நூல் பெயர்
மௌனம் திறக்கும் கதவு

தொகுப்பாசிரியர்:
ஜின்னா அஸ்மி

பதிப்பு:
முதற் பதிப்பு 2017

பக்கங்கள் :
232

அட்டைப்படம்:
கமல் காளிதாஸ்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
180
கவிதைகளின் வடிவப்பெயர்ச்சி  வரலாற்றைச் சற்று உட்சென்று பார்த்தோமேயானால் அங்கு தனக்கென விதிகளை வகுத்துக்கொண்டு இப்படியாக இவ்விதிப்படி எழுதுவதே கவிதை என்றும் இதனுள் வருவதே வகைமை என்றும் எழுதி சிந்தனைகளை சிறைப்படுத்திக்கொள்ளும் ஒரு ஆதிக்க உத்தியாகவும் மேலாண்மைக் கபடமாகவுமே இருந்து வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகாக சமூகமாற்றங்களை வேண்டியும் ஒரு எளிய மனிதனின் வாழ்வியலை மற்றொரு எளிய மனிதனுக்குள் அழகியலோடு கடத்தி மனிதம் மிளிர்த்தும் எந்த வகைமைகளுக்குள்ளும் உட்படுத்தாத நவீனக் கவிதைகளுக்கு படைப்புக்குழுமமானது முன்னுரிமை அளித்து அப்படைப்புகளை சரியான முறையில் வெளிக்கொணரவும் செய்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் தன் குழுமத்தில் பதிவேற்றப்பட்ட சிறந்த கவிதைகளின் தொகுப்பாக"  மௌனம் திறக்கும் கதவு" எனும் பல்சுவைப் படையல்.

இத்தொகுப்பு வெளிவரக் காரணமாய் இருந்த படைப்புக்குழுமத்தின் தேர்வுக்குழுவினருக்கும், முழுத்தொகுப்பையும் வாசித்துணர்ந்து அழகியலோடு ஆய்வுரை அளித்த கவிப்பேரருவி. திரு. ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் படைப்புக்குழுமம் தன் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

படைப்பு குழுமத்தின் சொந்த பதிப்பாக வெளிவரும் நூல் இது.  எமது பதிப்பகத்தின் மூலமாக தமது கவிதைகளை வெளியிட சம்மதம் தெரிவித்த குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
2018
60   0   0