நூல் பெயர் : வேட்டையில் அகப்படாத விலங்கு
நூல் வகைமை :
கட்டுரைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 690
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 790
கோணங்கி எனும் தணிக்கை செய்யப்பட்ட ஒரு வாஸ்தவமான கலைஞனின்
புனைவுருவை இந்நூல் பலமான குரல்களின் வழி பாரபட்சமற்ற திறந்த உரையாடலுக்கான வலியை திறக்கிறது.
கோணங்கியின் வசப்படுத்தியுள்ள மொழி மிகுப்புனைவும் அதீத கனவின் மாய வலை பின்னலும் மட்டுமேயல்ல.
கோணங்கி வாழும் பிரபஞ்சத்துக்கு மாற்றாய் வேறொரு ஒளிரும் நூதன விசும்பை சிருஷ்டித்து
வருகிறான் சதாகாலமும். புனை கதைகளிலும் நாவல்களிலும் கோணங்கி இன்று அடைந்துள்ள இடம்
உலகளாவிய தன்மையில் ஆழமும் மேன்மையும் உடையது. கணந்தோறும் கவித்துவ ஊடாட்டங்கள் நிறைந்த
கோணங்கியின் மொழி என்ற ஒன்று படைப்புடன் நகர்ந்து பொன்மொழி ஒன்றில் கலந்து புதிய ரசவாதம்
ஆகியுள்ளது. கோணங்கி எவ்வளவு தூரம் தணிக்கை செய்யப்பட்டானோ அவ்வளவு தூரம் பிடிவாதமாக
அனைவரின் மையல் மகுடியாகவும் இருந்திருக்கிறான். கலை வாழ்வின் அர்ப்பணிப்புக்கு கோணங்கி
தனித்துவமான முன்னுதாரணம் ஆகியுள்ளான். அனைத்து தளைகளிலிருந்தும் விடுபட்ட ஒரு அரூப
சொல்லி. வேறு வேறு மனச்சாயைகளின் வழி பின்தொடரப்பட்டு உலகின் கடைசி ரயில் நிலையத்தில்
மணல் பிளாட்பாரத்தில் கரி என்ஜின் புகை மூச்சுவிடும் சிலோன் போர்ட் மெயில் ரயில் நாடோடிகளோடு
கமலா ஆரஞ்சு விற்கும் மூதாட்டிகளோடு சிரங்கு வத்திச் சிறுவனாய் அமர்ந்திருக்கிறான்.
கமலாப்பெண் தன்னுடைய ஆரஞ்சை ஆலிவ் லீனரின் சிறுகதையாய் கொடுக்க
விரும்பினாள். கமலாவின் கூடையில் ஒரு ஆரஞ்சுப்பழமென
அவன் கைமூலம் எழுதப்பட்ட கலை வடிவம் உடையதாகவும் தெளிவற்ற இருப்பின் மஞ்சள் வட்டமாகவும்
ஜன்னலுக்கு வெளியே பறந்து மிதந்து கொண்டிருக்க இடமற்று ஓடும் ரயிலோடு கூட வந்து கொண்டே
இருக்கிறது கோணங்கியோடு. கலைஞன் அதிகமானோரிடம் ஆரஞ்சு வட்டமாய் மேய முற்றத்தில் ஒவ்வொருவரிடமும்
கொடுத்த நவீனத்தின் சிறு சிறு கலைகளை ஒளித்துண்டுகளாய் கொடுத்து செல்கிறான்.