நூல் பெயர் : நான் வாழ வேண்டும்
(நாவல்)
ஆசிரியர் :
திப்பு ரஹிம்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
70
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 100
ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு உணவு யாரிடம் இல்லையோ அவர் யாசகர்
என்கிறது பொதுமறை. தேவைகள் இல்லாத போதும் யாசிக்கும்
ஒரே உயிரி மனிதன் என்கிறது பொதுவான மறை. எதுவுமே இல்லையென்று யாசிப்பதற்கும் எல்லாமே
வேண்டும் என யாசிப்பதற்கும் இடையில் உயிர் வாழ நினைக்கும் ஆசையும், உயர்வாக வாழ நினைக்கும்
பேராசையும் ஒளிந்திருக்கிறது. யாசகம் கேட்டு வருபவரிடம் இயற்கையைப் போல இருந்து விடுங்கள்.
வெளிச்சத்திற்கு வானமும், வசிப்பதற்கு பூமியும், புசிப்பதற்கு காய்களும் கனிகளும்,
தாகம் நிற்க தண்ணீரும், தேகம் நிற்க மூச்சுக்காற்றும் என எல்லாமே இயற்கை நமக்கு இட்ட
யாசகமே. இப்படிப்பட்ட யாசகத்தை மையக் கருவாக வைத்து வாழ்வியலைச் சொல்லும் கதையை சிறு
சிறு காட்சிகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “நான் வாழ வேண்டும்” நூல். இதில்
வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் காட்சிகளும் வாசிப்பவர்களுக்கு யாசகம் சொல்லும் வாசகம் என உள்ளத்தில் ஒரு அதிர்வலைகளை
உருவாக்கும் என்பதே இக் குறுநாவலின் பலம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் எனும் ஊரை பிறப்பிடமாகவும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் எனும் ஊரை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி திப்பு ரஹிம் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரின் முதல் நூலும் நம் படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்தது. தற்பொழுது அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் இவர் சமூக வலைதளங்களில் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும், கருத்துகளாலும் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அதிகாரத்தையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.