படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 7

படைப்பு ‘தகவு’ ஏழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது.
வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் முதன்மையானவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். அன்றுதொட்டு இன்றுவரை கவிதைச்சூழலில், கல்விச்சூழலில் அவ்வக்காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்கிவருபவர். இன்னமும் எழுதத் துடித்துக்கொண்டிருக்கிற அந்த வானம்பாடிக் கவிஞரின் நேர்காணல் இவ்இதழில் சிறப்புற இடம்பெற்றுள்ளது. ந.முத்துசாமி தமிழ்க் கலையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அவரது வாழ்வினைக் கலைவரலாறு பேசிநிற்கும்.. இங்கு அவரது மறைவினைப் பிருந்தாசாரதி பேசியிருக்கிறார். நோபல் விருது மற்றும் அவ்விருதுபெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்து ஆராயும் தொடர் ‘இலக்கியத்தின் தோரணவாயில்’ இவ்இதழில் தொடங்குகிறது. இவ்இதழின் மாத்தனிச்சிறப்பு.. ‘ஆதி’க்கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதை. மேலும், கதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
••••••••••••••••
படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 7
ஊற்று:1 | நதி : 7 | திங்களிதழ்

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
மார்க்கெட்டிங் பார்ட்னர்: யுனிக் ஆங்கிள்(UNIQUE ANGLE)
மார்க்கெட்டிங் ஹெட்: இப்ராஹிம் ஷரீப்
இணையதள வடிவமைப்புக்குழு: • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575

உள்ளே…
தலையங்கம்
“இன்றைக்குப் புதுக்கவிதை ஒரு விடுதலையைத் தந்திருக்கிறது” • கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு நேர்காணல் • கவிஜி
முத்துசாமி எனும் முழுமையான கலைஞர் • பிருந்தா சாரதி
சிலேட்டுக்குச்சி • கட்டாரி
இலக்கியத்தின் தோரண வாயில் • தா. ஜோ. ஜூலியஸ்
கவிதையின் வடிவம் செங்குத்து • நூல் விமர்சனம் • கார்த்திக் திலகன்
நல்லாசிரியர் சுகன் • பொ.முத்துவேல்
பல படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி • பொன்குமார்
பாஷோவின் பழைய குளம் • முகம்மது பாட்சா
சங்கப்பாடல்களில் ஆண் பெண் நோக்கு – ஓர் ஒப்பீடு • சக்தி ஜோதி
சிறுவர் இலக்கியம் - ஒரு பார்வை • கல்வெட்டு சொர்ணபாரதி
கற்றது தமிழ் • முனைவர் ஹாஜாகனி
இளநீரும் இலக்கியமும்- பொள்ளாச்சியில் ஒரு இலக்கியக் கொண்டாட்டம் • கோ.லீலா
ஈரிருநாள் இலங்கை • தமிழ்பாரதன்
உள்ளதைச் சொல்! உண்மையைச் சொல்! • பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி
கவிதைகள்:- • விக்கிரமாதித்யன் | • துரை.நந்தகுமார் | • ஜின்னா அஸ்மி | •ஹரணி | •வீ.கதிரவன் | • பிரபுசங்கர் க | • ரா.த.ஜீவித்தா | • மனோ ரெட் | • க. மகுடபதி | • க.ராஜகுமாரன் |
சிறுகதைகள் :- • நா.விச்வநாதன் | • பிரேமபிரபா | • புதுமைப்பித்தன்

display date: 
வெள்ளி, 23 நவம்பர் 2018