படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 5

படைப்பு ‘தகவு’ ஐந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காலந்தோறும் முளைத்தெழுந்த பல அமைப்புக்கள் செவ்வனே வளர்த்துவந்துள்ளன. நேரடியாய்ப் புலவர்கள் கூடிய அன்றைய சங்கம் முதல் முகநூலில் கவிஞர்கள் கூடும் இன்றைய குழுக்கள் வரை அமைப்புகளின் இயக்கங்கள் நிலைத்த இலக்கியங்களாகப் பதியப்பட்டுவருகின்றன. அவ்வழி, இம்மாதத்திற்குரிய தகவு, முகநூலில் இயங்கும் படைப்புக் குழுமம் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிறுத்திச் சில கட்டுரைகளைத் தாங்கிவந்துள்ளது. பெரியார் பிறந்த மாதம் இது. சமூகத்தைச் சிதைக்கும் எதற்கெதிராகவும் தன் பேச்சால், எழுத்தால் குரல் கொடுத்தவர் பெரியார். பெரியாரைப் போற்றும் கடப்பாடு இச்சமூகத்தின் எவ்இதழுக்கும் உண்டு. தலைநிமிர வைத்த பெரியாரைத் தலைகுனிந்து வணங்குகிறது தகவு. மேலும், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
••••••••••••••••

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 5
ஊற்று:1 | நதி : 5 | திங்களிதழ்

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
அட்டைப்பட ஓவியம்: ரவி பேலட்
மார்க்கெட்டிங் பார்ட்னர்: யுனிக் ஆங்கிள்(UNIQUE ANGLE)
மார்க்கெட்டிங் ஹெட்: இப்ராஹிம் ஷரீப்
இணையதள வடிவமைப்புக்குழு: • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575

உள்ளே…

தலையங்கம்
கவிதை பூத்த ஞாயிறு • படைப்புக் குழும இரண்டாம் ஆண்டு விழா • சந்துரு
மொழி, இலக்கியத்திலும் சுயமரியாதை எண்ணிய பெரியார் • மு.சு.கண்மணி
அகத்திலிருந்து மேலெழும்பும் நெருப்புப்பொறிதான் கவிதை • கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம் • கவிஞர் மு. மேத்தா
பாஷோவின் பழைய குளம் • முகம்மது பாட்சா
ஈரிருநாள் இலங்கை • பயணக்கட்டுரை • தமிழ்பாரதன்
நான் ஊர் ஒதுங்கின “படைப்புத் திருவிழா” • ஆண்டன் பெனி
கோலாலம்பூரிலிருந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் நோக்கி….. • முனியாண்டிராஜ்
இதயங்களை இணைத்த இரண்டாம் ஆண்டுவிழா • ஜி ராஜன்
இந்திச் சாயாவாதக் கவித்தூண்கள் • பிறமொழிப் படைப்புலகம் • பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணியம்
பெரியார் மொழிகள் • ஆகி
எங்கள் நெஞ்சில் அமர்ந்தவன் சுகன் • ரூஃபஸ் வி ஆண்டனி
உயர்த்தியது தமிழ் • முனைவர் ஹாஜாகனி
பக்கீர் அசரத் • மனித முகவரிகள் • மானசீகன்
கவிஞர்கள் உலகின் காவல்காரர்கள் • கருத்துத் துளிகள்
• நூல் அறிமுகம்

கவிதைகள்:- •நேசமித்திரன் | •ஏ.நஸ்புள்ளாஹ் |•யாழ்தண்விகா | • முருகன்.சுந்தரபாண்டியன்

சிறுகதைகள் :- • கவிஜி | • முரளி | • பிரேமபிரபா

display date: 
செவாய், 25 செப்டம்பர் 2018