முடிவில்லாத வனாந்திரப் பயணம் காதல் அந்தப் பயணத்தின் பாதையில் முத்தங்களை மைல்கல்லாகப் பதித்து முன்னேறிப்போகிறார் படைப்பாளி ஆண்டன் பெனி.
மகளதிகாரம் எழுதி பாசத்தைப் பொழிந்தவர் காதலதிகாரம் எழுதி நேசத்தைப் பொழிகிறார்.
காதலில் எந்த அதிகாரமும் எடுபடுவதில்லை. அங்கு சரணாகதி தருகிற பலனை வேறெதுவும் தந்துவிட முடியாது. கலந்து கரைதல் அல்லது கரைந்து கலத்தல் அதன் இயல்பு.
சின்னச் சின்ன மழைத்துளிகளாக சிதறி விழுந்திருக்கும். இந்த சித்திரக் கவிதைகளில் அது அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட அழகான கவிதைகளை தொகுத்து நூலாக்கியதே "யமுனா என்றொரு வனம்" தொகுப்பு.
தூத்துக்குடியைப் பிறப்பிடமாகவும் திருச்சியை வாழ்விடமாகவும் கொண்டுள்ள ரவிக்குமார் என்கிற ஆண்டன் பெனி அவர்களுக்கு இது ஐந்தாம் தொகுப்பு. இவர் வாரப்பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தன் எதார்த்தமிக்க பல படைப்புகளால் நன்கறியப்பட்டவர். இவரது முதல் தொகுப்பான "இந்த பூமிக்கு வானம் வேறு" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அருமையான கவிதை தொகுப்பு அல்ல
உயிர்மையான காதல் தொகுப்பு
யமுனா என்றொரு வனம்..
காதலில் கசிந்துருகி வெளிச்சம் பாய்ச்சி
நிற்கும் கவிதைகள்
முதல் திணையிலிருந்து தொடரும் காதல்
ஆறாம் திணையாகி முத்தத்தில் உச்சம் பெறுகிறது..
ஏழாம் எட்டாம்
திணைகள் தோன்றினாலும்
அதன் முதல் வினை காதலின் அதரத்தில் இருந்தே
அகரம் போடும்...
ஆறு வித்யாசமென்றாலும் சுவை ஒன்றுதான். ஒன்றி ஒன்றி பிரிதன்றி
பிரிவின்றி எழுதிய வரி
ஆக இது காதல் வனத்தின் முகவரி
காதலின் அடி ஆழத்தில் மூழ்கி மூச்சடக்கி எடுக்கப்பட்ட முத்தம்...
நடுக்காதலில் நிற்கிறேன்...
எதை எடுத்தாலும் காதல்
எதைக் கொடுத்தாலும் காதல்
இரு மனதின் விதைகளில் முளைத்த
யமுனா என்றொரு வனம்
தொகுப்பிற்கும் கவிஞருக்கும்நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
படைப்புக்குழு வின் புதிய ஆக்கங்களுக்கு
ஆதரவும் நன்றியும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
அருமை காதலை இயல்பு மாறாமல், இயற்கை மீறாமல் தொகுத்து இருக்கிறீர்கள்...!!! முத்தத்தின் ஈரமும், காதலின் வாசமும் பக்கத்துக்கு பக்கம் வந்துகொண்டே இருந்தது...!!! யமுனா என்றொரு வனத்தில் சில நிமிடங்கள் தொலைந்து போய்விட்டு பிறகு காதலை கண்டெடுத்து மீண்டு வந்திருக்கிறேன்...!!! வாழ்த்துக்கள் ஆண்டன் பெனி ஐயா அவர்களுக்கு, நன்றிகள் படைப்பு குழுமத்திற்கு மின்னூல் வடிவில் வெளியிட்டமைக்கு👍💐