நூல் பெயர்
அஞ்சல மவன்

ஆசிரியர்:
கட்டாரி

பதிப்பு:
முதற் பதிப்பு 2018

பக்கங்கள் :
72

அட்டைப்படம்:
கமல் காளிதாஸ்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
70

அஞ்சல மவன்

2018    230    2    0
காலத்தின் பிரதியை நம் கைகளில் தர வல்லமைப் படைத்த ஒரே ஆத்மா தாய். அவள் அன்பின் ஆரோகணம், அரவணைத்தலின் அவரோகணம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு கணமும், பிறப்பின் தொடக்கம் முதல் பிரிவின் முடிவு வரை நேரடியாகவோ நினைவுகளாகவோ நீக்கமற நிறைந்திருப்பது அதே தாய் மட்டுமே. அப்படிப்பட்ட தாயின் நினைவலைகளைத் தன் நெகிழ்வலைகளோடு கைக்கோர்த்து, பெருமிதங்களையும் பிரிவின் வதங்களையும் அதனுடன் கொஞ்சம் சேர்த்து "அஞ்சல மவன்" எனும் நூலை உருவாக்கி இருக்கிறார் படைப்பாளி கட்டாரி அவர்கள். அன்னையின் சிறப்பைப் பேசும் இந்த நூலை முதல் முறையாக மும்மொழித்(தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம்) தொகுப்பாகப் படைப்புக் குழுமம் பெருமையோடு வெளியிடுகிறது.

எத்தனையோ வகைமைகள் உள்ளடக்கிய தமிழ் இலக்கிய வரலாற்றில் வட்டார மொழி வகைமைக்கு இன்றுவரை தனியிடம் உண்டு. அதிலும் தனித்துவமிக்கதாக எழுதும் ஒருசிலரில் தனக்கெனத் தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர் படைப்பாளி கட்டாரி அவர்கள். பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள பேராவூரணியைப் பிறப்பிடமாகக் கொண்ட மருந்தாக்கியல் பேராசிரியரான இவருக்கு இது இரண்டாவது தொகுப்பு. இவர் சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் தன் எதார்த்தக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் தனது முதல் தொகுப்பான "முதுகெலும்பி" நூலுக்குப் படைப்புக் குழுமத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் இலக்கிய விருதும் 2017 இல் பெற்றவர்.
2019
135   0   0
2018
170   0   0