நூல் பெயர் : சேகர் சைக்கிள் ஷாப் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
206
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 280
எழுத
வேண்டும் என்ற எண்ணம் உதித்த மறுகனம் மனதில் தோன்றும் மொழி கவிதை மொழி. அது கவிஞனை
ஆரத்தழுவிக் கொள்ளத்தயாராகி விடுகிற நேரத்தில் எளிமையான சொற்களுடன் கவிதையாக வெளியேறி
விடுகிறது. எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருவதைப்போல எழுத
வரும் எல்லோருக்கும் முதலில் தோன்றுவது கவிதை வடிவமாகவும் இருக்கலாம். காரணம் அதன்
எளிமையும் அதன் சுருங்கிய வடிவமேயாகும். ஒரு சூழலைப் பொறுத்து உருவாகும் காட்சியும்,
அக்காட்சியைப் பார்த்து உருவாகும் உணர்ச்சிகளும் ஒன்றிணைந்து காலத்தை கடந்து நிற்கும்
கவிதையாகின்றன. அப்படிப்பட்ட கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
“சேகர் சைக்கிள் ஷாப்” நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம்
ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின்
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.