பெயர் :
கல்தூங்கும் நேரம் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
130
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 180
தனிமனித மையத்தை படைப்புகளின் வழியே தகர்த்துக்
கொண்டிருப்பதும், சுயத்தை மொழி, காலம், சமூகம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றுடன் உள்ளடக்கிப்
பார்ப்பதும், அனைத்து அதிகார மையங்களையும் கட்டுடைப்புக்கு உள்ளாக்குவதும், கலைக்கு
எதிரான நிலைப்பாடுகளைக் கலைத்துப்போட்டு ஆடுவதும், கேள்விக்குள்ளாக்குதலை பதில் தாக்குதலில்
கேள்விக்குறியாக்குவதும், எல்லாவிதமான தத்துவ முயற்சிகளையும் மறுத்தல் கூறுகளைக் கொண்டு
தர்க்கரீதியில் எதிர்கொள்வதும், பழைய இலக்கிய மரபுகளை உடைத்து புதிய சொல் நெறிகளை கையாள்வதும்,
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஒரு வகை சிந்தனையும் அதற்கேற்ற படைப்புகளும் இருக்கும்
என்ற போக்கை மாற்றி, நவீனத்துவ எழுத்து கூறுகளுடன் சிறப்பான படைப்பை கொடுக்க இயலும்.
அதில் சிக்கலோ குறையோ இல்லாமல் கோட்பாடுகளையும் வகைமைகளையும் கடந்து ஒரு புனைவை கவிதையில்
உருவாக்க முடியும் என நிரூபித்துக் காட்டியது கவிஞர் விக்ரமாதித்யனின் படைப்புகள்.
அம்மாதிரியான அவரின் கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “கல் தூங்கும்
நேரம்” எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.