படைப்பின் மூன்றாம் ஆண்டு விழா முப்பெரு விழா - அறிவிப்பு:1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும்

அன்பார்ந்த வணக்கங்கள்...

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் மூன்றாம் சந்திப்பு மற்றும் ஆண்டு விழா இப்போது தேதியும் இடமும் முடிவாகிவிட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்...

முகமறியா நட்புகளின் சந்திப்பாகவும் மாபெரும் கலை இலக்கிய விழாவாகவும் இது இருக்கும்...

விழா நடக்க இருக்கும் இடம்: அரசு அருங்காட்சியகக் கலையரங்கம், எழும்பூர், சென்னை

நாள்: 08 - 09 - 2019 (செப்டம்பர் 08 - 2019)

நேரம் : மாலை 2 மணி முதல் மாலை 7 வரை

நமது படைப்பு குழும (குடும்ப) விழாவில் கலந்து கொள்ள இப்போதே தயாராகுங்கள்...

யாரும் எதிர்பார்க்கா வண்ணம் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது இந்த மூன்றாம் ஆண்டு விழா முப்பெரும் விழா...

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் யார்யாரென அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியாகும்...

இதுவரை படைப்பில் வெளியான மின்னிதழ்களில் இருந்து தேர்வு செய்யப்பட 150 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ஒரு சிறப்பு நூல் வெளியிட இருக்கிறோம்.மேலும் நாம் போட்டி வைத்து நடத்திய கவிக்கோ மழைக்கு ஒதுங்கிய வானம் மற்றும் வேர்த்திரள் என்ற நூல்களும் ஆளுமைமிக்க கவிஞர்களின் அணிந்துரையோடு படைப்பு பதிப்பகத்தால் வெளியிட இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

இந்த நூல்களுடன் படைப்பில் இயங்கும் சில படைப்பாளிகளின் தனி நூல்களும் விழாவில் வெளியிடப்படும் என்பது கூடுதல் மகிழ்ச்சி...

இந்த விழாவில் நாம் இதுவரை கொடுத்துவந்த கவிச்சுடர் விருதுகளும் நேரடியாக அந்ததந்த கவிஞர்களுக்கு மேடையில் வைத்து கவுரவிக்கப்பட்டு விருதும் சான்றிதழும் மதிப்பு மிக்க பெரும் கவிஞர்களின் கைகளால் வழங்கப்படும்...

படைப்பின் இலக்கிய விருதின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு சென்ற ஆண்டின் சிறந்த இலக்கியம் படைத்த (நூல் வெளியிட்டவர்களுக்கு) கவிஞர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் விருதும் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்...

மாதந்தோறும் சிறந்த படைப்பாளிகளாக தேர்வான அனைத்து படைப்பாளிகளுக்கும் மற்றும் இதுவரை பரிசு போட்டிகளிலும் கவிதை தொடர்களிலும் வென்றவர்கள் அனைவருக்கும் அந்தந்த பிரிவுகளின் கீழ் கேடயமும் சான்றிதழும் மேடையில் வைத்து சிறப்பிக்கப்பட்டு வழங்கப்படும் மேலும் திருக்குறள் பரிசுப்போட்டியிலும் வென்றவர்களுக்கும் சிறப்பு செய்ய இருக்கிறோம்.

வெளியூர்களில் வெளிமாநிலங்களில் வெளிநாடுகளிலும் வாழும் நம் படைப்பாளிகளுக்கு வசதியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இத்தனை மாதத்திற்கு முன்பே அறிவிப்பு செய்ய திட்டமிட்டு மிக தெளிவாக அறிவிப்பு செய்கிறோம்...

படைப்பு - சமூகத்தின் இணைப்பு என்ற வாசகத்திற்கு ஏற்ப நாம் இணைய இருக்கும் இந்த மூன்றாம் விழா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இது இருக்கும். அதற்கு இதுவரை தாங்கள் தந்த ஒத்துழைப்பு போலவே விழா சிறக்கவும் தமிழையும் படைப்பாளிகளையும் வளர்க்கவும் நீங்கள் ஒத்துழைப்பு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் படைப்பு தனது முதல் அறிவிப்பை வெளியிடுகிறது படைப்புக் குழுமம்.

வேறு ஏதாவது சந்தேகங்கள் அல்லது யோசனை இருப்பின் தெரிவிக்கலாம்.. படைப்பு குழுமத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே சமம். நம் குழுவில் மட்டும்தான் எல்லா படைப்பாளிகளும் ஒரே நிலையில் வைத்து இருக்கிறோம்.. நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை.. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்... எல்லோரும் ஒன்று சேர்ந்து நாம் நடத்தப்போகும் ஒரு விழா இது...

வாருங்கள் தோழர் தோழமைகளே...

இது எங்கள் விழாவும் அல்ல... உங்கள் விழாவும் அல்ல

இது முற்றிலும் நமது விழா...

இந்த விழாவில் நாம் இன்னும் என்னென்ன புதுமைகளை அரங்கேற்றம் செய்யப் போகிறோம் என்பதை அடுத்தடுத்த அறிவிப்புகளில் அறிவிக்க இருக்கிறோம்...

அதுவரை ஆவலோடு காத்திருங்கள்...

வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்...

படைப்பு குழுமம்

#படைப்பு_ஆண்டுவிழா.

Sivakumarganesan:

விழா நிகழ்வுகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.மிகப் பெரிய சந்தோஷத்தை அனைவருக்கும் தரட்டும் நமது விழா

கா.ந.கல்யாணசுந்தரம் Kaa Na:

படைப்பின் விழா என்றாலே தனித்துவம் கொண்டது. வாழ்த்துகள்.

meiyan nadaraj :

வாழ்த்துகள் . விழா வெற்றிக்கொடிக் கட்டி வீறு நடை போடட்டும்

மார்ச் 2019
876   7   2