கா.ந.கல்யாணசுந்தரம்

கவிதை வரிசை எண் #13

   780    25    48

< வேர்த்திரள் : போட்டி கவிதை >

படைப்பு குழுமத்தின் அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019

வேர்த்திரள் …….(காடும் காடு சார்ந்த கவிதையும் )

கார்காலப் பனிப்பொழிவு தென்படவில்லை!/
யாரோ வரகென்றும் நுவணைத் தினைமாவென்றும் …. /
ருசித்துப்பார்க்க எனக்களித்து மகிழ்ந்தார்கள் !/
தவமிருக்கத் தபோவனங்கள் கிடைக்காது அலைந்தேன் …/
காட்டின் அதிதேவதை அரண்யானி தலைவிரித்து /
கண்கலங்கி வேதக் கடவுளை மனதில் நிறுத்தி /
திருமறைக்காடு எங்கேவென வினவியபடி ஓடினாள்!/
மரமில்லா வாழ்வு மரணவாழ்வென்று கதறினேன் !/

கரியமிலமுண்டு பிராணவாயுவை உமிழக் கூட்டமாய் /
காடுகள் வேண்டுமெனப் புத்தகவரிகள் பறைசாற்றுகின்றன !/
மருத்துவ மரம் நிறைந்த காடுகளின் மேன்மையை /
திருகோயில் வளாகத்து தலவிருட்சங்கள் வழியறிவோம் !/
காடழித்து வீடுகட்டும் முனைப்பில் மனிதம்…. /
காட்டாற்று வெள்ளப்பெருக்கும் மண்ணரிப்பும் கண்டது !/
முட்புதர்க் காடுகளின்றி முகம்புதைக்கத் தேடுகிறேன்…/
சதுப்புநிலக் காடுகளின் சகதிகளும் கட்டடங்களாயின !/

பறவைகள் பொட்டல் நிலமெங்கும் உதிரும் இறகுகளில் /
மழைமறைவுப் பிரதேச எல்லைகளை வரைந்தன !/
ஈரம் சுமக்கும் பசுமையின் ரகசியங்கள் மடிந்தன ! /
பாரமாய் உலகப்பந்து வெப்பத்தில் சுழன்று தவிக்கிறதே !/
வனவளம் கானல்நீரோடு கருகியநிலையில் .../
மொத்தமாய் யானைகள் படையெடுக்கும் சூழலின்று !/
தஞ்சைநிலத்து சாயாவன நிலம்தொட்டு வணங்குகிறேன்... /
நெஞ்சையடைக்கிறது புளியமரங்களின் வேர்த்திரள் !/

……….கா.ந.கல்யாணசுந்தரம்

“ கவிதைவாசல் “
நெ.62, பத்தாவது தெரு,
ஜெயச்சந்திரன் நகர் ,
மேடவாக்கம்
சென்னை - 600 100

கைப்பேசி : 94432 59288

kalyan.ubi@gmail.com

உறுதிமொழி : மேலே பதிவிட்டுள்ள படைப்பு வேர்த்திரள் கவிதை எனது சொந்த படைப்பாகும். இந்தக் கவிதை வேறு எங்கும் வெளியிடவில்லை. படைப்புக் குழுமத்தின் அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்காக (2019) எழுதப்பட்டது என உறுதி கூறுகிறேன்.

……..கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

படைப்பின் வேர்த்திரள் கவிதைப்போட்டிக்கான எனது கவிதையைப் படித்து பாராட்டி பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

Saradha Santosh :

அற்புதமான வரிகள்.. வாழ்த்துகள் கவிச்சுடர் கா.ந கல்யாணசுந்தரம் அவர்களே

Shyamala Rajasekar:

அருமை!வாழ்த்துகள்

லஷ்மி கார்த்திகேயன் லஷ்மி கார்த்திகேயன் :

மிக சிறப்பு. இன்றைய காலத்துக்கு வனம் அவசியமான ஒன்று.அதை சிறப்பாக வலியுறுத்திய நயம் மிகச்சிறப்பு.வாழ்த்துகள்.

லஷ்மி கார்த்திகேயன் லஷ்மி கார்த்திகேயன் :

மிக சிறப்பு. இன்றைய காலத்துக்கு வனம் அவசியமான ஒன்று.அதை சிறப்பாக வலியுறுத்திய நயம் மிகச்சிறப்பு.வாழ்த்துகள்.

KaviKavi:

அருயைான கவிதை.. இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு.

vinoth:

Wonderful and powerful lines....

AbiramaSundariChidambaraNathan:

Well said Kavingar.... such a powerful and awesome lines creating awareness abt forest. Protect forest Save Earth

PriyaPriya:

Well said Kavingar..This will definitely create awareness among people how important it is to protect forest..Save earth...

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே.தொடரட்டுன் தங்கள் தமிழ்ப்பணியே

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே.தொடரட்டுன் தங்கள் தமிழ்ப்பணியே

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணியே

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணியே

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணியே

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி

சா.சையத் முகமதுமுகமது:

நல்வாழ்த்துகள் தங்கையே தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி

Kirubanandhan:

Need of the Day to all people was told by the kaviger in a fentastic way.Kirubanandhan

VennilaVennila:

அழகிய அர்த்தமுள்ள கவிதை காடழித்து நாடாக்கும் கான்கிரீட் உலகத்தில் இத்தகைய கவிதை விழிப்புணர்வை ஏற்படுத்தும்!

ArulselviArulselvi:

Very very fine. Good words related to forest and environmental protection used. Queen of Forest name used from the literature. The name sayavanam ...a book written by Tamil writer especially the vanished tamarind trees....Good word used. My heartfelt wishes for your devoted writing. Congratulations for the winning place.

இந்தப் போட்டிக்கவிதையில் கலந்துகொண்ட பல கவிஞர்கள் கைப்பேசி வாயிலாகவும் பின்னூட்டமிட்டும் கருத்துசொல்லி பாராட்டியது மகிழ்வும் நன்றியும். படைப்புக் குழும நிர்வாகிகளுக்கும் நன்றி..!

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

பலர் தொடர்புகொண்டு கருத்தும் பாராட்டுகளும் தெரிவித்தனர். அவர்களுக்கு எல்லாம் எனது நன்றிகள்.

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

இந்தக்கவிதையில் தாங்கள் சொல்லவிரும்பும் கருத்தை தாராளமாகக் கூறலாம். எனது கைப்பேசி எண் 9443259288

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

இந்தக்கவிதையில் தாங்கள் சொல்லவிரும்பும் கருத்தை தாராளமாகக் கூறலாம். எனது கைப்பேசி எண் 9443259288

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

மேலான தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. மேலும் வாசகர்கள் விருப்பமும் பின்னூட்டமும் / விமர்சனமும் அளிக்க வேண்டுகிறேன்.

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

மேலான தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. மேலும் வாசகர்கள் விருப்பமும் பின்னூட்டமும் / விமர்சனமும் அளிக்க வேண்டுகிறேன்.

kalaikalai:

உயிர் காக்கும் மரத்தின் மகிமையை அதன் வேர் நின்று உணர்த்தும் கவிதை...அருமை ஐயா!!!

kalaikalai:

உயிர் காக்கும் மரத்தின் மகிமையை அதன் வேர் நின்று உணர்த்தும் கவிதை...அருமை ஐயா!!!

ManjuKannan:

நல்லாயிருக்குங்க அய்யா

UpendranUpendran:

வளமிக்க வார்த்தைகளில் வலிமையான சிந்தனைவாழ்த்துகள்

SagaaSaleem:

சிறப்பு...இனிய வாழ்த்துகள்

இராச. கிருட்டினன். இராச. கிருட்டினன். :

சிறப்பு ஐயா! வாழ்த்துகள்.

PanneerSelvam:

வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள்தோழமையே....

ManivannanMalaiarasan:

கவிதை அருமை, சக போட்டியாளர் என்ற வகையில் தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

க.ரபிந்தர்நாத்.:

கண்ணீர் வடிக்கும் காடுகளின் வலி.அருமை வாழ்த்துக்கள்

I.DharmaSingh:

அருமை வாழ்த்துகள் ஐயா

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

கருத்துரை இட்டோர்க்கு மிக்க நன்றி. மேலும் விருப்பக்குறியீடு இடுவோர்க்கும் கருத்துகள் தருவோர்க்கும் எனது அன்பான அழைப்பும் நன்றியும்.

SelvaMani:

அருமை ஐயா, இனிய வாழ்த்துக்கள்

Rasi:

அருமை வாழ்த்துகள் ஐயா

நயினார்.:

அருமை

RaajasegarRa:

அட...

JosephJ:

மிகச்சிறப்பு கவிஞரே!

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

வெற்றிப்பேரொளி நல்ல மொழிநடை. வாழ்த்துகள்.

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

வெற்றிப்பேரொளி நல்ல மொழிநடை. வாழ்த்துகள்.

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

Ilaya Shahul பரிசுக்குரிய தகுதிகள் உண்டு வாழ்த்துகிறேன்Dharma Singh அருமை வாழ்த்துகள்ஐயாPanneer Selvam சிறந்த வரிகள்...வாழ்த்துகள் ஐயாMalathi Chandrasekaran வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள், ஐயாமருதா சமத் அருமை வாழ்த்துகள் ஐயாJayanthi Rajagopal வெகு அருமை ஐயா

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

அருமை

பிப்ரவரி 2019
1k   9   2