல்லோரு போறாங்க
டூரா எங்க ? கன்னியாகுமாரிபா
அதெல்லாம் எதுக்குப்பா நமக்கு வேலை நிறைய இருக்கு
அப்பா ப்ளீஸ்பா
நான் கூட்டிட்டு போறேன் நம்ம வண்டியிலே போலாம்
போப்பா லாரிலா போவாங்க எல்லோரு பஸ்ல போறாங்கப்பா
முத்தரசு தன மனைவி நாக வேணியை பார்த்தார் தனக்கு உதவி செய்ய வேண்டுவதைபோல் .
கடைக்கு பணம் வசூல் பண்ண வந்த வயதானவரை பார்த்தவுடன் நாகவேணி தன தையல் மெஷினுக்கு மேல இருந்த பாக்ஸில் இருந்து பணம் எடுத்து கொடுத்தாள் . பணத்தை வாங்கிய மனிதர் ஏன் குறையுது இன்னைக்கு என்றார். இல்ல இன்னிக்கு பார்ட்டி வந்து பணம் கொடுக்கல துணி தைச்சு ரெடியாயிருக்கு ஆள் வரலை நாளைக்கு சேத்து வாங்கிக்கலாம் என்றாள் . வந்தவருக்கு இவங்க கடையொட ரொம்ப நாள் தொடர்பு அவசர தேவைக்கு பணம் வாங்கி கொள்வதும் அதை தினமும் வசூல் செய்வதும் தெரிந்ததுதான்.
அவர் போனபிறகு ஒரு நாள் விடாம கண்ணாடிகாரர் வந்துடறாரு என்றாள் நாகவேணி .
தம்பி உனக்கு எக் நூடுல்ஸ் வாங்கிக்க ப்ளாகிக்கு கொஞ்சம் வாங்கிக்க என்றார் முத்தரசு
வேணாம் நான் வீட்டுக்கு போறேன் எனக்கு வேணாம்
நான் வண்டிக்கு டியூ கட்டணும் இன்னும் ரெண்டு நாளில் எப்படியினு தெரியல பணம் கொஞ்சம் புரட்டணும் பத்தாது இப்ப இருக்கிறது புலம்ப ஆரம்பித்தார் முத்தரசு
நாகவேணிக்கு தெரியும் ஒவ்வெரு டியு விலும் இப்படித்தான் நடக்கிறது
நாகவேணி தன சம்பாதிப்பது செலவு போக மீதி முத்தரசுவிற்கு கொடுக்கணும் அப்பறமும் நகையை அடகு வச்சு கொடுக்கணும் வேற
ஏம்பா உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா மனைவியிடம் கேட்டார் முத்தரசு
பத்தாது கடைக்கு போகணும் என்றாள் நாகவேணி .
இது வழக்கமாக நடைபெறும் விஷயம்தான் சிறிது நேரத்தில் நாகவேணியிடம் செயினை வாங்கிக்கொண்டு அடகுக்கடைக்கு புறப்பட்டார்,சைக்கிள் நிறுத்தி கடைக்கு முன்னர் பார்த்தார் .கடை கொஞ்சம் கூட்டமாக தெரிந்தது .வெளியில் கொஞ்ச நேரம் நிற்கலாம் என்று நினைத்து பக்கத்து பீசா கடையை பார்த்தார் .புது கட்டிடம் பெரிய ஆளுங்க வந்து போற இடம் ஏக்கமா பார்த்தார் .கண்ணடி வழியாக உள்ளே இருப்பவர்கள் தெரிந்தது
முதல் டேபிளில் ஐந்து பேர் உக்காந்திருந்தார்கள். ஒரு அழகான பையன் எட்டு வயதிருக்கும். பக்கத்தில் அவனது அம்மா வெகு மாடர்னாக அப்பா ரொம்ப அழகாக இருவரும் அவனுக்கு ஆர்டர் செய்திருந்த பீசாவை சிறுது சிறிதாக ஊட்டிக்கொண்டிருந்தார்கள் .அவனது தாத்தா பாட்டி பக்கத்தில் அவனையே கவனித்து கொண்டு இருந்தனர். அம்மா அப்பா இருவரும் அவனிடம் பேசிக்கொண்டே இருந்தனர்.அவர்கள் யாரும் ரெஸ்டாரண்ட்ல் இருந்த யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை அவர்கள் முழு கவனமும் அந்த பையன் மேல இருந்ததுபையனின் பார்வை மேலே இருந்தது ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை
அவன் சாப்பிட்டு முடிகிற வரை பொறுமையாய் இருந்தது குடும்பம் .முத்தரசு ஆச்சரியமாய் பார்த்துகொண்டுஇருந்தார் .அவன் சாப்பிட்டு முடித்தவுடன் அப்பாவும் அம்மாவும் கைத்தாங்கலாக அவனை தூக்கி நிறுத்தினர் . பின் மெதுவாக அவனை நகர்த்தி காருக்கு கூட்டிப்போக நால்வரும் ஒருவருக்குறுவார் உதவிட அவனை காரில் உக்கார வைத்தனர் .இதை பார்த்த முத்தரசுவின் மனதில் எதோ நெருடல் .. அடகு கடையில் இருந்த கூட்டம் விலகியிருக்க உள்ளேயிருந்து குரல் வாங்க என்று அழைத்தது . உள்ளே போனார் . வழக்கமா வாங்குவதை விட ஒரு இரண்டாயிரம் சேர்த்து வாங்கினார் அடகு கடைக்காரர் ஆச்சரியமாய் பார்த்தார் எப்பவும் பணத்தை குறைத்து தான் வாங்குவார் முத்தரசு காசை செலுவு செய்வதில் கறார் ஆக இருப்பார்
பணத்தை வாங்கிய முத்தரசு நேராக எக் ரூல்ஸ் கடைக்கு சென்றார் . இரு பொட்டலம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்
விக்கி தன்னுடைய ப்ளாகியுடன் விளையாடி கொண்டிருந்தான் .
விக்கி இந்தா உனக்கு பிடித்த நூடுல்ஸ் ப்ளாகிக்கும் கொடு
ப்ளாகி முத்தரசுவின் காலை பிடித்து பற்றி கொண்டது
இருடா இருடா அப்பா வந்துடேனில முத்தரசு ப்ளாக்கியை தன் பிள்ளையாக பார்ப்பார்
விக்கி நீ நாளைக்கு பேர் கொடு என்கிறார்
எதுக்குப்பா என்றான் விக்னேஷ்
கன்னியாகுமாரி போய்ட்டு வா ஆனா பத்திரம்டா தம்பி
ஏங்க டியூ கட்ட பணம் பத்தாதுன்னு சொன்னீங்க இப்போ என்னாச்சு
பணம் கட்டிக்கலாம் அவன் போய்ட்டு வரட்டும் என்கிறார் முத்தரசு
அப்பா பணம் கட்டலைனா லாரி எடுத்துட்டு போய்டுவாங்கனு சொல்லுவீங்க . நான் போகலைப்பா நீங்க லாரிக்கு பணம் கட்டுங்க
இல்லை தங்கம் நம்ம லாரி என்னைக்கும் நம்மை விட்டு போகாது நம்ம வாசலில் இந்தா லாரிக்கி பின்னாடி மூணு லாரி ஒன்னு
ஒன்னா நிக்கும் பயப்படாதே நான் பாத்துக்கிறேன்
அப்பா சொல்ல சொல்ல விக்கி மனது முழுக்க சந்தோசம்
ஒரு பொட்டலத்தை பிரித்து தன் வளர்ப்பு பிராணிக்கும் இன்னொன்றை பிரித்து தானும் சாப்பிட ஆரம்பித்தான் அவனுக்கு அப்பா ஏன் மனதை மாற்றி கொண்டார் என்பது தெரியவில்லை தெரிந்து கொள்ளும் வயதும் அவனுக்கு இல்லை விக்கி உற்சாகத்தில் இருந்தான்
முத்தரசு மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்தார் .அருகில் விக்கி கொடுத்த எக் நூடுல்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வாலாட்டி கொண்டிருந்தது ப்ளாக்கி .
R .அல்லி திருச்சி
.
.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்