நூல் பெயர் : சட்டையை உரித்துக்கொள்ளும்
பாம்பு (கட்டுரைகள்)
ஆசிரியர் :
அமர்தம் சூர்யா
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
108
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 150
கண்ணாடியில்
பார்க்கும்போது முகம் மட்டும்தான் தெரியும். மனக்கண்ணாடியில்தான் நம் முகமூடியும் சேர்ந்து
தெரியும். சில நேரங்களில் ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் சிக்கிக்கொள்வது மற்றவர்களிடம்
மட்டுமல்ல நமக்குள்ளேயும்தான். தனக்குத்தானே சட்டையை உரித்துக்கொள்ளும் பாம்பு எப்படி
வீரியமிக்க விஷத்தை கொடுக்க முடிகிறதோ அப்படி யாரொருவர் தனக்குத்தானே சுயபரிசோதனையோ
சுயவிமர்சனமோ செய்துகொள்ளும்போது வீரியமிக்க விஷயங்களை கொடுக்க முடியும். அதைத்தான் இலக்கியங்கள் இஸங்கள் என்கிறது. ஒரு முற்போக்கான விடுதலைக் கருத்தியல் கூட எந்தவொரு
சூழலில் பிற்போக்கான அடக்குமுறை கருத்தியலாக மாறுகிறது என்பதை காலத்தின் கண்ணாடி வழியே
காண்பிப்பது இஸங்கள்தான். அறிவுத் துறைகளில் சமூகக் கோட்பாடுகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதற்கும்,
சமூக இயக்கங்களின் ஊடாக வாழ்க்கையை மட்டுமின்றி, இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கும்
வழிகாட்டியாக இருப்பது இதே இஸங்கள்தான். இஸங்கள் குறித்தான அடிப்படை தகவல் தெரிந்தால்
புதிதாக எழுத வருபவர்களுக்கு அது நல்ல தொடக்கமாக அமையும் என்றெண்ணி, பலவிதமான இஸங்கள்
குறித்த ஒரு அறிமுக தொடர் ஒன்றை படைப்பு தகவு
இதழில் எழுத படைப்பாளி அமிர்தம் சூர்யா அவர்களிடம்
கோரினோம். அது பலருக்கும் ஆக்கமான தெளிவை தந்து பலத்த வரவேற்பை பெற்றது. அப்படிபட்ட
இஸங்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தியிருப்பதே “சட்டையை உரித்துக்கொள்ளும் பாம்பு”
நூல்.
சென்னையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி “அமிர்தம் சூர்யா” அவர்களுக்கு இது ஒன்பதாம்
நூல். கவிஞர் , சிறுகதையாளர் , பேச்சாளர் , பத்திரிக்கையாளர் என பன்முக ஆளுமையான இவர்,
90 களிலிருதே இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டு இலக்கிய உரையாற்றி
அதன் நுட்பங்கள் அறிந்தவர். பிரபலமான கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக 14 வருடங்கள்
பணிபுரிந்து வெகுஜன இதழில் 5 தொடர்கள் எழுதி மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர்.
திருப்பூர் தமிழ் சங்க விருது, தினகரன் விருது, அன்னம் விருது, கனகசபாபதி விருது, எழுச்சி
அறக்கட்டளை விருது, ஸ்டேட் பாங்க் அவார்ட், சௌமா விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரரான அமிர்தம் சூர்யா ..கருமாண்டி ஜங்ஜஷன் என்ற யூ டியூப்
சேனலையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.