நூல் பெயர்
இந்தப் பூமிக்கு வானம் வேறு

ஆசிரியர்:
ஆண்டன் பெனி

பதிப்பு:
முதற் பதிப்பு 2017

பக்கங்கள் :
80

அட்டைப்படம்:
கமல் காளிதாஸ்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
70
இப்பிரபஞ்சங்களின் அடுக்குகளில் தாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை, பாதித்தவைகளை வெகுநேர்த்தியாக அடுக்கிவைத்துச் சொல்பவையே கவிதைகள். அம்மாதிரிக் கவிதைகள் அப்பாவின் துருப்பிடித்த மிதிவண்டிச் சக்கரத்தைப் போல, மகள் பறக்கவிட்டு ரசிக்கும் சோப்புக்குமிழைப் போல வாசிக்கும் ஒவ்வொருவரையும் தனக்காக எழுதப்பட்ட கவிதைகளோ என்று சிலாகித்துச் சொல்லவைத்துவிடும். வெகுதூரம் கடந்துவந்த பாதையில் ஏதோ ஒரு முடுக்கில் ரசித்துவிட்டு வந்த மஞ்சள் பூக்களை மீண்டும் ஓடிச்சென்று பார்த்துவிட்டு வருதலைப் போன்ற அலாதியானவை இவ்வாழ்வியல் கவிதைகள் என்பது மிகையாகாது. அவ்வகையில் படைப்புக்குழுமம் தன் பெருமைக்குரிய வெளியீடாகத் தருவதுதான் " இந்த பூமிக்கு வானம் வேறு" கவிதைத் தொகுப்பு.

படைப்பாளி ஆண்டன் பெனி... இவர்தம் பெயரிலிருந்தே இவர் எவ்வாறு தன் அடுத்த தலைமுறைக்கு தன் சிந்தனைகளைக் கடத்துகிறார் என்பதை இவரைப்பற்றி நன்கறிந்தவர்கள் அறிவார்கள். தூத்துக்குடியைப் பிறப்பிடமாகவும் திருச்சியை வாழ்விடமாகவும் கொண்ட இச்சமூக நெறியாளர் வாரப்பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் நன்கறியப்பட்டவர். இத்தொகுப்பில் தன் பால்யத்தின் படிமங்களை, பதின்மத்தின் வேரூடுதல்களை, இளமையின் வாஞ்சைகளை எளிய மொழியில் வாசிப்போரை ஒரு இலகுவான மனநிலையில் வைத்திருக்கும்படியான கவிதைகளைக் கோர்த்திருக்கிறார். இவருக்கு இணையான மற்றொரு ஆளுமை பெருமைக்குரிய கவிஞர். திரு ஆண்டாள் செழியன் ஒரு நெடிய கவிதையைப்போல தன் அணிந்துரையால் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறார். அவருக்கு படைப்புக் குழுமம் தன் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.ஆண்டன் பெனி அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
2018
142   2   0
2018
108   0   0