நூல் பெயர்
நீர் வீதி

ஆசிரியர்:
ஜின்னா அஸ்மி

பதிப்பு:
முதற் பதிப்பு 2018

பக்கங்கள் :
220

அட்டைப்படம்:
கமல் காளிதாஸ்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
150

நீர் வீதி

2018    107    0    0
மலைவழிப்பாதையொன்றில் ஒரு மழைக்காலத்தில் பயணப்படுகிறோம். வழியெங்கும் இன்னவென்று வரையறுத்துச் சொல்ல முடியாத நிறங்களில், வடிவங்களில் ரம்மியமான மலர்வனங்களைக் கடந்து வருகிறோம். அள்ளிச் சேமித்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என நாம் விழைவதும் உண்டு. ஆனால் இயந்திர வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களினால் அது நடைமுறைக்குச் சாத்தியமாவதில்லை. இணைய வசதிகள் பெருகிவிட்ட இந்நாட்களில் சமூக வலைத்தளங்களில் குழுக்களாகவும் அமைப்புகளாகவும் தமிழ் வளர்க்கும் நவீனத் தமிழ்ச்சமூகத்தில் தனக்கென ஒரு பாணியையும் குறிக்கோளையும் கொண்டு தனித்துவமாக இயங்கி வரும் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடும் தொகுப்பு “நீர் வீதி’’. எங்கெல்லாம் நீர் தன் வழித்தடங்களை அமைக்கிறதோ அங்கெல்லாம் வனப்பு மிகுந்த மலர்வனங்கள் சாத்தியம். அதனைப்போலவே படைப்பு தன் நீர் வழித்தடத்தில் அமைத்த, படைப்பாளர்களால் குழுமத்தில் பதிவேற்றப்பட்ட சிறந்த கவிதைகளை மொத்தத் தொகுப்பாக்கித் தருவதே இந்நூல்.
2018
142   2   0